Tamil News | Online Tamil News |
- ‛ஹாட்ரிக்கில் ஹாட்ரிக்' பெருமையை இழக்கிறார் உசேன் போல்ட்
- 'வேண்டாம்!' தமிழகத்தில் வெளிநாட்டு குளிர்பானங்கள்... மார்ச் முதல் முற்றிலும் தடை செய்ய வணிகர்கள் முடிவு
- ஜோஷி, ஏசுதாஸ் உள்ளிட்டோருக்கு.. பத்ம விருதுகள்...! தமிழகத்தைச் சேர்ந்த ஏழு பேர் தேர்வு
- ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
- மனித உரிமை ஆணையத்தில் போலீசார் மீது குவிகிறது புகார்
- போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு 'கவுன்சிலிங்'
- ரூ.50,000க்கு மேல் வரி: முதல்வர்கள் குழு பரிந்துரை
- ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை; சி.பி.ஐ., விசாரிக்க ஐகோர்ட்டில் வழக்கு
- விஷமிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்கிறது; போலீஸ் உயர் அதிகாரிகள் அறிவிப்பு
- அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி; பின்னலாடை துறையினர் மகிழ்ச்சி
- குடியரசு தின விழா; முதல்வர் கொடியேற்றுகிறார்
- கவுரவ டாக்டர் பட்டத்தை வாங்க மறுத்த டிராவிட்
- வேகமான வளர்ச்சியில் இந்தியா: வெங்கையா நாயுடு
- குடியரசு தின விழா: டில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு; லஷ்கர் சதி எதிரொலி
| ‛ஹாட்ரிக்கில் ஹாட்ரிக்' பெருமையை இழக்கிறார் உசேன் போல்ட் Posted: 25 Jan 2017 08:11 AM PST புதுடில்லி: 2008 ஒலிம்பிக் போட்டியில் ஜமைக்கா நாட்டை சேர்ந்த தடகள விளையாட்டு வீரர் உசேன் போல்ட் வாங்கிய தங்கம் திரும்ப பெறப்படுகிறது. இதன் மூலம் அவரின் ‛ஹாட்ரிக்கில் ஹாட்ரிக்' சாதனை பறிபோகிறது. ஊக்கமருந்து விவகாரம் கடந்த 2008 ம் ஆண்டு பிஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஜமைக்கா நாட்டின் சார்பில் உலகின் முன்னணி தடகள வீரர் உசேன் போல்ட் 4*100 மீட்டர் தொடர் ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்றார். அந்த போட்டியில் அவருடன் பங்கேற்ற நெஸ்டா கேர்ட்டர் என்ற வீரரின் ஊக்கமருத்து மாதிரியில் மெத்தில்ஹெக்சாமைன் என்ற ஊக்கமருந்து இருப்பது ... |
| Posted: 25 Jan 2017 09:03 AM PST ஜல்லிக்கட்டுக்காக, மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவால், தமிழகத்தில், வெளிநாட்டு குளிர்பானங்களை விற்காமல், மார்ச் முதல், முற்றிலும் தடை செய்வது என, ஒட்டுமொத்த வணிகர்களும் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி, மாணவர்கள், இளைஞர்கள், மிகப் பெரிய போராட்டம் நடத்தினர். அதில் பங்கேற்றவர்கள், ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க காரணமான, அமெரிக்காவின் விலங்குகள் நல அமைப்பான, 'பீட்டா'வை தடை செய்யுமாறு, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தினர். மேலும், அந்நாட்டின், கோக், பெப்சி உள்ளிட்ட குளிர்பானங்களை தரையில் ஊற்றி எதிர்ப்பு ... |
| ஜோஷி, ஏசுதாஸ் உள்ளிட்டோருக்கு.. பத்ம விருதுகள்...! தமிழகத்தைச் சேர்ந்த ஏழு பேர் தேர்வு Posted: 25 Jan 2017 09:08 AM PST புதுடில்லி: அரசியல் தலைவர்கள் சரத் பவார், முரளி மனோகர் ஜோஷி, மறைந்த முன்னாள் லோக்சபா சபாநாயகர், பி.ஏ. சங்மா, பிரபல பாடகர், கே.ஜே.ஏசுதாஸ், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி உள்பட, 89 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கலை, சமூக சேவை, பொது விவகாரம், அறிவியல் - தொழில்நுட்பம், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில், சிறந்த சேவை ஆற்றியோருக்கு, ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்தையொட்டி, பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.சிவிலியன்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளான, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ... |
| ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு Posted: 25 Jan 2017 09:10 AM PST புதுடில்லி,: ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தை எதிர்த்து, பிராணிகள் நல அமைப்புகள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு, 30ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து, சுப்ரீம் கோர்ட், 2014ல் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக, 2016, ஜன., 7ல், மத்திய அரசு அரசாணையை வெளியிட்டது. இதை செயல்படுத்த தடை விதித்துள்ள ... |
| மனித உரிமை ஆணையத்தில் போலீசார் மீது குவிகிறது புகார் Posted: 25 Jan 2017 09:27 AM PST சென்னை: மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது, நடவடிக்கை எடுக்கக் கோரி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், 5,000 தொலைபேசி புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக, ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகம் முழுவதும், ஜல்லிக்கட்டு தடையை அகற்றக் கோரி, மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை, தடியடி நடத்தி, போலீசார் அப்புறப்படுத்தமுயன்றனர்.கலவர பூமி அப்போது, சென்னை, மதுரை போன்ற நகரங்களில், போராட்டங்கள் வெடித்தன. சென்னையில், திருவல்லிக்கேணி, ஐஸ் அவுஸ், மெரினா கடற்கரை உட்புற ... |
| போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு 'கவுன்சிலிங்' Posted: 25 Jan 2017 09:34 AM PST போராட்டத்தில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு தன்னம்பிக்கை மற்றும் ஒழுக்க வகுப்புகள் நடத்த, கல்லுாரி பேராசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தில், ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், பல விஷமிகள் ஊடுருவிய தகவல்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சென்னை உட்பட பல நகரங்களில், போராட்டத்திற்கு சென்ற மாணவ, மாணவியர், நேற்று கல்லுாரிகளுக்கு வரவில்லை.இயல்பு நிலைக்கு வரவில்லை இன்ஜினியரிங் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில், திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில், 50 ... |
| ரூ.50,000க்கு மேல் வரி: முதல்வர்கள் குழு பரிந்துரை Posted: 25 Jan 2017 09:39 AM PST மும்பை,:வங்கிகளில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால், வரி விதிக்க வேண்டும் என்பது உட்பட, மத்திய அரசுக்கு முதல்வர்கள் குழு, பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய மாநில முதல்வர்கள் குழுவை, பிரதமர், நரேந்திர மோடி அமைத்துள்ளார்.ஆந்திரா முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு தலைமையிலான இந்தக் குழு, தன் பரிந்துரைகளை, பிரதமரிடம் அளித்துள்ளது.டிஜிட்டல் மயமாக்கப்பட ... |
| ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை; சி.பி.ஐ., விசாரிக்க ஐகோர்ட்டில் வழக்கு Posted: 25 Jan 2017 09:42 AM PST சென்னை : ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை, ஜன., 30க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவல்லிக்கேணியை சேர்ந்த, வழக்கறிஞர் குமார் தாக்கல் செய்த மனு: ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக நிரந்தர சட்டம் கொண்டு வரக் கோரி, சென்னை, மெரினா கடற்கரையில், மாணவர்களும், இளைஞர்களும் போராட்டம் நடத்தினர். ஜன., 23ம் தேதி, ஜல்லிக்கட்டு நடத்த அரசு சட்டம் இயற்ற போவதாகவும், போராட்டத்தை வாபஸ் பெறும்படியும், போலீஸ் தரப்பில் கேட்டு கொள்ளப்பட்டது.போலீசாரே ... |
| விஷமிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்கிறது; போலீஸ் உயர் அதிகாரிகள் அறிவிப்பு Posted: 25 Jan 2017 09:55 AM PST சென்னை: ''சென்னையில், வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட, விஷமிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்கிறது,'' என, கூடுதல் கமிஷனர், சேஷசாயி, துணை கமிஷனர்கள் பாலகிருஷ்ணன், சுதாகர் ஆகியோர் கூறினர். நேற்று மாலை அவர்கள் கூட்டாக அளித்த பேட்டி:பெருந்திரளாக கூட்டம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, மெரினா கடற்கரையில் மாணவர்கள் நடத்திய போராட்டம், எங்களையே ஆச்சரியப்பட வைத்தது. அந்த இடத்திற்கு, கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிடச் சென்றபோது, மாணவர்களே பாதுகாப்பு அரணாக செயல்பட்டனர். பெருந்திரளாக கூட்டம் இருந்தபோதிலும், மாணவர்களே போக்குவரத்தையும் ... |
| அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி; பின்னலாடை துறையினர் மகிழ்ச்சி Posted: 25 Jan 2017 10:26 AM PST திருப்பூர்: 'டிரான்ஸ் பசிபிக்' வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து, வெளியேறும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நடவடிக்கை, இந்திய ஆயத்த ஆடை உற்பத்தி துறையினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், மலேஷியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் இணைந்து, 2016 பிப்ரவரியில், 'டிரான்ஸ் பசிபிக் பார்ட்னர்ஷிப்' - டி.பி.பி., என்ற ஒப்பந்தத்தை உருவாக்கின.கடும் போட்டி ஒபாமா தலைமையிலான அரசு, பொருளாதார வளர்ச்சிக்காக, இந்த ஒப்பந்தத்தில், அமெரிக்காவை இணைத்தது.இந்த ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் வியட்நாம், இந்திய ஆடை ஏற்றுமதி துறைக்கு, கடும் ... |
| குடியரசு தின விழா; முதல்வர் கொடியேற்றுகிறார் Posted: 25 Jan 2017 10:38 AM PST
சென்னை: குடியரசு தின விழாவில், முதன் முறையாக, முதல்வர் பன்னீர்செல்வம், இன்று தேசியக் கொடியேற்றுகிறார். தனி கவர்னர் இல்லை: சென்னையில், ஆண்டு தோறும் மெரினா கடற்கரையில், காந்தி சிலை அருகே, குடியரசு தின விழா கொண்டாடப்படும். மாநில கவர்னர் தேசியக் கொடியேற்றுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு, தமிழகத்திற்கு தனி கவர்னர் நியமிக்கப்படவில்லை. முதல்வர் கொடியேற்றுகிறார்: மஹாராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக உள்ளார். இன்று, அவர் மஹாராஷ்டிராவில் நடைபெறும் ... |
| கவுரவ டாக்டர் பட்டத்தை வாங்க மறுத்த டிராவிட் Posted: 25 Jan 2017 11:29 AM PST பெங்களூரு: பெங்களூரு பல்கலை அளித்த கவுரவ டாக்டர் பட்டத்தை வாங்க மறுத்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், டாக்டர் பட்டத்தை தான் படித்து பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். கவுரவ டாக்டர் பட்டம்: பெங்களூரு பல்கலைகழகத்தின் 52வது பட்டமளிப்பு விழா நாளை(ஜன.,27) நடைபெறவிருந்தது. இவ்விழாவில் இந்திய அணியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டிற்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்க அந்த பல்கலை., முடிவு செய்திருந்தது. இக்கவுரவ டாக்டர் பட்டத்தினை டிராவிட் வாங்க மறுப்பு ... |
| வேகமான வளர்ச்சியில் இந்தியா: வெங்கையா நாயுடு Posted: 25 Jan 2017 01:56 PM PST
புதுடில்லி : பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் நாடு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தர். வேகமான வளர்ச்சி: இதுகுறித்து பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான வெங்கையா நாயுடு தெரிவித்ததாவது: பிரதமர், நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில், நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. நாட்டில் மின்சாரம் இல்லாத கிராமமே இல்லை என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம். அனைத்து பகுதிகளிலும், வளர்ச்சிக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. எனத் ... |
| குடியரசு தின விழா: டில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு; லஷ்கர் சதி எதிரொலி Posted: 25 Jan 2017 03:28 PM PST புதுடில்லி : டில்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் லஷ்கர் பயங்கரவாத அமைப்பினர் நாசவேலையில் ஈடுபடலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எச்சரிக்கை: குடியரசு தினக் கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் நோக்கில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பினர் தலைநகர் டில்லிக்குள் ஊடுருவி தாக்குதலில் ஈடுபடலாம் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து டில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 26,2017. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |