ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நகரும் படிக்கட்டுகள் எப்படி இயங்குகின்றன?
- சட்டப் பேரவை 5 நாள்கள் நடைபெறும்: தனபால் அறிவிப்பு
- போராட்டத்தால் ஜல்லிக்கட்டு தடை நீங்குமென்றால் கம்பாலா தடையையும் நீக்க முடியும்: கர்நாடகா!
- தமிழக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றம்
- ஜல்லிக்கட்டு தடைக்காக மேனகா காந்தி உச்ச நீதிமன்றத்தை நாடவில்லை: நிர்மலா சீதாராமன்
- பிஹாரில் 34 பேரை கொலை செய்த 4 பேருக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு: குடியரசுத் தலைவர் பிரணாப் உத்தரவு
- தற்போதைய செய்திகள்
- தடியடி: ஐகோர்ட் விசாரணை
- "போராட்டத்தை கைவிடுகிறோம்'
- சென்று வாருங்கள் செல்வங்களே !
- நாரதர் கொடுத்த வரம்!
- 'எம்.ஆர்.ராதா வாழ்விலே' நூலிலிருந்து:
- நில் ,கவனி, வண்டியை எடுத்துச் செல்...!!
- கடத்தல் - கவிதை
- தபால் வாக்குகளை மின்னணு முறையில் அனுப்பும் திட்டம் கோவாவில் அறிமுகம்
- குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ நெய் ரூ.25-க்கும், கிலோ சர்க்கரை ரூ.10-க்கும் வழங்கப்படும்
- ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி
- உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு "கேவியட்' மனு
- பள்ளி, கல்லூரிகள் இன்றுமுதல் வழக்கம்போல் இயங்கும்
- ஜல்லிக்கட்டுக்கு பேரவையில் சட்டம்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி
| நகரும் படிக்கட்டுகள் எப்படி இயங்குகின்றன? Posted: 23 Jan 2017 09:19 AM PST நகரும் படிக்கட்டுகள் எப்படி இயங்குகின்றன? மிக உயரமான எண்ணற்ற படிக்கட்டுகளைப் பார்த்தால் பலருக்கும் ஒருவித ஆயாசம் தோன்றும். யாரால் இவ்வளவு படிகளை ஏறமுடியும் என்று பெருமூச்சு விட்டால், "பின்னே என்ன உன்னை தூக்கிக் கொண்டு அந்தப் படிகளே நகருமா என்ன?" என்று கூட இருப்பவர்கள் கிண்டலாகக் கேட்கக் கூடும். ஆனால் இப்போது நகரும் படிகள் நகர மக்களுக்கு சகஜமான ஒன்றாகிவிட்டன. எஸ்கலேட்டர் எனப்படும் இவை பெரிய மால்களிலும், ரயில் நிலையங்களிலும் பெருமளவில் காணப்படுகின்றன. அந்தக் காலத்தில் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர்களைத்தான் ... |
| சட்டப் பேரவை 5 நாள்கள் நடைபெறும்: தனபால் அறிவிப்பு Posted: 23 Jan 2017 08:46 AM PST சட்டப் பேரவை 5 நாள்கள் நடைபெறும்: தனபால் அறிவிப்பு - தமிழக சட்டப் பேரவை ஐந்து நாள்கள் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார். இந்த ஆண்டுக்கான (2017) கூட்டத் தொடரை ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரையாற்றி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் ... |
| போராட்டத்தால் ஜல்லிக்கட்டு தடை நீங்குமென்றால் கம்பாலா தடையையும் நீக்க முடியும்: கர்நாடகா! Posted: 23 Jan 2017 05:10 AM PST - தமிழகத்தில் தன்னெழுச்சியாக வீறு கொண்டெழுந்த மாணவப் போராட்டத்தின் விளைவாக மாநில அரசு நெருக்கடிக்கு உள்ளாகி பின்னர் மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் ஜல்லிக்கட்டு தடைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப் பட்டு அவசர வரைவுச் சட்டம் இயற்றப் பட்டு நடைமுறைப் படுத்தப் பட்டது. தற்போது அது நிரந்தர சட்டமாக்கப்படவும் மாநில அரசு முயன்று கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் தமிழகத்தில் நிகழ்த்தப் பட்ட மாணவப் போராட்டத்தின் வெற்றியைக் கண்டு இவர்களை முன்னுதாரணமாக்கி ... |
| தமிழக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றம் Posted: 23 Jan 2017 04:56 AM PST தமிழக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றம் சென்னை: தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்ய, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் இன்று மாலை 5 மணியளவில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில், முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார். சட்ட முன்வடிவை முதல்வர் ... |
| ஜல்லிக்கட்டு தடைக்காக மேனகா காந்தி உச்ச நீதிமன்றத்தை நாடவில்லை: நிர்மலா சீதாராமன் Posted: 23 Jan 2017 04:11 AM PST Updated: January 23, 2017 16:25 IST ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி உச்ச நீதிமன்றத்தை நாடினார் என்னும் செய்தி பொய்யானது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் நிர்மலா சீதாராமன் கூறியது: ''சில நிமிடங்களுக்கு முன்னர்தான் மேனகா காந்தியுடன் தொலைபேசியில் பேசினேன். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரி அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார் ... |
| Posted: 23 Jan 2017 01:14 AM PST பிஹார் 34 பேரை கொலை செய்த குற்றத்துக்காக 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளார். பிஹாரில் உயர் சாதி வகுப்பினர் 34 பேரை கொலை செய்த குற்றத்துக்காக, கிருஷ்ண மோச்சி, நன்ஹே லால் மோச்சி, பிர் குவேர் பஸ்வான், தர்மேந்திர சிங் (எ) தருசிங் ஆகிய 4 பேர் கடந்த 1992-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அனைவருக்கும் செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த 2001-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த 2002-ம் ஆண்டு ... |
| Posted: 23 Jan 2017 01:06 AM PST தற்போதைய செய்தி சென்னை: - - சென்னையில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்கள் போலீஸ் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. இதில் திருவல்லிக்கேணி, பீச்ரோடு, ராயபுரம், உள்ளிட்ட வட சென்னையில் ஆங்காங்கே வன் செயல்கள் நடந்து வருகிறது. கீழ்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் மறியல் நடப்தால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு முடங்கியது. - ----------------- தினமலர் |
| Posted: 23 Jan 2017 01:02 AM PST சென்னை: சென்னையில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் கலைந்து செல்ல அவகாசம் வழங்க வேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சிலர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு முன் இன்று காலை விசாரணைக்கு வந்தது. தடியடி நடத்துவதை நிறுத்த வேண்டும்; காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. அப்போது தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ஆதாரங்கள் இல்லாமல், இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என கூறி ... |
| Posted: 22 Jan 2017 11:01 PM PST அரசுக்கு அவகாசம் அளித்து சென்னை மெரீனாவில் நடைபெற்று வரும் போராட்டத்தை கைவிடுகிறோம் என போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். மெரீனாவில் போராடி வரும் மாணவர்கள், இளைஞர்களும் போராட்டத்தை நிறுத்திக்கொள்ளுமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதுதொடர்பாக போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திகேய சேனாபதி, ராஜேஷ், ராஜசேகர், அம்பலத்தரசு, ஹிப் ஹாப் ஆதி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு ... |
| Posted: 22 Jan 2017 10:58 PM PST சென்று வாருங்கள் செல்வங்களே ! இலட்சிய வேட்க்கையுடன் உலகம் வியக்கும் வகையில் ஒத்த மனநிலையில் குவிந்த மாணவர்கள் ,இளைய சமுதாயத்தின் அமைதிப்போராட்டம் இப்போது நிலைகுலைந்து வருகிறது . இதுவரை நடைபெற்ற இந்தப் போராட்டம் ,ஒரு ஆர்பாட்டமாக இல்லாமல் அமைதியான ஒரு கொண்டாட்டம் கூடிய மிகப்பெரிய கருத்துப்பட்டறையாகவும் ,கருத்தரங்கங்களாகவும் அமைந்தது . தமிழகத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் பல காரணிகள் அலசப்பட்டன . இவை எல்லாம் நேற்று வரை மட்டுமே , தற்போது நிலைமையோ மிக மோசம் ,வந்தேமாதரம் எனும் ... |
| Posted: 22 Jan 2017 06:58 PM PST - 'நான், நாரதராக இருக்கிறேன்...' என்று, கண்ணனாலேயே பாராட்டப்பட்ட நாரத பகவானே வரம் தந்தும், பேராசையின் காரணமாக, விசித்திரமான வரம் பெற்ற மன்னனின் கதை இது. ஒரு சமயம், மன்னர் சிருஞ்சயனின் அரண்மனைக்கு வந்தார், நாரத முனி. அவரை மிகுந்த பணிவோடும், பக்தியோடும் வரவேற்று, உபசரித்தார், மன்னர். ஆனாலும், அவர் மனதில் ஏதோ குறை இருப்பதை முகம் வெளிப்படுத்த, 'மன்னா... உன் மனதில் உள்ள வருத்தம் என்ன...' என்று கேட்டார், நாரதர். 'மாமுனியே... மகன் இல்லா குறை மனதை வாட்டுகிறது; தாங்கள் தான் என் ... |
| 'எம்.ஆர்.ராதா வாழ்விலே' நூலிலிருந்து: Posted: 22 Jan 2017 06:52 PM PST கருணாநிதி கதை, வசனத்தில், வண்டிக் காரன் மகன் என்ற படத்தில் நடித்தார், எம்.ஆர். ராதா. அதில், ராதா, குதிரை மீதேறி, வேகமாக போவது போலவும், பின்னால், கதாநாயகன், வேறொரு குதிரையில், அவரை துரத்துவது போன்ற காட்சிக்கான படப்பிடிப்பு நடந்தது. ராதா ஏறிய குதிரை, சிறிது தூரம் சென்றதும், தன் போக்கில், தறி கெட்டு ஓடியது. ராதா, 'லகானை' இழுத்து பிடித்தும், குதிரை கட்டுப்படவில்லை. ஒருவழியாக, குதிரையை நிறுத்திய ராதா, 'யூனிட்'டில் உள்ளவர்களை பார்த்து, 'ஏன்ய்யா… எனக்கு பின்னாலே வர்ற குதிரை, பொட்டை குதிரையா…' ... |
| நில் ,கவனி, வண்டியை எடுத்துச் செல்...!! Posted: 22 Jan 2017 06:47 PM PST கைதாகி போலீஸ் வண்டியில போற தலைவருக்கு குசும்பு பாத்தியா..! - ஏன் என்ன செய்தாரு? - பாட்டு போடச் சொலி, டிரைவர்கிட்ட, பென்-டுரைவ் கொடுக்குறாரு...! - அ.ரியாஸ் - --------------------------------------- - எங்களுக்குள்ளே ஆயிரம் இருக்குன்னு தானே சொல்வாங்க, நீங்க ஏன் இரண்டாயிரம் இருக்குன்னு சொல்றீங்க? - இப்ப...ஆயிரத்துக்கு மதிப்பு இல்லையே! அதான் அப்படி சொன்னேன்! - சிவ.கிருபானந்தன் - --------------------------------------------- குளிக்கறப்ப, காதுல தண்ணி போயிடுச்சு டாக்டர்! - கவலைப்படாதீங்க...உடம்பு ... |
| Posted: 22 Jan 2017 06:35 PM PST அடிக்கடி நடைபெறுகிறது விமான நிலையங்களிலும் பல வழிகளிலும் தங்கக் கடத்தல்! - கட்டுப்பாடுகள் அதிகரிக்கும் அளவிற்கு கடத்தல்களும் அதிகரிக்கின்றன! - தங்கம் மட்டுமா கடத்தப்படுகிறது... நட்சத்திர ஆமைகள் தங்க மீன்கள் போதை பொருட்கள் ஆற்று மணல்கள்... - கிரானைட் கற்கள் செம்மரங்கள் சந்தன மரங்கள் சிலைகள்... - பொருட்கள் மட்டுமே நமக்கு தெரிகிறது விமானம் ஏறும் பொறியாளர் மருத்துவர்கள், விஞ்ஞானிகள் கணினி வல்லுநர்கள்... இவர்களும் ஒரு விதமாக கடத்தப்படுபவர்கள் தானே... - இது பற்றி யார் கவலைப்படுகின்றனர்... வெளிநாட்டு ... |
| தபால் வாக்குகளை மின்னணு முறையில் அனுப்பும் திட்டம் கோவாவில் அறிமுகம் Posted: 22 Jan 2017 06:24 PM PST நாட்டிலேயே முதன்முறையாக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தபால் வாக்குகளை மின்னணு முறையில் அனுப்பும் திட்டம் கோவாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவா சட்டப் பேரவைக்கு அடுத்த மாதம் 4-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சையத் நசீம் ஜைதி மாநிலத் தலைநகர் பனாஜிக்கு ஞாயிற்றுக் கிழமை வந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவாவில் ராணுவம், துணை ராணுவப் படைப் பிரிவுகளைச் சேர்ந்த 822 பேர் வாக்களிக்க ... |
| குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ நெய் ரூ.25-க்கும், கிலோ சர்க்கரை ரூ.10-க்கும் வழங்கப்படும் Posted: 22 Jan 2017 06:10 PM PST பஞ்சாபில் நீல குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ ரூ. 25 வீதம் 2 கிலோ நெய்யும், கிலோ ரூ. 10 வீதம் 5 கிலோ சர்க்கரையும் வழங்கப்படும் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் சிரோமணி அகாலி தளத்துடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடுகிறது. இந்நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஜலந்தரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், "மாநிலத்தின் சமூக உள் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் பாஜகவின் தேர்தல் ... |
| ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Posted: 22 Jan 2017 06:07 PM PST ஆந்திர மாநிலம், குனேரு ரயில் நிலையம் அருகே ஜக்தல்பூர்- புவனேசுவரம் செல்லும் ஹிராகண்ட் விரைவு ரயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டதில் 39 பேர் பலியாகினர். 69 பேர் காயமடைந்தனர். - சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரிலிருந்து, ஒடிஸா மாநிலம் புவனேசுவரம் நோக்கி ஹிராகந்த் விரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில் ஆந்திரம், ஒடிஸா, பிகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பயணிகள் அதிக அளவில் பயணித்தனர். இந்நிலையில், சனிக்கிழமை இரவு 11 மணிக்கு ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள குனேரு ரயில் நிலையம் ... |
| உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு "கேவியட்' மனு Posted: 22 Jan 2017 06:04 PM PST ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் அவசரச் சட்டத்தை எதிர்த்து யாராவது வழக்குத் தொடுத்தால் அதை விசாரிக்கும் போது தமிழக அரசின் கருத்தை அறியாமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு "கேவியட்' மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தும் பொருட்டு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் அனுமதியின் பேரில் வழங்கப்பட்ட மத்திய அரசின் மிருக வதைத் தடுப்புச் சட்டத்துக்கான மாநில அரசின் சட்டத் திருத்தத்திற்கு ... |
| பள்ளி, கல்லூரிகள் இன்றுமுதல் வழக்கம்போல் இயங்கும் Posted: 22 Jan 2017 05:58 PM PST பள்ளி, கல்லூரிகள் திங்கள்கிழமை (ஜன. 23) முதல் வழக்கம் போல் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர அனுமதி வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் கடந்த திங்கள்கிழமை முதல் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. இளைஞர்கள் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டதால் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்றதால் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் பங்கேற்றதால், பெரும்பாலான தனியார் பள்ளிகள், அரசுப் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை ... |
| ஜல்லிக்கட்டுக்கு பேரவையில் சட்டம்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி Posted: 22 Jan 2017 05:53 PM PST ஜல்லிக்கட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள அவசரச் சட்டம், திங்கள்கிழமை கூடவுள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே சட்டமாக்கப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி கூறினார். - ஒரு சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றுவதற்கு முன்னர், கொண்டுவரப்பட வேண்டும் என்றால் அவசரச் சட்டமாகத்தான் கொண்டவர முடியும். பின்னர் அந்த அவரச் சட்டத்துக்கு 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டு சட்டமாக்கப்படவேண்டும். அதன்படி, அவசரச் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |