Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


விஷமம்! மாணவர்கள் தியாகத்தை கொச்சையாக்கி தேச விரோத சக்திகள்... ஜல்லிக்கட்டு போராட்டத்தை வன்முறையாக்கி குளிர்காய்ந்தன போலீஸ் நிலையங்கள், குடிசைகளுக்கு தீ வைத்து கலவரம் திடீர் மறியலால் பரிதவித்த பெண்கள், பள்ளி மாணவர்கள்

Posted: 23 Jan 2017 09:04 AM PST

உலகையே திரும்பி பார்க்க வைத்த, மாணவர்களின், சென்னை, மெரினா போராட்டத்தை, தேச விரோத சக்திகள் தங்களின் விஷமத்தால், கொச்சையாக்கி விட்டனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, அமைதி வழியில் நடந்த, ஒரு வார போராட்டத்தை வன்முறையாக்கி, அதில் குளிர் காய்ந்தனர். காவல் நிலையங்கள், குடிசைகளுக்கு தீ வைத்து, கலவரத்தை துாண்டினர். போலீசுக்கு எதிராக நடத்தப்பட்ட திடீர் மறியல்களால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, பெண்கள், பள்ளி மாணவர்கள் பரிதவித்தனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு
ஜல்லிக்கட்டை நடத்தக் கோரி, ஜன., 17 காலை, சென்னை, மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்லம் முன், ...

மொபைல் போன் பயன்படுத்துவோரை ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Posted: 23 Jan 2017 09:11 AM PST

புதுடில்லி,:மொபைல் போன் பயன்படுத்துவோர் குறித்த தகவல்களை சரிபார்க்கும் வழிவகைகளை காணுமாறு, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில், லோக் நிதி என்ற தொண்டு நிறுவனம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:
ஆய்வு செய்ய, வழி
நாட்டில், மொபைல் போன் நாள் அதிகரித்து வருகிறது. மொபைல் போன்பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, நாளுக்கு மூலம், பல வழிகளில், தகவல்கள் பரப்பி வருகின்றனர். இவர்கள் வழங்கும் தகவல்கள், உண்மைதானா என, தெரியவில்லை. அதனால், மொபைல் போன் ...

திட்டமிடாத போலீசால் திணறிய சென்னை

Posted: 23 Jan 2017 09:15 AM PST

ஜல்லிக்கட்டு போராட்டம் கலவரமாக மாற, உளவுத் துறை தோல்வியே காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தை நிறுத்த, ஜன., 17 முதல், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்று காலை, திடீரென மெரினாவிலும், மற்ற இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு, சாலைகள், 'சீல்' வைக்கப்பட்டன. கடற்கரை சாலையிலும், அதை ஒட்டிய சாலைகளிலும்,வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.
கலவரமாகமாறியது
காலை, 6:00 மணிக்கு, கடற்கரைக்குள் போலீசார் நுழைந்து, போராட்டக்காரர்களை வெளியேற்ற முயற்சித்தனர். இந்த முயற்சி எதிர் விளைவை ஏற்படுத்தி, ...

அறிவித்தபடி பிப்., 1ல் மத்திய பட்ஜெட் தாக்கல் திட்டவட்டம் ..! தடை கோரிய மனுவை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்

Posted: 23 Jan 2017 09:18 AM PST

புதுடில்லி,:உத்தர பிரதேசம் உட்பட, ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடப்பதால், பட்ஜெட் தாக்கலை ஒத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. இதனால், பிப்., 1ல் திட்டமிட்டபடி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

உ.பி., உட்பட, ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல், பிப்., - மார்ச் மாதத்தில் நடக்கிறது. முன்னதாக, மத்திய பொது பட்ஜெட், வழக்கமான, பிப்., 28க்கு பதிலாக, பிப்., 1ல் தாக்கல் செய்யப்படும் என, மத்திய அரசு அறிவித்திருந்தது.'சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியிடுவது, தேர்தல் நடத்தை ...

ஏப்., 1 முதல் 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' : சட்டசபையில் கவர்னர் அறிவிப்பு

Posted: 23 Jan 2017 09:19 AM PST

சென்னை: ''தமிழகத்தில், ஏப்., 1 முதல், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் வழங்கப்படும்,'' என, சட்டசபையில், கவர்னர் வித்யாசாகர் ராவ் தெரிவித்தார்.

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், நேற்று சட்டசபையில் உரையாற்றினார். அவரது பேச்சின்
முக்கிய அம்சங்கள்:
* ஜெயலலிதா வழியில், முல்லை பெரியாறு அணையின், முழு கொள்ளளவான, 152 அடி வரை, நீர்மட்டத்தை மேலும் உயர்த்தி, தென் தமிழகத்திற்கு தேவையான நீர் தர, அனைத்து முயற்சிகளும் செய்யப்படும்
* பொதுமக்களின் பங்களிப்புடன், நீர் ஆதார மேலாண்மையை மேற்கொள்ள, 'குடிமராமத்து' ...

கவர்னர் உரை புறக்கணிப்பு; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

Posted: 23 Jan 2017 09:35 AM PST

சென்னை:சட்டசபையில், கவர்னர் உரையை புறக்கணித்து, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

சட்டசபையில் நேற்று, கவர்னர் வித்யாசாகர் ராவ் பேச துவங்கியதும், அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது உரையை புறக்கணித்து, தி.மு.க., - காங்., - இந்தியன் முஸ்லிம் லீக், எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின், அவர்கள் கூறியதாவது: ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர்:தமிழகம் முழுவதும், கொந்தளிப்பான நிலை உள்ளது. மாணவர்களும், இளைஞர்களும் திரண்டு, ஒரு வார காலமாக, ஜல்லிக்கட்டுக்காக போராடினர். இந்த பிரச்னையில், தமிழக அரசு முறையாக நடந்து கொள்ளவில்லை. முறையாக நடந்திருந்தால், ...

அனைத்து தடைகளும் நீக்கம்: முதல்வர் பன்னீர் பெருமிதம்

Posted: 23 Jan 2017 09:37 AM PST

சென்னை :''சட்டத்திருத்தத்திற்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதால், தமிழகத்தில், ஜல்லிக்கட்டு நடத்த இருந்த அனைத்து தடைகளும் நீக்கப்பட்டு உள்ளன,'' என, சட்டசபையில், முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.

சட்ட மசோதா நிறைவேறும் முன், அவர் பேசியதாவது: ஜல்லிக்கட்டு, 2006 முதல், பல சோதனைகளை சந்தித்துள்ளது. நீதிமன்றங்கள், அவ்வப்போது பிறப்பித்த இடைக்கால உத்தரவுப்படி, ஜல்லிக்கட்டு நடந்து வந்த நிலையில், 2011 ஜனவரியில், மத்திய வன அமைச்சகத்தின், பிராணிகள் நலப் பிரிவு, காளைகளை காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் சேர்த்தது. இது, தி.மு.க., அங்கம் வகித்த, ...

அசம்பாவிதம் நடந்தால் நடவடிக்கை; போலீசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

Posted: 23 Jan 2017 09:55 AM PST

சென்னை: 'பொதுமக்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; அசம்பாவிதம் நடந்தால், போலீசார் நடவடிக்கை எடுக்கலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னையில், நேற்று போராட்டக்காரர்களை கலைக்க, போலீசார் முயன்ற போது, வெடித்த வன்முறைகள் குறித்து, நீதிபதி மகாதேவனிடம் முறையிடப்பட்டது. அவரும், பிற்பகலில் விசாரிப்பதாக கூறினார்.இதையடுத்து, நீதிபதி மகாதேவன் முன், வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி, ''போலீசார், திடீரென பலப்பிரயோகம் செய்தனர். போராடுபவர்கள், எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் அல்ல; அமைதியான ...

சொந்தக் கட்சியினரே ‛சூனியமா?' ஜல்லிக்கட்டு மல்லுக்கட்டு பற்றி பன்னீர்

Posted: 23 Jan 2017 10:26 AM PST

சென்னை: என்னை வீழ்த்த வேண்டும் என்பதற்காக சொந்தக் கட்சியினரே இப்படி செய்கின்றனரே என, அ.தி.மு.க., மூத்த தலைவர்களிடம் முதல்வர் பன்னீர்செல்வம், வருத்தத்தைப் பகிர்ந்து கொண்ட தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து, அ.தி.மு.க., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: ஜெயலலிதா மறைவுக்குப் பின், மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்ட பன்னீர்செல்வம், அதன் பின், ஒரு நாள் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை. தினந்தோறும் ஏதாவது ஒரு பிரச்னை வந்து, முதல்வர் தலையை பிய்த்துக் கொண்டு இருக்கிறார். சரியான தூக்கம் இல்லை என்றும் புலம்பிக் கொண்டிருந்த அவர், ...

போராட்ட களத்தில் ஊடுருவிய மர்ம நபர்கள் யார்? ஆதி முதல் அந்தம் வரை போலீஸ் அதிகாரி 'பளிச்'

Posted: 23 Jan 2017 10:29 AM PST

ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையை தமிழகத்தின் பக்கம் திருப்பிய, கல்லுாரி மாணவர்களின் ஜல்லிக்கட்டு ஆதரவு அறவழிப் போராட்டம், திடீரென திசைமாறி கலவரத்தில் முடிய காரணம் என்ன; போராட்டக்காரர்களுடன் ஊடுருவிய நபர்கள் யார்? அவர்களது திட்டம் என்னவாக இருந்தது என்பது குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: போராட்டத்தின் முதல், மூன்று நாட்கள் எவ்வித பிரச்னையும் இல்லை. நான்காம் நாள் நக்சல் ஆதரவு, இனவாத, மதவாத போக்கு கொண்ட நபர்கள் கூட்டத்திற்குள் ஊடுருவினர்.ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம், மெல்ல மெல்ல ...

ரயில்வே பணியாளர்கள் பற்றாகுறை: அதிகரிக்கும் விபத்துகள்

Posted: 23 Jan 2017 11:58 AM PST

புதுடில்லி: ரயில்வே துறையில் சுமார் 1.3 லட்சம் பாதுகாப்பு பணியாளர்கள் பற்றாகுறையால் ரயில் விபத்துகள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன.இந்திய ரயில்வேயில் மொத்தம் 2.17 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்படாமல் உள்ளன. இதில், டிராக்மேன், பாயின்ட் மேன், பெட்ரோல் மேன், தொழில்நுட்ப ஊழியர்கள், ஸ்டேசன் மாஸ்டர்கள் போன்ற 1.27 லட்சம் பாதுகாப்பு பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.ஆள் பற்றாகுறையின் காரணமாக ரயில் தண்டவாளங்கள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளில் தொய்வு ஏற்படுகின்றது. மேலும், பணியில் இருக்கும் ஊழியர்கள் 15 மணி நேரத்திற்கு மேலாக வேலை பார்க்கும் அவலமும் நிகழ்கிறது. ...

மோடி கல்வித் தகுதி வழக்கு; டில்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Posted: 23 Jan 2017 01:52 PM PST

புதுடில்லி : பிரதமர் மோடியின் கல்வித் தகுதி தொடர்பான தகவல்களை அளிக்கும்படி, டில்லி பல்கலைக்கு, மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு, டில்லி ஐகோர்ட் தடை விதித்தது.

பிரதமர் நரேந்திர மோடி, 1978ல் டில்லி பல்கலையில் பி.ஏ., முடித்ததாக, தேர்தல் விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தார். இது குறித்த ஆதாரங்களை தரும்படி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், நீரஜ் என்ற சமூக ஆர்வலர் கேட்டிருந்தார். அதற்கு, டில்லி பல்கலை தகவல் அதிகாரி மறுப்பு தெரிவித்தார். மூன்றாம் நபர் குறித்த விபரங்களை கோருவதாலும், அதில், பொதுநலன் ஏதும் இல்லை என்றும், தகவல் அதிகாரி ...

எருது பந்தயத்துக்கு அனுமதி; சித்தராமையா போர்க்கொடி

Posted: 23 Jan 2017 02:29 PM PST

பெங்களூரு ''தமிழகத்தில், ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் கொண்டு வந்தது போன்று, கர்நாடகாவில் தடை செய்யப்பட்டுள்ள, 'கம்பாலா' எனப்படும், எருதுகள் பந்தய வீர விளையாட்டுக்கும், மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்,'' என, கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறினார்.

அனுமதி:
கர்நாடகாவில், காங்கிரசைச் சேர்ந்த, முதல்வர் சித்தராமையா தலைமையிலான ஆட்சி நடக்கிறது. பெங்களூரில் நேற்று, சித்தராமையா கூறியதாவது: ஜல்லிக்கட்டுக்கு, தமிழக அரசு சார்பில், அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு, மத்திய அரசு துறைகளின் அனுமதி பெற்று, ஜனாதிபதி ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™