ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நள்ளிரவில் மெரினா
- உன் பலம் என் பலம் நம் பலம் நம்பலாம்
- தமிழ் நாடு அன்றும் இன்றும் - பார்த்ததில் பிடித்தது-
- ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்
- நுனிப் புல் திண்போமா ?
- தமிழ்நாட்டை பார்த்து டெல்லி பாடம் கற்க வேண்டும்: என்டிடிவி ஆசிரியர் சோனியா சிங்
- சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் செல்லும் 9 விரைவு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
- ஜல்லிக்கட்டு போராட்டத்தில் யானையுடன் பங்கேற்போம்: பாகன்கள் அதிரடி அறிவிப்பு
- என் அறிமுகம்
- அடடே – ஒரு பக்க கதை
- ஆத்தாடி – ஒரு பக்க கதை
- ஜல்லிக்கட்டு போராட்டம் மாணவர்களுக்கு உதவும் புதிய ஆப்
- டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க சனாதிபதியாக இன்று பதவி ஏற்கிறார்.
- தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத்
- டெல்லி காவல் துறை ஆணையர் அலோக் குமார் வர்மா சிபிஐ இயக்குநராக நியமனம்
- சென்னைக்கு சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து 540 ஜெர்சி மாடுகள் கொண்டு வரப்படுகின்றன
| Posted: 20 Jan 2017 02:19 PM PST நள்ளிரவில் மெரினா காரிருள் நிலைமாறி கடற்கரை மனிதனின் கைப்பேசிக் கண்கள் கனலாய்க் கொதித்தன மென்பொருள் வல்லுநர் மெல்லப் பேசாமல் மெருகேறிப் போய் மண்வளம் பேசினர் வன்பொருள் வல்லுநர் வணிகம் பேசாமல் வாட்டும் குளிரில் விவசாயம் பேசினர் மாணவ மணிகள் மாபெரும் புரட்சியாய் மாநிலம் முழுவதும் மாட்டை போற்றினர் காளையர் கன்னியர் காதலை மறந்து கடற்கரை மணலில் காளையை மீட்டனர் காவல் நண்பர்கள் கண்ணியம் மாறாது கடமைக்கு இடையில் காளையைப் போற்றினர் நல்லவர் பலரும் நிசப்தம் ... |
| உன் பலம் என் பலம் நம் பலம் நம்பலாம் Posted: 20 Jan 2017 01:06 PM PST உன் பலம் என் பலம் நம் பலம் நம்பலாம் உன் பலம் என் பலம் நம் பலம் நம்பலாம் உன் திறன் என் திறன் நம் திறன் எந்திரன் உன் மொழி என் மொழி நம் மொழி செம்மொழி உன் வழி என் வழி நம் வழி நல்வழி உன் ஆற்றல் என் ஆற்றல் நம் ஆற்றல் பேராற்றல் உன் மூச்சு என் மூச்சு நம் மூச்சு உயிர்மூச்சு உன் கை என் கை நம் கை நம்பிக்கை உன் அடி என் அடி நம் அடி திருவடி உன் வாக்கு என் வாக்கு நம் வாக்கு நல்வாக்கு உன் எண்ணம் என் எண்ணம் நம் எண்ணம் நல்லெண்ணம் உன் திட்டம் என் திட்டம் ... |
| தமிழ் நாடு அன்றும் இன்றும் - பார்த்ததில் பிடித்தது- Posted: 20 Jan 2017 09:38 AM PST நாடென்பது……………. நன்றி -குணா தமிழ்.(முனைவர் இரா.குணசீலன் ) |
| ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் Posted: 20 Jan 2017 09:02 AM PST - அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி | கோப்புப் படம். ---------------------------------------------------------------------------- - மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், முகுல் ரோஹத்கி, ‛விளையாட்டானது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது; ஜல்லிக்கட்டை பாரம்பரிய விளையாட்டாக கருதி, அதை நடத்த தமிழக அரசு சட்டம் கொண்டு வரலாம்' எனத் தெரிவித்தார். இதனையடுத்து ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இன்று முக்கிய முடிவு எடுக்கும் எனத் தெரியவருகிறது. - ------------ தினமலர் |
| Posted: 20 Jan 2017 08:30 AM PST நுனிப் புல் திண்போமா ? அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில் எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் ... |
| தமிழ்நாட்டை பார்த்து டெல்லி பாடம் கற்க வேண்டும்: என்டிடிவி ஆசிரியர் சோனியா சிங் Posted: 20 Jan 2017 07:37 AM PST -- டெல்லி: தமிழ்நாட்டை பார்த்து டெல்லி பாடம் கற்க வேண்டும் என என்டிடிவி ஆசிரியர் இயக்குனர் சோனியா சிங் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு ஆதரவாக சென்னை மெரினா உட்பட தமிழகம் முழுவதும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இரவு பகல் பாராமல் இளைஞர்களுடன் பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து என்டிடிவி ஆசிரியர் இயக்குனர் சோனியா சிங் தெரிவித்துள்ளதாவது: ஜல்லிக்கட்டு ஆதரவாக சென்னை மெரினாவில் இளைஞர்களுடன் பெண்களும் இரவு முழுவதும் போராட்டம் நடத்தி ... |
| சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் செல்லும் 9 விரைவு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு Posted: 20 Jan 2017 06:17 AM PST சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் செல்லும் 9 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி, ராமேஸ்வரம் சேது ரயில் தூத்துக்குடி முத்துநகர் ரயில் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல் சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, செங்கோட்டை பொதிகை ரயில், மதுரை பாண்டியன், ராமேஸ்வரம் மற்றும் மங்களூர் விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எஸ்பிரஸ் ரயில் திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே ... |
| ஜல்லிக்கட்டு போராட்டத்தில் யானையுடன் பங்கேற்போம்: பாகன்கள் அதிரடி அறிவிப்பு Posted: 20 Jan 2017 06:12 AM PST தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் தமிழ்நாடு யானை பாகன் நலச்சங்க நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் ரங்கன் தலைமை வகித்தார். செயலாளர் சுகுமார் முன்னிலை வகித்தார். ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவது. இதற்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது. திருச்சியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் நாளை (21ம் தேதி) யானையுடன் சென்று கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. - ------------------------------------ தினகரன் |
| Posted: 20 Jan 2017 06:09 AM PST பெயர்: கார்த்திகா சொந்த ஊர்: செய்யாறு ஆண்/பெண்: பெண் ஈகரையை அறிந்த விதம்: Google பொழுதுபோக்கு: புத்தகம் வாசித்தல் தொழில்: இல்லத்தரசி மேலும் என்னைப் பற்றி: இயற்பியல் ஆசிரியை, தற்போது கோலாலம்பூரில் கணவருடன் வசித்து வருகிறேன்.... |
| Posted: 20 Jan 2017 05:54 AM PST - குமுதம் |
| Posted: 20 Jan 2017 05:52 AM PST ![]() |
| ஜல்லிக்கட்டு போராட்டம் மாணவர்களுக்கு உதவும் புதிய ஆப் Posted: 20 Jan 2017 05:38 AM PST ஜல்லிக்கட்டு போராட்டத்தில் லட்சகணக்கான இளைஞர்களை ஒன்று திரட்ட பயர்சாட் என்ற ஒரு ஆப் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதனை இணைய வசதி இல்லாமலும் பயன்படுத்தலாம். ஜனவரி 20, 03:29 PM ஜல்லிக்கட்டு போராட்டத்தின் களநிலவரங்கள் நொடிக்கு நொடி இளைஞர்களால் வாட்ஸ் ஆப், பேஸ்புக் மூலம் அப்டேட் செய்யப்படுகின்றன. இந்த வரிசையில் தற்போது புதிதாக ஒரு விஷயம் இணைந்துள்ளது. அதுதான் இந்த பயர்சாட். வாட்ஸ்அப் போலவே மெசேஜிங் அப்ளிகேஷன்தான் இந்த பயர்சாட். ஆனால், செயல்படும் விதம், பயன்பாடுகள் அனைத்தும் வேறு மாதிரியாக இருக்கிறது. அதுவும் ... |
| டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க சனாதிபதியாக இன்று பதவி ஏற்கிறார். Posted: 20 Jan 2017 05:17 AM PST இன்று டொனால்ட் ட்ரம்ப் (70) மனைவி மெலனியா (46) உடன் 45 வது சனாபதியாக பதவி ஏற்க வருகிறார். உதவி சனாதிபதியாக மைக் பென்ஸ் உம் பதவி ஏற்கிறார். காலை 9.30 ற்கு நிகழ்ச்சி ஆரம்பமாகும். முதலில் உதவி சனாதிபதி பென்ஸ் பதவி ஏற்பார். அதைத் தொடர்ந்து ட்ரம்ப் பதவி ஏற்கிறார்.சாட்சியாக லிங்கன் பைபிள் பயன்படுத்தப்படுகிறது. ட்ரம்ப் பயன்படுத்த இருக்கும் கார் இது. ![]() |
| தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Posted: 20 Jan 2017 03:10 AM PST தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் [size=12]எல்லா தேவதைகளும் ஒரே பரமாத்மாதான். சிவனும் விஷ்ணுவும் கொஞ்சம்கூட வேறில்லை. ஆனாலும் இரண்டையும் வழிபடுகிறபோது, கொஞ்சம் பிரித்து பக்தி செய்தால் அதிலும் ஒரு ரசம் இருக்கத்தான் செய்கிறது.[/size] பலவாகப் பிரிந்தும் ஒற்றுமையுடன் இருப்பதுதான் (Unity in diversity) நம் மதத்தின் சாரம். இப்படியே சிவன், விஷ்ணு என்கிற இரண்டு மூர்த்திகளை வழிபடும்போது சாராம்சத்தில் அவை ஒன்றே என்ற உணர்ச்சி இருந்தாலும், ஒவ்வொரு மூர்த்தியை ஒவ்வொரு தத்துவத்துக்கு ரூபகமாக ... |
| டெல்லி காவல் துறை ஆணையர் அலோக் குமார் வர்மா சிபிஐ இயக்குநராக நியமனம் Posted: 20 Jan 2017 02:18 AM PST - சிபிஐ புதிய இயக்குநராக டெல்லி காவல் துறை ஆணையர் அலோக் குமார் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். சிபிஐ இயக்குநராக இருந்த அனில் சின்ஹா கடந்த டிசம்பர் 2-ம் தேதி ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து ராகேஷ் அஸ்தானா இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு உள்நோக்கத்துடன் செயல் படுகிறது என்று குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி சிபிஐ இயக்குநரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியது. ... |
| சென்னைக்கு சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து 540 ஜெர்சி மாடுகள் கொண்டு வரப்படுகின்றன Posted: 20 Jan 2017 02:12 AM PST சென்னை, இதில் முதல் கட்டமாக 60–க்கும் மேற்பட்ட ஜெர்சி இன பசுக்கள் விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தன. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி தமிழ்நாட்டில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரியும், விலங்குகள் நல அமைப்பான 'பீட்டா'வை கண்டித்தும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உள்நாட்டு காளை இனங்களை அழித்து வெளிநாட்டு காளைகளை இந்தியாவில் உருவாக்க 'பீட்டா' அமைப்பு முயற்சிப்பதாகவும், இதனால்தான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக அந்த அமைப்பு குரல் எழுப்புவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

