Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கறுப்பு பண முதலைகள் தப்புவதை தடுக்க...வியூகம்: வங்கிகளுக்கு நேரடி வரிகள் வாரியம் உத்தரவு

Posted: 20 Jan 2017 08:55 AM PST

புதுடில்லி:வங்கிக் கணக்கில், ஒரு நிதியாண் டில், 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக செய்யப் படும் முதலீடுகள் குறித்து, தகவல் தெரிவிக்கும் படி, வங்கிகளுக்கு, மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த தகவல் களை அளிப்பதற்காக,தனி மின்னணு வசதியும் செய்யப்பட்டுள்ளது.

கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், கடந்தாண்டு, நவ., 8ம் தேதி, செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. செல்லாததாக அறிவிக்க ப்பட்ட, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில், 'டிபாசிட்' செய்ய, டிச., 30 வரை அவகாசம் தரப்பட்டது.அதைத் தொடர்ந்து, கறுப்புப் பணத்தை ஒழிக் ...

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தால் தலைநகர்...ஸ்தம்பித்தது!: அறவழியில் இளைஞர் படை; மக்கள் பெரும் ஆதரவு

Posted: 20 Jan 2017 09:27 AM PST

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று, தமிழகம் முழுவதும், கடை அடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. போக்குவரத்து இன்றி, தமிழகத்தின் தலைநகர் சென்னை ஸ்தம்பித்தது.

தமிழக பாரம்பரிய விளையாட்டான, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, சென்னையில் முழுமையான கடை அடைப்பு நடந்தது. ஆட்டோ மற்றும் கார் ஓட்டுனர் சங்கத்தினரும், அரசு மாநகர பேருந்து கழகத்தினரும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்; இதனால், சாலைகள் வெறிச்சோடின. பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், போராட்ட களமான, மெரினா கடற்கரையில், இளைஞர்கள் அதிக ...

சமூக வலைதளங்களில் முதலிடம் பிடிக்கும் மோடி

Posted: 20 Jan 2017 09:31 AM PST

புதுடில்லி:அமெரிக்க அதிபர் ஒபாமா பதவி விலகிய பின், சமூக வலைதளங்களில், மக்கள் அதிகம் பின் தொடரும் தலைவராக, பிரதமர், நரேந்திர மோடி விளங்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமூக வலைதளங்களான, 'டுவிட்டர், பேஸ்புக்' உள்ளிட்டவற்றை, உலகம் முழுவதும், தலைவர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் மக்கள் அதிகம் பின் தொடரும், தலைவராக தற்போது, அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளார்.உலகளவில், ஒபாமாவை, 8.07 கோடி பேர்,பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த பட்டியலில், இரண்டாவது இடத்தில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளார்; அவரை, 6.8 கோடி பேர், பின் தொடர்ந்து ...

தமிழக இளைஞர்கள் போராட்டம்; மத்திய - மாநில அரசுகள் அதிர்ச்சி

Posted: 20 Jan 2017 09:35 AM PST

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி, தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டம், மத்திய - மாநில அரசுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த, உச்ச நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக்கோரி, தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக, மாணவ - மாணவியர், இளைஞர்கள், பொதுமக்கள், போராட்டத்தில் குதித்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு முன், குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். அதனால், கடந்த ஆண்டைப் போல, பொங்கல் வரைபோராட்டம் இருக்கும்; பின் போராட்டம் பிசுபிசுத்து விடும் என, போலீஸ் அதிகாரிகள் நம்பினர். யாரும் ...

இளைஞர்களைப் பார்த்து அரசியல்வாதிகள்... கத்துக்கலையே!: போட்டோவுக்கு 'போஸ்' கொடுப்பதில் மட்டும் ஆர்வம்: ரயில் மறியல் போராட்டம் நடத்தியதால் மக்கள் அவதி: இன்று உண்ணாவிரதப் போராட்டமும் உண்டாம்

Posted: 20 Jan 2017 09:39 AM PST

சென்னை:ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க., நடத்திய ரயில் மறியல் போராட்டத் தால், தமிழகத்தில் பல இடங்களில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. சென்னையில் நேற்று நான்கு மணி நேரம் ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்ததால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மருத்துவமனை செல்ல வேண்டியவர்கள் கடும் கோபத்திற்கு உள்ளாகினர். பலரும் மனம் வெறுத்த நிலையில் 'நம் இளைஞர்களின் கட்டுப்பாட்டைப் பார்த்துக் கூட பாடம் கற்றுக் கொள்ளத் தெரியலியே... போட்டோவுக்கு 'போஸ்' குடுக்க வந்துட்டாங்க...' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினை வசை பாடினர். எனினும் ஜல்லிக்கட்டுக்கு ...

போராட்ட களத்தில் போலீசின் பரபரப்பு பேச்சு

Posted: 20 Jan 2017 09:42 AM PST

ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில், சீருடையில் இருந்த, போலீசார் இருவர், திடீரென, 'மைக்' பிடித்து, உணர்ச்சி பெருக்குடன் பேசியதால், அவர்களை இளைஞர்கள் கட்டித் தழுவி நன்றி தெரிவித்தனர்.

சென்னை, மெரினா கடற்கரையில், ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக, பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை, 9:00 மணியளவில், ஆயுதப்படை காவலர் மாயழகன், போக்குவரத்து தலைமை காவலர் விஜயகுமார் ஆகியோர் பேச விரும்பினர்.அப்போது, போராட்ட களத்தில் இருந்த இளைஞர்கள், 'சீருடையில் இருக்கிறீர்களே; அதிகாரிகளால் பாதிப்பு நேரிடப் போகிறது' ...

ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைப்பேன்: முதல்வர் பன்னீர் நம்பிக்கை

Posted: 20 Jan 2017 09:44 AM PST

சென்னை:''ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டம் இன்று அல்லது நாளை பிறப் பிக்கப்படும்,'' என, முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: ஜல்லிக்கட்டை நடத்த உரிய ஏற்பாடுகள்
செய்ய டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினேன். அங்கேயே தங்கியிருந்து அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து சட்டவல்லுனர்களுடன் ஆலோசித்தேன்.வரைவு அவசர சட்டம் தயாரிக்கப் பட்டு மத்திய உள்துறை, சட்டம், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒப்புதலை பெற அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளது.பின் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு ...

தமிழகத்தில் நாளை ஜல்லிக்கட்டு?

Posted: 20 Jan 2017 09:46 AM PST

தமிழகத்தில், நாளை ஜல்லிக்கட்டு நடத்த, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.தடையை நீக்கி, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் எனக்கோரி, தமிழகம் முழுவதும், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், அகிம்சை வழியில் போராடி வருகின்றனர்.

'அலங்காநல்லுாரில் வாடிவாசல் திறந்து, ஜல்லிக்கட்டு நடத்தினால் மட்டுமே, போராட்டத்தை கைவிடுவோம்' என, அவர்கள் அறிவித்துள்ளனர்.எனவே, ஜல்லிக்கட்டு நடத்த தேவையான நடவடிக்கைகளை, முதல்வர் பன்னீர்செல்வம் மேற்கொண்டு உள்ளார். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வசதியாக, இன்று அவசர சட்டம் ...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தமிழக 'பந்த்' வெற்றி

Posted: 20 Jan 2017 09:51 AM PST

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான, 'பந்த்' வெற்றி பெற்றது.ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும், நேற்று கடையடைப்பு செய்யப் பட்டது; ஆட்டோ, டாக்சிகள் ஓடவில்லை; அரசு, தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை; பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

அரசு ஊழியர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்திருந்தனர். தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூடப்பட்டன. கூலித் தொழிலாளிகள்,வணிகர்கள், அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் என, அனைத்து தரப்பினரும், நேற்று வேலைநிறுத்தம் செய்தனர். இது, பெரிய அளவுக்கு வெற்றி பெற்றதால், அரசியல் கட்சிகள் ...

அடாத மழையிலும் விடாது தொடரும் போராட்டம்

Posted: 20 Jan 2017 11:08 AM PST

தஞ்சாவூர்: புதுச்சேரி, கடலுார், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டி இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் அடாத மழையிலும் விடாது நடைபெற்று வருகிறது.
பெருகும் ஆதரவு:
சுப்ரீம் கோர்ட் தடை விதித்ததன் காரணமாக ஜல்லிக்கட்டு இந்தாண்டு நடைபெறவில்லை. இதனையடுத்து, களமிறங்கிய இளைஞர்கள், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரியும், இதற்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.
மழையிலும் தொடரும் ...

இன்றும், நாளையும் மழை பெய்யும்? 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்

Posted: 20 Jan 2017 12:21 PM PST

சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்து அருகே, உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தமிழகத்தை நோக்கி, மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இன்று, தமிழக கடலோர பகுதிக்குள் நுழையும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஸ்டெல்லா கூறியதாவது: காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடலோர மாவட்டங்களில், இன்று லேசான மழையும், நாளை முதல் இரு ...

எம்.பி.,க்கள் ராஜினாமா: மாணவர்கள் வலியுறுத்தல்

Posted: 20 Jan 2017 01:04 PM PST

சென்னை : 'ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, தமிழக, எம்.பி.,க்கள் ஒட்டுமொத்தமாக, ராஜினாமா செய்ய வேண்டும்' என, மாணவர்கள் வலியுறுத்தினர்.
மெரினா போராட்டத்தில், மாணவர்கள் பேசியதாவது: உலகில், பால் உற்பத்தியில், நம்நாடு சிறந்து விளங்குகிறது. இதனால், வெளிநாட்டு சோயா பால் உற்பத்தி நிறுவனங்களின் வர்த்தகம், இங்கு எடுபடாமல் போனது. அதனால், நம்நாட்டு மாட்டு இனங்களை அழிக்கும் திட்டத்தில், 'பீட்டா'வை கருவியாக கொண்டு, அந்நிறுவனங்கள் களமிறங்கி உள்ளன. அதன் ஒருபடி தான், ஜல்லிக்கட்டு தடை. ஜல்லிக்கட்டு என்பது,
தமிழனின் அடையாளம்; உரிமை; ...

தினமும் வெட்டப்படும் 25,000 மாடுகள்: 'பீட்டா' கண்டுகொள்ளாதது ஏன்?

Posted: 20 Jan 2017 02:26 PM PST

சென்னை : 'மாடுகளை துன்புறுத்துவதாக, ஜல்லிக்கட்டுக்கு எதிராக கூச்சலிடும், 'பீட்டா'வுக்கு, நாடு முழுவதும் தினமும், 25 ஆயிரம் மாடுகள் இறைச்சிக்காக கொல்லப்படுவது தெரியாதா; அவற்றை காப்பாற்ற எடுத்த முயற்சிகள் என்ன' என, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இளைஞர்கள் போராட்டம்:
'தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடுத்த, 'பீட்டா'வை, நாட்டை விட்டே ஓட்டும் வரை ஓயமாட்டோம்' என, இறுதிக்கட்டப் போருக்கு தயாரானது போன்று, தமிழகமே ஆர்ப்பரித்து கிளம்பி இருக்கிறது.அரசின் நிர்ப்பந்தத்தால், கல்லுாரிகளின் கதவுகள் ...

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகை

Posted: 20 Jan 2017 03:29 PM PST

சென்னை: அவசர சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், இன்று இரவு சென்னை வருகிறார்.

அவசர சட்டம்:
ஜல்லிக்கட்டு நடத்த ஏற்ற வகையில், அவசர சட்டம் கொண்டு வர, முதல்வர் பன்னீர்செல்வம், நடவடிக்கை எடுத்துள்ளார். ஜனாதிபதி ஒப்புதலுடன், மாநில கவர்னர், அவசர சட்டத்தைப் பிறப்பிப்பார். இன்று அல்லது நாளை அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கவர்னர் வருகை:
இந்நிலையில், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், இன்று இரவு மும்பையிலிருந்து, சென்னை திரும்புகிறார். ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™