Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தலைக்கு வந்தது தலையோடு போனது.

Posted: 12 Jan 2017 08:45 AM PST

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: சுப்ரமணியன் சுவாமி

Posted: 12 Jan 2017 08:40 AM PST

புதுடெல்லி, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையோடு நடத்தப்படும். உச்சநீதிமன்ற தீர்ப்பால் கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் விழாவின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை. இந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், ஜல்லிக்கட்டு ...

தமிழ்நாட்டில் காளைகள் சித்திரவதை செய்யப்படும் அதிர்ச்சிகரமான புகைபடங்கள்

Posted: 12 Jan 2017 08:33 AM PST

தமிழர்கள் பொறுக்கிகள்.

Posted: 12 Jan 2017 08:27 AM PST

சு .சுவாமி ... தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட பொறுக்கள் தான் ஜல்லிக்கட்டு வேண்டும் என்கின்றனர் என்ற அர்த்தத்தில் பதிவிட்டுள்ளார். தங்களின் பாரம்பரிய உரிமைக்காக போராடும் மக்களை ஒரு ஆளும் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பொறுக்கிகள் என தரக்குறைவான வார்த்தைகளை கூறி விமர்சித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு வேண்டும் என வலியுறுத்தி பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா ...

சின்னத்திரை நடிகை மேக்னா வின்சென்ட்டுக்கு திருமணம்

Posted: 12 Jan 2017 08:19 AM PST

'என் கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துடுங்க!' – 'தெய்வம் தந்த வீடு' மேக்னா வின்சென்ட் அழைப்பு --- - விஜய் டி.வி யில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் 'தெய்வம் தந்த வீடு' சீரியலில் சாந்தமான, பாந்தமான மருமகளாக நடித்திருப்பார் 'சீதா' என்கிற மேக்னா வின்சென்ட். 'என் மருமகள் நல்ல மருமகள்' என்று சீரியல் மாமியாரிடம் வெரி குட் வாங்கும், சீரியல் மருமகளிடம் பேசினோம், "எப்போது சீரியலில் நடிக்கத் தொடங்கினீர்கள்?" "தமிழில் இது தான் என்னோட முதல் சீரியல். எனக்கு ஸ்கிரீன் புதுசு இல்ல. ...

நம்ம ஊர் ஸ்பெஷல்! – திருச்சி அக்கார அடிசில்!

Posted: 12 Jan 2017 08:11 AM PST

- திருநெல்வேலி என்றால் அல்வா, தூத்துக்குடி என்றால் மக்ரோன்ஸ் என்று ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல் இனிப்போ, காரமோ அல்லது ஏதோ ஒரு சிறந்த உணவு வகை இருக்கும். அவ்வகையில், வெவ்வேறு ஊர்களின் சிறப்பு உணவு வகைகள் இப்பகுதியில் இடம் பெறும். தோற்றத்தை வைத்து சர்க்கரைப் பொங்கலின் அக்கா தான், அக்கார அடிசில் என்றாலும், இது, சுவையில் மாறுபட்டது. ஒரு பங்கு பச்சரிசிக்கு, இரண்டு பங்கு பாசிப்பருப்பு சேர்த்து வேக விட வேண்டும். பாதி வெந்த நிலையில், அதில் குங்குமப்பூ சேர்த்து, கொதிக்க வைத்த பாலை ...

மனிதனை போல் இயங்கும் ரோபோ : சீனாவில் செயல்பாட்டுக்கு வந்தது

Posted: 12 Jan 2017 08:09 AM PST

- ஷாங்காய் : மனிதர்களை போன்ற தோற்றமும், முகபாவனைகளும் காட்டும் ரோபோவை சீனா தயாரித்து, செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. சீனா, மனிதனை போன்ற தோற்றம் தொண்ட முதல் ரோபோவை கடந்த ஆண்டு உருவாக்க துவங்கியது. சீன அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பல்கலையின் சின் ஷியாபிங் தலைமையிலான இன்ஜினியர்கள் குழு உருவாக்கி உள்ளது. இந்த ரோபோவுக்கு 'ஜியா ஜியா' என, பெயரிடப்பட்டுள்ளது. பெண் வடிவிலான இந்த ரோபோவிற்கு செயற்கை அறிவுத்திறன் வழங்கப் பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக சீன ரெஸ்டாரன்ட்கள், நர்சிங் ...

மனிதனை போல் இயங்கும் ரோபோ : சீனாவில் செயல்பாட்டுக்கு வந்தது

Posted: 12 Jan 2017 08:09 AM PST

- ஷாங்காய் : மனிதர்களை போன்ற தோற்றமும், முகபாவனைகளும் காட்டும் ரோபோவை சீனா தயாரித்து, செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. சீனா, மனிதனை போன்ற தோற்றம் தொண்ட முதல் ரோபோவை கடந்த ஆண்டு உருவாக்க துவங்கியது. சீன அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பல்கலையின் சின் ஷியாபிங் தலைமையிலான இன்ஜினியர்கள் குழு உருவாக்கி உள்ளது. இந்த ரோபோவுக்கு 'ஜியா ஜியா' என, பெயரிடப்பட்டுள்ளது. பெண் வடிவிலான இந்த ரோபோவிற்கு செயற்கை அறிவுத்திறன் வழங்கப் பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக சீன ரெஸ்டாரன்ட்கள், நர்சிங் ...

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு

Posted: 12 Jan 2017 07:29 AM PST

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அதிமுக, திமுக எம்பி.க்கள் என்ன செய்தார்கள்?- பொன்.ராதாகிருஷ்ணன்

Posted: 12 Jan 2017 07:21 AM PST

ஜல்லிக்கட்டுக்காக அதிமுக, திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் என்ன செய்தார்கள் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், "திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளை துடைத்து எரிந்துவிட்டு தமிழக மக்கள் பொங்கலை கொண்டாடினால் 50 ஆண்டு அவலம் நீங்கி நல்ல காலம் பிறக்கும்" என்று கூறினார். மதுரை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் இன்று (வியாழக்கிழமை) கூறியதாவது: "ஜல்லிக்கட்டு பிரச்சினை உருவானது 2011 ஜூலை மாதம். அப்போது ...

நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!!

Posted: 12 Jan 2017 06:37 AM PST

பக்கத்து வீட்ல கோழிய கொன்னுட்டாங்க...
பாவமாயிருந்துச்சு,
அதை தட்டிக் கேக்கலாம்னு போனேன்....
-
-
-
-
-
-
ஒரு கிண்ணத்துல குழம்பு குடுத்தாங்க, வாங்கிட்டு
வந்துட்டேன்!!
-
நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!!
-
---------------------------------------

‘தங்கல்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பு: ஆமிர்கான் நெகிழ்ச்சி

Posted: 12 Jan 2017 05:23 AM PST

- 'தங்கல்' படத்துக்குக் கிடைத்த பெரும் வரவேற்புக் குறித்து ஆமிர்கான் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். நித்தேஷ் திவாரி இயக்கத்தில் ஆமிர்கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'தங்கல்'. கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு வெளியான இப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் வெளியான 3 நாட்களில் சுமார் ரூ.100 கோடியைத் தாண்டி படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட உலக நாடுகளிலும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. வசூலில் பல்வேறு ...

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தி கலாச்சாரத்தை நிலைநாட்டிய நாம் தமிழர்கள்

Posted: 12 Jan 2017 05:16 AM PST

ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை அகற்றி அனுமதி தரவேண்டும் இல்லை என்றால் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என தமிழகம் முழுவதும் இளைஞர்கள் எழுர்ச்சியுடன் கிளம்பியுள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் சினிமா துறையினர் சிலர் ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், கடலூரையடுத்த திருவந்திபுரத்தில் நாம்தமிழர் கட்சி சார்பில் இன்று தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் ...

‘முன்பதிவு டிக்கெட்டில் பயணம் செய்யலாம்’: ரெட்பஸ் நிறுவனம் விளக்கம்

Posted: 12 Jan 2017 05:09 AM PST

ரெட்பஸ் நிறுவனத்தின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான தனன் கிறிஸ்டதாஸ் கூறியதாவது : தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ரெட் பஸ் இணையதளம் மற்றும் செயலி மூலமும் மேற்கொள்ளப்படுகின்றன. வாடிக்கையாளர் சேவை சரியில்லாத, பேருந்துகளை மோசமாக பராமரிக்கும் நிறுவனங்களை அவ்வப்போது எங்களது இணைய தளத்திலிருந்து நீக்குகிறோம். அப்படி நீக்கப்பட்ட நிறுவனங்கள் இது போன்ற தகவல்களை பரப்புகின்றன. எங்களிடம் ...

விஜய் நடித்த ‘பைரவா’ இணையதளத்தில் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி

Posted: 12 Jan 2017 05:03 AM PST

--- சென்னை, விஜய்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள இந்த படத்தை பரதன் இயக்கி இருக்கிறார். விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. 'பைரவா' படம் இன்று உலகம் முழுவதும் 55 நாடுகளில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் திரையிடப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 450 தியேட்டர்களில் 'பைரவா' படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இதை விஜய் ரசிகர் கள் தியேட்டர்களில் 'விஜய் கட்-அவுட்', கொடி தோரணங்கள் கட்டி இனிப்பு வழங்கி கோலாகலமாக கொண்டாடினார்கள். சென்னையில் விஜய் ...

இப்படித்தான் நாம் எல்லாவற்றையும் அழித்துக் கொண்டு இருக்கிறோம் !

Posted: 12 Jan 2017 05:00 AM PST



திருநங்கை

Posted: 12 Jan 2017 04:35 AM PST

திருநங்கை கூட்ட நெரிசலில் அந்த ஓர் இருக்கைமட்டும் காலியாக இருந்தது நெருங்கி விடாமல் நகர்ந்து கொண்டனர் அமர்ந்திருப்பவளோ திருநங்கை சுயத்தை அறுத்ததெரிந்தவள்(ன்) அவள் அல்ல நாம் தான்! அர்த்தநாரீசுரனிடம் அன்பொழுக ஆயிரம் காரியங்கள் கேட்கிறோம் ஆனால் அடுத்த இருக்கையில் கூட அமர யோசிக்கிறோம் உதட்டு சாயம் பூசி சரம் சரமாய் பூவை சூடிக் கொண்டு மின்னலாய் கைதட்டி காசு வாங்கிட அவளுக்கென்ன ஆசையா?/ வயிற்றின் ஈரம் காய வேண்டும் அது அந்த உதட்டு சாயத்தின் வழியேயும் ...

சாப்பாடு.. உடற்பயிற்சி.. கவர்ச்சி - வலுஷா டிசவுசா

Posted: 12 Jan 2017 04:17 AM PST

-- 'பேன்' (விசிறி) என்ற இந்தி சினிமா மூலம் இந்திய திரை உலகிற்குள் பிரவேசித்திருக்கிறார், வலுஷா டிசவுசா. கோவாவை சேர்ந்த இந்த மாடலிங் அழகியை, ரசிகர்கள் 'கோவா மல்கோவா' என்று அழைக்கிறார்கள். அவரது உற்சாகமான உரையாடல்! உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட முதல் திருப்புமுனை? பிரபலமான ஆடைவடிவமைப்பாளர் வான்டெல் ரோட்ரிக்ஸ்தான் என்னை அடையாளங்கண்டு திரை உலகிற்கு அறிமுகம் செய்தார். எனது 16 வயதில், கோவாவில் இந்த திருப்புமுனை ஏற்பட்டது. பல முன்னணி டிசைனர்களின் விருப்பமான மாடலாக நீங்கள் மாறியது ...

சினிமா சூட்டிங் என கூறி ஜல்லிக்கட்டு.. போலீசாருக்கே தண்ணி காட்டிய நாம் தமிழர் கட்சி..

Posted: 12 Jan 2017 03:30 AM PST

கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. ஜல்லிக்கட்டு நடந்து முடியும் வரை போலீசாருக்கு தெரியாமல் போனது எப்படி. அதாவது திருவந்திபுரத்தில் முதலில் சினிமா சூட்டிங் என்று போலீசாரை திரை திருப்பி உள்ளனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு உண்டான கேலரி மற்றும் தடுப்புகளை அமைத்தனர். பின்னர் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 15 காளை மாடுகளை கொண்டு வந்து விட்டனர். பின்னர் வாலிபர்கள் ஆரவாரமாகவே காளைகளை அடக்கி பரிசுகளை வென்றனர். இதற்கிடையில் உண்மையிலேயே ...

ஆர் ஜே பாலாஜி - ஜல்லிக்கட்டு பற்றி பேசிய காணொளி

Posted: 12 Jan 2017 03:16 AM PST

அருமை பாலாஜி ,




நாம் எடுப்பதும் உலக சினிமா தான்! – மிஷ்கின்

Posted: 12 Jan 2017 01:41 AM PST

சென்னை சர்வதேச திரைப்பட விழா 'உலக சினிமா' சீசன் என திரைப்பட ஆர்வலர்களால் கருதப்படும் நிலையில், இயக்குநர் மிஷ்கின் பகிர்ந்த கருத்துகள்: "வெளிநாட்டு தொழில்நுட்பக் கலைஞர்கள்தான் நமக்கு கேமராவை எப்படி இயக்க வேண்டும், சினிமாவுக்கு கதை எப்படி எழுத வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள். அப்படித்தான் நமது திரையுலக வாழ்க்கைத் தொடங்கியது. கூத்து என்பது நம்மிடையே இருந்தது. சினிமா என்பது வெளியுலகிலிருந்து வந்தது. கூத்து – சினிமா இரண்டுமே ஒன்று என்றாலும், சினிமா என்பது தொழில்நுட்பம் சார்ந்த ஒரு ...

கூட்டம் கூட்டமாக தாக்கும் ஆளில்லா விமானங்கள்: அமெரிக்க ராணுவம் புதிய கண்டுபிடிப்பு

Posted: 12 Jan 2017 01:39 AM PST

-- கூட்டம் கூட்டமாக பறந்து வந்து தாக்கும் சிறிய ரக ஆளில்லா விமானங்களை அமெரிக்க ராணுவம் உருவாக்கி உள்ளது. அமெரிக்க ராணுவத்தில் ஆளில்லா போர் விமானங்கள், உளவு விமானங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின் றன. அவை பல நேரங்களில் எதிரிகளால் சுட்டு வீழ்த்தப் படுகின்றன. எனவே எதிரிகளைத் திணற டிக்க கூட்டம் கூட்டமாக பறந்து வந்து தாக்கும் சிறிய ரக ஆளில்லா போர் விமானங் களை அமெரிக்க ராணுவம் உருவாக்கியுள்ளது. இதற்கு ஸ்வார்ம் என்று பெயரிடப்பட்டுள் ளது. அண்மை யில் 103 சிறிய ரக ஆளில்லா விமானங்கள் ஒரே ...

குழந்தைப் பாடல்: பொங்கல் திருநாள்

Posted: 12 Jan 2017 12:49 AM PST

- பொங்கல் திருவிழா வந்தது புதிய மகிழ்வைத் தந்தது சங்கத் தமிழர் பெருமையைத் தரணி புகழச் சொன்னது! - உழவர் நாளாய் மலர்ந்தது உழைப்பின் அருமை புரிந்தது மண்ணில் விளைந்த நெல்மணி பானையில் பொங்குது கண்மணி! - இல்லம் சிறக்கச் செய்தது இனிப்புப் பொங்கல் ஆனது உள்ளம் தேனாய் இனிக்கவே உறவுப் பொங்கல் ஆனது! - சோலை மரங்கள் பூத்தன சொக்கப் பானைகள் எரித்தன பாலும் நெய்யும் சேர்ந்தது பாசப் பொங்கல் இனித்தது! - -------------------------------- அழகுதாசன் தமிழ் தி இந்து

தமிழகத்தில் 4 இடங்களில் 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை:

Posted: 12 Jan 2017 12:46 AM PST

தமிழகத்தில் 4 இடங்களில் 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனைகள் திறக்கப்படும் என்று மத்திய தொழிலாளர் துறை இணையமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார். மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில் தென்மாநில அளவிலான தொழிலாளர் துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டை மத்திய இணையமைச்சர்பண்டாரு தத்தாத்ரேயா தொடங்கி வைத்தார். மாநாட்டின் முடிவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தலா ரூ.95 கோடி ...

தமிழக சட்டப்பேரவை ஜன.23-ல் கூடுகிறது: ஆளுநர் உரையாற்றுகிறார்

Posted: 12 Jan 2017 12:44 AM PST

தமிழக சட்டப்பேரவையை வரும் 23-ம் தேதி ஆளுநர் கூட்டியிருப்பதாக சட்டப்பேரவைச் செயலர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், 'தமிழக ஆளுநர் இந்திய அரசமைப்பு பிரிவு 174(1)-ன் கீழ், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தை, 2017-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 23-ஆம் நாள், திங்கள்கிழமை, காலை 10.00 மணிக்கு, சென்னை - 600009, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூட்டியிருக்கிறார். இந்திய அரசமைப்பு, பிரிவு 176 (1)-ன் கீழ், ...

ஜல்லிக்கட்டு மிருக வதையல்ல... மனித வதை : இயக்குனர் பாரதிராஜா ஆவேசம்

Posted: 11 Jan 2017 11:26 PM PST

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா கலைஞர்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜாவும் ஜல்லிக்கட்டுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 4000 ஆண்டுகளாக விளையாடி வரும் தமிழர்களின் வீர விளையாட்டைத் தடை செய்வது எந்த வகையில் நியாயம்? இது மிருக வதையல்ல, மனித வதையென்று கொஞ்சம் மாற்றிச் ...

மிதியடியில் தேசிய கொடி: அமேசான் நிறுவனத்துக்கு சுஷ்மா கடும் எச்சரிக்கை

Posted: 11 Jan 2017 11:14 PM PST

புதுடில்லி: இந்திய தேசிய கொடி போன்று கால் மிதியடி தயாரித்து இணையதளத்தில் விற்பனைக்கு வெளியிட்டுள்ள அமேசான் நிறுவனத்திற்கு சுஷ்மா சுவராஜ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய தேசிய கொடி அவமதிப்பு பிரபல ஆன்-லைன் வர்த்தக இணையதளமான அமேசான் நிறுவனம் இந்திய தேசிய கொடி போன்று பல டிசைன்களில் கால் மிதியடி தயாரித்து தனது இணையதளம் மூலம் கனடா உள்ளிட்ட நாடுகளில் விற்பனைக்கு விட்டுள்ளது. விற்பனைக்கு வெளியான அரை மணி நேரத்தில் இதுகுறித்து தகவல் அறிந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ...

சென்னை ரோகிணி திரையரங்கில் பைரவா சிறப்பு காட்சி: ரசிகர்கள் உற்சாகம்

Posted: 11 Jan 2017 10:49 PM PST

'அழகிய தமிழ்மகன்' இயக்குநர் பரதன் இயக்கத்தில் மீண்டும் விஜய் இணைந்து நடித்துள்ள பைரவா படம் இன்று ரலீஸாகிறது. இதனிடையே, ரசிகர்களுக்காக பைரவா திரைப்படத்தின் சிறப்பு காட்சி சென்னை ரோகிணி திரையரங்கில் திரையிடப்பட்டது. நள்ளிரவு ஒரு மணிக்கு(சற்று முன்பு) இந்த காட்சி திரையிடப்பட்டது. ரசிகர்கள் விஜய் படத்திற்கு பால் அபிஷேகம் செய்து உற்சாகமாக கொண்டாடினர். திரையரங்கு முழுவதும் பேனர்களும், விஜய் ரசிகர் மன்ற கொடிகளும் கட்டப்பட்டு இருந்தது. தியேட்டர் வளாகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் ஆரவாரத்துடன் காணப்பட்டனர். முதன்முறையாக ...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நூதன போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த சிம்பு

Posted: 11 Jan 2017 10:26 PM PST

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரம் சூடுபிடித்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு நிலுவையில் உள்ளதால் இதுபற்றி முடிவெடுக்க மத்திய அரசு தயக்கம் காட்டி வருகிறது. எனினும், தமிழகத்திற்கு நம்பிக்கையான வார்த்தைகளை பா.ஜ.க. தலைவர்கள் கூறிவருகிறார்கள். இந்த சூழ்நிலையில், சென்னையில் நடிகர் சிம்பு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவர் பேசியதாவது:- தமிழை தாய்மொழியாக கொண்டதில் ...

ஏர் இந்தியா விமான சேவையை பாராட்டியுள்ளார் அமெர்த்தியா சென்

Posted: 11 Jan 2017 10:16 PM PST

புதுதில்லி: பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெர்த்தியா சென் ஏர் இந்தியா விமான சேவையை பாராட்டி கடிதம் ஒன்றை அந்நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளார். 83 வயதான அமெர்த்தியா சென், டெல்லியில் இருந்து லண்டனுக்கு கடந்த 9 ஆம் தேதி பயணம் செய்துள்ளார். அப்போது விமான சேவை சிறப்பாக இருந்தாகவும் அதற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். அமெர்த்தியா சென் எழுதிய இந்த கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ஏர் இந்தியா வெளியிட்டுள்ளது. அமெர்த்தியா சென் பாராட்டுக்களால் ஏர் இந்தியா ...

எனக்கும் ரஷ்யாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை : டிரம்ப்

Posted: 11 Jan 2017 09:57 PM PST

நியூயார்க்: அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வானதற்கு ரஷ்யாவின் மறைமுக உதவி இருப்பதாக குற்றசாட்டு வெளியாகி பரபரப்பாக பேசப்படும் நிலையில், ‛எனக்கும் ரஷ்யாவிற்கு எந்த தொடர்பும் இல்லை' என்று டிரம்ப் பேட்டியில் தெரிவித்தார். டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்வான பிறகு முதல்முறையாக ஊடகங்களுக்கு இன்று பேட்டி அளித்தார். பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது: நான் செலுத்திய வரி விபரங்களை தற்போது வெளியிடப்போ வதில்லை. அது தற்போது தணிக்கையில் உள்ளது. எனது தொழில்களை எனது இரண்டு ...

யார் இவர்? - பிளாரன்ஸ் நைட்டிங்கேல் !

Posted: 11 Jan 2017 09:23 PM PST

அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும். அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் ...

அமைதியின் அர்த்தங்களை புரிந்து கொள்வோம்!

Posted: 11 Jan 2017 09:19 PM PST

மவுனம், சம்மதத்தின் அறிகுறி என்று, யாரோ சொல்லி வைக்க, இதை, பலரும் தவறாகவே புரிந்து கொள்கின்றனர். ஒரு பெண்ணிடம், 'என்னம்மா, உனக்கு திருமண பேச்சு பேசலாமா...' என்று, அப்பா கேட்க, மகள் அசட்டு சிரிப்பு சிரிக்க, இதை, சம்மதம் என்று புரிந்து, திருமண ஏற்பாட்டில், பல கட்டங்களுக்கு, அப்பா, காய்களை நகர்த்த, வீட்டை விட்டே ஓடி விட்டாள் மகள். இப்பெண் காண்பித்த மவுனத்தின் பொருள், சம்மதமில்லை! கடன், கைமாத்து என, ஒருவரிடம் கேட்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்; அவரோ மவுனம் காக்கிறார். இதற்கு, சம்மதம் ...

ரொக்கமில்லா பண பரிவர்த்தனை!

Posted: 11 Jan 2017 09:16 PM PST

நவ., 8, 2016 - அன்று தான், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்தது, மத்திய அரசு. கறுப்பு பணம் ஒழியுமா, இல்லையா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, மக்கள் வேறொரு நிலைக்கு தள்ளப்பட்டு, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு தயாராக வேண்டிய நிலைக்கு வந்து விட்டனர். ரொக்கமில்லா பண பரிவர்த்தனைகளை, எப்படியெல்லாம் செய்யலாம், அவற்றிற்கான சாதனங்கள் எவை, அவற்றை எப்படிப் பெறுவது மற்றும் பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்: டெபிட் கார்டு - பற்று அட்டை: 'டெபிட்' கார்டு அதாவது, பற்று அட்டை என்றால் என்ன? நீங்கள் ...

பணம்!

Posted: 11 Jan 2017 09:12 PM PST

தலையணையில் முகம் புதைத்து, குப்புற படுத்திருந்தான், இசக்கிராஜா. அவனுக்கு அருகில், மனைவி, மருதாயும், 12 வயது மகன் மற்றும் 16 வயது மகளும் படுத்திருந்தனர். குடும்பத்தின் நான்கு உறுப்பினர்களுக்கும், 90 சதவீத மானியத்தில், மத்திய அரசு வழங்கிய, 'ஸ்மார்ட்' போன்கள் தலைமாட்டில், வரிசையாக, 'சார்ஜ்' ஆகிக் கொண்டிருந்தன. 'ஸ்மார்ட் போன்'களில் நூற்றுக்கணக்கான, 'ஆப்'கள் இலவசமாய் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தன. ரொக்கமில்லா பண பரிவர்த்தனையை, திறம்பட செய்ய, 15 நாட்கள் பயிற்சி வகுப்புக்கு, குடும்பத்தோடு சென்று ...

படித்ததில் பிடித்தது :) -- டிஜிட்டலுக்கு தயார்!

Posted: 11 Jan 2017 09:09 PM PST

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III

Posted: 11 Jan 2017 08:51 PM PST

வாவ் ! மீண்டும் இந்த திரி பிரிந்து விட்டது....... . . . இது 3 m பாகம் !

இந்தியா - வியட்நாம் ஏவுகணை ஒப்பந்தம்: சீனா டென்ஷன்

Posted: 11 Jan 2017 08:25 PM PST

ஹனோய்: வியட்நாம் இந்தியாவிடமிருந்து ஏவுகணைகள் வாங்க திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தாக உள்ள ஏவுகணை ஒப்பந்தம் சீனாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏவுகணை வாங்க திட்டம் பிரதமர் மோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வியட்நாமின் ஹனோய் நகருக்கு சென்ற போது வியட்நாமிற்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இது தவிர வியட்நாம் கப்பல் படைகளுக்கு இந்தியா நீர் மூழ்கி கப்பல் பயிற்சியும் அளித்து வருகிறது. இந்நிலையில் ...

தமிழ் குழந்தைகள் பெயர் ஈ புத்தகம் கிடைக்குமா?

Posted: 11 Jan 2017 06:40 PM PST

இளவரசன்


எனக்கு தமிழ் குழந்தைகள் பெயர் ஈ புத்தகம் கிடைக்குமா?

லாலுவுக்கு 'பென்ஷன்': பீஹாரில் வினோதம்

Posted: 11 Jan 2017 05:59 PM PST

பாட்னா: மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவிற்கு ‛பென்ஷன்' வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது சலசலப்பை உண்டாக்கியுள்ளது. - போராட்டம்: - பீஹாரில், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மறைந்த தலைவர், ஜெயபிரகாஷ் நாராயண் தலைமையில், 1974ல், பீஹார் வளர்ச்சியை முன்னிறுத்தி, சம்பூர்ண கிராந்தி போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் சிறை சென்றனர். - பென்ஷன் திட்டம்: - மாநில ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™