Tamil News | Online Tamil News |
- நீதி துறை பிரச்னைகளுக்கு விரைவில் சுமுக தீர்வு!:மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உறுதி
- ஜல்லிக்கட்டு வழக்கில் முன்னதாகவே தீர்ப்பு அளிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
- காந்தி கண்ட கனவு ராம ராஜ்யமே; பிரதமர் மோடி பேச்சு
- முதல்வர் ஓ.பி.எஸ்.,சின் ஆந்திரா பயணம் வெற்றி!: தண்ணீர் திறக்க சந்திரபாபு நாயுடு உறுதி முதல் முயற்சியே ஜெயமானதால் பன்னீர் உற்சாகம்
- ஜெ., சொத்துக்களை அரசுடமையாக்க வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி
- தமிழக சட்டசபை 23ல் கூடுகிறது; சமாளிக்குமா ஆளும் கட்சி
- தடையை மீறுவோம் : ஸ்டாலின் தகவல்
- பாடநூல் அலுவலகத்தில் சசிகலா படம்; முதல்வர் பன்னீர் படம் புறக்கணிப்பு
- செல்லாத நோட்டுகள்: காத்திருக்கும் என்.ஆர்.ஐ.,க்கள்
- மும்பை- ஆமதாபாத் இடையே நாட்டின் முதல் அதிவிரைவு புல்லட் ரயில்
- அ.தி.மு.க., எம்.பி., க்கள் எங்கே? கடைசி 10 நாள் ஆளையே காணோம்! : பொன். ராதாகிருஷ்ணன் 'சுருக்'
- கோவா சட்டசபை தேர்தல்: காங்., கட்சியில் 4 முன்னாள் முதல்வர்கள் போட்டி
- இரண்டாவது ‛ஸ்கார்பியன்' ரக நீர்மூழ்கி கப்பல் அறிமுகம்
| நீதி துறை பிரச்னைகளுக்கு விரைவில் சுமுக தீர்வு!:மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உறுதி Posted: 12 Jan 2017 08:52 AM PST புதுடில்லி:''நீதிபதிகள் பற்றாக்குறை, கட்டமைப்பு வசதிகள் உட்பட, நீதித்துறை சந்தித்து வரும் அனைத்து பிரச்னைகளுக்கும், தற்போதைய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ஜே.எஸ். கேஹர் தலைமையில், சுமுக தீர்வு காணப்படும்,'' என, மத்திய சட்ட அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் உறுதி அளித்தார். சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகள் நியமனம், பதவி உயர்வு உள்ளிட்டவை குறித்து, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான, மூத்த நீதிபதிகள் அடங்கிய, 'கொலீஜியம்' பரிந்துரை அளிக்கும். அதற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்த பின், இவை செயல்படுத்தப்படும்.'நீதிபதிகள் நியமனம் ... |
| ஜல்லிக்கட்டு வழக்கில் முன்னதாகவே தீர்ப்பு அளிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு Posted: 12 Jan 2017 08:55 AM PST புதுடில்லி:ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில், முன்கூட்டியே தீர்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க, சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான, காளைகளை அடக்கும், ஜல்லிக்கட்டு போட்டி கள், பொங்கல் பண்டிகையின்போது நடத்தப் படுவது வழக்கம்.இந்த போட்டிகளில், காளைகள் துன்புறுத்தப் படுவதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து, சுப்ரீம் கோர்ட், 2014ல் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனுக்களையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.இந்நிலையில், தமிழகத்தில், ... |
| காந்தி கண்ட கனவு ராம ராஜ்யமே; பிரதமர் மோடி பேச்சு Posted: 12 Jan 2017 08:59 AM PST நாகர்கோவில்:கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்துவைத்த பிரதமர் நரேந்திரமோடி, ''காந்தி நடத்திய விடுதலைபோராட்டத்தில் அவர் கண்ட கனவு ராமராஜ்யமே,'' என்று பேசினார். மத்திய அரசின் 25 கோடி ரூபாய் செலவில், கண்காட்சி கூடப்பணி நிறைவடைந்துள்ளது. கூடத்தின் முன் 27 அடி உயரம், 12.5 டன் எடை கொண்ட ஒரே கல்லில் செதுக்கப்பட்ட அனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது. மேல் தளத்தில் பாரத மாதா கோயில் உள்ளது. இங்கு 15 அடி உயரத்தில் 5.5 டன் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.கோயிலின் முன் பூங்காவும், நடுவில் 32 ... |
| Posted: 12 Jan 2017 09:23 AM PST முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆந்திரா பயணம் வெற்றி பெற்றுள்ளது. அவரது கோரிக்கையை ஏற்று, 2.5 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் திறந்து விட, ஆந்திரா முதல்வர் சம்மதம் தெரிவித்துள்ளார். முதல்வராக, அவர் எடுத்த முதல் முயற்சியே ஜெயமானதால், முதல்வர் பன்னீர், மிகுந்த உற்சாகத்துடன் சென்னை திரும்பியுள்ளார். பருவ மழை பொய்த்து போனதால், சென்னையில், குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க, ஆந்திராவிடம் இருந்து, கூடுதலாக, கிருஷ்ணா நீர் பெற முடிவு செய்யப்பட்டது. அதற்காக, அம்மாநில அரசுக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாதுஎன, முதல்வர் பன்னீர்செல்வம் ... |
| ஜெ., சொத்துக்களை அரசுடமையாக்க வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி Posted: 12 Jan 2017 09:29 AM PST மதுரை:மறைந்த ஜெயலலிதாவின் சொத்துக் களை, அரசுடமையாக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. மதுரை பொதுநல வழக்குகள் மைய நிர்வாக அறங்காவலர் ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016 டிச.,5ல் மறைந்தார். ஜெ., பெயரில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் அசையும், அசையா சொத்துக்கள் உள்ளன. அவருக்கு நேரடி வாரிசு யாரும் இல்லை. சொத்துக்களுக்கு வாரிசு யார் என்பதை நேரடியாக குறிப்பிடவில்லை.'ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமை யில் குழு அமைக்க வேண்டும். ஜெ.,வின் ... |
| தமிழக சட்டசபை 23ல் கூடுகிறது; சமாளிக்குமா ஆளும் கட்சி Posted: 12 Jan 2017 09:33 AM PST ஜெயலலிதா மறைவுக்கு பின், அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ள மாறுபட்ட சூழலில், தமிழக சட்டசபை, வரும், 23ல், கூடுகிறது; கவர்னர் வித்யாசாகர் ராவ் உரையாற்றுகிறார். தமிழகம் முழுவதும் வறட்சி நிலவுகிறது. கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி, மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. புதிய ஆட்சி அமைந்து, பல மாதங்களாகியும், சட்டசபை குழுக்கள் அமைக்கப் படவில்லை.இந்த பிரச்னைகள் குறித்து விவாதிக்க, சட்டசபை கூட்டத்தை கூட்ட வேண்டும் என, ஒரு மாதத்திற் கும் மேலாக, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ... |
| தடையை மீறுவோம் : ஸ்டாலின் தகவல் Posted: 12 Jan 2017 09:36 AM PST சென்னை:''ஜல்லிக்கட்டு நடத்த, அவசர சட்டம் நிறைவேற்றா விட்டால், தடையை மீறி, ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து ஆலோசிப் போம்,'' என, மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்ற, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார். உச்சநீதிமன்ற தடையால், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான, ஜல்லிக்கட்டை நடத்த முடியாத நிலை உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு, ஜல்லிக்கட்டு நடத்த வசதியாக, மத்திய அரசு அவசர சட்டம் அமல் படுத்த வேண்டும் எனகோரி,தமிழகம் முழுவதும்,போராட்டங்கள் நடந்து வருகின்றன.சென்னை, ராயப்பேட்டை, புதுக்கல்லுாரி மாணவர் கள், நேற்று காலை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ... |
| பாடநூல் அலுவலகத்தில் சசிகலா படம்; முதல்வர் பன்னீர் படம் புறக்கணிப்பு Posted: 12 Jan 2017 09:40 AM PST தமிழ்நாடு பாடநுால் கழக அலுவலகத்தில், முதல்வர் பன்னீரின் படத்தை புறக்கணித்து, சசிகலா படத்தை வைத்து, முன்னாள் அமைச்சர் வளர்மதி பொறுப்பேற்றார். தமிழ்நாடு பாடநுால் கழக தலைவராக, கல்வி யாளர்கள் அல்லது கல்வி அமைச்சர் களை நியமிப்பது வழக்கம். ஆனால், முன்னாள் அமைச்சர் வளர்மதி, தற்போது அந்தப் பொறுப் புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று நல்ல நேரம் பார்த்து, தன் பொறுப்பை ஏற்றார்.பொறுப்பேற்கும் போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா ஆகியோரின் புகைப்படங்களை, தன் மேஜை மீது வைத்திருந்தார். முதல்வர் பன்னீர் செல்வத்தின் படம் ... |
| செல்லாத நோட்டுகள்: காத்திருக்கும் என்.ஆர்.ஐ.,க்கள் Posted: 12 Jan 2017 09:45 AM PST புதுடில்லி:செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக, என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், ரிசர்வ் வங்கியின் கிளைகளில், நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான பின், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கும், புதிய பணத்தை எடுப்பதற்கும்,பொதுமக்கள்,50 நாட்கள் நடையாய் நடக்க வேண்டியதாயிற்று. இந்நிலை யில், இந்த, 50 நாட்கள் அவகாசத்தின் போது, வெளிநாடு சென்றிருந்தவர்களும், என்.ஆர்.ஐ.,க் களும், தங்களிடம் உள்ள, செல்லாத ரூபாய்நோட்டு களை மாற்ற, மத்திய அரசு அவகாசம் அளித்தது.அதன்படி, மும்பை, டில்லி, ... |
| மும்பை- ஆமதாபாத் இடையே நாட்டின் முதல் அதிவிரைவு புல்லட் ரயில் Posted: 12 Jan 2017 10:33 AM PST காந்திநகர்: குஜராத் மாநிலம் ஆமதாபாத், மும்பை இடையே அதிவிரைவு புல்லட் ரயில் திட்டத்திற்ககான ரூபாய் 77,000 கோடி ஒப்பந்தம் அம்மாநிலத்திற்கும் ரயில்வே அமைச்சகத்திற்கும் இடையே காந்திநகரில் நடந்த மாநாட்டில் கையெழுத்தானது. காந்தி மந்திரில் நடந்த ஒப்பந்த நிகழ்ச்சியில் மாநில முதல்வர் விஜய் ரூபானி மற்றும் துணை முதல்வர் நிதின் படேல் கலந்து கொண்டனர் 1.10 லட்சம் கோடி 1.1 லட்சம் செலவு பிடிக்கும் இத்திட்டத்திற்கு 70 சதவீத பணமான 77,000 கோடியை மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் மாநில அரசுக்கும் அதிவேக ரயில் ... |
| அ.தி.மு.க., எம்.பி., க்கள் எங்கே? கடைசி 10 நாள் ஆளையே காணோம்! : பொன். ராதாகிருஷ்ணன் 'சுருக்' Posted: 12 Jan 2017 12:13 PM PST
மதுரை : ''ஜல்லிக்கடடு குறித்து பார்லிமென்ட்டில் பேசாமல் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் எங்கே போனார்கள்?'' என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: 'ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது' என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை சரிசெய்யும் முயற்சிகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக பா.ஜ., அரசு மேற்கொண்டு வருகிறது. சாதகமான தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். இப்போது சிலர், 'மத்திய அரசு ஏன் சட்டம் கொண்டு வரக்கூடாது?' என பேசுகின்றனர். கடந்த மாதம் பார்லிமென்ட் கூட்டம் நடந்த போது அ.தி.மு.க., ... |
| கோவா சட்டசபை தேர்தல்: காங்., கட்சியில் 4 முன்னாள் முதல்வர்கள் போட்டி Posted: 12 Jan 2017 02:28 PM PST
புதுடில்லி : கோவா சட்டசபை தேர்தலில் காங்., கட்சி சார்பில் 4 முன்னாள் முதல்வர்கள் போட்டியிடுகின்றனர். உ.பி., கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு, பிப்ரவரி - மார்ச் மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. கோவா சட்டசபைத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கில், ஆளும் பா.ஜ., தீவிர பிரசாரத்தை துவக்கி உள்ளது. கோவாவில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப். 4ம் தேதி தேர்தல் நடைபெறும். காங்., பட்டியல் வெளியீடு: இந்நிலையில் கோவா தேர்தலில் காங்,, கட்சி சார்பில் போட்டியிடும் ... |
| இரண்டாவது ‛ஸ்கார்பியன்' ரக நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் Posted: 12 Jan 2017 03:10 PM PST மும்பை: எதிரிகளால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத, அதிநவீன வசதிகள் உடைய, இரண்டாவது ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பலான காந்தேரி, நேற்று(ஜன.,12) அறிமுகம் செய்யப்பட்டது. நம் கடற்படைக்கு, பிரான்ஸ் நாட்டு தொழில்நுட்ப உதவியுடன், உள்நாட்டிலேயே, ஆறு நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, ஸ்கார்பியன் ரக முதல் நீர்மூழ்கி கப்பலான கல்வாரி, கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டு, தற்போது சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. அதைத் தொடர்ந்து, தற்போது, இரண்டாவது நீர்மூழ்கி கப்பலான காந்தேரி, தயார் நிலையில் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 13,2017. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |