Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ரொக்கமில்லா மாநிலமா; சட்டசபை தேர்தலா? : கோவா பா.ஜ.,வில் குழப்பம்

Posted: 08 Dec 2016 08:38 AM PST

ரொக்கப் பரிமாற்றமில்லாத, முதல் மாநில மாகும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கோவா, பா.ஜ., அரசுக்கு, அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தல், மிகப்பெரிய முட்டுக்கட்டை யாக அமைந்துள்ளது.

செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத்தை தொடர்ந்து, ரொக்கப் பரிமாற்றத்தை குறைத்து, டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு மாறும்படி, அனைத்து தரப்பினரையும், பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார்.
முதல் மாநிலம் :
அதன்படி, கோவா மாநிலத்தை, ரொக்கப் பரிமாற்றமில்லா முதல் மாநிலமாக்குவதற்கு, கோவாவின் முன்னாள் முதல்வரும், தற்போதைய ராணுவ அமைச்சருமான மனோகர் பரீக்கர், ...

வங்கிகளுக்கு திரும்பிய தொகை : ஸ்டேட் பாங்க் சந்தேகம்

Posted: 08 Dec 2016 08:42 AM PST

புதுடில்லி: 'செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை அடுத்து, வங்கிகளில், 11.85 லட்சம் கோடி ரூபாய், 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளது என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதில் சந்தேகம் உள்ளது' என, ஸ்டேட் பாங்க் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு, நவம்பர் 8ல், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. மேலும் பொதுமக்கள்,தங்களிடம் உள்ளபழைய நோட்டுகளை, வங்கி கணக்கில் செலுத்தி மாற்றி கொள்ளலாம் என, அறிவித்தது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி துணை கவர்னர் காந்தி, நேற்று முன்தினம் கூறுகையில்,
''செல்லாத ரூபாய் நோட்டுகளில், 80 சதவீதம்,வங்கிகளில் ...

தொடர் கதையாகிறது அமளி : 17வது நாளாக அலுவல் பாதிப்பு

Posted: 08 Dec 2016 08:52 AM PST

தீர்வை நோக்கி செல்வதற்கு பதிலாக, செல்லாத ரூபாய் நோட்டு பிரச்னை, நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால், பார்லி., நடவடிக்கைகள் முடங்குவது தொடர் கதையாகிறது.

கடந்த, 16ல், குளிர்காலக் கூட்டத் தொடருக்காக பார்லிமென்ட் கூடியது. அன்று முதல், ரூபாய் நோட்டு விவகாரத்தை மையமாக வைத்து, எதிர்க்கட்சிகள் பிரச்னையை கிளப்பி வருகின்றன.
'பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல் லாது' என்ற அறிவிப்பை, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டு, நேற்றுடன் ஒரு மாதம் முடிவடைவதால், அதை நினைவூட்டு வதில் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டின. சபை துவங் கும் முன், பார்லிமென்ட் வளாகத்தில் ...

'டெபிட், கிரெடிட் கார்டு' பயன்படுத்துவோருக்கு... சலுகை!:ரொக்க பயன்பாட்டை குறைக்க மத்திய அரசு தாராளம்

Posted: 08 Dec 2016 08:52 AM PST

புதுடில்லி:ரொக்கப் பயன்பாட்டை குறைக்கும் வகையிலும், 'கிரெடிட், டெபிட் கார்டு' போன்ற, 'டிஜிட்டல்' பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையிலும், பல்வேறு புதிய சலுகைகளை, மத்திய அரசு தாராளமாக அள்ளி வழங்கியுள்ளது.

கறுப்புப் பணத்தை ஒடுக்கும் வகையிலும், கள்ள நோட்டை ஒழிக்கும் வகையிலும், 500 -- 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர் நரேந்திர மோடி, நவ., 8ம் தேதி இரவு அறிவித்தார்.இந்நிலையில், ரொக்கப் பயன்பாட்டை குறைக்கும் வகையில், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறும்படி, மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது; இதற்காக, நாடு முழுவதும் தீவிர பிரசாரம் செய்யப்பட்டு ...

பொதுச்செயலராவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுடன் சசிகலா... சமரசம்?:போர்க்கொடி தூக்கியவர்களுக்கு துணை பொதுச்செயலர் பதவி:செங்கோட்டையனை மீண்டும் மந்திரி சபையில் சேர்க்க திட்டம்

Posted: 08 Dec 2016 09:31 AM PST

அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியை பிடிப் பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுடன், ஜெய லலிதாவின் தோழி சசிகலா, சமரசம் செய் துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி தனக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய வர்களுக்கு, கட்சியில் புதிதாக துணைச் செயலர் பதவியை உருவாக்கி வழங்கவும், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த செங்கோட்டை யனுக்கு மந்திரி சபையில் இடம் தரவும் திட்டமிடப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.மறைந்த ஜெயலலிதா வகித்த பொதுச் செயலர் பதவி, அ.தி.மு.க.,வில் காலியாக உள்ளது. கட்சியில் அதிகாரம் மிகுந்த பதவி என்பதோடு, பொதுச் செயலராக வருபவர், முதல்வராக வர வாய்ப்பு அதிகம் ...

ஜெ., முகம் மாறாமல் இருந்தது எப்படி

Posted: 08 Dec 2016 09:34 AM PST

சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், 75 நாள் சிகிச்சைக்கு பின், மாரடைப்பால் மரணம் அடைந்த ஜெயலலிதாவின் முகம் பொலிவுடன் காணப்பட்டதற்கு, 'எம்பாமிங்' முறையில் பதப்படுத்தப்பட்டது தான் காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அவர், மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட நாள் முதல், அவரது உடல் வெளியே வரும் வரை, யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. அவர் சிகிச்சை பெறும் புகைப்படம் கூட வெளியாகவில்லை.
இந்நிலையில், பொதுமக்கள் அஞ்சலிக்காக, சென்னை, ராஜாஜி அரங்கில், 6ம் தேதி, ஜெ., உடல் வைக்கப்பட்டது. அப்போது, ஜெ.,முகத்தை பார்த்த வர்கள் ஆச்சரியம் ...

ஜெ., வெற்றிடத்தை நிரப்ப பிரேமலதா வலைதளங்களில் தே.மு.தி.க., காமெடி

Posted: 08 Dec 2016 09:38 AM PST

பிரேமலதாவை முன் வைத்து, தே.மு.தி.க., வினர் சமூக வலைதளங்களில் செய்து வரும் பிரசாரத்தை, பலரும் காமெடியாக ரசிக்க துவங்கி உள்ளனர்.

தே.மு.தி.க.,வில், முக்கிய பொறுப்பில் இல்லா விட்டாலும், விஜயகாந்த் மனைவி பிரேமலதா, செயல் தலைவர் போல செயல்பட்டு வருகிறார். கட்சியின் பின்னடைவுக்கு அவரே
காரணம் எனக்கூறி, முக்கிய நிர்வாகிகள், பிற கட்சிகளுக்கு தாவி விட்டனர்.சமீபத்தில் நடந்த, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப் பரங்குன்றம் சட்டசபை தொகுதிதேர்தல்களில், தே.மு.தி.க., படுதோல்வி அடைந்ததால், கட்சியின ரின் கோபம், பிரேமலதா பக்கம் திரும்பியது. ...

கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி வீடு, அலுவலகத்தில் 'ரெய்டு'120 கிலோ தங்கம், ரூ.90 கோடி ரொக்கம் சிக்கியது

Posted: 08 Dec 2016 09:44 AM PST

அ.தி.மு.க., பிரமுகரும், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரு மான சேகர் ரெட்டி, அவரது சகோதரர் சீனிவாச ரெட்டி மற்றும் அவர்களின் நண்பர்களுக்குச் சொந்தமான, வீடு, அலுவலகங்களில், வருமானவரித்துறை அதிகாரிகள், நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னை, வேலுார் உள்ளிட்ட, எட்டு இடங்க ளில் நடந்த இந்தச் சோதனையில், 120 கிலோ தங்கக் கட்டிகள், 90 கோடி ரூபாய் ரொக்கம் சிக்கியுள்ளது. தமிழகத்தில், தனியார் கல்லுாரி கள், முன்னாள் அமைச்சர்கள், கறுப்புப் பண பதுக்கல்காரர்கள், தங்க நகைக் கடைக ளில், வருமான வரி அதிகாரிகள், தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ...

கருணாநிதியை சந்திக்க கட்சியினருக்கு 'தடை'

Posted: 08 Dec 2016 09:49 AM PST

சென்னை:சிகிச்சை முடிந்து வீடு திரும்பி யுள்ள, கருணாநிதியை சந்திக்க, தொண்டர் களுக்கு, தி.மு.க., தடை விதித்துள்ளது.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, 'ஒவ்வாமை' உள்ளிட்ட பாதிப்பால், சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை யில், டிச., 1ல் அனுமதிக்கப்பட்டார். ஒரு வாரமாக சிகிச்சை முடிந்து, நேற்று முன்தினம் இரவு, வீடு திரும்பினார். அவரை கட்சியினர் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:
கருணாநிதி, சென்னை காவேரி மருத்துவமனை யில், சில நாட்களாக சிகிச்சை பெற்று, ...

சாலமன் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி தாக்கும் அபாயம்

Posted: 08 Dec 2016 10:24 AM PST

ஹோனைரா: சாலமன்தீவுகளில் உள்ளூர் நேரப்படி (9-12-16) காலை 9.38 மணிக்கு(இந்திய நேரப்படி 08-12-16 இரவு 11.30 மணிக்கு) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கட்டடங்கள் குலுங்கின. சுனாமி தாக்கும் அபாயம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுனாமி அபாயம்
இது தொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்வெளியிட்டுள்ள செய்தியில், தெற்குபசிபிக் கடல் பகுதியில்உள்ள தீவு நாடான சாலன் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது கிராகிரா பகுதியில் கடலுக்கு அடியில் தென்மேற்கே 70 கி.மீ. தொலைவில் மையம் கொண்டு நிகழ்ந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு ...

போயஸ் கார்டன் மதிப்பு நூறு கோடி!

Posted: 08 Dec 2016 10:45 AM PST

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலிதாவின் சொத்துக்களில் பிரதானமானவை போயஸ் தோட்டம் தான். அந்த சொத்து யாருக்கு என்பதை அறியத்தான், பலரும் ஆர்வமாக உள்ளனர்.
அந்த சொத்து குறித்த விவரங்கள், அரசு ஆவணங்களில் உள்ளபடி…கடந்த 15 ஜூலை 1967ல், சென்னை, போயஸ் தோட்டத்தை ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, தன் பெயரில் வாங்கினார். 24 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலான அந்த நிலத்தில், 21 ஆயிரத்து 662 சதுர அடிக்கு, கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அந்த இடத்தின் சர்வே எண்; 15/67. வருவாய் ஆவணங்களின் அடிப்படையில், போயஸ் தோட்டம் இல்லம், சென்னை, தேனாம்பேட்டை கிராமத்தை சேர்ந்தது.
நுாறு ...

ஐதராபாத்தில் 7 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விபத்து : 10 பேர் பலி?

Posted: 08 Dec 2016 12:04 PM PST

ஐதராபாத்:ஐதராபாத் நகரில் 7 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 10 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.ஐதராபாத் நகரில் உல்ல நனாகுராகுடா பகுதியில் 7 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக ஐதராபாத் நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கட்டிடம் இடிந்து விழுந்த போது அதன் 6-வது மாடியில் 10 கட்டிட தொழிலாலர்கள் பெயிண்டிங் மற்றும் டைல்ஸ் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

14 குடும்பத்தினர் ...

பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் அளிப்பதை பாக்., நிறுத்த வேண்டும்: அமெரிக்கா கண்டிப்பு

Posted: 08 Dec 2016 02:46 PM PST

வாஷிங்டன்:பாகிஸ்தான் தன்னாட்டில் உள்ள பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் அளித்து வருவதை நிறுத்துவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்கா கண்டிப்புடன் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஆஷ்டன் கார்ட்டர் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கிருந்து இந்தியாவுக்கு நேற்று புறப்பட்ட அவர் விமானத்தில் தன்னுடன் பயணித்த செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
ஆஷ்டன் கார்ட்டர் கூறியதாவது:ஆப்கானிஸ்தானை நிலைகுலைய வைத்ததுடன், அங்கு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட அமெரிக்க மற்றும் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™