Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


படத்துடன் செய்தி - தொடர் பதிவு

Posted: 08 Dec 2016 12:40 PM PST


-
மிஸ் கோல்கட்டா போட்டி மேற்குவங்கத்தில் நடந்தது.
இதில் வெற்றிபெற்ற அழகிகளுடன் பிரபல வங்கமொழி
நடிகை ரிதுபர்னா சென்குப்தா குரூப் போட்டோ எடுத்துக்
கொண்டார்.

.இடம்: கோல்கட்டா.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-36:

Posted: 08 Dec 2016 08:08 AM PST

- சென்னை, பூமியை கண்காணிக்கும் ரிசோர்ஸ் சாட்-2ஏ செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-36 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காக கடந்த 2003-ம் ஆண்டு ரிசோர்ஸ் சாட்-1, 2011-ம் ஆண்டு ரிசோர்ஸ் சாட்-2 செயற்கைகோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.இதனை தொடர்ந்து தற்போது 1,235 கிலோ எடை கொண்ட 3-வது செயற்கைகோள் ரிசோர்ஸ் சாட்-2ஏ என்ற செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த செயற்கைகோள் திட்டமிட்டப்படி ...

எங்கே செல்கிறோம் நாம்?

Posted: 08 Dec 2016 07:56 AM PST

முன்பு செய்திகள் என்பது செய்திகளை மட்டுமே சுமந்து வந்தன...

ஆனால் இன்று ஒவ்வொரு செய்தியும் மறைமுகமாக யாரோ ஒருவருக்கு ஆதரவையும் எதிர்ப்பையும் சுமந்தே வருகின்றன.
ஊடகங்கள் இந்த நிலைக்கு வந்த காரணம் என்ன?
செய்தித்தாள்களும் சரி,முகநூல்,கட்செவி அஞ்சல்,தொலைக்காட்சிகள் என எவற்றிலும் செய்திகள் யாரோ ஒருவருக்காக திரிக்கப்பட்டு  நம் மீது திணிக்கப்படுகின்றன என்பதே என் எண்ணம்...
உங்கள் எண்ண ஓட்டத்தை பகிரவும்.

மின்னணு பண பரிவர்த்தனைகளுக்கு மத்திய அரசு சலுகைகள் அறிவிப்பு :

Posted: 08 Dec 2016 07:31 AM PST

புதுடெல்லி: டெபிட், கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கினால் 0.75 தள்ளுபடி செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி அறிவித்துள்ளார். மேலும் டெபிட், கிரெடிட் கார்டு பயன்படுத்தி புறநகர் ரயில் டிக்கெட் எடுத்தால் 0.5 சதவீதம் சலுகை என மத்திய அரசு அறிவித்துள்ளது. மின்னணு முறையில் ரயில் டிக்கெட் எடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு வசழங்கப்படும் என்றும் அருண்ஜேட்லி அறிவித்துள்ளார். ஒரு லட்சம் கிராமங்களுக்கு தலா வீதம் ஸ்வைபிங் கருவிகள் வழங்கப்படும் ...

27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்!!

Posted: 08 Dec 2016 06:54 AM PST

12 ராசிக்குரிய நட்சத்திரங்கள். 1. அஸ்வினி -- ஸ்ரீ சரஸ்வதி தேவி 2. பரணி -- ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்) 3. கார்த்திகை -- ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்) 4. ரோகிணி -- ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்) 5. மிருகசீரிடம் -- ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்) - 6. திருவாதிரை -- ஸ்ரீ சிவபெருமான் 7. புனர்பூசம் -- ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்) 8. பூசம் -- ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்) 9. ஆயில்யம் -- ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்) 10. மகம் -- ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்) - 11. ...

கடந்து வந்த பாதை.

Posted: 08 Dec 2016 06:38 AM PST

கடந்து வந்த பாதை காலத்தின் விழுமியங்களை விழுங்கி கொண்டு முன்னோக்கி செல்லும் பாதையை சற்று பின்னோக்கி பார்க்கிறேன்! பனிச் சாரலில் வழிந்தோடும் இன்பம் மழலைப் பருவத்தில்! இல்லாத போதும் இருப்பதை பங்கிட்டுக் கொள்ளும் சகோதர பாசத்தில்! சாதீய அவமானங்களோடே கிழிசல்களை நேர்த்தியாய் உடுத்தி பள்ளிச் செல்லும் பரிகாசமாய் பார்க்கும் சமூகத்தில்!! காளைக்கு உண்டான செருக்கு கண்களில் மிளிர காதல் மோகத்தில் சோகத்தை புதைத்து காதலின் அணைப்பில்!! கனவுகள் உலகத்து இன்பங்களை ...

பார்லி.,யில் அமளியில் ஈடுபட உரிமையில்லை: எம்.பி.,க்களுக்கு ஜனாதிபதி கண்டனம்

Posted: 08 Dec 2016 06:29 AM PST

புதுடில்லி: விவாதத்தில் கலந்து கொள்ளத் தான் எம்.பி.,க்களுக்கு உரிமை உண்டு எனவும், அமளியில் ஈடுபட உரிமையில்லை எனவும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். ஏற்க முடியாது: - டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசியதாவது: பார்லிமென்ட்டில் எம்.பி.,க்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபடுவதை ஏற்க முடியாது. பார்லிமென்டில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதனால் பெண்பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனை முற்றிலும் ஏற்க முடியாது. ...

மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!

Posted: 08 Dec 2016 06:24 AM PST

மக்களால் நான் மக்களுக்காக நான் மக்களுக்காகவே இந்த அரசு. கடந்த 2016 டிசம்பர் 5 இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அறியப்பட்ட, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், சமீபத்தில் தனது அரசியல் பிரச்சார முழக்கமாக பேசிய வார்த்தைகள்தான் மேலே உள்ள வரிகள்!. ஜெயலலிதாவின் இன்றைய அரசியல் வெற்றிக்கு ஆதாரமாக அமைந்ததும் இந்த வரிகள்தான். இன்று, அனைத்து தரப்பினரையும் ஜெயலலிதாவின் மறைவுக்காக கண்ணீர் சிந்த வைத்ததும் இந்த வரிகள்தான். இந்த வரியை வெறும் அரசியல் "பிரச்சார பஞ்ச்" என்று மட்டுமே பலரும் நினைக்கிறார்கள். ...

கட்செவி நகைச்சுவை

Posted: 08 Dec 2016 06:20 AM PST

கட்செவி நகைச்சுவை அப்போலோ " கூட்டிட்டு வாங்க ,தூக்கிட்டுப் போங்க " அப்போல்லோவில் சிகிச்சைக்காக சேர்ந்த தலைவர்கள் வீடு திரும்பியதாக சரித்திரம் இல்லை அண்ணாதுரை MGR ராஜாஜி மூப்பனார் ஜெயலலிதா சோ . அதனால்தான் காவேரிப் பக்கம் போனாரோ கலைஞர் ரமணியன்

சென்னையில் ரெய்டு: 100 கிலோ தங்கம், ரூ.90 கோடி சிக்கியது

Posted: 08 Dec 2016 05:18 AM PST

சென்னை: ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்கு பிறகு, வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை, நாட்டின் பல இடங்களில் நடந்து வருகிறது. சென்னையில், இன்று, எட்டு இடங்களில் நடந்த சோதனையில், 100 கிலோ தங்கம், 90 கோடி ரூபாய் ரொக்கம் சிக்கியுள்ளது. மத்திய அரசு, 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகளை நவ., 8 ம் தேதி வாபஸ் பெற்றது. இதன் பிறகு, கறுப்பு பணத்தை மாற்ற பலரும் முயற்சி வருகின்றனர். அவர்களை வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை மூலம் மடக்கி வருகின்றனர். சென்னையை சேர்ந்தவர் பிரேம், இவர். ...

சசிகலாவுடன் ஓ.பி.எஸ்., 2 மணி நேரம் ஆலோசனை

Posted: 08 Dec 2016 04:44 AM PST

சென்னை: இன்று காலை ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி ஆகியோர் போயஸ் கார்டனுக்கு சென்றனர். அங்கு அவர்கள் சசிகலாவை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு இரண்டு மணி நேரம் நடந்தது. அப்போது என்ன பேசப்பட்டது என்ற விவரம் வெளியாகவில்லை. சென்னை: சென்னையில், போயஸ் கார்டனுக்கு இன்று காலை சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அங்கு சசிகலாவுடன் இரண்டு மணி நேரம் ஆலோசனை செய்தார். - --------------------------------- தினமலர்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Posted: 08 Dec 2016 03:12 AM PST

ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன்

தூங்கும் போது ஏன் இடது பக்கமாக தூங்க சொல்கிறார்கள் என்று தெரியுமா

Posted: 08 Dec 2016 03:08 AM PST

ரூ.5000-த்திற்கு மேல் இனி எல்லாம் மின்னணு பரிமாற்றம் தான்!!

Posted: 07 Dec 2016 11:29 PM PST

இனி 5000 ரூபாய்க்கும் அதிகமான அனைத்து அரசு அமைப்புகளின் பரிமாற்றமும் மின்னணு முறையில் செய்யப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. - ஆகஸ்ட் மாதம் இதன் அளவை 10,000 ரூபாயாக நிர்ணயம் செய்தது தற்போது டிஜிட்டல் முறை பரிமாற்றத்தின் அளவைப் பாதியாகக் குறைத்துள்ளது. - இனி அரசு அமைப்புகளின் விற்பனையாளர்கள், சப்ளையர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்க வேண்டிய தொகை 5000 ரூபாயைத் தாண்டினால் மின்னணு முறையில் மட்டுமே பணப் பரிமாற்றம் செய்யவேண்டும். பணமாக அளிக்கக் கூடாது. - இந்தியாவில் ...

ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டியிருப்பது போல் காட்சியளிப்பது ஏன்??

Posted: 07 Dec 2016 11:14 PM PST

- ஐயப்பன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும் தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்கு வருமாறும் கூறி சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் தவக் கோலத்தில் அமர்ந்தார் அருள்தரும் ஐயப்பன். - இன்றும் நாம் ஐயப்பனை அங்கு அந்த தவக் கோலத்தில் காணலாம். ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டியிருக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதற்கும் ஒருகாரணம் கூறப்படுகிறது. - ஐயப்பனைக் காண பந்தள மகாரஜா ஒரு முறை வந்த போது ஐயப்பன் தன் தந்தை என்ற காரணத்தால் எழ முயன்ற போது இறைவன் ...

சென்னையை அச்சுறுத்தும் புயல் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

Posted: 07 Dec 2016 07:41 PM PST

- சென்னை, புதிதாக உருவாகும் புயல், சென்னையை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதுடன், மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. - வார்தா புயல் - இந்த நிலையில் வங்க கடல் பகுதியில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 2 நாளில் புயலாக மாறுகிறது. இதற்கு 'வார்தா' புயல் என்று பெயரிடப்படும். இந்த புயல், முதலில் நாளை (வெள்ளிக்கிழமை) அந்தமான்–நிகோபார் தீவுகளைத்தான் தாக்கும். - 25 செ.மீ. மழை அங்கு மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் ...

பணத்தின் மறுபக்கம்: கே. அசோகன்

Posted: 07 Dec 2016 05:42 PM PST

அச்சடித்த காகிதமே அழகான பணமானது! எச்சில் தொட்டு எண்ணுகையில் சுகமானது! பச்சிளம் குழந்தையின் பசியாற துணையானது! பச்சைமட்டை ஓலையின் பயணத்திற்கும் பயனானது! - வாசல்வந்து தலைவணங்கி வாக்குகளின் செலவாவது தேசநலன் காத்திருக்கும் திடவீரர்களுக்கோ சிறிதாவது! ஆசையசையாய் சேர்த்திட அலையளவுக்கு நிகரானது! மோசம்போன பின்னாலே முணுமுணுத்து புலம்பலாக்குவது! - கடுகு-டப்பாவில் கட்டாகத்தான் கணக்காய் ஒளிந்திருப்பது! சட்டெனவே வருகின்ற செலவுகளுக்கும் தோழனாவது! கட்டுக்கட்டாய் காகிதங்களாய் மூட்டையாய் அடைக்கலமானது! தட்டேந்தும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™