Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


நல்லடக்கம்!அரசியல் ஆசான் எம்.ஜி.ஆர்., அருகே ஜெ., மீளாத்துயில்:தோழி சசிகலா சம்பிரதாய இறுதிச் சடங்கு லட்சக்கணக்கானவர்கள் கண்ணீர் அஞ்சலி

Posted: 06 Dec 2016 09:07 AM PST

தமிழக அரசியலில், அசைக்க முடியாத சக்தி யாக வலம் வந்த, அ.தி.மு.க., பொதுச்செயலர், ஜெயலலிதாவின் உடல், அவரது அரசியல் ஆசான், எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில், அவரது சமாதிக்கு அருகில், நல்லடக்கம் செய்யப்பட்டது.

தோழி சசிகலா, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆகியோர், சம்பிரதாய இறுதி சடங்குகளை செய்தனர். இறுதி ஊர்வலத்தில், லட்சக்கணக்கானோர் பங்கேற்று, மறைந்த முதல்வருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.அரசியல் உலகில், இரும்பு பெண்மணியாக திகழ்ந்த ஜெயலலிதா, நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு இயற்கை எய்தினார். அவரது மறைவு செய்தி கேட்டு, அ.தி.மு.க.,வினர் சோகத்தில் மூழ்கினர். ...

அரசியல் எல்லை கடந்த நல்ல நட்பை இழந்தார் மோடி!

Posted: 06 Dec 2016 09:19 AM PST

பிரதமர் மோடி, மறைந்த முதல்வர் ஜெயல லிதாவிற்கு, நேற்று நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். தெற்கில் இருந்த முக்கியமான நட்பை, அவர் இழந்திருக்கிறார்.

காவிரி பிரச்னை, சரக்கு மற்றும் சேவை வரி, ஜல்லிக்கட்டு போன்ற பிரச்னைகள் காரணமாக, அண்மைக் காலமாக,பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., இடையே, அரசியல் ரீதியாக சிறு உரசல்கள் நிலவி வந்த போதிலும், அதையும் தாண்டி, மோடிக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையிலான துாய நட்பு நாடறிந்தது.
45 வகை உணவுகள் : காங்.,தலைமையிலான, ஐக்கிய ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு எதிரான நிலைப்பாடு தான், இருவரையும் அரசியல் ரீதியாக இணைத் தது. ஆனாலும், ...

கடுமையான சட்டம்!: சாலை விபத்தை ஏற்படுத்துவோருக்கு...: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Posted: 06 Dec 2016 09:21 AM PST

புதுடில்லி:'மக்கள் விரும்பினாலும், விரும்பா விட்டாலும், சாலை விபத்துகளை ஏற்படுத்து வோருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், கடுமையான சட்டம் நிறைவேற்ற வேண்டும்' என, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

சாலை விபத்துகளுக்கான சட்டங்கள் குறித்த வழக்கு, நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, அமிதவ ராய் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளதாவது:மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் அதிவேக மாகவும் கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்துவது தொடர்பான ...

ஜெ.,க்கு பார்லி.,யில் அஞ்சலி

Posted: 06 Dec 2016 09:24 AM PST

புதுடில்லி:மறைந்த முதல்வர், ஜெயலலிதா வுக்கு புகழாரம் சூட்டிய லோக்சபா மற்றும் ராஜ்யசபா, அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

மறைந்த முதல்வர், ஜெயலலிதா, 1984 - 89ல், ராஜ்யசபா உறுப்பினராக இருந்துள்ளார். உடல் நலக் குறைவால், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்த அவருக்கு, பார்லிமென்டின் இரு சபைகளிலும் உறுப்பினர்கள், நேற்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
ராஜ்யசபாவில், தலைவர் ஹமீது அன்சாரி பேசியதாவது:
ஜெயலலிதாவின் மறைவால், நாடு மிகவும் முக்கியமான தலைவரை, மிகச் சிறந்த பார்லி., உறுப்பினரை, தேர்ந்த நிர்வாகியை ...

ஜெயலலிதா புகழ் நிலைத்திருக்கும் :கருணாநிதி இரங்கல்

Posted: 06 Dec 2016 09:33 AM PST

சென்னை:''குறைந்த வயதில், ஜெயலலிதா மறைந்தாலும், அவரது புகழ் என்றென்றும், நிலைத்திருக்கும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: உலக புகழ் பெற்ற டாக்டர் கள் எல்லாம், தங்கள் திறமைகளை காட்டி சிகிச்சை அளித்தும், பல கட்சி களின் தலைவர்கள், அ.தி.மு.க.,வின் லட்சக்கணக்கானோர், ஜெயலலிதா நலம் பெற வாழ்த்தியதற்கு மாறாக, அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து, பெரிதும் வருந்துகிறேன்.கட்சிகளை பொறுத்தவரை, எத்தனையோ கருத்து வேறுபாடுகள் உண்டு. இருப்பினும், ஜெயலலிதா அவரது கட்சி நலனுக்காக, துணிச்சலோடு செயலாற்றியவர் என்பதில், யாருக்கும் ...

காவிரி நினைவு தூணை திறக்காமல் கண் மூடிய ஜெ.,

Posted: 06 Dec 2016 09:42 AM PST

மேட்டூர்:காலமான முதல்வர் ஜெயலலிதா, தன் அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி யாக கருதிய காவிரி நினைவு துாணை, திறக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

'தமிழகத்துக்கு, ஆண்டுதோறும், 192 டி.எம்.சி., காவிரி நீரை கர்நாடகா வழங்க வேண்டும்' என, 2007 பிப்., 5ல், காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பு கூறியது; ஆனால், தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படவில்லை.எனினும், 2011ல் ஆட்சிக்கு வந்த, அ.தி.மு.க., அரசு கொடுத்த நெருக்கடியை தொடர்ந்து, மத்திய அரசு, 2013 பிப்., 19ல், நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது. இதை தன், 30 ஆண்டு கால அரசியல் ...

இறுதி ஊர்வலம் அமைதி: போலீஸ் சிறப்பு ஏற்பாடு

Posted: 06 Dec 2016 09:48 AM PST

சென்னை:போலீசார் எடுத்த சிறப்பான நடவடிக் கையால், மறைந்த முதல்வர், ஜெயலலிதா வின் இறுதி ஊர்வலம், சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல், அமைதியாக முடிந்தது.

ஜெயலலிதாவின் உடல், சென்னை, ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த இடத்தை சுற்றிலும், போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்திருந்தனர். சென்னை முழுவதும், 15 ஆயிரம் போலீசார், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். போக்குவரத்துக் கும், எவ்வித இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டனர்.ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்த, ஜனாதிபதி, பிரதமர், பிற மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் வந்த போது, ...

ஊர்வலம் முதல் நல்லடக்கம் வரை!

Posted: 06 Dec 2016 09:52 AM PST

* 4:15 - ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டி ருந்த கண்ணாடி பெட்டி மூடப்பட்டு, ஊர்வல மாக எடுத்துச் செல்ல, ராணுவ வாகனத்துடன் இணைக்கப்பட்டிருந்த வண்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டது

* 4:20 - வண்டியில் உடல் ஏற்றப்பட்டதும், ராணுவ வாகனத்தில், ஜெ.,யின் தோழி சசிகலா மற்றும் அவரின் இரு உறவினர்கள் அமர்ந்தனர்* 4:21 - இறுதி ஊர்வலம் துவங்கியது. அமைச்சர் கள் நடந்து சென்றனர்; ஏராளமானோர் பின்தொடர்ந்தனர்* 5:25 - மெரினா கடற்கரையை, ஊர்வலம் அடைந்தது * 5:42 - கண்ணாடி பெட்டியிலிருந்து, உடலை எடுத்த ராணுவ வீரர்கள், சந்தன பெட்டியில் வைத்தனர்* 5:45 - தமிழக கவர்னர்,வித்யாசாகர் ராவ், மலர் ...

அரியணை முதல் அமைதி படுக்கை வரை:சொன்ன சொல்லை காப்பாற்றிய தலைமை

Posted: 06 Dec 2016 10:58 AM PST

கடந்த, 2001ல், இரண்டாம் முறையாக, ஜெயலலிதா முதல்வர் பொறுப்பேற்றது முதல், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பராமரிப்பில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங் களில் கோலோச்சிய பல ரவுடிகளும், கட்டப் பஞ்சாயத்து கும்பல்களும், வேறு மாநிலங் களுக்கு ஓடி விட்டனர் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மாறியது. 'என்கவுன்டரில்' ரவுடிகளை ஒழிப்பதும், ஆட்சி யையும், கட்சியையும் பயன்படுத்தி, கட்டப் பஞ்சாயத்து செய்வோர்களை கம்பி எண்ண வைப்பதும், ஜெயலலிதாவின் அசாத்திய துணிச்சலை காட்டக் கூடியதாக இருந்தது. கட்சியிலும் ஜெயலலிதாவின் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™