Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இரங்கல் கவிதை

Posted: 06 Dec 2016 09:02 AM PST

சந்தியாவின் மகளாய் நீ சந்தனபேழையில் உறங்கவில்லை! சரித்திரத்தின் நாயகியாக உறங்குகின்றாய்! விழிகள் நீ மூடினாலும் வியப்பின் உச்சம் நீ! இடர்கள் பல இருந்தாலும் இன்முகம் தான் உந்தன் பலம்! ஆணாதிக்க அரசியலில் அகற்ற முடியாத சிம்ம சொப்பனம் நீ!! அதனால் தான் என்னவோ அன்பினால் அடக்கி வைத்தாய்! கலை மகளே கடலலையும் உந்தன் கால் தொட ஆசை கொண்டதோ! காலனை வைத்து அழைத்து கொண்டது! கடந்து செல்கிறோம் கண்ணீரோடு! பெண்... சசி..

எமனை ஒன்று கேட்கிறேன்: இரங்கல் கவிதை

Posted: 06 Dec 2016 08:11 AM PST

- கவிதை எழுதியோ கண்ணீர் வடித்தோ.. எம் சோகத்தை ஆற்றிக் கொள்ளமுடியாது.. - உயிரைப் பிரிந்தவனுக்கு உணர்வுகள் எப்படி இருக்கமுடியும்.. - தமிழகத்தின் தங்கத் தாரகையே சந்தனப்பேழைக்குள் உறங்கும் - உன் சரித்திரத்தை - நாளைய சந்ததிகள் வாசிக்கும்.. - இன்று எங்களை தொற்றிக் கொண்ட சோகத்தை எங்கு தொலைப்பது.. - காற்று கூட நிரப்ப முடியாத வெற்றிடமானது நீ வாழ்ந்த தமிழகம்..! - உன்னைப் போலவே இப்போது சுவாசம் தேடி அலைகிறது. - மானுடச் சந்தையில் விலைமதிக்க முடியாத உயிர் வாங்கிப் போன எமனை ...

60 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்!

Posted: 06 Dec 2016 05:41 AM PST

- - சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு சசிகலா இறுதிச் சடங்குகளை செய்தார். ராஜாஜி அரங்கில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலை முப்படை வீரர்கள், எம்ஜிஆர் நினைவிடத்துக்குக் கொண்டு வந்து வீர வணக்கம் செலுத்தினர். ஜெயலலிதாவின் உடல், 'புரட்சித் தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதா' என தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பொறிக்கப் பட்ட ...

சிவந்த நிறம் பெற ஆசையா இந்த டிப்ஸ் உங்களுக்குதான்

Posted: 06 Dec 2016 04:21 AM PST


இரும்புப் பெண் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவிற்கு அஞ்சலி .

Posted: 06 Dec 2016 02:28 AM PST



ஜெயலலிதா | தேசிய ஆளுமை | சிறப்பு புகைப்படத் தொகுப்பு

Posted: 05 Dec 2016 10:35 PM PST


-

-
முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுடன்

தமிழகத்தை கலங்க வைத்த டிசம்பர்

Posted: 05 Dec 2016 10:26 PM PST

- தமிழகத்தைப் பொறுத்த வரை டிசம்பர் மாதம் இழப்பை ஏற்படுத்தும் மாதமாகவே அமைந்துள்ளது. - 1972, டிசம்பர், 25- சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி காலமானார். 1973, டிசம்பர், 24- தி.க. தலைவர் ஈ.வே.ரா., காலமானார் 1987, டிசம்பர், 24- முதல்வர் எம்.ஜி.ஆர்., காலமானார். 2004, டிசம்பர், 26- சுனாமி எனும் பேரலை தாக்கி தமிழகத்தில் பல உயிர்கள் பலியாயின 2015, டிசம்பர், 1- சென்னை, கடலூர் பகுதிகளில் பெருமழையால் ஏ ற்பட்ட வெள்ளப் பெருக்கில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தனர். 2016, ...

மக்களால் நான்! மக்களுக்காக நான்!

Posted: 05 Dec 2016 08:23 PM PST

ஜெயலலிதா 16 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்துள்ளார். இவர் நிறைவேற்றிய திட்டங்கள் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான மக்களையும்சென்றடைந்துள்ளது. - அதுவும் கடந்த6 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியைநடத்தினார். அவர் சிந்தனையில் உதித்தசில அரிய திட்டங்களை திரும்பி பார்ப்போம். - மழை நீர் சேகரிப்பு திட்டம் - நிலத்தடி நீரை பெருக்கும்விதமாக மழைநீர் சேகரிப்பு திட்டத்தை உருவாக்கினார். இதன் மூலம் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், வீடுகள் ஆகியவற்றில் மழைநீர் சேகரிப்பு கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. ...

அம்மா…

Posted: 05 Dec 2016 07:44 PM PST

அம்மா… வீழ்த்த முடியாத வீரம் தானாக சாய்ந்தது… எவனாலும் முடியாதது எமனால் முடிந்தது… உன்னை போல் ஆளுமை இனி இல்லை என்பதுதான் எங்கள் வருத்தம்… அரியணையில் அமரலாம் பல பேர் ஆனால்  தகுதி உன்னிடம் மட்டுமே… ஒன்னரை கோடி பேர் உன் ஒரு விரல் அசைவில் நிற்பார்கள்.. எல்லா தலைக்கனமும் உன்னிடம் தலை கவிழ்ந்து நிற்கும்… முடிவில் தெளிவு, துணிவில் தைரியம், அளவான திமிர், அதிகமான அறிவு், அசைக்க முடியாத வலிமை உங்கள் குரலில் தெரியும் உங்களின் மனம்.. இரும்பை விட கனம் அது.. இரும்பும் இளகும் ஏழைகளின் மனம் ...

மரணம்.

Posted: 05 Dec 2016 05:58 PM PST

1.
பணம், சொத்து, அதிகாரம் உயிரைக் காப்பாற்றாது என்பதை மரணம் உறுதிபடுத்தி விட்டது.
2.
மரணம் எப்பொழுதுமே நிஜம்.
3.
டிசம்பர்

சுனாமி, சென்னை வெள்ளம், மதவெறி
ஆகியன நடந்த கருப்பு மாதமாகி விட்டது.
*


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™