Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


இந்த ஆண்டின் சிறந்த மனிதர் : ஓட்டெடுப்பில் வென்றார் மோடி

Posted: 05 Dec 2016 07:41 AM PST

புதுடில்லி: இந்த ஆண்டுக்கான, உலகின் சிறந்த நபரை தேர்ந்தெடுப்பதற்காக, மிகவும் பிரபலமான, 'டைம்' பத்திரிகை சார்பில், ஆன்லைனில் நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில், பிரதமர் மோடிவென்றுள்ளார்.

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் பத்திரிகை, ஒவ்வொரு ஆண்டும், அந்த ஆண்டின் உலகின் மிகச் சிறந்த நபரை தேர்ந்தெடுத்து வெளியிடும். முதலில், ஆன்லைனில் வாசகர்களின் ஓட்டெடுப்பு நடத்தப்படும். அதை தொடர்ந்து, டைம்ஆசிரியர்கள் குழு, அந்த ஆண்டுக்கான சிறந்த நபரை அறிவிக்கும். முன்னதாக, மிகச் சிறந்த நபருக்காக போட்டியிடும் நபர்களின் பட்டியல் வெளியிடப்படும். ...

ஜெ.,வுக்கு ஏற்பட்டது மாரடைப்பு அல்ல; இதய துடிப்பு முடக்கம்

Posted: 05 Dec 2016 08:33 AM PST

முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்படாமல், திடீர் இதயத் துடிப்பு முடக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, இதய நோய் சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறியதாவது: மாரடைப்புக்கும், 'சடன் கார்டியாக் அரெஸ்ட்' எனப்படும், திடீர் இதயத் துடிப்பு முடக்கத்துக்கும், நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இதயத் துடிப்பு திடீரென முடங்குவதற்கு, 'சீரற்ற இதயத் துடிப்பு' எனப்படும், 'அரித்மியா' உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன; அதில், ஒரு காரணமே மாரடைப்பு. மாரடைப்பு வரும் போது, அறிகுறிகள் தெரியும்; இதயத் துடிப்பு இருக்கும். மாரடைப்பு வந்தவர்கள், நெஞ்சு வலியைச் ...

அப்பல்லோவில் அடுத்தடுத்து காட்சிகள்...

Posted: 05 Dec 2016 09:30 AM PST

அதிகாலை, 1:55 மணி: அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து, ஏராளமான கார்கள் வெளியே சென்றன

அதிகாலை, 2:45 மணி: அ.தி.மு.க., தலைமை அலுவலக மேலாளர், மகாலிங்கம் வந்தார்
அதிகாலை, 2:54 மணி: சசிகலா குடும்பத்தினர், ஒவ்வொருவராக வெளியேறினர்
காலை, 4:00 மணி: மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டனர். மருத்துவமனை உள்ளே, 100 ஆயுதப்படை போலீசார் நிறுத்தப்பட்டனர்
காலை, 6:10 மணி: அரசு ஆலோசகர், ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வர் அலுவலக அதிகாரி கள், ஷீலா நாயர், வெங்கட்ரமணன் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டனர்
6:32 மணி: எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவராக வெளியே வந்தனர்
6:41 மணி: அமைச்சர்கள் ...

'டிவி'க்கள் கிளப்பிய பீதி: தொண்டர்கள் ஆவேசம்

Posted: 05 Dec 2016 09:31 AM PST

முதல்வர் ஜெ., உடல்நிலை குறித்து, தனியார், 'டிவி' ஒன்றில் வெளியான செய்தியால், தொண்டர்கள் ஆவேசம் அடைந்தனர்.

மருத்துவமனை மற்றும் கட்சி அலுவலகங்கள் முன் குழப்பம் ஏற்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, அப்பல்லோ மருத்துவமனை சார்பில், 10 நிமிடங்களுக்கு ஒருமுறை, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அப்பல்லோ மருத்துவமனை, தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க., சார்பில், நேற்று மாலை வரை, எந்த விதமான எதிர்மறை தகவலும் வெளியிடப்படவில்லை.
பீதியடைந்தனர்
ஆனால், முதலில் ஒரு தனியார், 'டிவி'யும், அடுத்த, வினாடியில் ...

சிந்து நதியில் அணை கட்ட பாக்., முயற்சி சேட்டை ..! திட்டத்துக்கு சுயமாக நிதி திரட்டவும் முடிவு

Posted: 05 Dec 2016 09:57 AM PST

புதுடில்லி,:சிந்து நதியில், 90 ஆயிரம் கோடி ரூபாயில், அணை கட்டும் திட்டத்துக்கு நிதியுதவி செய்ய, உலக வங்கியும், ஆசிய வளர்ச்சி வங்கியும் மறுத்துள்ள போதும், அந்த திட்டத்துக்கு, பாக்., அரசு நேற்று ஒப்புதல் அளித்து, சேட்டையை அரங்கேற்றி உள்ளது.

பாக்., அரசு, சிந்து நதியில், 90 ஆயிரம் கோடி ரூபாயில், 'டியாமர் - பாஷா' அணை கட்ட திட்டமிட்டு உள்ளது. இதில், 4,500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கவும் முடிவு செய்துள்ளது. அணை கட்டும் பகுதிக்கு, நம் நாடு உரிமை கொண்டாடி வருகிறது. சர்ச்சைக்குரிய பகுதியில் அமையும் திட்டம் என்பதால், பாகிஸ்தானின் இந்த திட்டத்துக்கு, மத்திய அரசு கடும் ...

தமிழக பாதுகாப்புக்கு 1 லட்சம் போலீசார்

Posted: 05 Dec 2016 10:11 AM PST

சென்னை, : தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கை பராமரிக்க, ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். மக்கள் கூடும் இடங்களில், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள உத்தரவிடப் பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை, கவலைக்கிடமாக உள்ளது. இது தொடர்பாக, பல விதமான குழப்பமான தகவல்கள் வெளியாகி வருவதால், மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப் பட்டுள்ளனர்.'காவல் நிலையங்களில், ஒரு சில போலீசார் மட்டுமே பணியில் இருக்க வேண்டும். மற்ற போலீசார், தங்கள் காவல் நிலைய எல்லைகளில், 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்' ...

இரவு 11.30 க்கு உயிர் பிரிந்ததாக அப்பல்லோ அறிவிப்பு

Posted: 05 Dec 2016 11:03 AM PST

சென்னை: முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை(5.12.2016) இரவு 11.30 மணிக்கு காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகார பூர்வமாக அறிவித்தது.

அப்பல்லோ மருத்துவமனை சார்பில்வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி காய்ச்சல், மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கிரிட்டிக்கல் கேர் யூனிட் பிரிவில் பலவிதமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் உடல் நலம் தேறி சாதாரணமாக வாய்மூலம் உணவு உட்கொள்ளும் அளவிற்கு முன்னேறினார்.
இதன் அடிப்படையில் அவர் கிரிட்டிக்கல் கேர் ...

இந்திய அரசியலில் பெரிய வெற்றிடம்: மோடி இரங்கல்

Posted: 05 Dec 2016 11:29 AM PST

புதுடில்லி: முதல்வர் ஜெயலலிதா மறைவு ,இந்திய அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் மோடி தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஜெயலலிதாவுடன் பழகிய சந்தர்ப்பங்களை நான் என்றும் சந்தோஷமாக நினைவு கூறுவேன். மக்களுடன் நெருக்கமாக தொடர்பு வைத்திருந்த ஜெயலலிதா ஏழைகளின் நலனுக்காவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டவர்.

ஜனாதிபதி: தமிழக வளர்ச்சிக்காக ஜெயலலிதா ஆற்றிய பங்கு நீண்டகாலம் அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கும்.
சோனியா: முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை ...

7 நாள் அரசு முறை துக்கம்

Posted: 05 Dec 2016 11:47 AM PST

சென்னை: முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி 6ம் தேதி முதல் 7 நாட்களுக்கு அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்படும் என்று ராஜ்பவன் செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கவர்னர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை(5ம் தேதி) இரவு 11.30 மணிக்கு காலமானார் என்பதை தமிழக அரசு மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறது. இதையொட்டி 6ம் தேதி முதல் 7 நாட்களுக்கு அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்படும் இந்த நாட்களில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் இந்த 7 நாட்களும் அரசு ...

அமரரானார் 'ஜெ.,' *கண்ணீர் கடலில் தொண்டர்கள் தவிப்பு *பலனளிக்கவில்லை 75 நாள் தீவிர சிகிச்சை *அஸ்தமித்தது அ.தி.மு.க.,வின் விடிவெள்ளி

Posted: 05 Dec 2016 11:55 AM PST

அ.தி.மு.க., பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா, தன், 68வது வயதில், நேற்று இரவு, 11:30 மணிக்கு அமரரானார். சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், 75 நாட்களாக, அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலன் அளிக்கவில்லை. கண்ணீர் கடலில், தொண்டர்களை தவிக்க விட்டு விட்டு, அ.தி.மு.க.,வின் விடிவெள்ளி அஸ்தமித்தது.

நுரையீரலில் ஏற்பட்ட தொற்றுக்காக, தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது; தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்பல்லோ டாக்டர்கள், அவருக்கு தொடர் சிகிச்சை அளித்தனர்.தமிழக கவர்னர் ...

இந்தியாவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு : துணை ஜனாதிபதி

Posted: 05 Dec 2016 11:56 AM PST

புதுடில்லி: ஜெயலலிதா மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.ஹமீத் அன்சாரி: ஜெயலலிதா மறைவு இந்திய நாட்டு மக்களுக்கு ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பு

தமிழக (பொ) கவர்னர் வித்யாசாகர் ராவ்: தமிழக மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.
கருணாநிதி: அ.தி.மு.க.,வினர் மனதில் ஜெ., நீடித்து வாழ்வார்
எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின்: ஜெயலலிதாவின் மறைவு அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
மத்திய அமைச்ச நிர்மலா சீத்தாராமன்: ...

மக்களால் நான்! மக்களுக்காக நான்!

Posted: 05 Dec 2016 12:48 PM PST

ஜெயலலிதா 16 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்துள்ளார். இவர் நிறைவேற்றிய திட்டங்கள் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான மக்களையும்சென்றடைந்துள்ளது.

அதுவும் கடந்த6 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியைநடத்தினார். அவர் சிந்தனையில் உதித்தசில அரிய திட்டங்களை திரும்பி பார்ப்போம்.
மழை நீர் சேகரிப்பு திட்டம்
நிலத்தடி நீரை பெருக்கும்விதமாக மழைநீர் சேகரிப்பு திட்டத்தைஉருவாக்கினார். இதன் மூலம் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், வீடுகள் ஆகியவற்றில் மழைநீர் சேகரிப்பு கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதனால்தமிழகத்தின் நிலத்தடி நீர் ...

தமிழக விஷயத்தில் பா.ஜ., தனி கவனம் காட்டுவது ஏன்?

Posted: 05 Dec 2016 12:55 PM PST

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை மோசமானது முதல், தமிழக அரசு நிர்வாகத்தில், மத்திய அரசு தனி கவனம் செலுத்த துவங்கி விட்டது. 'தமிழக அரசுக்கு உதவத் தயார்' என, மத்திய அமைச்சர்கள் கூறியிருப்பது, அதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

கடந்த செப்., 22ம் தேதி, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதா, 'அட்மிட்' ஆனது முதல், மாநில அரசு நிர்வாகத்தை நடத்துவது யார் என்பது, புதிராகவே உள்ளது.அவ்வப்போது, தலைமைச் செயலர் ராமமோகன ராவ் பெயரில், ஓரிரு அறிக்கைகள் வெளியாவதுடன் சரி. முதல்வரின் உடல் நிலையை பற்றி அறிந்து கொள்ள முடியாத வகையில், அரசு நிர்வாகம் ரகசியம் காத்து வந்தது. ...

அதே அமைச்சர்கள்... அதே இலாகா...

Posted: 05 Dec 2016 01:11 PM PST

சென்னை: ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை செவ்வாய் கிழமை அதிகாலை 1 மணிக்கு பதவி ஏற்றது. ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த அனைத்து அமைச்சர்களும் அதே இலாகா பொறுப்புடன் பதவியேற்று கொண்டனர்.முன்னதாக, திங்கட்கிழமை மாலை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமையகத்தில் மதுசூதனன் தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. இதில், ஓ.பன்னீர் செல்வம் சட்டசபை அ.தி.மு.க., தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர், இன்று அதிகாலை 1 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடந்தது. தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™