Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஜெயலலிதா மறைவுக்குப் பிந்தைய நிலவர பதிவுகள்

Posted: 05 Dec 2016 02:05 PM PST

- தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். -- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் 5-ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு உயிரிழந்துள்ள நிலையில், தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்குத் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஓ.பன்னீர்செல்வத்தைத் தொடர்ந்து, மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் தற்போது 3-வது முறையாக முதலமைச்சராக ...

தர்மம் தலை காக்கும்! காக்கவேண்டும்!

Posted: 05 Dec 2016 11:54 AM PST

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாம சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்கள். அதுகுறித்து சந்தேகத்திற்கிடமான வகையிலும், நம்பிக்கையில்லாத அனுமானமாகவும் பல செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், சென்ற வருடம் இதே நேரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் பலருக்கும் வங்கி கணக்கு மூலம் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 5,000 ரூபாய் வழங்கி உதவி செய்தார். அந்தத் தர்மம் நமது தமிழகத்தின் இரும்புப் ...

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்!

Posted: 05 Dec 2016 11:46 AM PST

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சிகிச்சை பலனளிக்காமல் இன்று (05.12.2016) இரவு 11.30 மணியளவில் காலமானார்! இந்த இழப்பு தமிழக மக்களுக்கு மிகுந்த வருத்தத்தை உண்டாக்கியுள்ளது.

இனிமேல் ஜெயலலிதாவும் இல்லை! தர்மமும் இல்லை!!

மச்சினியை ஏன் ''வொய்ப் இன்லா''ன்னு கூப்பிடக்கூடாது...???

Posted: 05 Dec 2016 06:28 AM PST

"மனைவி..ரொம்ப பெருமையா சொன்னா, ஏங்க ஒண்ணுக்கும் உதவாத பொருளை அடுத்தவன் தலையில் கட்டுறதுல எங்கப்பா கில்லாடிங்க" "கணவன்.. நான் இதை, நம்ம கல்யாணத்துக்கு அடுத்த நாளே தெரிஞ்சுக்கிட்டேன்" - ----------------------------------------- - நீங்களே சொல்லுங்க மாமியாரை ''மதர் இன் லா''ன்னு கூப்பிடுறது போல.... மச்சினியை ஏன் ''வொய்ப் இன்லா''ன்னு கூப்பிடக்கூடாது...??? - ----------------------------------------

எஞ்சோட்டுக்காாி

Posted: 05 Dec 2016 02:46 AM PST

எஞ்சோட்டுக்காாி ஆத்தோரத்துல ஒரு அத்திமரம் யாரு கைக்கும் அகப்படாத கட்டமரம் வரத்தாடு மேய்க்கும் வந்தட்டிக்காாி பொன்னுத்தாயிக்கும் செம்பிலி ஆடு மேய்க்கும் சின்னாளம்பட்டி செந்துருக்கத்துக்கும் முந்தி நிழல் விாிக்கும் மூதாதையர் வைச்ச மரம் இவுக ஒத்தையடிப் பாதையில ஓடைக்கரையில ஆடு மேய்க்கையில ஒட்டுமொத்த சொந்தங்களும் ஒறங்காமக் காத்திருக்கும் இவுக வருகைய எண்ணி ஆவாரம் புவும் ஐஞ்சாறு நாளா புத்திருக்கும் இவுகளுக்கு சொந்தம் உண்டுன்னு சொன்னனா இல்லையா அதுக சல்லிக்கல்லு சரலக்கல்லு கத்திக்கல்லு ...

நியாயமான உண்மை

Posted: 05 Dec 2016 02:01 AM PST

நியாயமான உண்மை Boy : ஹேய் என்ன கல்யாணம் பண்ணிக்குரியா ?? Girl : எனக்கு உன்ன பிடிக்கலையே Boy : இப்போ நடக்குற கல்யாணம் எல்லாம் ரெண்டு பேருக்கும் புடிச்சா நடக்குது... அடஜஸ்ட் ..பண்ணி கட்டிக்கோ ப்ளீஸ் Girl :  காமெடி ஹேய் காமெடி பண்றியா ????? Boy : காதல்ல யாராவது காமெடி பண்ணுவாங்கள ??? சரி.. எனக்கும் ஒரு பொண்ண ஒரு தலை காதல் பண்ணனும்ன்னு ரொம்ப நாள   ஆசை... ப்ளீஸ் ப்ளீஸ்   என் லவ்வ  இப்போ அக்செப்ட் பண்ணாத.... Girl : அப்படி என்ன இருக்கு இந்த ஒரு தலை காதல்ல ??? Boy ...

குருதிக்கொடை

Posted: 05 Dec 2016 01:29 AM PST

குருதிக்கொடை ஒத்த பனை மரம் ஊருக்கே பேராகிப் போன அந்த மரம் உன்னைக்கோ இடி விழுந்த சேதி சொல்லும் அப்பன் இருளாண்டி வாழும் இல்லம் ஒத்தப்பனை தாண்டி ஓடக்கரை தாண்டி ஓர் ஒத்தையடிப்பாதை அது போய்ச்சேரும் பெருமாள் கோயில் நேர அந்த ஊருப் பேரு புலிப்பாறை ஒத்தப் பனை ஊரு தாழ்தப்பட்டவன் வாழும் கருவேலங்காடு அங்கொன்றும் இங்கொன்றுமாய் குடிசை வீடு புலிப்பாறை ஊரு தெருவெல்லாம் காரவீடு அந்த ஊரு பண்ணையாரு ஒத்தக்கொட புடிச்சி ஒயிலுகள முன்னவிட்டு பத்து விரல் மறைச்சி பணியார மோதிரமிட்டு பவுசாத்தான் ...

பிறந்த நாள் என்றால் என்ன ? சிறந்த பதில்

Posted: 05 Dec 2016 01:23 AM PST

பிறந்த நாள் என்றால் என்ன ? சிறந்த பதில்




நன்றி முகநூல்

ரமணியன்

ஆசையே துன்பத்திற்கு காரணம் !

Posted: 04 Dec 2016 10:56 PM PST

[b]ஆசையே துன்பத்திற்கு காரணம் ![/b] ------------------------------------------------------------------------------------------------------------------------------------------ ஆசையே துன்பத்திற்கு காரணம் ! எப்பிடி சொல்கிறாய் ? ஆசை பட்டுதான் மனைவியை மணம் புரிந்தேன் . ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- மேனேஜர் : ஆபீசுக்கு ஏன் லேட் ? டைப்பிஸ்ட் : என்னை ஒருவன் பின்தொடர்ந்து ...

முதல்வருக்கு ஆஞ்ஜியோ சிகிச்சை செய்யப்பட்டது

Posted: 04 Dec 2016 10:07 PM PST

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவிற்கு இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்வதற்காக இன்று அதிகாலை ஆஞ்ஜியோ சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதய துடிப்பு முடக்கம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அவருடைய இதய துடிப்பில் முடக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் பிரத்யேக அறையிலிருந்து தீவிர சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆஞ்ஜியோ சிகிச்சை அவர் மருத்துவ குழுவினரின் தீவிர கண்காணிப்பில் இருந்தார். நேற்று ...

சுமைகளையும், துன்பங்களையும் நீதான் மகிழ்ச்சியோடு சுமக்க வேண்டும்...!!!

Posted: 04 Dec 2016 06:25 PM PST

- சர்ச்சில் இருந்து திரும்பிய கணவன் என்றும் செய்யாததை அன்று செய்தான். வந்தவுடன் மனைவியை வாழ்த்தியவன், இருகைகளாலும் அவளைத் தூக்கிப் பிடித்ததோடு,தூக்கிப் பிடித்த நிலையிலேயே வீட்டை ஒருமுறை சுற்றி வந்தான். வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்த மனைவி மெல்லிய குரலில் கேட்டாள்: "சர்ச்சில் என்ன நடந்தது? பாதிரியார் என்ன போதித்தார்? இன்று இத்தனை ரொமாண்டிக்கோடு நீங்கள் இருப்பதற்கு என்ன காரணம்?" அதிரடியாகக் கணவன் பதில் சொன்னான். "அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை! உனது சுமைகளையும், ...

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை; வதந்திகளை நம்பவேண்டாம்...!

Posted: 04 Dec 2016 06:00 PM PST

தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை ஏதும் அறிவிக்கப்படவில்லை என்றும், அத்தகைய வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை அப்பல்லா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முதல்வர் உடல்நிலையைக் காரணம் காட்டி இன்று ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™