Tamil News | Online Tamil News |
- எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு ஜெட்லி பதிலடி!: வரி வசூல் அதிகரித்துள்ளதாக பெருமிதம்
- வீடில்லா குடும்பத்துக்கு நிலம் மத்திய அரசு உத்தரவு
- தினகரனுக்கு சசிகலா முக்கியத்துவம்; மற்ற உறவினர்கள் அதிருப்தி
- அ.தி.மு.க.,வை வழிநடத்த சசிகலாவுக்கு அதிகாரம்; பொதுச்செயலராக நியமித்து பொதுக்குழு தீர்மானம்
- ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசாம் தொண்டர்களை ஏமாற்றுகிறதா தலைமை?
- ஜெ., மரணம் குறித்து அடுக்கடுக்காக சந்தேகம் எழுப்பி ஐகோர்ட் சரவெடி!:உடலை தோண்டி எடுக்க உத்தரவிடுவோம் என நீதிபதி எச்சரிக்கை:மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்கும்படி கண்டிப்பான உத்தரவு
- விசாரணையை துவக்கினார் உள்துறை செயலர்; பான் மசாலா லஞ்ச ஐ.பி.எஸ்.,கள் கலக்கம்
- நிதியாண்டில் மாற்றம்: நிபுணர் குழு பரிந்துரை
- அமரீந்தர் - கெஜ்ரிவால் 'டுவிட்டரில்' மோதல்
- தந்தைக்கு போட்டியாக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டார் அகிலேஷ்
- நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை
- செல்லாத ரூபாய் நோட்டு: இன்று கடைசி நாள்
- முதல்வரையே ‛சஸ்பெண்ட்' செய்த கட்சி; அருணாச்சலில் அதிரடி
| எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு ஜெட்லி பதிலடி!: வரி வசூல் அதிகரித்துள்ளதாக பெருமிதம் Posted: 29 Dec 2016 09:21 AM PST புதுடில்லி:செல்லாத ரூபாய் நோட்டு திட்டத் தால், மோசமான விளைவுகள் ஏற்பட்டதாக கூறப்படுவதை, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, திட்டவட்டமாக மறுத்துள்ளார்; இத்திட்டத்தால், வரி வசூல் அபரிமிதமாக அதிகரித்ததாக, அவர் கூறியுள்ளார். கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், நவ., 8ல், செல்லாத ரூபாய் நோட்டுதிட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். செல்லாத நோட்டு திட்டத்தால், மோசமான பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக, காங்., - திரிணமுல் காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றஞ்சாட்டி வருகின்றன. இதற்கு பதிலடி தரும் வகையில், டில்லியில் நேற்று, ... |
| வீடில்லா குடும்பத்துக்கு நிலம் மத்திய அரசு உத்தரவு Posted: 29 Dec 2016 09:26 AM PST புதுடில்லி:'வீடில்லாத குடும்பத்தின், பெண் உறுப்பினர் பெயரில், நிலம் ஒதுக்க வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய கிராம மேம்பாட்டுத் துறை இணை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ராம் கிருபால் யாதவ் கூறியதாவது:நம் நாட்டில், 2022க்குள், அனைவருக்கும் வீடு கட்டிதர வேண்டும் என்பது, மத்திய அரசின் கனவு திட்டம். இதற்கான பணிகளை மத்திய அரசு துவங்கி விட்டது. வீடுகள்இல்லாத குடும்பங்களை, மாநில அரசுகள் கணக்கெடுக்க வேண்டும். அந்த குடும்பத்தின் மூத்த பெண் உறுப்பினர் பெயரில், நிலம் ஒதுக்க வேண்டும். அந்த நிலத்தில் வீடு ... |
| தினகரனுக்கு சசிகலா முக்கியத்துவம்; மற்ற உறவினர்கள் அதிருப்தி Posted: 29 Dec 2016 09:34 AM PST சசிகலா குடும்பத்தில், தற்போது, டி.டி.வி., தினகரனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவ தால், மற்ற உறவினர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஜெயலலிதா மறைந்ததும், அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக, ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலை சுற்றி, சசிகலாவின் உறவினர்கள் நின்றனர். ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, வீட்டை விட்டு துரத்தி அடிக்கப் பட்ட, சசிகலா உறவினர்கள், உடலை சுற்றி நின்றது, அ.தி.மு.க.,வினரிடையே கடும் அதிர்ச்சியையும், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.அதைத் தொடர்ந்து, உறவினர்களை 'கொஞ்ச நாட்கள் போயஸ் கார்டன் வர வேண்டாம்' என, ... |
| அ.தி.மு.க.,வை வழிநடத்த சசிகலாவுக்கு அதிகாரம்; பொதுச்செயலராக நியமித்து பொதுக்குழு தீர்மானம் Posted: 29 Dec 2016 09:38 AM PST அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலாவை நியமித்தும், கட்சி நிர்வாகத்தை ஏற்க அங்கீகா ரம் வழங்கியும், அக்கட்சி பொதுக்குழுவில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., அவசர பொதுக்குழுக் கூட்டம், சென்னை, வானகரத்தில், நேற்று நடந்தது. மொத்தம், 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானமாக, ஜெயலலிதா மறைவுக்கு, இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அரசியல் தீர்மானம் வருமாறு: பொதுச்செயலர் நியமனத்தை முடிவு செய்யும் அதிகாரம், கட்சி சட்ட திட்ட விதி, 19 - பிரிவு, 8ல், பொதுக்குழுவிற்கு முழுமையாக வழங்கப்பட்டுஉள்ளது. அதன்படி, பொதுச் ... |
| ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசாம் தொண்டர்களை ஏமாற்றுகிறதா தலைமை? Posted: 29 Dec 2016 09:40 AM PST 'மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு, நோபல் பரிசு வழங்க வேண்டும் என, எங்கள் கட்சிப், பொதுக் குழுவில் தீர்மானம் நிறை வேற்றியது, எங்களைப் போன்று, கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களை ஏமாற்றுவ தாக உள்ளது' என, அ.தி.மு.க., தொண்டர்கள் குமுறுகின்றனர். ஜெயலலிதா மறைந்ததும், டில்லி சென்ற முதல்வர் பன்னீர்செல்வம், அவருக்கு, 'பாரத ரத்னா' வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஜெ., மீது குற்ற வழக்குகள் இருந்ததால், 'பாரத ரத்னா' கிடைக்குமா என்று அப்போதே விவாதங்கள் எழுந்தன. இந்நிலையில் நேற்று நடந்த பொதுக்குழுவில், 'அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்' என, தீர்மானம் ... |
| Posted: 29 Dec 2016 09:47 AM PST சென்னை:ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற, சென்னை உயர் நீதிமன்றம், அடுக்கடுக்காக சந்தேகங்களை எழுப்பி உள்ளது. ஜெ., மரணத்தில், தனிப்பட்ட முறையில், தனக்கும் சந்தேகம் உள்ளதாக கூறிய நீதிபதி, உடலை தோண்டி எடுக்க, ஏன் உத்தரவிடக் கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கும்படி, கண்டிப்பான உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை, ஜன., 9க்கு தள்ளிவைத்தார்.அ.தி.மு.க., உறுப்பினரான, சென்னை, அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் தாக்கல் செய்த மனு:முதல்வராக பொறுப்பேற்ற, நான்கு மாதங்களில், செப்., 22ல், சென்னை, அப்பல்லோ ... |
| விசாரணையை துவக்கினார் உள்துறை செயலர்; பான் மசாலா லஞ்ச ஐ.பி.எஸ்.,கள் கலக்கம் Posted: 29 Dec 2016 09:54 AM PST பான் மசாலா விவகாரத்தில் லஞ்சம் வாங்கிய, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பற்றி, உள்துறை செயலர் அபூர்வ வர்மா, முதற்கட்ட விசாரணையை துவக்கினார். சென்னை, செங்குன்றம் அருகே வடபெரும் பாக்கத்தில், பான் மசாலா போதை பொருள் குடோன்கள், ரகசியமாக செயல்பட்டு வந்தது. சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், தடை செய்யப்பட்ட பான் மசாலா மூலப்பொருட்களை கண்டறிந்தனர். அதில்லாமல், பீடாவிற்கு பயன்படுத்தப்படும், தடையில்லா மூலப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இந்த இரண்டு மூலப்பொருட்களும், நுாறு டன்னிற்கு மேல் இருந்தது. இந்த வியாபாரம் மூலம், 320 கோடி ரூபாய்க்கு மேல், அரசுக்கு ... |
| நிதியாண்டில் மாற்றம்: நிபுணர் குழு பரிந்துரை Posted: 29 Dec 2016 09:59 AM PST முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர், டாக்டர், சங்கர் ஆச்சார்யா தலைமையிலான நிபுணர் குழு, நிதியாண்டை, ஜனவரியில் துவங்கி, டிசம்பரில் முடியும் வகையில் மாற்றும்படி, பரிந்துரைத்துள்ளது. இந்தியாவில், 150 ஆண்டுகளாக, ஏப்ரலில் துவங்கி, மார்ச்சுடன் முடியும் வகையில், நிதியாண்டு பின்பற்றப்பட்டு வருகிறது. பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த இந்தியா, பிரிட்டன் அரசை பின்பற்றி, 1867 முதல், இந்த நடைமுறையை பின்பற்றி வருகிறது.இந்நிலையில், முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர், சங்கர் ஆச்சார்யா தலைமையில் நிபுணர் குழுவை அமைத்து, நிதியாண்டில் மாற்றம் செய்வது குறித்து ... |
| அமரீந்தர் - கெஜ்ரிவால் 'டுவிட்டரில்' மோதல் Posted: 29 Dec 2016 10:14 AM PST புதுடில்லி: பஞ்சாப் மாநிலத்திற்கு, அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அம்மாநில, காங்., தலைவர், அமரீந்தர் சிங்கும், ஆம் ஆத்மி தலைவரும், டில்லி முதல்வருமான, அரவிந்த் கெஜ்ரிவாலும், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் காரசாரமாக மோதியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தேர்தல்: பஞ்சாபில், முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையில், அகாலி தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. 2017, துவக்கத்தில், இம்மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பிரதான கட்சிகள், தேர்தல் பணிகளை தீவிரமாக முடுக்கி ... |
| தந்தைக்கு போட்டியாக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டார் அகிலேஷ் Posted: 29 Dec 2016 10:31 AM PST லக்னோ : உ.பி., முதல்வரும் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவருமான அகிலேஷ் யாதவ் தந்தைக்குப் போட்டியாக 235 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டார். புறக்கணிப்பு: உ.பி.,யில், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். அவருக்கும், அவரது சித்தப்பாவும், உ.பி., மாநில, சமாஜ்வாதி கட்சி தலைவருமான, சிவ்பால் யாதவுக்கும், அதிகாரப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மொத்தம் உள்ள, 403 தொகுதிகளில், 325 தொகுதிகளுக்கான, சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் பட்டியலை, முலாயம் சிங், நேற்று முன்தினம்(டிச.,28) வெளியிட்டார். இதில், அகிலேஷின் ... |
| நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை Posted: 29 Dec 2016 10:54 AM PST புதுடில்லி:செல்லாத ரூபாய் நோட்டு திட்டத் தின் கீழ், அவற்றை, வங்கிகளில், 'டிபாசிட்' செய்வதற்கான அவகாசம் இன்றுடன் முடியும் நிலையில், இதுதொடர்பாக, பிரதமர், நரேந்திர மோடி, நாளை உரையாற்றுவார் எனத் தெரிகிறது. இதுகுறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: செல்லாத ரூபாய் நோட்டு திட்டம், நவ., 8ல் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், செல்லாதநோட்டுகளை, வங்கிகளில், 'டிபாசிட்' செய்வதற்கான அவகாசம் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து, நாட்டு மக்களுக்கு இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும் வகையில், பிரதமர் மோடி, நாளை உரையாற்ற உள்ளார்.பிரதமர், தன் ... |
| செல்லாத ரூபாய் நோட்டு: இன்று கடைசி நாள் Posted: 29 Dec 2016 12:41 PM PST
புதுடில்லி : செல்லாத ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில், 'டிபாசிட்' செய்வதற்கு, இன்று(டிச.,30) கடைசி நாள். வாபஸ்: நவம்பர், 8ம் தேதி இரவு, தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் மோடி, '500 - 1,000 ரூபாய் நோட்டுகள், நள்ளிரவு முதல் செல்லாது' என அறிவித்தார். எனினும், அந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில், 'டிபாசிட்' செய்து, அதற்கு பதிலாக, செல்லத்தக்க நோட்டுகளை பெற, அவகாசம் அளிக்கப்பட்டது. உரிய அடையாள சான்று காட்டி, எந்த வங்கியிலும், நாளொன்றுக்கு, 4,000 ரூபாய்க்கு மிகாமல் பெறலாம் என, நிபந்தனை விதிக்கப்பட்டது. புதிய ... |
| முதல்வரையே ‛சஸ்பெண்ட்' செய்த கட்சி; அருணாச்சலில் அதிரடி Posted: 29 Dec 2016 01:58 PM PST
இடாநகர் : நாட்டின் மிகவும் இளம் வயது முதல்வர் என்ற பெருமை உடைய, அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு(37) கட்சியிலிருந்து அதிரடியாக ‛சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். சஸ்பெண்ட்: அருணாச்சல பிரதேசத்தின் முதல்வர் பெமா காண்டை அவரது கட்சியான அருணாச்சல் மக்கள் கட்சி அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. அவரோடு துணை முதல்வர் சவ்னா மேயின் மற்றும் 5 எம்.எல்.ஏ.,க்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். உத்தரவு: கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக இவர்கள் அனைவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 30,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |