Tamil News | Online Tamil News |
- பணம் எடுக்கும் கட்டுப்பாடு மேலும் நீட்டிக்கப்படலாம்
- சிங்கத்துக்கு பின் சிங்கக்குட்டி தான்! தீபாவுக்கு பெருகுகிறது ஆதரவு
- கறுப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான அரசின் போர் தொடரும்!:மக்கள் தரும் தகவல்படியே வேட்டை நடப்பதாக மோடி தகவல்
- காங்கிரஸ் வலையில் விழுமா சமாஜ்வாதி? உ.பி.,யில் சூடுபிடிக்கும் கூட்டணி பேச்சு
- 'பவர் சென்டர்' யார் என மன்னார்குடி சொந்தங்கள் யுத்தம்! கார்டனுக்குள் நடந்த களேபரங்கள் பற்றி பகீர் தகவல்:எதிர்ப்புகளை சமாளிக்க சசிகலா புதிய திட்டம்
- சி.பி.ஐ.,க்கு உத்தரவிடுவாரா தலைமை செயலர்; தமிழக அதிகாரிகள் விசாரித்தால் 'அம்போ'
- சசி பொதுச்செயலரானால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம்:கிளை பொறுப்பாளர்கள் போர்க்கொடி
- அமைச்சர்களின் மகன்கள் ஓட்டம்:வருமான வரித்துறை சோதனையால் 'கிலி'
- ஜெ., அறிவித்த புதிய அனல் மின் நிலையம்: முழு வீச்சில் செயல்படுத்துமா வாரியம்?
- வெளியுறவு அமைச்சகத்தில் 'டுவிட்டர் சேவா' துவக்கம்
- சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.6ஆக பதிவு
- சரப்ஜித் சிங் சகோதரி பா.ஜ.,வில் இணைந்தார்
- அசோக சக்கரத்தை வடிவமைத்தவர் மறைவு
- அக்னி-5 ஏவுகணை இன்று சோதனை
| பணம் எடுக்கும் கட்டுப்பாடு மேலும் நீட்டிக்கப்படலாம் Posted: 25 Dec 2016 07:24 AM PST புதுடில்லி:செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப் பைத் தொடர்ந்து, வங்கி மற்றும் ஏ.டி.எம்.,களில் இருந்து பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல் லாது என, நவ., 8ல் அறிவிக்கப்பட்டது; அப்போது, வங்கிகளில் இருந்து பணம் எடுப்ப தற்கு, டிச., 30 வரையிலான, 50 நாட்களுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.வங்கிகளில் இருந்து, வாரத்துக்கு அதிகபட்சம், 24 ஆயிரம் ரூபாயும்; ஏ.டி.எம்.,களிலிருந்து, ஒரு நாளில், அதிகபட்சம், 2,500 ரூபாயும் எடுக்கலாம் என, ... |
| சிங்கத்துக்கு பின் சிங்கக்குட்டி தான்! தீபாவுக்கு பெருகுகிறது ஆதரவு Posted: 25 Dec 2016 08:38 AM PST திருப்பூர்:'ஜெ., அண்ணன் மகள் தீபா தான், அ.தி.மு.க., பொதுச் செயலராக வேண்டும்' என, திருப்பூரில், அ.தி.மு.க.,வினர் பேனர் வைத்துள்ளனர். அ.தி.மு.க.,வின் அடுத்த பொதுச் செயலராக சசிகலாவை தேர்ந்தெடுக்க, மாவட்ட செயலர் கள், எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் முயற்சித்து வருகின்றனர். இதை விரும்பாத தொண்டர்கள் பலர், ஜெ., அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சி, 14வது வார்டு, ரங்கநாத புரம் கிளை பெண் நிர்வாகிகளும், தொண்டர் களும், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ளனர். 'சிங்கத் துக்கு பின், சிங்கக் குட்டி தான் வர வேண்டும்; குள்ளநரி வரக் ... |
| Posted: 25 Dec 2016 08:46 AM PST புதுடில்லி:''கறுப்புப் பணம், ஊழலுக்கு எதிராக அரசு நடத்தி வரும் மிகப் பெரிய போருக்கு மக் கள் பேராதரவு அளித்து வருகின்றனர்; இவற்றை ஒழிக்கும் வரை, இந்தப் போர் தொட ரும். மக்கள் தரும் தகவலின் அடிப்படையி லேயே, வருமான வரித்துறையின் வேட்டை நடக்கிறது,'' என, 'மன் கி பாத்' ரேடியோ உரை யில், பிரதமர் மோடி, திட்டவட்டமாக தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, மாதத்துக்கு ஒரு முறை, ஞாயிற்றுகிழமையில், 'மன் கி பாத்' என்ற ரேடியோ உரை நிகழ்த்துகிறார்; நேற்று அவர் பேசியதாவது:கறுப்புப் பணம், ஊழலுக்கு எதிராக எடுக்கப் பட்டுள்ள செல்லாத ரூபாய் நோட்டு திட்டம், ஒரு துவக்கமே; ... |
| காங்கிரஸ் வலையில் விழுமா சமாஜ்வாதி? உ.பி.,யில் சூடுபிடிக்கும் கூட்டணி பேச்சு Posted: 25 Dec 2016 08:49 AM PST உ.பி., சட்டசபைத் தேர்தலில், எப்படியாவது கூட்டணி அமைத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள, காங்கிரசுக்கும், சமாஜ்வாதிக் கும், தொகுதிகளை இறுதி செய்து கொள்வதில், இழுபறி தொடருகிறது. உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலை மையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. தேசிய அரசியலை தீர்மானிக்கும் மிக முக்கிய மாநிலமாக திகழும், உ.பி.,யில், அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், அங்கு ஆளும் கட்சியாக உள்ள சமாஜ்வாதி, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க, மதச் சார்பற்ற கூட்டணியை உருவாக்க வேண்டு மென்பதில் தீவிரமாக உள்ளது. காங்கிரசை, எப்படியாவது ... |
| Posted: 25 Dec 2016 09:15 AM PST அ.தி.மு.க.,வின் பொது செயலராக சசிகலாவை தேர்வு செய்யும் முன்னரே, அவரது மன்னார்குடி சொந்தங்கள் மத்தியில், தங்களுக்குள், 'பவர் சென்டர்' யார் என்ற, யுத்தம் துவங்கியுள்ளது. இது தொடர்பாக, போயஸ் கார்டனில் நடந்த களேபரங்கள் பற்றிய பகீர் தகவலும் வெளியாகி உள்ளது. சென்னை, வானகரத்தில், வரும், 29ல் நடைபெறவுள்ள, அ.தி.மு.க., பொதுக்குழு மற்றும் செயற்குழுவில், சசிகலாவை பொதுச் செயலராக தேர்ந்தெடுக்க, அனைத்து மாவட்ட நிர்வாகிகளும்,தீர்மானம் நிறைவேற்ற தயாராகி வருகின்றனர். |
| சி.பி.ஐ.,க்கு உத்தரவிடுவாரா தலைமை செயலர்; தமிழக அதிகாரிகள் விசாரித்தால் 'அம்போ' Posted: 25 Dec 2016 09:18 AM PST பான் மசாலா உரிமையாளரிடம் லஞ்சம் வாங் கிய விவகாரத்தை, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரித்தால், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தப்பிக்க வாய்ப்புள்ளது. மத்திய புலனாய்வு அமைப்பான, சி.பி.ஐ., விசாரிக்க, புதிய தலைமை செயலர் உத்தரவிடு வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சென்னை அருகே செங்குன்றத்தில், சில போலீஸ் அதிகா ரிகள் துணையுடன் ரகசியமாக செயல்பட்டு வந்த, பான் மசாலா குடோனில், சில மாதங் களுக்கு முன், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.கடிதம் அதில், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலர், மாதந் தோறும், லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியிருப்பதாக, ... |
| சசி பொதுச்செயலரானால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம்:கிளை பொறுப்பாளர்கள் போர்க்கொடி Posted: 25 Dec 2016 09:27 AM PST 'சசிகலாவை பொதுச்செயலராக தேர்வு செய்தால், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப் போம்' என, மாவட்ட, நகர செயலர்களிடம், கிளை பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கூறி வருகின்றனர். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவால், பன்னீர்செல்வம் முதல்வரானார். இதனால், கட்சியின் மூத்த நிர்வாகி, அ.தி.மு.க., பொதுச்செயலராவார் என, தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், பொதுச்செயலர் பதவிக்கு, ஜெயலலி தாவின் தோழி சசிகலாவை, தேர்வு செய்யும் வேலையில், மன்னார்குடி குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, அமைச்சர் கள், மாவட்ட செயலர், பொதுக்குழு உறுப்பினர்களையும் ... |
| அமைச்சர்களின் மகன்கள் ஓட்டம்:வருமான வரித்துறை சோதனையால் 'கிலி' Posted: 25 Dec 2016 09:31 AM PST வருமான வரித்துறையின் அதிரடி சோதனை யால், பீதி அடைந்துள்ள, நான்கு தமிழக அமைச் சர்களின் மகன்கள், வீடுகளில் இருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். தமிழக பொதுப்பணித் துறை கான்ட்ராக்டர், சேகர் ரெட்டி. சமீபத்தில், இவரது வீடு, உறவினர் வீடுகளில், வருமான வரித்துறையினர், சோதனை நடத்தினர். அதில், 35 கோடி ரூபாய், புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் உட்பட, 131 கோடி ரூபாய் ரொக்கம், 177 கிலோ தங்கம் சிக்கியது.அவரை தொடர்ந்து, தலைமை செயலராக இருந்த ராமமோகன ராவ் மற்றும் அவரது மகன் விவேக், அவரது நண்பர் அமலநாதன் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனைநடத்தி னர். விவேக்குடன், நான்கு ... |
| ஜெ., அறிவித்த புதிய அனல் மின் நிலையம்: முழு வீச்சில் செயல்படுத்துமா வாரியம்? Posted: 25 Dec 2016 09:37 AM PST மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த, புதிய அனல் மின் திட்டங்களை, மின் வாரியம், போர்க்கால அடிப்படை யில் செயல்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் எழுந்துள்ளது. தமிழகத்தின், எதிர்கால மின் தேவை கருதி, புதிய மின் நிலையங்கள் அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 2011ல், பொறுப்பேற்ற ஜெயலலிதா தலைமையிலான, அ.தி.மு.க., அரசு, 'திருவள்ளூர், ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்களில், 6,360 மெகாவாட் திறன் உடைய, ஆறு அனல் மின் நிலையங்கள் அமைக்கப்படும்' என, அறிவித்தது. அவற்றில், எண்ணுார் மாற்று, உடன்குடி தவிர, மற்ற மின் நிலையங்களில், கட்டுமான பணிகள் ... |
| வெளியுறவு அமைச்சகத்தில் 'டுவிட்டர் சேவா' துவக்கம் Posted: 25 Dec 2016 10:32 AM PST
புதுடில்லி: வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜின் சமூக வலைதளமான, 'டுவிட்டர்' முயற்சியை தொடர்ந்து, வெளிநாடு வாழ் இந்தியர்களின் குறைகளை தீர்க்க, 'டுவிட்டர் சேவா' துவங்கப்பட்டு உள்ளது. தீவிர கவனம் : பா.ஜ.,வைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், 64, வெளிநாடு வாழ் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்தி வருபவர். டுவிட்டர் மூலம் சாதாரண மக்கள் உதவி கேட்டால் கூட, விரைவாக செய்து தருபவர். 'டுவிட்டர் சேவா' : அவரது டுவிட்டர் முயற்சி, பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ... |
| சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.6ஆக பதிவு Posted: 25 Dec 2016 11:24 AM PST
சான்டியானோ : சிலி நாட்டில், ரிக்டர் அளவில் 7.6 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை : |
| சரப்ஜித் சிங் சகோதரி பா.ஜ.,வில் இணைந்தார் Posted: 25 Dec 2016 12:30 PM PST
சண்டிகர் : பாக்., சிறையில், சக கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த, இந்தியர் சரப்ஜித் சிங்கின் சகோதரி தல்பீர் கவுர், பா.ஜ.,வில் நேற்று இணைந்தார். உளவு : பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சரப்ஜித் சிங், 1991ல், பாக்., வீரர்களால் சிறைபிடிக்கப்பட்டு, அந்நாட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டார். இந்தியாவிற்காக உளவு பார்த்ததாக, பாக்., அரசால் குற்றம் சாட்டப்பட்ட அவருக்கு, அந்நாட்டு கோர்ட், துாக்கு தண்டனை விதித்தது. இதையடுத்து, சிறையில் கொலை : சரப்ஜித் சிங், லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். ... |
| அசோக சக்கரத்தை வடிவமைத்தவர் மறைவு Posted: 25 Dec 2016 02:11 PM PST
இந்தூர் : இந்தியாவின் தேசிய சின்னமான அசோக சக்கரத்தை வடிவமைத்தவர்களுள் ஒருவர் தீனநாத் பார்கவா காலமானார். தேசிய சின்னம் : இந்தியாவின் தேசிய சின்னமான, அசோக சக்கரத்தை வடிவமைத்தவர்களுள் ஒருவர் தீனநாத் பார்கவா(89). கடந்த 10 ஆண்டுகளாக இதயநோயால் அவதிப்பட்டு வந்த அவர், ம.பி., மாநிலம் இந்தூரில் நேற்று(டிச.,25) காலமானார். நுண்கலையில் டிப்ளமோ: |
| Posted: 25 Dec 2016 03:16 PM PST பாலசோர் : கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணையை இன்று சோதனை செய்து பார்க்க உள்ளது. சோதனைக்கு தயார்: அக்னி - 5 ஏவுகணையின் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்ததையடுத்து, ஒடிசா மாநிலம் வீலர் தீவிலிருந்து இன்று (டிச.,26) சோதனை செய்து பார்க்கப்பட உள்ளது. அக்னி 5 ஏவுகணை 5,500 முதல் 5,800 கி.மீ.,க்கும் அதிகமான தொலைவில் இருக்கும் இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. குறிப்பாக வடக்கு சீனா வரை சென்று தாக்கும் திறனுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு குறி : அக்னி 1 (700 கி.மீ.,), அக்னி 2 (2,000 கி.மீ.,) ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 26,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |