Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டிபாசிட் செய்ய கட்டுப்பாடு! ரூ.5,000த்துக்கு மேலான தொகையை இனி செலுத்த முடியாது 'டிஜிட்டல்' பரிவர்த்தனைக்கு மாறும் வர்த்தகர்களுக்கு வரிச்சலுகை

Posted: 19 Dec 2016 08:38 AM PST

புதுடில்லி: செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகளில், 5,000 ரூபாய்க்கு மேலான தொகையை வங்கிகளில், 'டிபாசிட்' செய்வதற்கு, பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 'டிஜிட்டல்' பரிவர்த்தனைக்கு மாறும் வர்த்தகர்களுக்கு, வரிச்சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

'கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, நவ., 8ல் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த நோட்டுகளை குறிப்பிட்ட சில இடங்களில் பயன்படுத் துவதற்கு அளிக்கப்பட்டிருந்த காலக்கெடு, ஏற்கனவே முடிவுக்கு வந்து விட்டது. அதேநேரத்தில், இந்த ரூபாய் ...

ஐதராபாத் குண்டு வெடிப்பில் 5 பயங்கரவாதிகளுக்கு..தூக்கு...! .18 பேர் பலியான வழக்கில் சிறப்பு கோர்ட் அதிரடி

Posted: 19 Dec 2016 08:42 AM PST

ஐதராபாத்,: தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில், 2013ல் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில், தடை செய்யப்பட்ட இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த, ஐந்து பயங்கரவாதிகளுக்கு, தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம், மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில், 2013 பிப்., 21ல், பரபரப்பு மிகுந்த வர்த்தக பகுதியான தில்சுக் நகரில், சக்தி வாய்ந்த இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன; இதில், 18 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்; 131 பேர் காயமடைந்தனர்.
இந்தியன் முஜாகிதீன்
இதுதொடர்பாக நடந்த ...

நேர்மையற்றவர்களுக்கு ஆதரவு காங்., மீது மோடி பாய்ச்சல்

Posted: 19 Dec 2016 08:45 AM PST

கான்பூர்,:''நேர்மையற்றவர்களுக்கு ஆதரவாக செயல்படும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், செல்லாத ரூபாய் நோட்டு குறித்த விவாதத்துக்கு முன்வராமல் பார்லிமென்டை முடக்கின,'' என, பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடினார்.

விவாதிக்கலாம்உ.பி., மாநிலம் கான்பூரில் நடந்த, பா.ஜ., பேரணியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:பார்லிமென்ட் கூட்டத்தொடருக்கு முன்பாக நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது மற்றும் கட்சிகளுக்கான நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து ...

ரூ. 22,573 கோடி தேவை: மோடியிடம் பன்னீர் மனு

Posted: 19 Dec 2016 08:52 AM PST

'தமிழகத்தில், புயல் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள, 22 ஆயிரத்து, 573 கோடி ரூபாய் தேவை. உடனடியாக, தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து, 1,000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்' என, பிரதமரிடம், முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடியை, டில்லியில் உள்ள அவரது இல்லத்தில், முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று சந்தித்தார். அப்போது, ஜெயலலிதா இறுதிச் சடங்கில், பிரதமர் கலந்து கொண்டதற்கும், புயல் சேதத்தை மதிப்பிட, மத்திய குழுவை அனுப்ப ஏற்பாடு செய்ததற்கும் நன்றி தெரிவித்தார். பின், 141 பக்க கோரிக்கை மனுவை பிரதமரிடம் வழங்கினார்.மனுவில் ...

முடிவை தெரிவிக்க சசிகலா தயங்குவது ஏன் : கட்சி நிர்வாகிகள் தகவல்

Posted: 19 Dec 2016 08:55 AM PST

'அ.தி.மு.க., பொதுச் செயலர் மற்றும் முதல்வர் பதவியை ஏற்க, சசிகலா முன்வர வேண்டும்' என, அக்கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வரும் நிலையில், சசிகலா தன் முடிவை அறிவிக்க தயக்கம் காட்டுவது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க., தலைமை நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், சென்னை, போயஸ் கார்டன் சென்று, கட்சிக்கு தலைமையேற்கும்படி, சசிகலாவிடம் வலியுறுத்தினர். அனைத்து மாவட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் நகல், சசிகலாவிடம் வழங்கப்படுகிறது.
ஜெயலலிதா அறையில்
தினமும் ஏராளமான நிர்வாகிகள், போயஸ் கார்டன் வந்து சசிகலாவை ...

கருணாநிதி 'டிஸ்சார்ஜ்' ஸ்டாலின் தகவல்

Posted: 19 Dec 2016 09:10 AM PST

'தி.மு.க., தலைவர் கருணாநிதி, இரு தினங்களில், வீடு திரும்புவார்,'' என, அக்கட்சி பொருளாளர், ஸ்டாலின் கூறினார்.

மூச்சு திணறல் காரணமாக, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள, காவேரி மருத்துவமனையில், கருணாநிதி சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு, சுவாச கோளாறு, தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று பாதிப்புகளுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செயற்கையாக சுவாசிக்க, தொண்டையில் துளையிட்டு, 'டிராக்கியோஸ்டமி' சிகிச்சை தரப்படுகிறது.ஞாபக மறதி நோய் இருப்பதால், அதற்கான நரம்பியல் சிகிச்சையும் தொடர்கிறது. மருத்துவமனையில் உள்ள கருணாநிதியை, நேற்று காலையில், ...

பணியில் ஒழுங்கீனத்தை ஏற்க முடியாது! சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

Posted: 19 Dec 2016 09:29 AM PST

புதுடில்லி, :''பாதுகாப்பு படை வீரர்களிடம் ஒழுங்கீனம் இருப்பது, மிக மோசமான விஷயம்; மூத்த அதிகாரிகளின் உத்தரவை மதிக்காதது, மோசமான நடத்தை சீர்கேடு,'' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர் அப்ரார் அலி, ஒழுக்கச் சீர்கேடு, நடத்தை விதிமீறல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்டார். அதை எதிர்த்து, டில்லி ஐகோர்ட்டில், அவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட், அப்ரார் அலியை, மீண்டும் பணியில் சேர்க்கும்படி, 2014ல் உத்தரவிட்டது; இதை எதிர்த்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. ...

எம்.எல்.ஏ., சம்பளம் பல மடங்கு எகிறியது நெல் கொள்முதல் விலை ஏறவே இல்லை

Posted: 19 Dec 2016 09:55 AM PST

தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப, நெல் மற்றும் கரும்புக்கு கூடுதல் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, சமூக வலைதளங்களில், நுாதன பிரசாரம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து, தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல் வருமாறு:
400 மடங்கு
விவசாயிகள் எவ்வளவு உழைத்தாலும், விளைபொருட்களுக்கு லாபகரமான விலை நிர்ணயம் செய்யப்படுவது இல்லை. சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, தண்ணீர் கொடுப்பது அரசின் கடமை. அதை செய்ய மறுப்பதால், பிச்சைக்காரர்கள் வருமானத்தை விட, கேவலமான வருமானத்தில், ...

கல்வித்துறையில் முடங்கிய 'ஆன்லைன்' தகவல் பரிமாற்றம்

Posted: 19 Dec 2016 10:06 AM PST

தமிழக கல்வித்துறையில் ஆன்லைனில் மேற்கொள்ளப்படும் உத்தரவு, அறிவிப்பு, அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதல் தகவல்கள் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

இதனால் செயலாளர், இயக்குனர் அலுவலகங்களில் இருந்து 'ஆன்லைன்' மூலம் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு வரவேண்டிய சுற்றறிக்கை, உத்தரவு, அறிவிப்புகள், தபால்கள் குறைந்து விட்டன. இதனால் கல்வி அலுவலகப் பணிகளும் மந்தமாகிவிட்டது.
'ஆன்லைனில்'
தினமும் கற்றல் கற்பித்தல், நலத் திட்டங்கள் வழங்கல், ஆசிரியர்களுக்கான சுற்றறிக்கை, உத்தரவுகள், அறிவுறுத்தல், நலத் திட்டம் தொடர்பான விவரம், ...

கோடை வெயில் பலிக்கு மனிதர்களே காரணம்

Posted: 19 Dec 2016 11:36 AM PST

புதுடில்லி: 'கடந்த ஆண்டு கோடைக் காலத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தானில், வெயிலுக்கு அதிகமானோர் பலியானதற்கு, மனிதர்களின் இயற்கைக்கு எதிரான நடவடிக்கைகளே காரணம்' என, ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
ஆய்வு :
கடந்த ஆண்டு கோடை காலத்தில், கடும் வெயிலுக்கு, இந்தியாவில், 2,500 பேரும், பாகிஸ்தானில், 2,000 பேரும் பலியாகினர். இதுகுறித்து, அமெரிக்காவின் பார்கலே பரிசோதனை மையம், டில்லி, ஐ.ஐ.டி., உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து ஆய்வு செய்தன. உலகம் முழுவதும் கோடைக்காலத்தில் பதிவான வெப்ப நிலை, சீதோஷ்ண நிலை, காற்றின் தன்மை உள்ளிட்ட அம்சங்கள், ...

மருத்துவமனையிலிருந்து சுஷ்மா சுவராஜ் டிஸ்சார்ஜ்

Posted: 19 Dec 2016 12:21 PM PST

புதுடில்லி : சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து, மருத்துவமனையில் ஓய்வெடுத்து வந்த வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வீடு திரும்பினார்.
டிஸ்சார்ஜ் :
பா.ஜ., மூத்த தலைவரும், வெளியுறவு அமைச்சருமான சுஷ்மா சுவராஜ், 64, சிறுநீரக கோளாறு காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; அவருக்கு, கடந்த டிச.,10ம் தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. மருத்துவமனையில் ஓய்வெடுத்து வந்த அவரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் சுஷ்மா சுவராஜின் உடல்நிலையில் ...

பெர்லினில் கூட்டத்திற்குள் புகுந்த டிரக்; 9 பேர் உடல் நசுங்கி பலி

Posted: 19 Dec 2016 01:09 PM PST

பெர்லின் : ஜெர்மன் தலைநகர் பெர்லினில் மக்கள் கூட்டத்தில் திடீரென டிரக் புகுந்தததில் 9 பேர் பலியாயினர்; 50 பேர் படுகாயமடைந்தனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரக் மோதல் :
ஜெர்மன் தலைநகர் பெர்லினில் கிறிஸ்துமஸ் சந்தையில் பொருட்கள் வாங்கும் பகுதியில் மக்கள் குவிந்தனர். அப்போது கூட்டத்திற்குள் திடீரென டிரக்கை வேகமாக மோதச் செய்து தாக்குதல் நடத்தியதில் 9 பேர் பலியாயினர். 50 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் ...

பொது இடங்களில் திடக்கழிவு வீசினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம்

Posted: 19 Dec 2016 03:03 PM PST

புதுடில்லி: 'பொது இடங்களில் திடக்கழிவுகளை கொட்டுவோருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
உத்தரவு :
டில்லியில், திடக்கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பான வழக்கில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தலைவர், நீதிபதி சுதந்திரகுமார், நேற்று பிறப்பித்த உத்தரவு: டில்லியில், தினசரி, 9,600 டன் திடக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. அவற்றை அகற்றுவதற்கான தெளிவான திட்டம், உள்ளாட்சி அமைப்புகளிடம் இல்லை. உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள், திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, திடக்கழிவுகளை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™