ஈகரை தமிழ் களஞ்சியம் |
- வார்தா
- படித்ததில் பிடித்தது :) -பெயர் சொல்லும் பரிசுப் பொருள்!
- சசிகலா முதல்வராக பொறுப்பேற்க ஜெயலலிதா பேரவை தீர்மானம்: அமைச்சர் உதயகுமார் தகவல்
- ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா வழக்கு
- அவ்வளவு தான் ரூ.ஆயிரம் நோட்டு
- மழை கவிதைகள்…
- ஐந்தாவது டெஸ்ட், சென்னை- கருண் நாயர் முச்சதம்
- என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்…
- 11 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிய பலே பெண்
- குளிர்காலத்தில்....
- பனிக்காலத்தில் முடி பராமரிக்க சில டிப்ஸ்!
- கொஞ்சம் அழுங்கள்....
- உறவு முறைகள் ….பற்றி ….
- நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்!
- சட்டவிரோத பணப்பரிமாற்றம்: ரிசர்வ் வங்கி ஊழியர்கள் கைது
- ரூ. 1 கோடி டிபாசிட்? கூலி தொழிலாளிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
- லாங் ஜர்னி கூடாதுன்னு சொல்லியிருக்கார்…!
- என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?
- 'மன்னன்' ரீமேக்: பி.வாசு - லாரன்ஸ் கூட்டணி
- 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
- சாய்ந்த மரங்கள் இலவசம் ஆவடி நகராட்சி அறிவிப்பு
- பழைய நோட்டுகளை டெபாசிட் செய்யும் கட்சிகளுக்கு மட்டும் வரிவிலக்கு ஏன்? மம்தா கேள்வி
- படத்துடன் செய்தி - தொடர் பதிவு
- சபாஷ் சரியான போட்டி: பிஎஸ்என்எல்-லில் ரூ.99க்கு அளவில்லா இலவச அழைப்பு
- ரூ.5,000 வரை மட்டுமே இனி பழைய நோட்டுகள் டெபாசிட்: ரிசர்வ் வங்கி அதிரடி
- பறந்து செல்ல வா – திரை விமர்சனம்
- அந்த மரங்களுக்கு என்ன மாற்று?
- நூறு ரூபாய் செலவில் விண்வெளிப்பயணம்…!!
- நட்பு மொழி
- ஒரு கொரில்லாவின் இறுதிக் கணம்
- 'வார்தா' பாதிப்பு: வீடு தேடி இலவசமாக மரக்கன்றுகள் தர லாரன்ஸ் ஏற்பாடு
- உலக அழகிப் போட்டியில் பங்கேற்ற இந்தியப் பெண்!
- அம்மாவின் மனைவி
- வாழ்த்தலாம் பாலா கார்த்திக் ,அவர்களை
- ஏன்?
- அந்தமானுக்கு கிழக்கே மீண்டும் காற்றழுத்தம்:புயலாக மாறும்
- மின்கசிவு எதிர் அபார்ட்மெண்டில்
- எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள்.
- இந்தியாவில் இப்படியும் இருக்கிறார்களா?
- சுங்கச்சாவடிகளில் 5 ரூபாய் டோக்கன்: மோடி எதிர்பார்த்த கேஷ்லெஸ் எகானமி!
- பூமிப் பந்தை கிழித்தெறி! –
- ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ.3 லட்சம் பரிசு
| Posted: 19 Dec 2016 11:16 AM PST வார்தா வாட்டி விட்டுச் சென்றாயே - கோரமுகம் காட்டி விட்டுச் சென்றாயே - மின்தூண்களை ஆட்டிவிட்டுச் சென்றாயே - சோகஸ்வரம் மீட்டிவிட்டுச் சென்றாயே வார்தா பாட்டி நட்ட பழைய மரங்களை ஓட்டு வீட்டை ஓலைக் குடிசையை மாட்டு வண்டியை மாமரக் கிளையை விட்டு வைக்காது கொண்டு சென்றாயோ வார்தா அடுத்த மாநிலம் ஆந்திரம் தனக்கு கொடுத்த தொல்லைகள் போதுமென தமிழகம் விடுத்த அழைப்பென விரும்பி வந்தெமை படுத்தி எடுத்து பறந்து சென்றாயோ வார்தா மனிதநேயம் மறந்த மறத்தமிழர் என்றெண்ணி புனிதயாத்திரை புறப்பட்டு ... |
| படித்ததில் பிடித்தது :) -பெயர் சொல்லும் பரிசுப் பொருள்! Posted: 19 Dec 2016 09:56 AM PST கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| சசிகலா முதல்வராக பொறுப்பேற்க ஜெயலலிதா பேரவை தீர்மானம்: அமைச்சர் உதயகுமார் தகவல் Posted: 19 Dec 2016 07:29 AM PST - ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மான நகலை சசிகலாவிடம் வழங்கினார் அமைச்சர் உதயகுமார். தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுகவின் ஜெயலலிதா பேரவை யில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். -- அதிமுக பொதுச்செயலராகவும் தமிழக முதல்வராகவும் சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுகவின் ஜெயலலிதா பேர வைக் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. வருவாய்த் துறை அமைச்சரும், ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலருமான ... |
| ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா வழக்கு Posted: 19 Dec 2016 07:26 AM PST புதுதில்லி: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா வலியுறுத்தியுள்ளார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார் சசிகலா புஷ்பா. இந்நிலையில், உடல்நிலை குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, கடந்த 5-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவ மனையில் ... |
| Posted: 19 Dec 2016 06:58 AM PST மும்பை: மும்பையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஆர் காந்தி கூறியதாவது: கடந்த இரண்டு வாரத்தில், ரூ.500 மற்றும் ரூ.100 நோட்டுகள் அதிகளவில் அச்சடிக்கும் வகையில் அச்சகங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ரூபாய் நோட்டு வாபஸ் முடிவை அவசரப்பட்டு எடுக்கவில்லை. போதுமான அளவு பணம் சப்ளை செய்யப்படுகிறது. புதிய ரூபாய் நோட்டுகளை பொது மக்கள் பதுக்கி வைக்க வேண்டாம். ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் சப்ளை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து புதிய ரூபாய் ... |
| Posted: 19 Dec 2016 06:15 AM PST மழை கவிதைகள்… மழையில் மண் மட்டுமல்ல மனதும் குளிர்கிறது.. மழையின் இரண்டாம் துளி வானம் பார்த்து முகத்தில் வாங்கும் குட்டி சிறுவன் நான்… சாரலும் அழகுதான் பெருமழையும் அழகுதான்… என் அம்மாவின் பாசம் போல கட்டாந்தரையும் பூ பூக்கும் கல் மனமும் சில நேரம் கரையும் இதுதான் மழையின் அற்புதம்.. மழையின் அளவு குறைந்து போகவில்லை… மனதில் பாசம் குறைந்து போனது அதனால் மழையும் குறைந்து போனது… மண்ணும் மழையும்தான் இந்த உலகில் சிறந்த நண்பர்கள்… கூரை ஓலைகளில் சொட்டும் மழைத்துளிகள்தான்… என் ... |
| ஐந்தாவது டெஸ்ட், சென்னை- கருண் நாயர் முச்சதம் Posted: 19 Dec 2016 06:05 AM PST ஐந்தாவது டெஸ்ட், சென்னை- கருண் நாயர் முச்சதம் சென்னை: இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டிகள் முடிவில், இந்திய அணி 3 - 0 என தொடரை கைப்பற்றியது. டெஸ்ட் அரங்கில் 759 ரன்கள் எடுத்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 477 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 391 ரன்கள் ... |
| என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Posted: 19 Dec 2016 05:59 AM PST அன்பில்,அன்புக்கு,அன்பாய்…. எனக்கு எல்லாவற்றிற்க்கும் அடையாளம் கொடுத்தது நீதான்.. என் பிறப்பின் அர்த்தம் , வாழ்வின் சொர்க்கம் நீ… எனக்கு சன்னனோலர பயணங்கள் விருப்பம்… ஏனென்றால் சன்னனோலர காட்சிகள் எல்லாம் உன் நினைவாக விரிவதால்…. எத்தனை நினைவுகள் எத்தனை காட்சிகள் முடியவே முடியாது என் வாழ்க்கை பயணம் முடியும் வரை… நம் சண்டைகள் எல்லாம் நம் காதலின் ஆழத்தை சோதித்து பார்த்ததாகதான் இருக்கும் …ஒரு போதும் நம் காதலை பாதித்தது இல்லை…. இதுதான் நம் காதலின் வெற்றி… சின்ன சின்ன கோபங்கள் வரும் ... |
| 11 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிய பலே பெண் Posted: 19 Dec 2016 05:58 AM PST 11 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிய பலே பெண்.. கைது செய்த கேரள போலீஸ்! 11 பேரை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவைச் சேர்ந்த லோரன் ஜஸ்டின் என்பவர் கடந்த அக்டோபர் மாதம் போலீசில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தனது மனைவி மேகா 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டதாக தெரிவித்திருந்தார் இதையடுத்து 2 மாதங்களாக விசாரணை நடத்தி ... |
| Posted: 19 Dec 2016 05:57 AM PST குளிர்காலத்தில் , பனிக்காலத்தில், உடம்பில் இருக்கும் சூடு, வெளியேறாமல் உள்ளேயே தங்கி விடும். அதனால், உடம்பு, 'கண கண'வென்று இருப்பதுடன், அதிகமாக பசிக்கும். அதனால், பசியை தூண்டும் காரம், உப்பு மற்றும் புளி போன்றவற்றை உணவில் குறைக்க வேண்டும். உடல் கதகதப்புக்கு, இம்மூன்று சுவைகளை தான், நாக்கு தேடும். இதைத் தவிர்த்து, இனிப்பு பொருட்களை உட்கொள்வதன் மூலம், பசி மட்டுப்படும். * பனிக்காலத்தில், பாதங்களில் வெடிப்பு ஏற்படுவதை தடுக்க, தேங்காய் எண்ணெயும், உதட்டு வெடிப்புக்கு வெண்ணெய் பூசுவதும் நல்லது. * ... |
| பனிக்காலத்தில் முடி பராமரிக்க சில டிப்ஸ்! Posted: 19 Dec 2016 05:50 AM PST * குளிர்காலத்தில் அடிக்கடி, ஷாம்பூ போடுவதை தவிர்த்து, வாரத்தில், இரண்டு நாட்கள் மட்டும், தலைக்கு குளியுங்கள். * குளிர்காலத்தில், ஆவி பறக்க பறக்க, வெந்நீரில் குளித்தால், முடியின் வேர்க்கால்கள் சேதமாகி, வறண்டு போகும்; எனவே, இளம் சூடான நீரையே, தலைக்கு பயன்படுத்துங்கள். * 'ஹெர்பல் ஆயில்' கொண்டு, உச்சந்தலையிலிருந்து, முடிநுனி வரை, 'மசாஜ்' செய்வதால், முடியின் வறட்டு தன்மை நீங்கி, அடர்த்தியாக வளரும். * முடியை இறுக்கி, ஜடை போடாமல், லுாசாக கட்டிக்கொண்டால், முடிக்கு நல்ல காற்றோட்டம் கிடைத்து, ... |
| Posted: 19 Dec 2016 05:48 AM PST உலகில் பிறக்கும் அனைத்து மனிதனின் வாழ்க்கையின் தொடக்கமும் அழுகைதான். அங்கே தொடங்கும் நமது வாழ்க்கை அழுகையிலேயே முடிகிறது. சிரிக்கும் போது ஆயிரம் பேர் வருவார்கள்,அழும் போது யாரும் வரமாட்டார்கள். குழந்தையாக இருந்தபோது நமது அழுகை அனிச்சை செயல்; அறியாமலே அழுதோம். கண்ணீர் உப்பு கலக்காவிட்டால் வாழ்க்கை சுவைக்காது, அழுங்கள் அது நல்லது -கவிக்கோ அப்துல் ரஹ்மான். மிருகங்கள் மகிழ்ச்சி உணர்வைப் பெறும் போது சிரிக்கின்றன,முக்கியமாக பாலூட்டிகள் சிரிப்பை வெளியிட்டாலும் மனிதனைப் போல் அட்டகாசமாக ... |
| Posted: 19 Dec 2016 05:48 AM PST மிகவும் சிந்திக்கவேண்டிய பதிவு ———————————- அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா, பெரிய அக்கா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான், மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார், தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு, பெரியப்பா பையன், பெரியப்பா பொண்ணு, அத்தை பையன், அத்தை பொண்ணு, மாமன் பொண்ணு, மாமன் பையன், இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 மேல் யாருடைய காதிலும் விழாது, யாரும் கூப்பிடவும் மாட்டார்கள், அகராதியில் இருந்து கூட ... |
| நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்! Posted: 19 Dec 2016 05:45 AM PST - வாழ்க்கை எப்போதும் நாம் நினைக்கும் விதமாக இருக்காது. 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை, நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை' என்று தொடங்கும் திரைப்பாடலில் ஒவ்வொரு வரியும் தத்துவச் செறிவாய் எழுதியிருப்பார் கவிஞர் கண்ணதாசன். நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தான் எத்தனை பிரச்னைகள்? ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டம், அக்கப்போர். வீட்டில் நிம்மதி இல்லை என்று வெளியே வந்தால் வெளியில் அதற்கு மேல் ஆயிரம் இடர்கள். நேர்மறை எண்ணங்களுடன் இருந்தால், எத்தகைய பிரச்னையாக ... |
| சட்டவிரோத பணப்பரிமாற்றம்: ரிசர்வ் வங்கி ஊழியர்கள் கைது Posted: 19 Dec 2016 05:34 AM PST பெங்களூரு: சட்டவிரோதமாக பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை மாற்றியது தொடர்பாக பெங்களூருவில் இரண்டு ரிசர்வ் வங்கி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசால் தடை செய்யப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை சட்ட விரோதமாக மாற்ற முயன்றதாக, மூத்த சிறப்பு உதவியாளர் சதானந்தா நாயகா மற்றும் சிறப்பு உதவியாளர் கேவின் ஆகியோரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்கள் இந்த பணத்தை கடந்த 9ம் தேதி மாற்ற முயன்றுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மீது 120-B r / w 420, 406, 409 and ... |
| ரூ. 1 கோடி டிபாசிட்? கூலி தொழிலாளிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் Posted: 19 Dec 2016 05:16 AM PST போபால்: வங்கியில் ரூ.1 கோடி செலுத்தியதாக கூலி தொழிலாளி ஒருவருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து, வங்கி ஊழியர் தவறே அதிக பணம் டிபாசிட் ஆக மாறியதாக வங்கி விளக்கம் அளித்துள்ளது. அதிர்ச்சி: மத்திய பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் அசாராம் விஸ்வகர்மா. கூலி தொழிலாளி. கடந்த சில நாட்களுக்கு முன்னர், வருமான வரித்துறை அதிகாரிகள், கடந்த நவம்பர் 30ம்தேதி இவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அந்த நோட்டீசில், " பான் எண் இல்லாமல் ... |
| லாங் ஜர்னி கூடாதுன்னு சொல்லியிருக்கார்…! Posted: 19 Dec 2016 05:14 AM PST என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்! – பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய் – ————————————— – என்ன பிளேன் ரொம்ப நேரமா வானத்துலயே வட்டமடிச்சுட்டுருக்கு. ஏதாவது பிரச்சினையா? – அதெல்லாம் இல்ல. பைலட்டை தேடி கீழே கடன் கொடுத்தவங்க வட்டமடிச்சுட்டுருக்காஙக அதான். – ————————————– – வர்சினி : நானும் பாத்துக்கிட்டு வரேன் திருச்சிலேர்ந்து மெட்ராஸ் வர்றீங்க எதுக்கு ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் இறங்கி டிக்கெட் வாங்கறீங்க, மொத்தமா வாங்கிற வேண்டியதுதானே – துர்கா : டாக்டர் ... |
| என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்? Posted: 19 Dec 2016 05:13 AM PST - கடந்த ஆண்டு சென்னையின் வரலாறு காணாத பெருவெள்ளத்தை முன்னரே கணித்துச் சொன்னதில் தமிழ்நாடு வானிலை மையத்தை அடுத்து அதிக பிரபலமாகி விட்டவர் இவர் தான். - இவரது பெயர் பிரதிப் ஜான். ஆனால் இணையவாசிகளுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இவர் எப்போதும் 'தமிழ்நாடு வெதர் மேன்.' தமிழக வானிலையைப் பொருத்தவரை குறிப்பாக சென்னை வானிலையைப் பொருத்தவரை இவரது கணிப்புகள் பெரும்பாலும் தவறியதே இல்லை. - மழை நாட்களில் சென்னைவாசிகள் தினமும் காலை எழுந்ததும் பல் துலக்குகிறார்களோ இல்லையோ, காஃபி, டீ அருந்துகிறார்களோ ... |
| 'மன்னன்' ரீமேக்: பி.வாசு - லாரன்ஸ் கூட்டணி Posted: 19 Dec 2016 05:07 AM PST - ரஜினி நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மன்னன்' திரைப்படம் மீண்டும் தமிழில் ரீமேக்காக இருக்கிறது. பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ், ரித்திகா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சிவலிங்கா'. இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. ஜனவரி முதல் வாரத்தில் இசை மற்றும் ட்ரெய்லரையும், ஜனவரி 26ம் தேதி படத்தையும் வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது. 'சிவலிங்கா' படத்தைத் தொடர்ந்து மீண்டும் பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்க பேச்சுவார்த்தை ... |
| 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன் Posted: 19 Dec 2016 05:04 AM PST சென்னை: சென்னையில் சென்ட்ரல் ரயில்வே நிலையம் உட்பட, 27 ரயில் நிலையங்களில், ரொக்கமில்லா பணபரிமாற்றத்திற்காக, ஸ்வைப் மிஷன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பிறகு, ரொக்கமில்லா பணபரிமாற்றத்திற்காக தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில், சென்டரல் ரயில் நிலையம், எழும்பூர், தாம்பரம், மாம்பலம், பெரம்பூர், கடற்கரை உட்பட, 27 ரயில் நிலையங்களில் ... |
| சாய்ந்த மரங்கள் இலவசம் ஆவடி நகராட்சி அறிவிப்பு Posted: 19 Dec 2016 05:04 AM PST ஆவடி பெருநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விழுந்த மரங்களை, இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என, நகராட்சி அறிவித்துள்ளது. ஆவடி பெருநகராட்சிக்கு உட்பட்ட, திருமுல்லைவாயல், முத்தாபுதுப்பேட்டை, ஆவடி, பட்டாபிராம், கோபாலபுரம் ஆகிய பகுதிகளில், புயலால் 1,000த்திற்கும் மேற்பட்ட மரங்கள், வேருடன் சாய்ந்தன. அவை, நகராட்சி ஊழியர்கள் மூலம் அகற்றபட்டு, ஆவடி குப்பை சேகரிப்பு கிடங்கில் வைக்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் செங்கல் சூளையினர், பொதுமக்கள், மர வியாபாரிகள், ஆவடி நகராட்சி அதிகாரிகளை தொடர்பு ... |
| பழைய நோட்டுகளை டெபாசிட் செய்யும் கட்சிகளுக்கு மட்டும் வரிவிலக்கு ஏன்? மம்தா கேள்வி Posted: 19 Dec 2016 05:03 AM PST அரசியல் கட்சிகளால் டெபாசிட் செய்யப்படும் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு மட்டும் வருமான வரி விலக்கு அளிக்கப்படுவது ஏன்? என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது. இந்நிலையில், அரசியல் கட்சிகளுக்கு தனிநபர்கள் பழைய நோட்டுகளாக வழங்கும் அன்பளிப்பு ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவாகவும், உரிய ஆவணங்களுடனும் இருந்தால் அதற்கு வருமான வரிவிலக்கு அளிக்கப்படும் என்று மத்திய வருவாய்த் துறை ... |
| படத்துடன் செய்தி - தொடர் பதிவு Posted: 19 Dec 2016 05:02 AM PST - சீக்கிய குரு, குருநானக்கின் 548வது பிறந்த நாளான நேற்று, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில், வழிபாடு நடத்த குவிந்த சீக்கியர்கள். - ---------------------------- |
| சபாஷ் சரியான போட்டி: பிஎஸ்என்எல்-லில் ரூ.99க்கு அளவில்லா இலவச அழைப்பு Posted: 19 Dec 2016 05:02 AM PST புது தில்லி: ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ரூ.99க்கு அளவில்லா இலவச அழைப்பு மற்றும் இலவச இணைய வசதிகளை பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோவுக்கு கடும் சவாலை ஏற்படுத்தும் வகையில் பிஎஸ்என்எல்- இந்த போட்டியில் குதித்துள்ளது. அதாவது, பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள், வெறும் 99 ரூபாய் ரீசார்ஜில் அளவில்லா இலவச அழைப்புகளையும், 300 எம்பி டேடாவும் பெறலாம். இதன் கால அளவு 28 நாட்கள் ஆகும். இந்த சலுகை கொல்கத்தா, மேற்கு வங்கம், பிகார் உள்ளிட்ட ... |
| ரூ.5,000 வரை மட்டுமே இனி பழைய நோட்டுகள் டெபாசிட்: ரிசர்வ் வங்கி அதிரடி Posted: 19 Dec 2016 05:00 AM PST ழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்காக இனி ரூ.5,000 வரை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும் என்று புதிய அதிரடி கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு இம்மாதம் 30-ம் தேதி வரையே காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது. நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பு நீக்கம் செய்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8-ம் தேதி இரவு அறிவித்தார். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள், அஞ்சலகங்களில் டிசம்பர் ... |
| பறந்து செல்ல வா – திரை விமர்சனம் Posted: 19 Dec 2016 04:59 AM PST - சிங்கப்பூருக்குச் சென்று கண்ணில் படுகிற பெண்ணையெல்லாம் காதலிக்கும் லுத்புதீன், இரண்டு பெண்களின் அன்பில் சிக்கிக்கொள்வதே 'பறந்து செல்ல வா'. – லுத்புதீனுக்கு சிங்கப்பூரில் வேலை கிடைத்து, எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் பயணமாகிறார். மற்றவர்களின் ஆச்சர்ய பார்வைக்காவது அத்தனை பெண்களையும் கவர்ந்திழுக்கப் பார்ப்பது அவரது வழக்கம். – தங்கும் இடத்தில் இருக்கும் பெண்கள் ஏற்கனவே ரிலேஷன்ஷிப்பில் இருக்க… தன்னையும் ஒரு பெண் காதலிப்பதாக காட்டிக்கொள்ள விரும்புகிறார். – அதற்காக பார்த்த ஒரு பெண்ணை ... |
| Posted: 19 Dec 2016 04:56 AM PST - வதைத்துக் கடந்திருக்கிறது 'வர்தா' புயல். முறிந்து கிடக்கும் மரங்களுக்கும் நசுங்கிக் கிடக்கும் கார்களுக்கும் அருகில் நின்று செல்ஃபி எடுத்துக்கொள்ளும் முதிர்ச்சியற்ற மனிதர்கள், கூரையாக இருந்த கீற்றுகளையும் ஓடுகளையும் இழந்து வீதியில் தவித்த எளிய மனிதர்கள், சீறும் கடலை ஆபத்து அறியாமல் சுற்றுலா போல பார்க்கச் சென்ற இளைஞர்கள், மரங்கள் பேயாட்டம் போட்டதால் ஒதுங்க இடம் தேடித் தவித்த பறவைகள் என எல்லாவற்றையும் கடந்து சென்றிருக்கிறது புயல். 'இந்தப் புயலால் 7000 கோடி ரூபாய் பாதிப்பு' என இந்திய தொழிற்கூட்டமைப்பு ... |
| நூறு ரூபாய் செலவில் விண்வெளிப்பயணம்…!! Posted: 19 Dec 2016 04:47 AM PST நூறு ரூபாய் செலவுல நம்ம தலைவர் விண்வெளி பயணம் செல்வேன்னு சொல்றாரே, எப்படி? – குடிச்சுட்டு '"மப்புல' மிதக்குறதைத்தான் அப்படி சொல்றாரு…..! – அ.பேச்சியப்பன் – ————————————— – சீரகம் இருக்கா…? – மளிகைக்கடைக்காரர்: எங்க கடையில் எல்லாமே 'ஏ' ரகம்தாம்மா…! – விஜயநிர்மலன் – ———————————— |
| Posted: 19 Dec 2016 04:47 AM PST - * திருமண வரவேற்பில் பரிசுப் பொருள் தருகிற காதலித்தவனை யாரோவாய்ப் பார்க்கிற பெண்கள் வெட்கப்பட அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கிறேன் என் திருமணத்தை ஏற்பாடு செய்த நண்பன் இவன்தான் என்று – * மனைவியின் நண்பனை நண்பனாக ஏற்றுக் கொண்டவனுக்கு எந்த மருத்துவப் பரிசோதனையும் எப்போதும் தேவைப்படாது – * காமத்தால் பிறக்கலாம் நட்பால் பறக்கலாம் – * மனைவிக்குத் தெரியாத காமம் தவறு கணவனுக்குத் தெரிந்த நட்பு சரி – * அம்மாவோடான அப்பாவின் சண்டையைத் தீர்த்து வைக்கக் குழந்தைகள் போதும் அப்பாவோடான அம்மாவின் சண்டையைத் தீர்த்து ... |
| Posted: 19 Dec 2016 04:46 AM PST - வரிகளில் தேசக் கனவை எழுதிய சீருடைகளை அணிந்தனர் நேற்றைய போரில் மாண்டுபோனவர் கல்லறைகளின் முன்னே தலைசாய்த்து அமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர் – எல்லோருடைய அழுகையையும் துடைக்கும் அவர்களால்தான் இறுதிக் கணத்தில் புன்னகைக்க முடியும் எல்லோருடைய துயரையும் துடைக்கும் அவர்களால்தான் இறுதிக் கணத்தில் ஒளிமுகத்துடன் செல்ல முடியும் – கழுத்தில் சயனைட் குப்பி தோளின் குறுக்கே சன்னங்களின் மாலை துப்பாக்கியை கையளித்து மாண்டுபோன தோழியின் நினைவில் மறந்தான் களம் செல்லத் தடுக்கும் தாயின் குரலை – துப்பாக்கியை ... |
| 'வார்தா' பாதிப்பு: வீடு தேடி இலவசமாக மரக்கன்றுகள் தர லாரன்ஸ் ஏற்பாடு Posted: 19 Dec 2016 04:43 AM PST மரக்கன்றுகள் தேவைப்படுவோருக்கு வீடு தேடிச் சென்று அளிக்க நடிகர் மற்றும் இயக்குநர் லாரன்ஸ் ஏற்பாடு செய்துள்ளார். சென்னையில் 'வார்தா' புயலால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. சுமார் 1 லட்சம் மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், லாரன்ஸ் தனது தொண்டு நிறுவனம் மூலம், சென்னை முழுக்க மரக்கன்றுகள் அளிக்க திட்டமிட்டு இருக்கிறார். மக்கள் தங்களுடைய வீடுகள் அல்லது தெருக்களில் வைக்க மரக்கன்று தேவை என்றால் 9791500866, 9790750784, 9003037939 ... |
| உலக அழகிப் போட்டியில் பங்கேற்ற இந்தியப் பெண்! Posted: 19 Dec 2016 04:38 AM PST - கடந்த ஏப்ரம் மாதம் மிஸ் இந்தியா வேர்ல்டு பட்டத்தைப் பெற்றார் ப்ரியதர்ஷிணி சேட்டர்ஜி. அப்போதே இவர்மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் உலக அழகிப் போட்டியில் தோல்வியடைந்துள்ளார் ப்ரியதர்ஷிணி. அமெரிக்காவில் நடைபெற்ற 66-வது உலக அழகிப் போட்டியின் இறுதிச்சுற்றில் 19 வயது ஸ்டெபானி வென்றுள்ளார். இந்தியாவின் சார்பில் பங்கேற்ற ப்ரியதர்ஷினி சேட்டர்ஜி முதல் 20 இடங்களில் வந்தாலும் அடுத்தடுத்த சுற்றுகளில் தோல்வியடைந்தார். இந்தப் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து அழகிகள் ... |
| Posted: 19 Dec 2016 04:37 AM PST பதில் சொல்ல முடியாத கேள்விகள் பல உண்டு. அவற்றில் இதுவும் ஒன்று. - - தந்தையின் மனைவியைத் தாயார் என்று அழைக்கலாம். தாயின் மனைவியை என்ன பெயர் சொல்லி அழைப்பது? - 1554ம் ஆண்டு சிவ அவதாரமாகவே போற்றப்பட்ட ஸ்ரீ அப்பைய தீட்சிதருடன் சோழ தேசத்து மன்னர் நரசிம்மபூபாலன் ஒரு சாஸ்தா கோயிலுக்குப் போனார். அவர்களுடன் கல்வியில் சிறந்த பண்டிதர் ஒருவரும் உடன் சென்றார். அனைவரும் கோயிலை அடைந்தார்கள் - அங்கே சாஸ்தா விக்ரகம் ஒன்று மூக்கில் விரலை வைத்தபடி இருந்தது. அதைப் பார்த்த அரசர் ஆச்சர்யப்பட்டார். - அங்கிருந்தவர்களை ... |
| வாழ்த்தலாம் பாலா கார்த்திக் ,அவர்களை Posted: 19 Dec 2016 04:37 AM PST வாழ்த்தலாம் பாலா கார்த்திக், அவர்களை அவரது பிறந்த தினத்தில் . வாழ்த்துகள் பாலா கார்த்திக் . ரமணியன் |
| Posted: 19 Dec 2016 04:31 AM PST சில தினங்களாக யாரும் (ஒருவர் இருவரைத் தவிர) வருவதில்லையே! வேறு தளங்களுக்குச் செல்லும் ராமனாதன் ஐயாவை ஏன் இங்கு காணவில்லை? ரமணியின் ஐயா வந்து செல்கிறார் எனத் தெரிகிறது. DNS block ஆக இருக்க வாய்ப்புண்டு. அட்மின் கவனிக்கவில்லையா? ஏன்? அல்லது வேறு காரணங்களா (வைகோ தாக்குதல்,புயல்,அதிமுக தலைமை ,பணம் ....இப்படி ஏதாவது ? ஏன்? |
| அந்தமானுக்கு கிழக்கே மீண்டும் காற்றழுத்தம்:புயலாக மாறும் Posted: 19 Dec 2016 04:19 AM PST அந்தமானுக்கு கிழக்கே மீண்டும் காற்றழுத்தம்: புயலாக மாறும்- வானிலை எச்சரிக்கை அந்தமானுக்கு கிழக்கே மீண்டும் காற்றழுத்தம் ஏற்பட்டுள்ளது. இது புயலாக மாறி தமிழகத்தில் கரையை கடக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது சென்னை: கடந்த வாரம் தென்கிழக்கு வங்கக் கடலில் தெற்கு அந்தமான் மற்றும் வடக்கு சுமத்ரா தீவுக்கு இடையே வளி மண்டல மேலடுக்கில் உருவான காற்று சுழற்சி வர்தா புயலாக மாறி, சென்னையில் கரையை கடந்தது. இதன் மூலம் சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு மழை பெய்தது. ... |
| மின்கசிவு எதிர் அபார்ட்மெண்டில் Posted: 19 Dec 2016 04:17 AM PST மின்கசிவு எதிர் அபார்ட்மெண்டில் மாலை 4 45 மணி அளவில் எதிர் அடுக்ககத்தில் மின்கசிவு காரணமாக மீட்டர் பாக்ஸில் நெருப்பு பிடித்து, புகை மண்டலம் பட்டாசு வெடிப்புப் போன்ற சத்தங்கள்.மொத்தம் 8 வீடுகள் . எல்லோர் வீட்டிலும் பெண்கள் மாத்திரம்.அவரவர் வீட்டில் மெய்ன் ஸ்விட்சை ஆஃப் பண்ணி விட்டு மொட்டை மாடிக்கு சென்று விட்டார்கள். வீட்டில் இருந்த ரெண்டே ஆண்கள் ஜன்னல் வழியாக EB க்கு சொல்லுங்கள் ,மெயினை ஆஃ ப் பண்ணுங்கள் என்று அலறல். EB கு போன் பண்ணினால் போனே எடுக்கவில்லை . பலர் முயற்சித்தும் பலனில்லை. திடீர் ... |
| எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள். Posted: 19 Dec 2016 04:09 AM PST பாபா ராம் தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் வேறு நிறுவன போலி தயாரிப்பு பொருட்களை பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்பு என மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக பதஞ்சலி நிறுவனம் பெயரெடுத்து உள்ளது. இந்திய சந்தையில் காஸ்மிடிக் மற்றும் அழகு சாதனம் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு போட்டியாக பதஞ்சலி நிறுவனம் உள்ளது. ஆனால், இதற்கு மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களும் ஒரு காரணம் என்ற புகாரும் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இந்த புதிய மோசடி அம்பலமாகியுள்ளது. கடந்த 2012 ... |
| இந்தியாவில் இப்படியும் இருக்கிறார்களா? Posted: 19 Dec 2016 04:07 AM PST தனது மகளின் பிறந்த நாளுக்கு 90 வீடுகளை ஏழைகளுக்கு பரிசளித்த தொழிலதிபர். |
| சுங்கச்சாவடிகளில் 5 ரூபாய் டோக்கன்: மோடி எதிர்பார்த்த கேஷ்லெஸ் எகானமி! Posted: 19 Dec 2016 03:38 AM PST - தற்போது தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் பணப்புழக்கம் இல்லாததை சாதகமாக பயன்படுத்தி அவ்வழியே வரும் வாகன ஓட்டிகளிடம் சுங்கவரி வசூலிக்கும் போது சில்லறைக்கு பதிலாக ரூ.5 மதிப்புடை கூப்பன்கள் மீதி சில்லறையாக வழங்கப்படுகிறது. அந்த கூப்பன்களில் நான்கு வழிச்சாலை வரைபடமும் பார்கோடும் இந்திய ரூபாயில் உள்ளது போல வரிசை எண்னும், இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை(என்எச்ஏஐ) என்றும், இந்தியாவில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இக்கூப்பன் செல்லுபடியாகும் என்றும் அச்சடிக்கப்பட்டுள்ளது. ... |
| Posted: 19 Dec 2016 02:59 AM PST - உனக்கான கதவுகள் தட்டினால் திறக்காதெனில் உடைத்து திற! – உனக்கான உரிமைகள் கேட்டால் கிடைக்காதெனில் தட்டிப் பறி! – உனக்கான பாதைகள் மூடப்படுமெனில் புதிய பாதை உருவாக்கு! – உனக்கான உணவுகள் பறிக்கப்படுமெனில் பறித்தவனை பட்டினி போடு! – உனக்கான கனவுகள் கலைக்கப்படுமெனில் கலைத்தவனை உறங்க விடாதே! – உனக்கான உறவுகள் துன்பப்படுமெனில் உன் உதிரத்தை உணவாக்கு! – உனக்கான லட்சியம் நிராகரிக்கப்படுமெனில் வியர்வையால் விலை பேசு! – உனக்கான மொழி முடக்கப்படுமெனில் உலகே எதிர்த்தாலும் உயிர்பெற ... |
| ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ.3 லட்சம் பரிசு Posted: 19 Dec 2016 02:54 AM PST - புதுடில்லி: உலக கோப்பை வென்ற இந்திய ஜூனியர் ஹாக்கி அணி வீரர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என விளையாட்டு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உலக சாம்பியன் 15 ஆண்டுகளுக்கு, பிறகு ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றுள்ளது. லக்னோவில் நடந்த இறுதி போட்டியில் 2 – 1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி இந்தியா கோப்பை வென்றது. தலா ரூ.3 லட்சம் பரிசு இதையடுத்து, கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்துள்ள அனைத்து வீரர்களுக்கும் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |