Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'வர்தா' புயலால் சென்னை இழந்தது ரூ.6,800 கோடி!... மின் நிலைமை சீராக ஒரு வாரம் ஆகுமாம் 50 சதவீத அலுவலகங்கள், ஓட்டல்கள் மூடல்

Posted: 13 Dec 2016 09:10 AM PST

'வர்தா' புயலின் அதிரடி தாக்குதலில், சென்னை மாநகரம் இழந்தது, 6,800 கோடி ரூபாய் என, கணக்கிடப்பட்டு உள்ளது. சூறாவளி காற்றில் சிக்கி, 10 ஆயிரம் மின் கம்பங்கள், 400 டிரான்ஸ்பார்மர்கள் சேதம் அடைந்துள்ளதால், மின் நிலைமை சீராக, ஒரு வாரமாகலாம் என, கூறப்படுகிறது. புயல் பாதிப்பு காரணமாக, 50 சதவீத அலுவலகங்கள், ஓட்டல்கள் மூடப்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களை, நேற்று முன்தினம், 'வர்தா' புயல் கடுமையாக தாக்கியது. மணிக்கு, 192 கி.மீ., வேகத்தில் வீசிய சூறாவளியால், சென்னை சின்னாபின்னமானது. சாலைகளிலும், ...

செல்லாத நோட்டு மாற்ற உதவிய ரிசர்வ் வங்கி அதிகாரி. சிக்கினார்..! .. ரூ.5.7 கோடி கறுப்புப் பணம் பதுக்கியவரும் கைது

Posted: 13 Dec 2016 09:12 AM PST

பெங்களூரு,:கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டத்தில், செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற உதவிய, ரிசர்வ் வங்கி அதிகாரியை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். 5.7 கோடி ரூபாய் மதிப்பில், 2,000 ரூபாய் நோட்டுகளை பதுக்கிய, மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர், சி.பி.ஐ., அதிரடியில் சிக்கினார்.

கர்நாடகாவில், காங்கிரசைச் சேர்ந்த, சித்தராமையா முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தின் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் வங்கி கிளையின் மூத்த காசாளர், பரசிவமூர்த்தியிடம், சி.பி.ஐ., அதிகாரிகள், சமீபத்தில் விசாரணை நடத்தினர்.முறையான ஆவணங்கள் இன்றி, 1.51 கோடி ரூபாய் ...

'நோட்டு அறிவிப்பால் ஏற்பட்ட வலியே காங்கிரஸ் எதிர்ப்புக்கு காரணம்'

Posted: 13 Dec 2016 09:20 AM PST

''செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை, காங்., எதிர்ப்பதற்கு, அதற்கு ஏற்பட்ட வலியே காரணம்; அது, எங்களுக்கு புரிகிறது,'' என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி கிண்டலாக கூறினார்.

இது குறித்து அவர் கூறியதாவது:
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு, காங்., கடும் எதிர்ப்பு தெரிவித்து, பார்லி.,யை முடக்கி வருகிறது. 2004 முதல், 2014 வரை, அவர்கள் ஆட்சியில் இருந்தபோது தான், விதவிதமாக ஊழல், லஞ்சம், மோசடிகள் நடந்துள்ளன. அதை தடுக்க, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே நேரத்தில், கறுப்புப் பணம் மற்றும் லஞ்சம், ஊழலுக்கு எதிராக, பிரதமர் மோடி தலைமையிலான அரசு நடவடிக்கை ...

அமளி ஓய்ந்து விவாதம் துவங்குமா?

Posted: 13 Dec 2016 09:21 AM PST

மத்திய அரசுக்கு எதிரான நிலையிலிருந்து, பல கட்சிகளும் பின்வாங்க துவங்கியுள்ளதால், ரூபாய் நோட்டு விவகாரத்தில், காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அமளி ஓய்ந்து, பார்லிமென்டில் விவாதம் துவங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மூன்று வாரங்களாகவே, பார்லி., குளிர்கால கூட்டத்தொடர், கடும் அமளியை சந்தித்து வருகிறது. பார்லி.,யின் இரு சபைகளுமே, ரூபாய் நோட்டு விவகாரத்திற்காக, எந்த அலுவல்களையும் நடத்த முடியாத அளவுக்கு நெருக்கடியில் சிக்கியுள்ளன.பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, மூத்த அமைச்சர்கள் பலரும், களமிறங்கி பேச்சு நடத்தி ...

அ.தி.மு.க., பொதுக்குழு எங்கே; எப்போது கூடும்?

Posted: 13 Dec 2016 09:28 AM PST

அ.தி.மு.க., பொதுக்குழுவை எங்கே, எப்போது நடத்துவது என, கட்சியில் ஆலோசனை நடந்து வருகிறது.

அ.தி.மு.க.,வின் பொதுச்செயலர், செயற்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார். பின், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என, 4,000 பேர் பங்கேற்கும், பொதுக்குழுக் கூட்டத்தில், அதற்கான அங்கீகாரம் அளிக்கப்படும்.அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம், எம்.ஜி.ஆர்., காலத்தில், சென்னை அடையாறில் உள்ள, சத்யா ஸ்டுடியோவில் நடத்தப்பட்டது. ஜெயலலிதா பொதுச்செயலராக பொறுப்பேற்ற பின், வடபழனி, விஜயா சேஷ மஹால், வானகரம், ஸ்ரீவாரு திருமண மண்டபம் , திருவான்மியூர் மைதானம் ...

சசிகலாவுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு அ.தி.மு.க., நிர்வாகிகள் அதிர்ச்சி

Posted: 13 Dec 2016 09:36 AM PST

அ.தி.மு.க., பொதுச் செயலர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் சசிகலாவுக்கு எதிராக, சமூக வலைதளங்களில் பரவி வரும் கருத்துக்கள், அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

ஜெயலலிதா மறைவை அடுத்து, நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் முதல்வரானார். அவர் ஏற்கனவே இரு முறை, ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர் என்பதால், கட்சியில் சலசலப்பு ஏற்படவில்லை. ஆனால், சசிகலா பொதுச் செயலராவார் என்ற தகவல், கட்சியினரிடம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.மூத்த நிர்வாகிகள் எதிர்ப்பர் என, தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தங்கள் பதவியை இழக்க விரும்பாத மூத்த நிர்வாகிகள், ...

ரூ.12.44 லட்சம் கோடி செல்லாத நோட்டு 'டிபாசிட்'

Posted: 13 Dec 2016 09:41 AM PST

புதுடில்லி: டிச., 10 வரை, 12.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, செல்லாத, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி வந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடும் நடவடிக்கைரிசர்வ் வங்கி துணை கவர்னர், ஆர்.காந்தி கூறியதாவது:செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின், பழைய,500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, மக்கள் வங்கிகளில், 'டிபாசிட்' செய்து வருகின்றனர். டிச., 10 வரை, 12.44 லட்சம் கோடி ரூபாய், பழைய நோட்டுகள் வங்கிகள் வசம் வந்துள்ளன.கறுப்புப் பணத்தை மாற்றித் தரும் ஏஜன்டுகளுக்கு, வங்கிஅதிகாரிகள் சிலர் உடந்தையாக இருப்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது; இது ...

'தானே'வை ஞாபகப்படுத்திய வர்தா! அதே பாதை, அதே அவதாரம்

Posted: 13 Dec 2016 09:49 AM PST

சென்னையில், 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மரங்களை சாய்த்த, 'வர்தா' புயலின் கோர தாண்டவம், ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய, 'தானே' புயலை ஞாபகப்படுத்தி உள்ளது.

வங்க கடலில் பொங்கி எழுந்த, வர்தா புயல், தமிழகத்தில், வட மாவட்டங்களையும், ஆந்திராவின் தென் மாவட்டங்களையும் சிதைத்து சென்றது. மழை கொட்டித் தீர்த்தது மட்டுமின்றி, மரங்களை கொத்து கொத்தாக வேரோடு பெயர்த்த வர்தாவின் ஆக்ரோஷம், ஐந்தாண்டுகளுக்கு முன், கடலுாரை புரட்டிப் போட்ட,தானே புயலை ஞாபகப்படுத்தியுள்ளது.
கடலுாரும் சீர்குலைந்தது.
வங்க கடலில், 2011ல், அந்தமானுக்கு மேற்கே உருவான காற்றழுத்த ...

சீரமைப்பு பணியில் தாமதம் ராணுவத்தை அழைக்குமா அரசு?

Posted: 13 Dec 2016 10:00 AM PST

'சென்னையில் புயல் சேதங்களை சீரமைக்க, ராணுவ உதவியை, தமிழக அரசு கோர வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை மற்றும் புறநகரில், 'வர்தா' புயல், நேற்று முன்தினம் கரையை கடந்ததால், 10 ஆயிரம் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதே அளவுக்கு, மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன; சாலைகளும் சேதமடைந்துள்ளன.
போர்க்கால அடிப்படையில்
சாலையில் உள்ள மரங்களை எடுத்தல் உள்ளிட்ட சீரமைப்பு பணிகளில், மாநகராட்சி, மின் வாரியம், நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உதவி செய்ய, பிற மாவட்டங்களில் இருந்து, பல துறைகளைச் சேர்ந்த, 5,000 ...

காங்.குடன் கூட்டணி சேர்ந்தால் 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி: அகிலேஷ் கணிப்பு

Posted: 13 Dec 2016 11:48 AM PST

லக்னோ: உ.பி. சட்டசபை தேர்தலில் காங்.குடன் கூட்டணி சேர்ந்தால் 300 இடங்களுக்கு மேல் கிடைக்கும் அம்மாநில சமாஜ்வாதி கட்சி முதல்வர் அகிலேஷ் தெரிவித்துள்ளார்.உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அகிலேஷ் உள்ளார். அடுத்த ஆண்டு (2017) பிப்ரவரி அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் இம்மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். இம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க 15 ஆண்டுகளாக காத்திருக்கும் பா.ஜ. 2014-ம் ஆண்டு பார்லி. லோக்சபா தேர்தலில் 78-ல் 71 லோக்சபா தொகுதிகளை அள்ளியது போன்று, சட்டசபை தேர்தலிலும் பெருவாரியான சட்டசபை தொகுதிகளை அள்ள வெற்றி வியூகம் வகுத்து ...

ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுங்கள்: ரிசர்வ் வங்கி

Posted: 13 Dec 2016 02:10 PM PST

புது டில்லி:ரூபாய் நோட்டுகளை மக்கள் கையிருப்பில் வைத்துக்கொள்ளாமல் புழக்கத்தில் விட வேண்டும் என ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8ம் தேதி இரவு அறிவித்தார்.

பழைய ரூபாய் நோட்டுகளை டிபாசிட் செய்ய டிசம்பர் 30ம் தேதி கடைசி நாள் என மத்திய அரசு அறிவித்துள்ளதால், நாள்தோறும் வங்கிக்கு மக்கள் சென்ற வண்ணம் இருக்கிறார்கள்.
இந்நிலையில் மக்கள் தங்களிடமுள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட வேண்டும் என ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ராம சுப்பிரமணிய காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். ...

மம்தா மீது அவதூறாக பேசியதாக போலீசில் புகார்

Posted: 13 Dec 2016 02:58 PM PST

கோல்கட்டா:பிரதமர் மோடி மற்றும் இந்திய ராணுவம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்த கருத்துக்கு எதிராக பா.ஜ.க. உறுப்பினர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

பிரதமர் மோடி மற்றும் இந்திய ராணுவம் பற்றி மம்தா பானர்ஜி தெரிவித்த கருத்துக்கு எதிராக மனவ் சர்மா என்பவர் மத்திய கோல்கட்டாவில் உள்ள ஜோரசங்கோ தானா காவல் நிலையத்தில் இந்த புகாரை அளித்தார். உடனே இந்த புகார் கோல்கட்டா நகர கமிஷ்னருக்கு அனுப்பப்பட்டது. அந்த புகாரில், "கடந்த டிசம்பர் 1ம் தேதி இந்திய ராணுவத்தை தாக்கி பேசினார். இந்திய ராணுவத்தை அரசியல் ஆதாயத்திற்காக ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™