Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கோர்ட்களை தவறாக வழிநடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க... பரிந்துரை!:குற்றவியல் வழக்கு பதியுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 10 Dec 2016 06:33 AM PST

சென்னை:நீதிமன்றங்களை, தவறாக வழி நடத்தும் வழக்கறிஞர்கள் மீது நீதிமன்ற குற்ற வியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தலைமை வழக்கறிஞருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த, ஆனந்த் குமார் ஜவஹர் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத் தில் தாக்கல் செய்த மனு:தி.நகர், ரங்கநாதன் தெருவில், நானும், வி.எஸ். ஜெயராஜன் என்பவரும் பங்குதாரர்களாக, வாடகை கட்டடத்தில் துணிக்கடை நடத்தி னோம். அந்த கட்டடம், சாந்தி மீனாட்சி என்ப வருக்குச் சொந்தமானது. இடையில், எனக்கும், ஜெயராஜனுக்கும் பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில், கடை ஆறு மாதங்களாக மூடி ...

விடிவுகாலம்!:கிராமங்களில் 10 ஆயிரம் ஏ.டி.எம்.,கள் அமைக்க திட்டம்:பண தட்டுப்பாடு பிரச்னையை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை

Posted: 10 Dec 2016 06:36 AM PST

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், தற் காலிகமாக ஏற்பட்டுள்ள பணத் தட்டுப் பாட்டை போக்கும் வகையில், கிராமப்புறங்களில், 10 ஆயிரம், ஏ.டி.எம்., இயந்திரங்களை நிறுவ, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

நாட்டில், கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கவும், நவ., 8ல், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பால், நாட்டின் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்திருப்பதாக, காங்., உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன. காங்., - திரிணமுல் காங்., - சமாஜ்வாதி - கம்யூ னிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி, எம்.பி.,க்கள், பார்லி.,யில் ...

ஜெ., மறைவுக்கு இரங்கல் இல்லை : அ.தி.மு.க., இணையதளம் அலட்சியம்

Posted: 10 Dec 2016 06:56 AM PST

ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அ.தி.மு.க., அதிகாரப்பூர்வ இணையதளத்தில், எந்த தகவலும் வெளியிடப்படாதது, கட்சி தொண்டர்களிடம், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதாவின் திடீர் மறைவு, தமிழகம் முழுவதும், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.,வினர் மட்டுமின்றி, ஜெயலலிதா வை கடுமையாக எதிர்த்து வந்த, தி.மு.க., வினரும், அவரது மறைவுக்கு இரங்கல் தெரி வித்து வருகின்றனர்.
சோகம் :
சமூக வலைதளங்களில், 'நீ ஆளக்கூடாது
என்று தான் நினைத்தோம். நீ வாழக்கூடாது என்று நினைத்ததில்லை... எங்கள் தலைவனை அனைத்தி லும் முந்த நினைத்த நீ, ...

கருணாநிதியை சந்திக்க ராகுல் மறுப்பு : காங்கிரசை கழற்றி விட தி.மு.க., முடிவு

Posted: 10 Dec 2016 07:00 AM PST

தி.மு.க., தலைவர் கருணாநிதி, கட்டாய ஓய்வு எடுக்க வேண்டிய நிலையில் இருப்பதால், கட்சியை வழிநடத்தி செல்லும் பொறுப்பை, பொருளாளர் ஸ்டாலினிடம், அதிகாரபூர்வமாக ஒப்படைக்க, தி.மு.க., பொதுக்குழு கூட்டப்பட உள்ளது.

சென்னை, ஆழ்வார்பேட்டை காவேரி மருத் துவமனையில், ஒரு வாரம் சிகிச்சை பெற்று, கோபாலபுரம் திரும்பியுள்ள, கருணாநிதியின் உடல் நலம் சீராக உள்ளது. ஆனாலும், வயோதி கம் காரணமாக, சில நேரங்களில், அவருக்கு மறதி ஏற்படுவதால், வீட்டில் கட்டாய ஓய்வு எடுக்க வேண்டிய நிலையில் உள்ளார். எனவே, கட்சியை வழி நடத்தி செல்லும் பொறுப்பை, ஸ்டாலினிடம், அதிகாரபூர்வமாக கொடுக்க ...

முறைகேடுகளில் ஈடுபடும் வங்கி ஊழியர்கள்... தப்ப முடியாது!:மத்திய நிதியமைச்சகம் கடும் எச்சரிக்கை

Posted: 10 Dec 2016 08:07 AM PST

புதுடில்லி:'முறைகேடுகளில் ஈடுபடும் வங்கி ஊழியர்களை சும்மா விட மாட்டோம்; வங்கி களில் நடக்கும் தவறுகளை, மத்திய அரசு, கூர்ந்து கண்காணித்து வருகிறது' என, மத்திய நிதியமைச்சகம் எச்சரித்துள்ளது.

மத்திய அரசு, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை, நவ., 8ல் வெளியிட்டது. செல் லாத நோட்டுகளை, வங்கிகளில், 'டிபாசிட்' செய்ய, இம்மாதம், 30 வரை, அவகாசம் தரப் பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் பல வங்கிகளில், செல்லாத நோட்டுகள் முறை கேடாக மாற்றப்படுவதாகவும், கோடிக்கணக் கில், 'டிபாசிட்' செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.பல வங்கிகளில் நடந்த அதிரடி சோதனைகளில், போலி ...

கஷ்டம் தீரும்; கண்ணால் காண்பீர்! : மக்களுக்கு பிரதமர் உறுதி!

Posted: 10 Dec 2016 08:49 AM PST

தீஸா: ''செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியாகி, 50 நாட்களுக்கு பின், படிப்படியாக இயல்பு நிலை ஏற்படும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம், தீஸா நகரில் நேற்று, பா.ஜ., பேரணி நடந்தது. அதில் பங்கேற்ற, பிரதமர் மோடி பேசியதாவது: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல், மக்கள், பலவித சிரமங்களை அனுபவிக்க நேரிடும் எனக்கூறி வந்துள்ளேன். 50 நாட்கள் சிரமம் இருக்கும். அதன்பின், படிப் படியாக, நிலைமை சரியாகும்; அதை, உங்கள் கண்ணாலேயே நேரடியாக காண்பீர். இந்த விவ காரம் குறித்து, லோக்சபாவில் பேச, எதிர்க்கட்சி ...

கட்டுக்கட்டாய் புதிய ரூபாய் நோட்டுகள் : பாத்ரூம் ரகசிய அறையில் கண்டுபிடிப்பு

Posted: 10 Dec 2016 08:56 AM PST

பெங்களூரு: கன்னட நடிகர் தொட்டண்ணா மருமகன் வீட்டில், 'பாத்ரூம்' ரகசிய அறையி லிருந்து, 5.7 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் உட்பட, 6.6 கோடி ரூபாய் ரொக்கம், 28 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கன்னட நடிகர் கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி
நடக்கிறது. கன்னட நடிகரும், மதச் சார்பற்ற ஜனதா தள பிரமுகருமான தொட்டண்ணா மருமகன் வீரேந்திரா வீடு, சித்ரதுர்கா மாவட்டம் செல்ல கரே என்ற கிராமத்தில் உள்ளது. இம் மாதம்,
9ல், வருமான வரித்துறை அதிகாரிகள், இவரது செல்லகரே வீடு மற்றும் கர்நாடகா, கோவா அலு வலகம் ...

எம்.பி.,க்களின் சம்பளத்தை நிறுத்துங்க! பா.ஜ., மூத்த தலைவர்கள் கொதிப்பு

Posted: 10 Dec 2016 09:30 AM PST

புதுடில்லி:'பார்லிமென்டில் அமளியில் ஈடுபட்டு, சபையை முடக்கும் எம்.பி.,க்களுக்கு சம்பளம் வழங்கக் கூடாது; அவர்களுக்கு வழங்கும் சலு கைகளையும் நிறுத்த வேண்டும்' என, பா.ஜ., மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்., உள் ளிட்ட எதிர்க்கட்சி, எம்.பி.,க்கள், லோக்சபா மற் றும் ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மூன்றாவது வாரமாக, சபை நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 'பார்லி., நடவடிக்கைகளை முடக்கும் எம்.பி.,க்களின் சம்பளத்தை நிறுத்த வேண்டும். ...

அடேங்கப்பா...! சேகர் ரெட்டியிடம் ரூ.131 கோடி பணம், 177 கிலோ தங்கம் பறிமுதல்:திருப்பதி ஏழுமலையானுக்கே சவால் விடுவாரோ என மக்கள் வியப்பு:வருமான வரி சோதனையை அடுத்து சி.பி.ஐ., வளையத்தில் சிக்கினார்

Posted: 10 Dec 2016 09:38 AM PST

அ.தி.மு.க., கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியிடம் இருந்து, இதுவரை 131 கோடி ரூபாய் பணம், 177 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

'அடேங்கப்பா, திருப்பதி ஏழுமலையானுக்கே சவால் விடுவாரோ' என, மக்கள் வியக்கும் அளவுக்கு அவரது வீடு, அலுவலகம் மற்றும் காரில் இருந்து பணம் மற்றும் தங்கக் கட்டிகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இந்த சோதனையை அடுத்து சி.பி.ஐ., அதிகாரிகளின் விசாரணை வளையத்திலும் சேகர் ரெட்டி சிக்கியுள்ளார்.வேலுார் மாவட்டம், தொண்டான் துளசி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் ரெட்டி; 'ஜே.எஸ்.ஆர்., இன்ப்ராடெக்' என்ற நிறுவனத்தை நடத்துகிறார். ...

மத்திய அரசின் ரயில் பயண காப்பீடு திட்டத்திற்கு மக்கள் வரவேற்பு

Posted: 10 Dec 2016 01:19 PM PST

டில்லி: மத்திய அரசின் ரயில் பயண காப்பீடு திட்டத்திற்கு பொது மக்கள் மிகுந்த வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இத் திட்டத்தினை அரசு அறிவித்த பிறகு நேற்று(10-12-16) ஒரே நாளில் 3.5 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயண காப்பீடு வசதி பெற்றனர். இதற்காக பயணக் கட்டணத்துடன் வெறும் 92 பைசா மட்டும் கூடுதலாக பயணிகளிடம் இருந்து பிரிமியமாக பெறப்படுகிறது.
ஆன்லைன் புக்கிங்:
மக்களிடையே ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கை ஊக்குவிக்கும் விதமாக பயண காப்பீடு திட்டத்தின் பிரிமியத்தை அரசு ரத்து செய்துள்ளது. அதாவது ஆன்லைன் மூலமாக ஐ.ஆர்.சி.டி.சி., ...

பிப்ரவரியில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்திய சுற்றுப்பயணம்

Posted: 10 Dec 2016 02:34 PM PST

டாக்கா:வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பிப்ரவரி மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.இடம் பெயர்தல் மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் அக்பர் இரண்டு நாள் பயணமாக நேற்று வங்கதேசம் சென்றுள்ளார். பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பை ஏற்று இன்று அவரை சந்தித்தார். அப்போது இரு நாடுகளிடையே உள்ள உறவுகள் குறித்து பேசப்பட்டது.

ஒத்துழைப்பில் பாதிப்பு ஏற்படக்கூடாது
''இரு நாடுகளிடையே சில பிரச்சனைகள் இருக்கலாம். ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™