Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஜி.எஸ்.டி., கவுன்சிலில் தமிழகத்தின் கை ஓங்குகிறது ஆச்சாயம்!மற்ற மாநிலங்களும் அணி திரள்வதால் திருப்பம்

Posted: 01 Dec 2016 07:59 AM PST

தெளிவான, வலுவான வாதங்களை எடுத்து வைப்பதன் மூலம் ஏழுக்கும் மேற்பட்ட உற்பத்தி மாநிலங்கள், அணி திரண்டு பின்வர தயாராவதால், ஜி.எஸ்.டி., கவுன்சிலில், தமிழகத்தின் கை ஓங்கத் துவங்கியுள்ளது.

ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நிறைவேற்ற, எல்லா கட்சி களையும் மத்திய அரசு சமாதானப்படுத்திய போது, அ.தி.மு.க., மட்டுமே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மாநில உரிமைகள் பறிபோவதும், தமிழகம் போன்ற உற்பத்தி மாநிலங்களை, ஜி.எஸ்.டி., பாதிக்கும் என்பதுமே இதற்கு காரணம். தமிழகத்திலிருந்து எழுந்த எதிர்ப்பை, அப்போது கவனிக்கத் தவறிய பிற மாநிலங்கள், தற்போது, ...

ராகுல் 'டுவிட்டர்' கணக்கு முடக்கம்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

Posted: 01 Dec 2016 08:15 AM PST

புதுடில்லி:காங்., துணைத் தலைவர் ராகுல் மற்றும் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ, 'டுவிட் டர்' சமூக வலைதள கணக்குகள், மர்ம நபர்க ளால் முடக்கப்பட்டன; இது குறித்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

காங்., துணைத் தலைவர் ராகுலின், 'டுவிட்டர்' கணக்கு, நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர் களால் முடக்கப்பட்டது. அதில், விரும்பத் தகாத கருத்துக்கள் பதிவிடப்பட்டதால்,காங்கிர சார் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து, டில்லி போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், காங்கிரசின் அதிகாரப்பூர்வ, 'டுவிட் டர்' கணக்கும் முடக்கப்பட்டது. இதனால், கடும் ...

500 கிராமுக்கு மேல் தங்கம் வைத்திருந்தால் வரி என்ற வதந்திக்கு...முற்றுப்புள்ளி!:பதுக்கி வைத்த நகைகள் ரெய்டில் பிடிபட்டால் மட்டுமே சிக்கல்:வருமான வரி சட்டம் தொடர்பாக மத்திய அரசு புது விளக்கம்

Posted: 01 Dec 2016 08:48 AM PST

'லோக்சபாவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட, வருமான வரி சட்ட திருத்தத்தின்படி, 500 கிராமுக்கு மேல் தங்கம் வைத்திருந்தால், வரி விதிக்கப்படும், பறிமுதல் செய்யப்படும்' என, பரவிய வதந்திக்கு, மத்திய அரசு நேற்று முற்றுப்புள்ளி வைத்தது.

அதேநேரத்தில், கணக்கில் காட்டாத பணத்தில், தங்க நகைகள் வாங்கி பதுக்கி வைத்திருந்து, அது வருமான வரித்துறையினர் சோதனை யில் பிடிபட்டால், அதற்கு கடுமையான வரி விதிக்கப்படும் என்று, எச்சரித்துள்ளது. கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதன் தொடர்ச்சி யாக, கணக்கில் ...

மோடி பேசுவதை கேட்க வேண்டும் : காங்., அமளியால் பார்லி., முடக்கம்

Posted: 01 Dec 2016 08:50 AM PST

புதுடில்லி: 'பிரதமர் நரேந்திர மோடி, சபையில் பேசுவதை நாங்கள் பார்க்க, கேட்க வேண்டும்' என, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தியதால், ராஜ்யசபா நேற்று, 12வது நாளாக முடங்கியது.

செல்லாத ரூபாய் நோட்டு பிரச்னையால், லோக்சபாவும் நேற்று முடங்கியது. பார்லி மென்ட் குளிர்கால கூட்டத் தொடர், நவ., 16ல் துவங்கியது. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி யில் ஈடுபட்டு வருவதால், 11 நாட்களாக பார்லிமென்ட் செயல்படவில்லை.
இந்நிலையில், வியாழக்கிழமைகளில், பிரதமர் தொடர்பான ...

கறுப்பு பண தகவல் பரிமாற்றம் : ஆலோசனையை துவக்கியது சுவிஸ்

Posted: 01 Dec 2016 08:51 AM PST

புதுடில்லி: கறுப்புப் பண முதலீடுகள் குறித்த தகவல்களை, பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதற் கான நடைமுறைகளை வகுப்பது குறித்த ஆலோசனையை, சுவிட்சர்லாந்து அரசு துவக்கியுள்ளது.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில், முதலீடு செய்வதற்கு வரி செலுத்த வேண்டியதில்லை; இதனால், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் கறுப்புப் பணத்தை, சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்கின்றனர். இதனால், கறுப்புப் பண பதுக்கல்காரர்களின் சொர்க்கமாக, சுவிஸ் உள்ளிட்ட நாடுகள் விளங்குகின்றன. இந்நிலையில், இந்தியா உட்பட பல்வேறு நாடு களின் தொடர்வற்புறுத்தலை, நெருக்கடியைத் தொடர்ந்து, ...

'வதந்திகளை நம்பாதீங்க: ' ரிசர்வ் வங்கி

Posted: 01 Dec 2016 09:26 AM PST

மும்பை:செல்லாத ரூபாய் நோட்டு பிரச்னையில், சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை, யாரும் நம்ப வேண்டாம்.

எங்கள் இணையதளத்தில் அவ்வப்போது வெளியாகும், தகவல்களை பார்த்து, மக்களும், வங்கி களும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என, ரிசர்வ் வங்கி எச்சரித்து உள்ளது.செல்லாத ரூபாய் நோட்டு பிரச்னையால், மக்கள் தவித்து வருவதால், ரிசர்வ் வங்கி அவ்வப்போது, மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தவறான தகவல்ஆனால், இந்த அறிவிப்புகள் பற்றி, சமூக வலைதளங்களில், சில விஷமிகள், தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். ...

நீர்ச்சத்து, ஊட்டச்சத்து குறைபாடு மருத்துவமனையில் கருணாநிதி 'அட்மிட்'

Posted: 01 Dec 2016 09:33 AM PST

நீர்ச்சத்து, ஊட்டச்சத்து குறைவால், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத் துவமனையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று அனுமதிக்கப்பட்டார்.

ஒவ்வாமை காரணமாக, கருணாநிதியின் கை, கால்களில்,கொப்பளங்கள் ஏற்பட்டன.இதனால், ஒன்றரை மாதங்களாக, வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். லண்டனிலிருந்தும் இதற்கான பிரத்யேக டாக்டர் வந்து, அவருக்கு சிகிச்சை அளித்தார். தொடர் சிகிச்சையால், அவரது உடல் நிலை யில், முன்னேற்றம் ஏற்பட்டது.டாக்டர்கள் அறிவுரைப்படி, வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். நேற்று முன்தினம், கருணா நிதிக்கு, டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை ...

'நடா' புயல் வலுவிழந்தது; 2 நாட்கள் மழை தொடரும்

Posted: 01 Dec 2016 09:40 AM PST

கடலுார், நாகையை மிரட்டிய, 'நடா' புயல், நேற்று வலுவிழந்தது. ஆனாலும், 'இன்றும், நாளையும், கடலோர மாவட்டங்களில், பரவ லாக மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

வங்கக் கடலின் தென் கிழக்கில் உருவான, 'நடா' புயல், பலத்த காற்றுடன், வேதாரண்யம் புதுச்சேரி இடையே, இன்று அதி காலைக்குள் கரையை கடக்கும் என, கணிக் கப்பட்டது. ஆனால், சென்னையிலிருந்து, தென் கிழக்கே, 290; புதுச்சேரியிலிருந்து, தென் கிழக்கே, 210; இலங்கை திரிகோணமலையிலி ருந்து, 220 கி.மீ., துாரத்தில், நேற்று பிற்பகலில் மையம் கொண்டுஇருந்த புயல், தீவிர காற்ற ழுத்த தாழ்வு மண்டலமாக ...

துறையூர் அருகே வெடிமருந்து ஆலை விபத்தில் 18 பேர் பலி உடல்கள் சிதைந்து இடிபாடுகளில் புதைந்த பரிதாபம்

Posted: 01 Dec 2016 09:48 AM PST

திருச்சி:திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, வெடிமருந்து தொழிற்சாலையில் நேற்று காலை நடந்த பயங்கர வெடி விபத்தில், 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.5 கி.மீ.,க்கு அதிர்வை உண்டாக்கிய இந்த விபத்தில், பலி யானவர்களின் உடல்கள் சிதைந்து, இடிபாடுகளில் புதைந்தன.

துறையூர் அருகே முருங்கப்பட்டியில் சேலத்தைச் சேர்ந்த விஜய கண்ணன் என்பவருக்கு சொந்தமான, 'வெற்றிவேல் எக்ஸ்புளோசிவ்ஸ்' என்ற வெடி பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.இங்கு, கிணறு தோண்டுவதற்கும், பாறைகளை தகர்ப்பதற்கும் பயன்படுத்தப்படும்,வெடி பொருட்களான டெட்டனேட்டர் மற்றும் திரி போன்றவை ...

வீட்டு சிலிண்டர் விலை மீண்டும் ரூ.55 உயர்வு

Posted: 01 Dec 2016 11:33 AM PST

வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை, மீண்டும், 55 ரூபாய் உயர்ந்துள்ளது.
இந்தியன் ஆயில், பாரத் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள், வீடு, 14.20 கிலோ; வணிகம், 19 கிலோ என, இரு வகையான, சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.
55 ரூபாய் உயர்ந்து
இவை, சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, மாதந்தோறும், சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன. சென்னையில், நவம்பரில், 538.50 ரூபாய்க்கு விற்ற வீட்டு சிலிண்டர், தற்போது, 55 ரூபாய் உயர்ந்து, 593.50 ரூபாயாக விற்கப்படுகிறது. 1,137 ரூபாயாக இருந்த, வணிக சிலிண்டர் விலை, 94.50 ...

டாஸ்மாக்கில் 20 நாளில் ரூ.200 கோடி 'அவுட்'

Posted: 01 Dec 2016 12:50 PM PST

சேலம்: டாஸ்மாக் கடைகளில், செல்லாத நோட்டுகள் வாங்க தடை விதிக்கப்பட்டதால், 20 நாட்களில், 200 கோடி ரூபாய் வரை விற்பனை சரிந்துள்ளது.

தமிழகத்திலுள்ள, 6,292 டாஸ்மாக் கடைகளில், தினமும் சராசரியாக, 68 கோடி ரூபாய், ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில், 95 கோடி ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது.
சபரிமலை சீசன்
சபரிமலை சீசன் நேரமான, கார்த்திகை துவங்கி, பொங்கல் பண்டிகை வரை விற்பனையில், 10 முதல், 15 சதவீதம் வரை சரிவு ஏற்படும்.
மத்திய அரசின் செல்லாத நோட்டுகள் அறிவிப்பால், டாஸ்மாக் நிர்வாகம், 500 - 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு, மது வழங்க தடை விதித்தது. ...

சீனா-பாக். இடையே சரக்கு ரயில் சேவை துவக்கம்

Posted: 01 Dec 2016 12:58 PM PST

இஸ்லாபாத்: சீனா-பாகிஸ்தான் இடையே நேற்று முதல் முறையாக சரக்கு ரயில் சேவை துவங்கியது. சீனாவும், பாகிஸ்தானும் நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன. சீனாவும்-பாகிஸ்தானும் கடல்சார் வர்த்தகத்தை ஏற்படுத்தும் விதமாக சீன-பாக்.பொருளாதார பாதை திட்டத்தை (சி.பி.இ.சி) செயல்படுத்தி வருகின்றன.

500 டன் பொருட்கள்
இந்நிலையில் இத்திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக ரயில் சேவையை துவக்கியுள்ளது. இதையடுத்து இரு நாடுகளுக்கிடையே சரக்கு ரயில் சேவை . சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள கன்மிங் நகருக்கும், பாகிஸ்தானின் கராச்சி மாகாணத்திற்கும் இடையே நேற்று ...

செல்லாத நோட்டுக்கு பெட்ரோல்: இன்றே கடைசி

Posted: 01 Dec 2016 02:09 PM PST

புதுடில்லி: பெட்ரோல் நிரப்ப, விமான டிக்கெட் வாங்க, செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, 500 ரூபாய் நோட்டை பயன்படுத்தும் அவகாசம் இன்றுடன் முடிகிறது.
செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத்தால் ஏற்பட்ட சில்லரை தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில், வரும், 15 வரை, பழைய, 500 ரூபாய் நோட்டை பயன்படுத்த அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
இன்றே கடைசி
இந்நிலையில், பல்வேறு மோசடிகள் நடப்பதாக புகார்கள் வந்தன. பெட்ரோல் பங்க், விமான டிக்கெட் வாங்க, பழைய, 500 ரூபாய் நோட்டை, இன்று வரையே பயன்படுத்த முடியும் என, நேற்று அறிவிக்கப்பட்டு ...

மார்ச் வரை இலவசம்: ஜியோவின் புத்தாண்டு பரிசு

Posted: 01 Dec 2016 03:18 PM PST

மும்பை: தொலை தொடர்பு நிறுவனமான, ரிலையன்ஸ் ஜியோ, தற்போது வழங்கி வரும் அதன் இலவச சேவைகள் அனைத்தையும், 2017 மார்ச், 31 வரை நீட்டிக்க இருப்பதாக, அதன் தலைவர், முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற, செய்தியாளர்களுடனான சந்திப்பில், இதை அவர் தெரிவித்தார்.

ரிலையன்ஸ் ஜியோ, தன்னுடைய சேவையை, கடந்த செப்., 1ல், அறிமுகம் செய்தது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு, டிச., 31 வரை, அனைத்து வகையான வாய்ஸ் கால்கள், இன்டர்நெட் சேவைகள் அனைத்தும் இலவசம் எனவும் அறிவித்தது.
இதையடுத்து, 83 நாட்களில், 5 கோடி வாடிக்கையாளர்களை அந்நிறுவனம் பெற்று சாதனை படைத்தது. பல ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™