Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


அவ்வளவு தான் ரூ.ஆயிரம் நோட்டு

Posted: 07 Dec 2016 04:10 AM PST

மும்பை: மும்பையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஆர் காந்தி கூறியதாவது: கடந்த இரண்டு வாரத்தில், ரூ.500 மற்றும் ரூ.100 நோட்டுகள் அதிகளவில் அச்சடிக்கும் வகையில் அச்சகங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ரூபாய் நோட்டு வாபஸ் முடிவை அவசரப்பட்டு எடுக்கவில்லை. போதுமான அளவு பணம் சப்ளை செய்யப்படுகிறது. புதிய ரூபாய் நோட்டுகளை பொது மக்கள் பதுக்கி வைக்க வேண்டாம். ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் சப்ளை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து புதிய ரூபாய் ...

பிரிட்டனின் ஈஇஅ என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள ஆப்டிக் ஹெல்மெட்

Posted: 07 Dec 2016 04:02 AM PST

- ஹெல்மெட் அணிந்தால் பாதுகாப்பு என்று எத்தனை தடவை சொன்னாலும் பலர் அதைக் கேட்பதேயில்லை. இருசக்கர வாகன விபத்துகளைப் பார்த்தாலும், கேள்விப்பட்டாலும் "அச்சம் என்பது மடமையடா' என நினைத்துக் கொண்டு, ஹெல்மெட் அணியாமல் பறந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ஹெல்மெட்டை நமது இளைஞர்கள் விரும்பி அணிய வாய்ப்புகள் அதிகம். இந்த ஹெல்மெட்டில் முன்புற கேமரா, பின்புற கேமரா உள்ளன. சென்சார்களும் பொருத்தப் பட்டுள்ளன. தலையைத் திருப்பாமல், பக்கவாட்டில் பார்க்காமல், பின்னால் வருகிற, முந்திச் செல்ல முனைகிற ...

கண்டது, கேட்டது…!!

Posted: 07 Dec 2016 01:00 AM PST

- கண்டது - (பட்டுக்கோட்டையில் ஓர் ஆட்டோவில்) வளையாமல் நதிகள் இல்லை. வலிக்காமல் வாழ்க்கை இல்லை. பெ.முத்து, திருச்சிற்றம்பலம். (கோவை சூலூரில் ஒரு துணிக்கடையின் பெயர்) கண்டிப்பா சொல்லமாட்டேன். மு.விஷ்ணுராஜபிரபு, செங்கோட்டை. (சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்) பரோட்டா பிரதர்ஸ் மல்லிகா அன்பழகன், சென்னை-78. (திருவாரூர் அருகில் உள்ள அத்திக்கடை ஆரம்ப சுகாதார மருத்துவமனையில்) STRENGTH IS LIFE WEAKNESS IS DEATH எம்.ரகுநாதன், தஞ்சாவூர்.

மைக்ரோ கதை

Posted: 07 Dec 2016 12:55 AM PST

பஸ்ஸில் தன் லக்கேஜுடன் அவசரமாக முன் பக்கமாக ஏறினார் ஒரு முதியவர். லக்கேஜை வைத்துவிட்டு, கூட்டமாக நின்று கொண்டிருந்தவர்களைப் பார்த்து கொஞ்சம் நகரச் சொல்லி முண்டியடித்து கண்டக்டரிடம் சென்று டிக்கெட் வாங்கினார். ""ஏம்ப்பா வயதானவர்களிடம் நீயே நேரில் வந்து டிக்கெட் கொடுக்கக் கூடாதாப்பா? எவ்வளவு சிரமமாக இருக்கிறது?" என்று கேட்டார். ""இவ்வளவு கூட்டத்தில எல்லாம் என்னால் வந்து டிக்கெட் கொடுக்க முடியாது" என்றார் கண்டக்டர். மறுநாள் ஒரு திருமண வரவேற்பு விழாவுக்கு தன் தந்தையுடன் கண்டக்டர் ...

யோசிக்கிறாங்கப்பா!

Posted: 07 Dec 2016 12:54 AM PST

- கொடுப்பது சிறியது எனத் தயங்காதே… பெறுபவருக்கு அது பெரியது. எடுப்பது சிறியது எனத் திருடாதே… இழந்தவருக்கு அது பெரியது. – உஷா, சென்னை-53. எஸ்எம்எஸ் - எல்லாம் நன்மைக்கே என திடமாக எண்ணும்போது… அல்லல்கள் கூட அனுபவப் பாடமாகிவிடும். – அனன்யா, பொள்ளாச்சி.

வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்!

Posted: 07 Dec 2016 12:51 AM PST

- அரசியல்வாதிகளின் வேண்டுதல்களை நிறைவேற்றும் அருள்மிகு கந்தசுவாமி முருகன் கோயில் மதுராந்தகம் தாலுகாவில் உள்ள செய்யூரில் அமைந்துள்ளது. பிரணவத்தின் பொருள் தெரியாது திகைத்த பிரம்மனை முருகவேள் விலங்கிட்டுச் சிறையிட்டுத் தாமே சிருஷ்டித் தொழில் செய்தார். அப்பொழுது திருமால், இந்திரன், தேவர்கள், முனிவர்கள் ஆகியோர் முருகனிடம் வந்து பிரம்மனைச் சிறையினின்று விடுவிக்க முறையிட்டனர். அவ்வித பெருமை வாய்ந்த முருகவேள் வீற்றிருக்கும் சிறப்புத்தலம் செய்யூர். சூரபத்மனைப் போரில் வெற்றிகொள்ள முருகப் பெருமானுக்கு ...

குறள் பாட்டு

Posted: 07 Dec 2016 12:37 AM PST

- கேள்வி (பொருட்பால்- அதிகாரம் 42 – பாடல் 4) கற்றிலராயினும் கேட்க அஃது ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை. கற்றிலனாயினும் கற்றிடும் வாய்ப்பின்றி வாழ்வோர்கள் நல்ல அறிவுதனை கேட்டுக் கேட்டு அறிந்திருந்தால் கேடில்லாமல் மகிழ்ந்திருப்பார் உடல் உள்ளத் தளர்ச்சியை அறிவால் போக்கிட முடியுமே இளமை முதுமை இரண்டிலுமே இனிமை செய்வது அறிவொன்றே. -By -ஆசி.கண்ணம்பிரத்தினம் சிறுவர் மலர்

மூத்த பத்திரிக்கையாளர் சோ காலமானார்

Posted: 06 Dec 2016 08:34 PM PST


-
மூத்த பத்திரிகையாளர் சோ இன்று அதிகாலை  4.40 மணிக்கு
காலமானார்.
.
இதனை சோவின் மருத்துவர் விஜயசங்கர் உறுதி படுத்தியுள்ளார்

-
புதிய தலைமுறை செய்தி

'சோ' ராமசாமி 10 - ராஜலட்சுமி சிவலிங்கம்

Posted: 06 Dec 2016 07:39 PM PST

- பத்திரிகையாளர் அரசியல் விமர்சகர் பிரபல பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான 'சோ' ராமசாமி (Cho Ramaswamy) பிறந்தநாள் இன்று (அக்டோபர் 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: *சென்னை மயிலாப்பூரில் (1934) பிறந்தவர். பி.எஸ். உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். விவேகா னந்தா கல்லூரியில் பி.எஸ்சி. பட்டம் பெற்றார். இளம் வயதில் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆட்ட நுணுக்கங் கள் பற்றி நன்கு அறிந்திருந்தார். பத்திரிகைகளில் விளையாட்டு விமர்சனங்களும் எழுதியுள்ளார். *சென்னை சட்டக் கல்லூரியில் ...

புதிய 100 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்: ரிசர்வ் வங்கி

Posted: 06 Dec 2016 07:31 PM PST

புதிய 100 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், புதிய 100 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவித்திருக்கிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்படும் 100 ரூபாய் நோட்டுகளில் R என்ற உள்ளீட்டு எழுத்துரு இருக்காது என்றும் அதற்கு மாற்றாக வேறு சில பாதுகாப்பு அம்சங்கள் ...

உடல் நலம் இல்லை

Posted: 06 Dec 2016 07:24 PM PST

உடல் நலம் இல்லை

ரமணியன்

இரும்புப் பெண்மணிக்கு மணல் சிற்பம் மூலம் அஞ்சலி

Posted: 06 Dec 2016 06:40 PM PST


-
ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக
பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்,
ஒடிஷா கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றினை
உருவாக்கியிருக்கிறார்.
-
--------------------------------------------

- நாகரிகம் முன்னேறுவது புத்தகங்களால்தான்....

Posted: 06 Dec 2016 04:28 PM PST

- புத்தகங்கள் மனிதப் பிறவிகள் அல்ல. ஆயினும் அவை மிக நீண்ட ஆயுளைப் பெற்றிருக்கின்றன. - பென்னட் - ------------------------------------------- - - படிப்பதில் ஈடுபாடு இல்லாத அரசனாக இருப்பதைவிட நிறைய புத்தகங்களுடன் ஏழையாகவே இருக்கவே விரும்புவேன். - தாமல் மெக்காலே - ------------------------------------------- - - நூல் நிலையக் கதவுகள் திறக்கப்படும்போது..., சிறைச்சாலைக் கதவுகள் மூடப்படுகின்றன. -சுவாமி விவேகானந்தர். - ---------------------------------------------- - - புத்தகங்கள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™