Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் வங்கிகளுக்கு திரும்பிய தொகை... ரூ.11.85 லட்சம் கோடி!:ரூ.4 லட்சம் கோடிக்கு ரிசர்வ் வங்கி புதிய நோட்டுகள் வெளியீடு

Posted: 07 Dec 2016 08:54 AM PST

மும்பை:'செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை அடுத்து, வங்கிகளில், 11.85 லட்சம் கோடி ரூபாய், 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளது; நான்கு லட்சம் கோடி ரூபாய்க்கு, புதிய நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நிதிக்கொள்கை அறிக்கையை, ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேல், நேற்று வெளியிட்டார்; அப்போது, அவர் கூறியதாவது:செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, நன்றாக யோசித்து, திட்ட மிட்டு வெளியிடப்பட்டது; அவசரத்தில் எடுக்கப் பட்ட முடிவல்ல. இது தொடர்பான அனைத்து விஷயங்களும், பரம ரகசியம் காக்கப்பட்டன.இந்த அறிவிப்பால், மக்களுக்கு உடனே ஏற்படக் கூடிய ...

பார்லி.,யை முடக்கும் எதிர்க்கட்சிகள் : பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்

Posted: 07 Dec 2016 09:09 AM PST

புதுடில்லி: செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து, பார்லிமென்டில் பேச அனுமதிக்காமல், எதிர்க்கட்சிகள் ஜனநாயக விரோத போக்கை கடைபிடிப்பதாக, பிரதமர், நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்

டில்லியில் நேற்று நடந்த, பா.ஜ., பார்லிமென்ட் குழு கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசிய தாவது: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு, மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்துள் ளது; ஆனால், இது பற்றி பார்லிமென்டில் விவாதிக்க, எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போடுகின்றன.
முட்டுக்கட்டை : முந்தைய காலங்களில், அரசு
முடிவுகள் மீதான பல விவாதங்கள், ...

சபாநாயகர் சரியில்லை அத்வானி அதிருப்தி

Posted: 07 Dec 2016 09:17 AM PST

புதுடில்லி:பார்லிமென்ட் நடவடிக்கைகள் முடக் கப்படுவது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, 89, லோக்சபா சபாநாயகர், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் மீது, குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத்தை முன்வைத்து, லோக்சபா மற்றும் ராஜ்யசபா வில், காங்., உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளன. இதனால், மூன்றாவது வாரமாக, பார்லிமென்ட்நடவடிக்கைகள் முடக்கப்பட்டு உள்ளன. ஆக்கப்பூர்வமான விவாதங்கள் ஏதும் இன்றி, பார்லி மென்ட் ஒத்தி வைக்கப்படுவதால், மக்களின் வரிப் பணம் வீணாகிறது. எம்.பி.,க்களின் ...

ரூ.100 கோடியை மாற்றினாரா ரெட்டி? தற்கொலை டிரைவர் கடிதத்தால் பரபரப்பு

Posted: 07 Dec 2016 09:19 AM PST

பெங்களூரு:'மாஜி' அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணத்துக்காக, 100 கோடி ரூபாய் கறுப்பு பணத்தை, வெள்ளையாக்கி கொடுத்த, அரசு அதிகாரியின் கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஊழல் புகார்
கர்நாடகாவில், காங்., கட்சியின், சித்தராமையா முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தைச் சேர்ந்த சுரங்க தொழில் அதிபரும், முந்தைய, பா.ஜ., ஆட்சியில் அமைச்சராக இருந்தவருமான ஜனார்த்த ரெட்டி, ஊழல் புகாரில் சிக்கி, சிறை சென்றார்; தற்போது, ஜாமினில் வந்துள்ளார்.சமீபத்தில், இவரது மகள் திருமணம், 500 கோடி ரூபாய் செலவில் ஆடம்பரமாக ...

அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியை கைப்பற்ற போட்டி... துவங்கியது!:எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களிடம் ஆதரவு திரட்டும் சசி சொந்தங்கள்:மேற்கு மண்டல தலைவர்களும் முனைப்பு காட்டுவதால் பரபரப்பு

Posted: 07 Dec 2016 09:28 AM PST

மறைந்த ஜெயலலிதா வகித்து வந்த, பொதுச் செயலர் பதவி யாருக்கு என்ற கேள்வி, ஆளும், அ.தி.மு.க.,வில் எழுந்துள்ளது.

இப்பதவியை கைப்பற்றுபவரே, கட்சியிலும், ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதால், சசிகலா குடும்பத்தில் கடும் போட்டி துவங்கி உள்ளது.முதல்வர் பதவியை, தென் மாவட்டத்தை சேர்ந்தவருக்கு கொடுத்துள்ளதால், கட்சி பதவியை, மேற்கு மண்டலத்தினருக்கு வழங்க வேண்டும் என, கொங்கு பகுதி தலைவர்கள் முனைப்பு காட்டுவதால், அ.தி.மு.க.,வில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.அ.தி.மு.க.,வில், பொதுச் செயலர் பதவிக்கே, அனைத்து அதிகாரங்களும் தரப்பட்டு உள்ளன. நிர்வாகிகள் ...

உள்ளே - வெளியே யார்; முடிவெடுக்கிறார் சசிகலா!

Posted: 07 Dec 2016 09:32 AM PST

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலி நிகழ்வில், அவரின் தோழி சசிகலா வின் உறவினர்கள், புடைசூழ நின்றது, கட்சிக் காரர்கள், பொதுமக்கள் தரப்பில், ஏக அதிருப்தி யைக் கிளப்பியுள்ளது.

ஜெயலலிதாவால், கட்டம் கட்டப்பட்டவர்களும், கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்களும், அவருடைய தலைமாட்டிலேயே நின்றது, அஞ்சலி நடந்த இடத்திலேயே, பலத்த சலசலப்பை உண்டாக்கியது. ஜெயலலிதாவின் உடலைப் பார்த்துக் கதறிய, அ.தி.மு.க., தொண்டர்கள், சசிகலா உறவினர்களுக்கு எதிராகக் கொந்தளிக்கவும் செய்தனர்.மெரினாவில், எம்.ஜி.ஆர்., சமாதிக்கு அருகில், ஜெ.,வின் இறுதி அஞ்சலி நடந்தபோதும், சசிகலாவின் ...

கார்டனில் மீண்டும் அமைச்சர்கள்

Posted: 07 Dec 2016 09:36 AM PST

சில அமைச்சர்கள் மட்டும், நேற்று போயஸ் கார்டன் சென்று வந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெயலலிதா இருந்த வரை, அவர் வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லம்,இரும்பு கோட்டை யாக இருந்தது. போலீஸ் பாதுகாப்பை மீறி, அவர் இருந்த தெருவிற்குள், யாரும் நுழைய முடியாது. தெரு நுழைவு வாயிலிலே, அனை வரும் தடுத்து நிறுத்தப்படுவர்.அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ஜெயலலிதாவை பார்க்க, போயஸ் கார்டனுக்கு செல்வர். ஆனால், அவர்களை அவர் சந்தித்தாரா என்பதும் தெரியாது. அமைச்சர்களும், அதிகாரி களும், அவ்வப்போது போயஸ் கார்டன் சென்றுவரு வர். அமைச்சர்கள் அங்கு ...

ஜெ., நினைவிடம் பராமரிக்க குழு

Posted: 07 Dec 2016 09:39 AM PST

மறைந்த முதல்வர், ஜெயலலிதா நினைவிட பராமரிப்பு ஏற்பாடுகளை, பொதுப்பணித்துறை யினர் துவக்கியுள்ளனர்.

சென்னை, மெரினா கடற்கரையில், எம்.ஜி.ஆர்., நினைவிடம் உள்ளது. இதில் ஒரு பகுதியில், ஜெயலலிதா உடல், நல்லடக்கம் செய்யப் பட்டுள்ளது. இதற்காக, 9 அடி நீளம், 6 அகலம், 6 ஆழத்தில் குழி வெட்டப்பட்டு, ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது; தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று காலை, பொதுப்பணித் துறை கட்டட பிரிவு உயர் அதிகாரிகள்,ஜெ.,சமாதியை பார்வையிட்டனர். அஞ்சலி செலுத்த வருபவர்கள் யாரும் சமாதியை சேதப்படுத்தாமலிருக்க, தடுப்பு ...

தலைநகரில் முத்திரை பதித்த ஜெ.,வின் முத்தான திட்டங்கள்!

Posted: 07 Dec 2016 10:13 AM PST

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தின் தலைநகரான சென்னையின் கட்டமைப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.

சென்னை நகரத்திற்கு, பல்வேறு முக்கிய திட்டங்கள் அவரால் கிடைத்தாலும், இன்றைக் கும் மாநகர மக்களின் தாகம் தீர்க்கும் புதிய வீராணம் திட்டம், சரித்திர சாதனையாகவே பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா, சென்னைக்கு கொண்டு வந்த திட்டங்கள் ஒரு பார்வை:
புதிய வீராணம் திட்டம்
சென்னையில் இருந்து, 235 கி.மீ., துாரத்தில், கடலுார் மாவட்டத்தில் வீராணம் ஏரி உள்ளது. 1968ல், இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வர, தி.மு.க., ஆட்சியில் ...

வேக கட்டுப்பாட்டு கருவி ஜன., 31 வரை அவகாசம்

Posted: 07 Dec 2016 11:12 AM PST

பொது போக்குவரத்துக்கான கனரக வாகனங்களில், வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதற்கான காலக்கெடு, ஜன., 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
சாலை விபத்துகளில், பலியாவோர் எண்ணிக்கையை குறைக்க, வாகனங்களில் வேகக்
கட்டுப்பாட்டு கருவி பொருத்த, 2015 அக்., மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. அதில், '2015 அக்., 1க்கு பின் தயாரிக்கப்படும் வாகனங்கள், 80 கி.மீ., வேகத்துக்கு மேல் செல்லாத வகையில், வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தற்போது, இயங்கி கொண்டிருக்கும் கனரக வாகனங்கள், நடப்பாண்டு ஏப்., மாதத்துக்குள் வேகக் ...

ரிசர்வ் வங்கியில் 'விற்பனை' - புது அதிகாரி கண்காணிப்பு

Posted: 07 Dec 2016 12:01 PM PST

சென்னை, ரிசர்வ் வங்கியில், பிராந்திய தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள, அருந்ததி மெக், அங்குள்ள ரூபாய் மற்றும் சில்லரை வினியோகப் பிரிவை, தீவிரமாக கண்காணிக்க துவங்கியுள்ளார்.
சென்னை, பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு, மஹாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் இருந்து, புதிய, 2,000 - 500 ரூபாய் நோட்டுகள் வருகின்றன. மாநிலத்தில் நிலவும் ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டை பயன்படுத்தி, ரிசர்வ் வங்கியில் உள்ள சிலர், கமிஷன் அடிப்படையில், செல்லாத ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக, புதிய நோட்டுகளை தருவதாக, புகார் எழுந்தது. இது, அருந்ததி மெக்கின் கவனத்திற்கு ...

'இந்தியா - பாக்., உறவில் முன்னேற்றம் இல்லை'

Posted: 07 Dec 2016 01:21 PM PST

புதுடில்லி : 'இந்தியா - பாக்., உறவில், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனினும், இரு நாட்டு சிறைகளில் வாடும் மீனவர்களை விடுதலை செய்வதில் எந்த சிக்கலும் இல்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லோக்சபாவில் நேற்று, பா.ஜ., வெளியுறவு இணையமைச்சர், வி.கே.சிங் பேசியதாவது:
இந்தியா - பாகிஸ்தான் உறவில், எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை; எனினும், இந்திய சிறைகளில் வாடும், பாக்., மீனவர்கள் மற்றும் பாக்., சிறைகளில் வாடும் இந்திய மீனவர்களை விடுதலை செய்து, அவரவர் நாட்டிற்கு திரும்ப அனுப்புவதில், சிக்கல் எதுவுமில்லை.
இரு நாடுகளிடையிலான இதுதொடர்பான ...

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்டோ கட்டணம் மாற்ற அனுமதி

Posted: 07 Dec 2016 02:26 PM PST

சென்னை: ஆட்டோ கட்டணத்தை, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்க, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணம், ஒவ்வொரு, கி.மீ.,க்குமான கட்டணத்தை நிர்ணயித்து, 2014ல், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
ஆட்டோ உரிமையாளர், டிரைவர் பெயர்கள் மற்றும் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்ணை, ஆட்டோக்களில் குறிப்பிடவும், பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கட்டணத்தை மாற்றி அமைக்கவும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
உயர் நீதிமன்ற ...

அரையாண்டு தேர்வு நாளை துவங்குமா? - மாணவர்கள் குழப்பம்

Posted: 07 Dec 2016 03:40 PM PST

திடீர் விடுமுறை முடிந்து, பள்ளிகள் நாளை திறக்கப்படுவதால், அரையாண்டு தேர்வு திட்டமிட்டபடி நாளை நடக்குமா என, மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் தனியார் அரசு உதவிபெறும் பள்ளிகளில், சமச்சீர் கல்வி பாடத்திட்டம் பின்பற்றப் படுகிறது. பெரும்பாலான தனியார் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு வரையிலான, இரண்டாம் பருவ தேர்வு, டிச., 5ல், துவங்கியது; டிச., 23 வரை நடக்கிறது.
'பிளஸ் 2வுக்கு, நேற்றும்; 10ம் வகுப்புக்கு, நாளையும் அரையாண்டு தேர்வு துவங்கும்' என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. ஆனால், முன்னாள் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™