Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மீன்களுக்குக் காது உண்டா?

Posted: 28 Dec 2016 09:11 AM PST

- கடல் எப்போதுமே பேரிரைச்சலுடன் இருக்கிறது. கடலுக்குள் உள்ள எரிமலைகள் வெடித்துச் சிதறுகின்றன. கடலுக்குள் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. அப்போது ஏற்படும் சத்தங்கள் கடலில் வாழும் மீன்களுக்குக் கேட்குமா? 'கேட்கும்' என்றே சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மீன்களுக்கு வெளிப்படையாகத் தெரியும் அளவுக்குக் காதுகள் இல்லை. ஆனால் மீன்களுக்கு ஒலியை உணரும் அமைப்புகள் உள்ளன. அவை மீனின் தலைப்பகுதிக்குள் சிறு துளைகளோடு உட்புறமாக அமைந்துள்ளன. தண்ணீருக்குள் எழும் ஒலி அதிர்வுகளை, இந்தச் சிறு துளைகளின் வழியாக ...

அறிமுகம்--பொ.இராமன்

Posted: 28 Dec 2016 09:09 AM PST

அறிமுகம்
என் பெயர் : பொ.இராமன்
அப்பா பெயர் : மு.பொன்னன்
சொந்த ஊர் : தெ.ஆண்டிபட்டி
மாவட்டம் : திருச்சிராப்பள்ளி
தொழில் : கணினி வேலைகள்
தொடர்புக்கு : 9788557215
மின்னஞ்சல் : raman.tkm@gmail.com
ஈகரையை அறிந்த விதம் : இணையத்தில் உலாவும்போது...
இறைவனின் ஈகையாக கிடைத்தது ஈகரை!

அறிமுகம் - தயாசிந்து

Posted: 28 Dec 2016 09:08 AM PST

அறிமுகம்

பெயர்: தயாசிந்து
சொந்த ஊர்: ஆத்தூர் - சேலம்
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையத்தில் உலாவும்போது...
பொழுதுபோக்கு: இணையத்தில் உலவுவது, புத்தகம் படிப்பது, திரைப்படம் பார்ப்பது
தொழில்: கணினி
மேலும் என்னைப் பற்றி: அறிவியல் பற்றியும் வரலாற்றை பற்றியும் ஆர்வத்துடன் படிப்பது அல்லது video காண்பது

வாசகன் என்பவன் கழுதையா ?

Posted: 28 Dec 2016 06:29 AM PST

புத்தகங்களை கடைகளுக்கு சென்று வாங்கி வெகுநாளாயிற்று பெரும்பாலும் ஆன்லைனில் புத்தகங்களை வாங்கும் பழக்கம் வந்துவிட்டது இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் ஒரு புத்தக விற்பனை நிலையத்திற்கு சென்று பார்த்தபொழுது பல புத்தகங்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டிருந்தது, என்னிடம் உள்ள சில புத்தகங்களின் இன்றைய விலை சில பல பத்து சதவீதம் உயர்ந்து வாசகன் கைக்கு எட்டா நிலைக்கு வாசிப்பு சென்று கொண்டிருக்கிறதோ என்ற என்ன தோன்றியது, ஒருபுறம் வாசிக்கும் பழக்கம் வளரவேண்டும் என குரல் தரும் அறிவுஜீவிகள் புத்தகத்தின் ...

வரலாற்றின் வேர்கள்

Posted: 28 Dec 2016 05:26 AM PST

அன்புடையீர் , எனக்கு சமீபத்தில் நடைபெற்ற இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு இருக்க நேர்ந்த கட்டாய ஓய்வுக்குப் பிறகு உடலுக்கும் மனதிற்கும் வல்லமைப் பெறவேண்டி இடை இடையே எழுதிய இந்தத் தொடர் வல்லமை மின் இதழில் தொடர்ந்து ஒவ்வொரு புதன் அன்றும் வெளிவரும் . நண்பர்களுடன் பகிர ஈகரையில் பதிவிடுகிறேன் படித்துத் தங்கள் கருத்துக்களை பகிர வேண்டுகிறேன் . அன்புடன் அண்ணாமலை சுகுமாரன் வரலாற்றின் வேர்கள் -1 -அண்ணாமலை சுகுமாரன் கடந்த காலத்தின் இரத்தக்கறை படிந்த அடிச்சுவடுகளைப் ...

20 ஆயிரம் என்.ஜி.ஓ., லைசென்ஸ் அதிரடி ரத்து

Posted: 28 Dec 2016 04:44 AM PST

புதுடில்லி: வெளிநாட்டு நன்கொடை பெறுவதில், சட்ட விதிகளை மீறியதாக, என்.ஜி.ஓ., எனப்படும் அரசு சாரா அமைப்புகளில், 20 ஆயிரம், என்.ஜி.ஓ.,க்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டவர் பிரிவின் ஆய்வுக் கூட்டம், உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் தலைமையில், நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள்: நாடு முழுவதும், 33 ஆயிரம், என்.ஜி.ஓ.,க்கள் அரசிடம் பதிவு செய்துள்ளன. வெளிநாட்டு நன்கொடைகள் பெறுவது தொடர்பான விதிமுறைகளை ...

வட்டிக் குறைப்புதான் வழியா?

Posted: 28 Dec 2016 04:00 AM PST

பலமுனைத் தாக்குதல் என்று இதைத்தான் கூற வேண்டும். ஒரு பக்கம், பழைய ஐந்நூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு மற்றும் அதைத் தொடர்ந்து வங்கிகளிலும், தானியங்கிப் பணம் வழங்கும் இயந்திரங்களிலும் போதிய பணமில்லாத நிலை. வங்கிக் கணக்கில் செலுத்திய மதிப்பிழந்த பணத்தையும் வரவு வைக்கப்பட்ட மாதாந்திர சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தையும் தேவைக்கு ஏற்ப எடுத்துச் செலவழிக்க முடியாத நிலைமை ஒரு புறம் சாமானிய மனிதர்களை வாட்டுகிறது. மற்றொரு புறமோ, தொழிலாளர்களின் மாதச் சம்பளத்தில் பிடித்தம் ...

அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள் பாலாஜி !

Posted: 28 Dec 2016 02:51 AM PST

நம் அன்பான தலைமை நடத்துனர் பாலாஜியை வாழ்த்துவோம் வாருங்கள் உறவுகளே  ! அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள் பாலாஜி ! நீங்கள் விரும்புவற்றை எல்லாம் அடைய நான் பிரார்த்திக்கிறேன் பாலாஜி ! அன்புடன், கிருஷ்ணாம்மா

விநோதமான புத்தாண்டுக் கொண்டாட்டம்!

Posted: 28 Dec 2016 12:38 AM PST

-- சில நாடுகளில் புத்தாண்டை விநோதமாகக் கொண்டாடுவதும் உண்டு. நாடுகளின் வித்தியாசமான சில புத்தாண்டுக் கொண்டாட்டங்களையும் புத்தாண்டு தகவல்களையும் பார்ப்போமா? -- # புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகர டைம்ஸ் சதுக்கம் களைகட்டி காணப்படும். இந்தப் பகுதியில் கழிவறைகள் குறைவு. அதனால், புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் பெரியவர்கள் குழந்தைகளைப் போல 'டயபர்' மாட்டிக்கொண்டு விடிய விடிய நடனமாடுவார்கள். - -----------------------------

அஞ்சனை மைந்தனின் அவதாரம் போற்றுவோம் !

Posted: 28 Dec 2016 12:12 AM PST

அஞ்சனை மைந்தனின் அவதாரம் போற்றுவோம் ! இன்று உலகெங்கும் இந்து மத பக்தர்களால் ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் வீர ஆஞ்சநேயரைப் பணிந்து போற்றுவோம். அவரது ஹனுமான் சாலீஸாவைப் பக்தியோடு பாராயணம் செய்தால் அனைத்துச் சங்கடங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. இதை எழுதிய மகா ஞானி ஸ்ரீ துளஸிதாஸர். இவர் ராம, ஆஞ்சநேய தரிசனம் பெற்ற மகான். வீட்டின் தூய்மையான இடத்தில் ஆஞ்சநேயர் படத்தின் முன்னால் இதை பாராயணம் செய்யலாம். பக்தியுடனும் அன்புடனும் ஹனுமன் சாலீஸாவைப் பாராயணம் செய்தால் அங்கே ...

அமெரிக்க ராணுவ வீர்ர்களின் நினைவிடமான பேர்ல் துறைமுகத்தில் அஞ்சலி செலுத்த ஜப்பான் பிரதமர் அபே அமெரிக்கா வருகை

Posted: 27 Dec 2016 09:36 PM PST

- வாஷிங்டன் - இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த அமெரிக்க ராணுவ வீர்ர்களின் நினைவிடமான பேர்ல் துறைமுகத்தில் அஞ்சலி செலுத்த ஹவாய்க்கு ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே வந்தடைந்தார். இரண்டாம் உலகப் போர் : 1941 ஆம் ஆண்டு நடந்த இரண்டாம் உலகப் போரில், அமெரிக்க ராணுவ விமான தளத்தின் மீது ஜப்பான் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் ஆயிரத்துக்கும் அதிகமான அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் நினைவாக பேர்ல் துறைமுகத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், ஜப்பான் ...

அதிகபட்ச அதிகாரம் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை மனமகிழ் மன்றம் போல செயல்படுகிறது - ட்ரம்ப் தாக்கு

Posted: 27 Dec 2016 09:34 PM PST

புதன் கிழமை, 28 டிசம்பர் 2016 உலகம் அ+ அ- நியூயார்க் - ஐக்கிய நாடுகள் சபை அதிகபட்ச அதிகாரத்தை கொண்டிருந்தும், மக்கள் கூடி மகிழும் கிளப் போல செயல்படுவது வருத்தம் அளிக்கிறது என அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றிய பாலஸ்தீன பகுதிகளில் யூத குடியிருப்புகளைக் கட்டக்கூடாது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியது. அமெரிக்கா வீட்டோ அதிகாரம் : அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்தத் தீர்மானம் ...

1 கிலோ கோஸ் ரூ.2 : விவசாயிகள் வேதனை

Posted: 27 Dec 2016 09:32 PM PST

- சத்தியமங்கலம்: பணப் பிரச்னையால், முட்டைக் கோஸ் விலை, கிலோ, 2 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப்பகுதியில், குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவுகிறது. இதனால், தாளவாடியை சுற்றிஉள்ள, 100க்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாயிகள், 10 ஆயிரம் ஏக்கரில் முட்டைக்கோஸ் சாகுபடி செய்தனர். ஆனால், பணத் தட்டுப்பாட்டால், விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோவுக்கு, 2 ரூபாய் மட்டுமே கிடைப்பதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விவசாயிகள் கூறியதாவது: முட்டைக்கோஸ், ...

நூல்கள் தேவையா !!!!!

Posted: 27 Dec 2016 08:30 PM PST

நண்பர்களே

கடந்த சில வருடங்களாக நான் வலைதளத்தில் தேடி திரட்டிய பல நூல்கள் என் வசம் உள்ளன.
எல்லாவற்றையும் பதிவிடுவதை விட, தேவையன நூல்களை மட்டும் முதலில் பதிவேற்றம் செய்யலாம் என எண்ணியுள்ளேன்.
இது என் முதல் முயற்சி. உங்கள் ஆதரவுடன் !!!!!!!! என் முதல் பதிவேற்றம் சாண்டில்யனின் ஜலதீபம் 3 ம் பகம் தனி திரியில்.

நன்றி

கி.ஸ்ரீநிவாசன்

நாங்கள் நாகரிகமானவர்கள்!

Posted: 27 Dec 2016 06:39 PM PST

- ஈட்டிகளை எல்லாம் ஏவுகணைகளாய் மாற்றி விட்டோம்! எறியும் கற்களை எல்லாம் வெடிகுண்டுகளாய் ஆக்கி விட்டோம்! – அம்புபோட்டு மனிதர்களை கொல்வதை விட அணுகுண்டு போட்டு மொத்தமாகக் கொல்லும் மார்க்கம் தெரிந்து விட்டோம்! – நதிக்கரைகளில் படை கூட்டி எதிரிகளை வீழ்த்தும் நிலை மாற்றி நதி நீரில் விஷம் கலக்கும் நயவஞ்சகம் கற்றோம்! – நேருக்கு நேர் நின்று போர் செய்யும் நிலை மாறி மறைந்திருந்து போர் செய்யும் கொரில்லா முறையும் அறிந்தோம்! – நிராயுதபாணிகளை தாக்காத நியாயமான நிலையை மாற்றி சமாதானக் கொடி ...

தமிழ் சினிமா 2016: ‘வர்த்தக நாயகன்’ சிவகார்த்திகேயன்!

Posted: 27 Dec 2016 05:59 PM PST

- 'ரெமோ' படத்தில் சிவகார்த்திகேயன் | கோப்பு படம் தமிழ் சினிமாவில் 2016-ஐ பொறுத்தவரையில், தங்களின் வர்த்தகத்துக்கு உறுதுணைபுரிந்த நாயகன் சிவகார்த்திகேயன் தான் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். 2015-ம் ஆண்டு பலமுறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு, தயாரிப்பு நிறுவனத்திக்கு ஏற்பட்ட பொருள் நெருக்கடியால் தள்ளி வைக்கப்பட்ட படம் 'ரஜினி முருகன்'. பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இப்படம் பொங்கல் 2016-ல் வெளியானது . 'தாரை தப்பட்டை', ...

ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது

Posted: 27 Dec 2016 05:48 PM PST

துமகூரு அருகே பழுதான டிரான்ஸ்பார்மரை மாற்றி தருவதற்கு ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளரை ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் கைது செய்தனர். லஞ்சம் துமகூரு மாவட்டம் திப்தூர் கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதானது. இதன் காரணமாக திப்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சில கிராமங்களில் வசிக்கும் மக்கள் மின் இணைப்பு இன்றி அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால், பழுதான டிரான்ஸ்பார்மருக்கு பதில் புதிதாக டிரான்ஸ்பார்மர் நிறுவ வேண்டும் என கிராம மக்கள் குப்பியில் உள்ள 'பெஸ்காம்' ...

சிந்துவின் எழுச்சியால் 2016-ல் இந்திய பாட்மிண்டன் மீது குவிந்த கவனம்

Posted: 27 Dec 2016 05:46 PM PST

- – 2016… இந்திய பாட்மிண்டன் விளையாட்டின் பொன்னான ஆண்டு. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாய்னாவால் இயலாமல் போனாலும், ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று ரசிகர்களின் பதக்க தாகம் தீர்த்தார் சிந்து. முன்னிலை நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால் காயத்தால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள, அவரது இடத்தை ஒலிம்பிக் போட்டிகளில் சிந்து நிறைவு செய்தது சிறப்பு. ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்துடன் உலக பாட்மிண்டன் அரங்கில் சிந்து தன்னை சக்திவாய்ந்த ஒரு வீராங்கனையாக உருவாக்கிக் கொண்டுள்ளார். சாய்னா நெவால் காயமடைந்ததினால் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™