Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'சசி' விளையாடல் அரங்கேறுமா? குமரி வரை குமுறும் ஜெ., பக்தர்கள்

Posted: 28 Dec 2016 08:22 AM PST

'கழகத்தின் நிரந்தர பொதுச் செயலர்' என்று அடையாளப்படுத்தப்பட்ட ஜெயலலிதா கால மான நிலையில்,இன்று, அ.தி.மு.க.,வின் பொது குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. வழக்க மான கூட்டமாக அல்லாமல், இக் கூட்டம் அதிக முக்கியத்துவம் பெற்றிருப்பதற்கான காரணம்... சசிகலா.

ஜெயலலிதாவின் தோழியாக, 30 ஆண்டு களுக் கும் மேல் நெருக்கமாக இருந்து, அவரின் மரணத்துக்கு சாட்சியாகி, தற்போது, 'சின்னம்மா வாக, தன் விசுவாசிகளிடம், அடையாள அட்டை வாங்கி இருக்கிறார். 'இன்று நடைபெறும் பொதுக்குழுவில் சசிகலா பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்படுவதும், விரைவில் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்பதும் ...

325 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள்: அறிவித்தார் முலாயம்

Posted: 28 Dec 2016 08:55 AM PST

லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில், தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்த, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங், 325 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்தார்.

உத்தர பிரதேசத்தில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கி றது. அடுத்தாண்டு துவக்கத்தில், இங்கு சட்ட சபை தேர்தல் நடக்கவுள்ளது. ஆளும் சமாஜ் வாதி கட்சியில், முதல்வர் அகிலேஷ் யாதவுக் கும், அவரது சித்தப்பா சிவ்பால் யாதவுக்கும் கடும் மோதல் நிலவுகிறது.
இவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில், கட்சி தலைவர் முலாயம், தொடர்ந்து ஈடுபட்டு ...

வெள்ளை அறிக்கை வெளியிடணும்! : ராகுல் வலியுறுத்தல்

Posted: 28 Dec 2016 09:08 AM PST

புதுடில்லி: ''செல்லாத ரூபாய் நோட்டு திட்டம் குறித்து, மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்; வங்கிகளில் பணம் பெற, விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை வாபஸ் பெற வேண்டும்,'' என, காங்., துணை தலைவர், ராகுல் வலியுறுத்தி உள்ளார்.

டில்லியில் நேற்று, காங்., துணை தலைவர், ராகுல், கூறியதாவது: செல்லாத நோட்டு திட்டம் குறித்த வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும். இந்த திட்டத்தை, 50 குடும்பங்கள் பயனடையும் நோக்கில், பிரதமர், நரேந்திர மோடி அமல்படுத்தி உள்ளார். செல் லாத நோட்டு அறிவிப்பு வெளியான, நவ., 8க்கு பின், எவ்வளவு கறுப்புப் பணம் வந்துள்ளது,
...

சசி பொதுச்செயலரானால் கூட்டம் கூட்டமாக வெளியேறுவோம்!:அ.தி.மு.க., தொண்டர்கள், நிர்வாகிகள் ஆவேசம்: முதல்வர் பன்னீருக்கு பல தரப்பிலும் பெருகுது ஆதரவு

Posted: 28 Dec 2016 09:11 AM PST

அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலாவை தேர்வு செய்ய, அக்கட்சியின் அடிமட்ட தொண் டர்களும், நிர்வாகிகளும், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதையும் மீறி, இன்றைய பொதுக்குழுவில், அவர் தேர்வு செய்யப்பட்டால், கூட்டம் கூட்ட மாக வெளியேறுவோம் என, ஆவேச எச்ச ரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரத்தில், முதல் வர் பன்னீர்செல்வத்திற்கு, பல தரப்பிலும் ஆத ரவு பெருகி வருவது, அக்கட்சி வட்டாரத் தில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலாவை தேர்வு செய்யும் முயற்சிகள், அக்கட்சியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இன்றைய பொதுக்குழுவில், ...

ம.பி., முன்னாள் முதல்வர் சுந்தர்லால் காலமானார்

Posted: 28 Dec 2016 09:17 AM PST

போபால்: பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான சுந்தர்லால் பட்வா, 92, மாரடைப்பால் நேற்று(டிச.,28) காலமானார்.
இரு முறை முதல்வர்:
ம.பி., மாநிலத்தில், பா.ஜ., கட்சியை சேர்ந்த முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், இரண்டு முறை முதல்வராக இருந்தவர், சுந்தர்லால் பட்வா.
ஜனதா கட்சி சார்பில், 1980ம் ஆண்டிலும், பா.ஜ., சார்பில் 1990ம் ஆண்டிலும், சுந்தர்லால் பட்வா, ம.பி., மாநில முதல்வராக பதவி வகித்தார். 1998ல், வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய கிராமப் புற வளர்ச்சி ...

'அறிக்கையை விரைவாக சமர்ப்பியுங்க!' மத்திய குழுவிடம் பன்னீர் வேண்டுகோள்

Posted: 28 Dec 2016 09:18 AM PST

சென்னை:'புயல் பாதிப்புகளை முழுமையாக பார்வையிட்டு, பாதிப்பு குறித்த அறிக்கையை, மத்திய உள்துறையிடம் விரைவாக சமர்ப்பி யுங்கள்' என, மத்திய குழுவினரிடம், முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னையில், டிச., 12ல், 'வர்தா' புயல் கரை கடந்தது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர் மாவட்டங்களில், பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பாதிப்புகளை ஆய்வு செய்ய, மத்திய உள்துறை இணை செயலர், பிரவீன் வசிஸ்டா தலைமையில், ஒன்பது பேர் குழுவினர் சென்னை வந்துள்ளனர்.இக்குழுவினர், நேற்று காலை, சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினர். ...

ராமமோகன ராவுக்கு எதிராக நடவடிக்கை மத்திய அரசு பச்சைக்கொடி

Posted: 28 Dec 2016 09:22 AM PST

அரசுகளை மிரட்டும் வகையில், ராமமோகன ராவ் பேட்டி அளித்ததை அறிந்த, மத்திய அரசு, 'எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம்; விசாரணையை தொடருங்கள்' என, வருமான வரித்துறைக்கு, பச்சைக் கொட்டி காட்டியுள்ளது.

பிரபல மணல் கான்ட்ராக்டர், சேகர் ரெட்டி வீட்டில் நடந்த சோதனையில், சிக்கிய ஆதாரங் கள் அடிப்படையில், டிச., 21ல், தமிழக தலைமை செயலராக இருந்த, ராமமோகன ராவின், அண்ணா நகர் வீட்டில், வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதையடுத்து, நேற்று முன்தினம், ராவ் பரபரப்பாக பேட்டி அளித்தார்.அப்போது, 'துப்பாக்கி முனையில் மிரட்டி, என் னிடம் அதிகாரிகள் வாக்குமூலம் வாங்கி ...

செல்லாத ரூபாய் நோட்டு வைத்திருந்தால் 4 ஆண்டு... சிறை?:அபராதம் விதிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted: 28 Dec 2016 09:31 AM PST

செல்லாத, 1,000 - 500 ரூபாய் நோட்டுகளுக் கான சட்ட அந்தஸ்தை நிரந்தரமாக நீக்கும் நோக்கத்தில், அவற்றை வைத்திருந்தால், அபரா தம் விதிக்கும் அவசர சட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் படும் என்றும் தெரிகிறது; இதன்படி, மார்ச், 31க்கு பின், செல்லாத நோட்டுகளை வைத்திருப் பது சட்டப்படி குற்றம்.

கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டு கள் செல்லாதென, பிரதமர், நரேந்திர மோடி அறிவித்தார். அவற்றை வங்கிகளில், 'டிபாசிட்' செய்ய, டிச., 30ம் தேதி வரை, அவகாசம் தரப்பட்டது. ...

பொதுக்குழுவில் பொதுச்செயலரை தேர்வு செய்யலாமா அ.தி.மு.க., விதிகள் சொல்வது என்ன

Posted: 28 Dec 2016 09:35 AM PST

அ. .தி.மு.க., சட்ட விதிகளின்படி, கட்சியின் பொதுச்செயலரை, அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த விதியை மாற்றவோ, திருத்தவோ முடியாது. இந்த விதி யின்படி பார்த்தால், இன்று நடக்கும் பொதுக் குழுவில், அ.தி.மு.க., பொதுச் செயல ராக, சசிகலாவை தேர்ந்தெடுக்க முடியுமா என்பது கேள்விக்குறி.

அ.தி.மு.க., பொதுக்குழு, இன்று சென்னையில் கூடுகிறது. இதில், கட்சியின் பொதுச்செயலராக, சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற, எதிர் பார்ப்பு எழுந்துள்ளது. பொதுச்செயலராக, சசிகலாவை தேர்ந்தெடுக்க, விதிகளில் திருத்தம் கொண்டு வர தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ...

சேகர் ரெட்டியிடம் 'கட்டிங்' வாங்கிய அதிகாரிகள் யார் யார்

Posted: 28 Dec 2016 09:46 AM PST

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சேகர் ரெட்டியின் அரசியல் செல்வாக்கைப் பார்த்து, வருமான வரித்துறை அதிகாரிகள் வாயடைத்துப் போயுள்ளனர். தமிழகம் முதல் டில்லி வரை, பல மட்டங்களில், அவரது சாம்ராஜ்ஜியம் பரந்து விரிந்துள்ளது.

கடந்த, 8ம் தேதி, வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தும் வரை, பலருக்கும், சேகர் ரெட்டியை தெரியவில்லை. ஆனால், அவரது வீடுகளில் இருந்து, 177 கிலோ தங்க நகைகள், 34 கோடி ரூபாய்க்கு, புதிய, 2,000 ரூபாய் உட்பட, 132 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.அப்போது தான் அவரது பின்புலம் வெளிச்சத் துக்கு வந்தது. ஆட்சியின் அதிகார மையத்திற் கும், முக்கிய ...

விபத்துக்குள்ளான ரஷ்ய ராணுவ விமானத்தின் மற்றொரு ஒலிப்பதிவு கருவியும் கண்டுபிடிப்பு

Posted: 28 Dec 2016 10:55 AM PST

சோச்சி: ரஷ்ய நாட்டுக்கு சொந்தமான ராணுவ விமானம் டி.யு., 54 கருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணம் செய்த 92 பேரும் இறந்தனர்.
மீட்பு பணி
இந்நிலையில் விமானம் விபத்து நடந்த கருங்கடல் பகுதியில் கடலுக்கு அடியில் விமானத்தின் சிதைந்த பாகங்களை மீட்பு படையினர் மீட்க தொடங்கியுள்ளனர். மீட்புப் பணியில் 3,600 பேர் ஈடுபட்டுள்ளனர். அந்நாட்டு கப்பல் படையைச் சேர்ந்த 200 நீச்சல் வீரர்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான இன்ஜினின் பாகங்களும் மற்ற பாகங்களும் மீட்கப்பட்டு வருகின்றன. விபத்தில் ...

பியர்ல் தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்த ஜப்பான் அதிபர்

Posted: 28 Dec 2016 12:28 PM PST

ஹவாய் : இரண்டாம் உலகப் போர் சமயத்தில் அமெரிக்காவின் பியர்ல் துறைமுக தாக்குதலுக்காக ஜப்பான் அதிபர் ஷின்ஷோ அபே வருத்தம் தெரிவித்தார்.
அதிரடி தாக்குதல்
1941ம் ஆண்டு டிசம்பர் 7 ம் நாள் அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள பியர்ல் துறைமுகத்தில் ஜப்பான் தாக்குதல் நடத்தியது. பெரும் உயர்சேதமும், பலத்த பொருட்சேதமும் அடைந்த அமெரிக்கா ஜப்பானின் ஹீரோசிமா, நாகசாகி மீது அணு குண்டு வீசி பழி தீர்த்தது.
அஞ்சலி
அமெரிக்க தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்த கடந்த மே மாதம் அமெரிக்க அதிபர் ...

திருமலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழிபாடு

Posted: 28 Dec 2016 01:20 PM PST

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தன் குடும்பத்தினருடன் வழிபாடு நடத்தினார்.
தரிசனம் :
திருப்பதி - திருமலை ஏழுமலையானை வழிபட, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நேற்று மதியம் திருமலைக்கு வந்தார். அவரை, தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசன ஏற்பாடு செய்தனர். கொடி மரத்தை வணங்கியபடி சென்று, ஏழுமலையானை தரிசித்து திரும்பிய அவருக்கு, தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகர் மண்டபத்தில் வேத ஆசீர்வாதம், சிறப்பு பிரசாதம், 2017-ஆம் ஆண்டின் நாள்காட்டி, டைரி ஆகியவற்றை ...

5 மாநில அரசுகளுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்

Posted: 28 Dec 2016 02:13 PM PST

புதுடில்லி: உ.பி., உள்ளிட்ட ஐந்து மாநிலங்களும், மத்திய அரசும், சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன், தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்த தயாராக இருக்கும்படி, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.
சட்டசபை தேர்தல்:
உ.பி., - உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு, அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இது தொடர்பாக, மத்திய அமைச்சக செயலருக்கும், இம்மாநிலங்களின் தலைமை செயலர்களுக்கும், தேர்தல் கமிஷன் அனுப்பியுள்ள கடித விபரம்: ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் அறிவிப்பை, தேர்தல் கமிஷன் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™