ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பணம் தரும் பெட்டி
- வேரோடு சாய்ந்த மரம்
- முக நூலில் செய்த ஒரு சிறு தவறு தந்த பெருவிளைவு.(Sweet Sixteen)
- மோடிஜின் அடுத்த அதிரடி -டிஜிட்டல் பிச்சைக்காரர்.
- அறிமுகம் :நாகா கணேசன்
- சூரத்தை சேர்ந்த பைனான்சியர் 700 பேரை பயன்படுத்தி கோடிக்கணக்கில் கறுப்புப் பணத்தை மாற்றியது கண்டுபிடிப்பு: சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை
- நடிகர் ஷாருக்கானுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: ஹைதராபாத் உருது பல்கலை வழங்கியது
- ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக வழக்கு: போலீஸில் புகார் கொடுக்க நீதிபதி அறிவுரை
- Paytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி
- ரூ.100 கோடி வந்தது எப்படி? பிரதமர் அலுவலக உதவியை நாடும் பெண்
- உயர்ந்த உள்ளம் – ஒரு பக்க கதை !
- டிப்ஸ்… டிப்ஸ்…(மகளிர் மணி)
- ரெண்டு வரிலே ரூபாய் நோட்
- நாலு பேர் கைமாறி வந்த அதிர்ஷ்ட மோதிரம்...!!
- பசி – ஒரு பக்க கதை !
- வீடு தேடி வந்து ரூ.2000 கொடுக்கும் ஸ்நாப்டீல் !
- 2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் !
- என்னைப் பற்றி:நான்! !
- பெரியவாளின் கருணாகடாக்ஷம்......
- தெரிஞ்சுக்கோங்க!......'வெல்க்ரோ' பிறந்த கதை!
- அவிநாசி அருகே ரூ.35 லட்சம் பறிமுதல்; 5 பேரிடம் விசாரணை
- 2017ல் மேலும் 200 ரயில் நிலையங்களில் வை-பை வசதி: சுரேஷ் பிரபு
- குஜராத்தில் பாடகி மீது பண மழை
- அனுமன் ஜயந்தி விழா நாளை தொடக்கம்
- வெற்றி மொழி: ஜோயல் ஆஸ்டீன்
| Posted: 27 Dec 2016 11:34 AM PST பணம் தரும் பெட்டி கர்ணனாய் இருந்தாயே கேட்டதெல்லாம் கொடுத்தாயே கஞ்சனாய் மாறித்தான் கடிவாளம் போட்டாயே கால்கடுக்க நின்றவர்கள் காததூரம் கடந்துவந்தால் பால்கொடுக்கும் பசுமாடு பால்மரத்துப் போனதென்ன பத்தாயிரம் இருபதாயிரம் பலமுறை கொடுத்தநீயும் சொத்தாயிரம் இருந்தபோதும் சொற்பப்பணம் தருவதென்ன உன்னிடமும் பணமில்லை உள்ளேயும் பணமில்லை என்னுடைய கணக்கினிலே எவ்வளவிருந்தும் எனக்கில்லை வரிசையிலே கால்கடுக்க வந்துநாங்கள் உனைக்கேட்டால் தரிசுநில விளைச்சலைப்போல் தருவதெல்லாம் ... |
| Posted: 27 Dec 2016 10:31 AM PST வேரோடு சாய்ந்த மரம் மரம் போனது மனம் மரத்துப் போனது நிழல் போனது நெஞ்சம் நினைத்து வாடுது பசுமை போனது பஞ்சம் பல்லைக் காட்டுது கிளை போனது கிள்ளை கிடந்து வாடுது அடி போனது அரட்டை ஆட்டம் கண்டது உச்சி முறிந்தது ஊஞ்சல் ஆட்டம் முடிந்தது இலை இறந்தது இயற்கை இனிமை இழந்தது பழம் பறந்தது பசி படுத்தி எடுத்தது கூடு சிதைந்தது கூட்டமாய் பறவை அலைந்தது வேர்கள் வெடித்தது வானம் பொழிய மறந்தது மரம் போனது மனம் மரத்துப் போனது அடுத்த தலைமுறை ஆட்டம் அடங்கிப் ... |
| முக நூலில் செய்த ஒரு சிறு தவறு தந்த பெருவிளைவு.(Sweet Sixteen) Posted: 27 Dec 2016 09:13 AM PST நேற்றைய தினம்(டிசெம்பர் 26) லா ஜோயா என்ற மெக்சிக்கோ கிராமத்தில் வாழும் ரூபி கார்சியா என்ற 15 வயதுப் பெண் தனது பிறந்த நாளைக் கொண்டாடினாள்.அதையொட்டி அவளின் தந்தை முக நூலில் பகிர்வொன்றை செய்தார். We invite you on December 26 to our daughter Rubi Ibarra Garcia's quinceañera in La Joya, everyone is cordially invited . 1,2 மில்லியன் பயணர்கள் (RSVP ) பதிலளித்திருந்தனர்.ஏராளமானோர் மெக்சிக்கோ முழுவதிலும் இருந்து பிறந்த நாளில் கலந்து கொள்ள வந்திருந்தனர். மெக்சிக்கோ எயர்லயின்ஸ் அதிக பயணிகள் காரணமாக ... |
| மோடிஜின் அடுத்த அதிரடி -டிஜிட்டல் பிச்சைக்காரர். Posted: 27 Dec 2016 09:03 AM PST அது மோடிஜின் அதிரடி அல்ல. நெதெர்லாந்து-அம்ஸ்டர்டாம் நகரில் உள்ள N=5 ஐ சேர்ந்த கார்ஸ்டன் வன் பேர்கல்,ஸ்டெபன் லேண்டார்ஸ் இருவரும் இணைந்து தயாரித்த மேலங்கியாகும்(contactless payment jacket ) வீடற்றவர்கள் பிச்சைக்காரர்களுக்காக தயாரிக்கப்பட்ட இந்த மேலங்கியில் ஒரு டிஜிட்டல் அட்டை தொங்கவிடப்பட்டுள்ளது. பிச்சை எடுப்பவர்கள் கையில் பாத்திரமோ அல்லது கைகளை நீட்டியோ பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. கண்களுக்கு நன்றாக தெரியக் கூடிய அந்த அட்டையில் பிச்சை போட விரும்புபவர்கள் தங்கள் வங்கி கிரெடிட் ... |
| Posted: 27 Dec 2016 08:11 AM PST பெயர்:சித்ரா கணேசன் சொந்த ஊர்:நாமக்கல் ஆண்/பெண்:பெண் ஈகரையை அறிந்த விதம்:நாவல் தேடும் போது அறிந்தேன் பொழுதுபோக்கு:கதை படிப்பது தொழில்:************ மேலும் என்னைப் பற்றி:குடும்ப தலைவி 2 குழந்தைகள்.காலெஜ்ல் படித்துக்கொண்டு இருக்கிறார்கள்.கணவர் EB வேலை செய்கிறார். |
| Posted: 27 Dec 2016 07:20 AM PST - சூரத்தை சேர்ந்த பைனான்சியர், 700 பேர் மூலம் வங்கியில் பணம் டெபாசிட் செய்து மீண்டும் எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த பைனான்சியர் கிஷோர் பஜியாவாலா. ரகசிய தகவலின் அடிப்படையில் இவருடைய வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சமீபத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் காட்டப்படாத ரூ.10.45 கோடி பணம், நகைகளை பறிமுதல் செய்தனர். அத்துடன் 400 கோடிக்கு சொத் துகள் வைத்துள்ளதும் ... |
| நடிகர் ஷாருக்கானுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: ஹைதராபாத் உருது பல்கலை வழங்கியது Posted: 27 Dec 2016 07:16 AM PST -- ஹைதராபாத்தில் உள்ள மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம் சார்பில் நேற்று பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இவ்விழாவில் நடிகர் ஷாருக்கான் பேசியதாவது: எனக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு நான் தகுதி உள்ளவனா என தெரியவில்லை. எனது பெற்றோர்கள் உயிருடன் இருந்திருந்து இந்தக் காட்சியை பார்த்திருந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். எனினும் எனது தாயாரின் பிறந்த ஊரான இதே ... |
| ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக வழக்கு: போலீஸில் புகார் கொடுக்க நீதிபதி அறிவுரை Posted: 27 Dec 2016 07:09 AM PST சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.எஸ்.கீதா, எழும்பூர் பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ''முன் னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவரது சந்தேக மரணம் தொடர்பாக வி.கே.சசிகலா, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அப்போலோ மருத்துவமனை டாக்டர் பிரதாப் சி.ரெட்டி உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதியவும், அரசு உயரதிகாரிகள் பிரமாண வாக்குமூலம் அளிக்கவும், போயஸ் தோட்டம் மற்றும் அப்போலோ மருத்துவமனை சிசிடிவி பதிவுகளை பத்திரப்படுத்தவும் ... |
| Paytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி Posted: 27 Dec 2016 04:18 AM PST - Paytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி Last Modified: திங்கள், 26 டிசம்பர் 2016 (17:55 IST) Paytm மூலம் பண பரிவர்த்தனை செய்ய எஸ்.பி.ஐ தடை விதித்துள்ளது. இதனால் எஸ்.பி.ஐ. வங்கி கணக்கு உள்ளவர்கள் பரிவர்த்தனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். – எஸ்.பி.ஐ வங்கி Paytm மூலம் பண பரிவர்த்தனை செய்ய தடைவிதித்துள்ளது. இதுகுறித்து எஸ்.பி.ஐ டுவிட்டரில், Paytm மூலம் பரிவர்த்தனை செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக State Bank Buddy என்ற மொபைல் ஆப்பை பயன்படுத்துங்கள் என்று தெரிவித்துள்ளது. இதற்கு ... |
| ரூ.100 கோடி வந்தது எப்படி? பிரதமர் அலுவலக உதவியை நாடும் பெண் Posted: 27 Dec 2016 04:10 AM PST -- காசியாபாத்: தனது வங்கிக்கணக்கில் யாரோ ரூ.100 கோடி டிபாசிட் செய்துள்ளது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் ஒருவர் பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். - பதில் இல்லை: - உ.பி., மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர் ஜிலேதர் சிங், இவரது மனைவி சீதல் யாதவ். இவர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பிரதமர் அறிவித்த ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கு வைத்துள்ளார். - ஜிலேதர் சிங் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிய புகார்: - கடந்த 18 ம் தேதி, தனது வீட்டருகேயுள்ள ஐசிஐசிஐ வங்கி ... |
| உயர்ந்த உள்ளம் – ஒரு பக்க கதை ! Posted: 27 Dec 2016 03:42 AM PST இன்னைக்கு நாம குடும்பத்தோட வெளிய போறதா இருக்கோம். ராத்திரிதான் வருவோம். ஆனாலும், காலங்கார்த்தால எழுந்து நீ சமைக்க ஆரம்பிச்சுட்டே. வெளியே சாப்பிட்டுக்கலாமே, ஏம்மா கஷ்டப்படுறே?" – செல்ல மகள் சிணுங்கலோடு கேட்டாள் - வெளியேதான் சாப்பிடப் போறோம்! - அப்புறம் என்ன பண்றே|? - வேலை இருக்குடி…நீ கிளம்பு! – துரத்திவிட்டாள் அம்மா. - சுஜி, அன்று முழுக்க குழம்பியபடியே வந்தாள். வீடு திரும்பியவுடன் பார்த்தால், சமையல் மேடையில் சமைத்த பாத்திரங்கள் கழுவிக் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன - என்னம்மா, ... |
| Posted: 26 Dec 2016 11:24 PM PST மழைக்காலம் தொடங்க இருக்கிறது, மழைக் காலத்தில் மொட்டை மாடியில் பெரிய குவளையின் மேலே வெள்ளை துணியைக் கட்டி வைத்து மழைநீரை அதில் சேகரியுங்கள். சேகரித்த நீரை நன்றாக காய வைத்து கேன்களில் அடைத்து வைத்து நீரை அருந்தி பாருங்கள். தண்ணீர் அப்படி ஒரு சுவையாக இருக்கும். மழை நீரில் சாதம் வடித்தால் சாதம் வெண்மையாகவும் சுவையாகவும் இருக்கும். – பி. கவிதா – ——————————————— – * உங்கள் ஆடையில் "பபுள்கம்' ஒட்டிக் கொண்டதா? அந்த இடத்தில் சிறிது மண்ணெண்ணெய் ஊற்றி, ஊற வைத்து எடுத்தால் பபுள்கம் கையோடு ... |
| Posted: 26 Dec 2016 11:15 PM PST ரெண்டு வரிலே ரூபாய் நோட் நன்றி கட்செவி ரமணியன் |
| நாலு பேர் கைமாறி வந்த அதிர்ஷ்ட மோதிரம்...!! Posted: 26 Dec 2016 11:14 PM PST காதலிதான் உனக்கு மோதிரம் கொடுத்திருக்காளே.. அப்புறம் ஏன் வருத்தமா இருக்கே..? நாலு பேர் கைமாறி வந்த அதிர்ஷ்ட மோதிரம் இதுன்னு சொல்லிட்டுப் போறாடா..! _________________ எங்க டாக்டர் எந்த வாய்ப்பையும் தவற விடமாட்டார்.. அதுக்காக நாக்கை நீட்டச் சொல்லிட்டு அதில ஸ்டாம்பை ஒத்தி ஒட்டுறது நல்லாவா இருக்கு..? _________________ கல்யாண நிகழ்ச்சியை ஒண்ணுவிடாம வீடியோ எடுக்கணும்ன்னு நாங்க சொன்னதை உங்கப்பன் தப்பா புரிஞ்சிகிட்டார்ன்னு நெனைக்கிறேன்.. ஏங்க..? எதுவும் தப்பாயிட்டுதா..? முதலிரவு ... |
| Posted: 26 Dec 2016 11:04 PM PST வயிறார சாப்பிட்டு இன்றோடு மூன்று நாட்களாகி விட்டது. பசி மயக்கத்தில் உறங்கிய குழந்தைகளையும், காயம் பட்டு படுத்திருந்த கணவன் மாரியையும் இயலாமையோடு பார்த்தாள் அஞ்சலை. - தொழிலுக்குப் போய் ஒரு வாரமாகி விட்டது. கையில் சல்லிக்காசு இல்லை. குழந்தைகள் பட்டினியில் வாடி அவதிப்பட, இப்படி ஒரு வாழ்க்கை தேவையில்லை என்ற முடிவுடன் எழுந்தாள். அடுக்களையில் இருந்த எலி மருந்துடன் வந்து நின்றவளை வெறித்துப் பார்த்தான் மாரி. - அவள் நோக்கம் புரிந்து. அவள் கையிலிருந்த மருந்தை பிடுங்கித் தூக்கிப் போட்டுவிட்டு, ... |
| வீடு தேடி வந்து ரூ.2000 கொடுக்கும் ஸ்நாப்டீல் ! Posted: 26 Dec 2016 10:52 PM PST வீடு தேடி வந்து ரூ.2000 கொடுக்கும் ஸ்நாப்டீல் ! ஸ்நாப்டீல் நிறுவனம் cash@home என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் வீடு தேடி வந்து ரூ.2000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் பணத்தட்டுபாடு நிலவுகிறது. ஏடிஎம் மற்றும் வங்கிகளில் பணம் இல்லாததால் பொதுமக்கள் பணம் எடுக்க வெகு நேரம் காத்து கிடக்கின்றனர். பிக் பஸார் மற்றும் பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களில் ரூ.2000 நோட்டு கிடைக்கும் என்று மத்திய ... |
| 2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ! Posted: 26 Dec 2016 10:41 PM PST - ஆண்டின் முதல் தேதியில் எண் கணிதப்படி, 3 ஆக வருகிறது. 2017 ஆம் ஆண்டின் எண் 1 என்று வருகிறது. அதனால் 1 ஆம் எண்ணுக்குரிய சூரியபகவானும் 3 ஆம் எண்ணுக்குரிய குருபகவானும் இந்த புத்தாண்டில் முக்கியமானவர்களாக கருதப்பட வேண்டும். இந்த ஆண்டு 26.1.2017 (வியாழக்கிழமை) இரவு 7.28 (ஐஎஸ்டி) மணிக்கு சனி ஹோரையில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். 7.4.2017 (வியாழக்கிழமை) பின்னிரவு 5.40 (ஐஎஸ்டி) மணிக்கு (விடிந்தால் வெள்ளிக்கிழமை) சூரியஹோரையில் மூலம் நட்சத்திரம் ... |
| Posted: 26 Dec 2016 10:38 PM PST பெயர்:மிதுனா சொந்த ஊர்:விழுப்புரம் ஆண்/பெண்: ஈகரையை அறிந்த விதம்:ரமணிச்சந்திரன் நாவல் தேடிய போது அறிந்தேன் பொழுதுபோக்கு:புத்தகங்கள் படிப்பது தொழில்:இல்லத்தரசி மேலும் என்னைப் பற்றி |
| பெரியவாளின் கருணாகடாக்ஷம்...... Posted: 26 Dec 2016 09:58 PM PST ஒனக்கு இனிமே எந்தக் கொறையும் இருக்காது… பல வர்ஷங்களுக்கு முன்னால், உபன்யாஸ சக்ரவர்த்தி சேங்காலிபுரம் ஶ்ரீ அனந்தராம தீக்ஷதர், ஶ்ரீமடத்தில் இருந்தபோது, நடந்த மெய்சிலிர்க்க வைக்கும் ஸம்பவம். ஒரு வெள்ளிக்கிழமையன்று, ஶ்ரீமடத்தில் ஸுவாஸினி பூஜைக்கு ஏற்பாடாகியிருந்தது. ஸாக்ஷாத் பெரியவாளே அங்கே அமர்ந்திருக்க, பல ஊர்களிலிருந்து ஏகப்பட்ட ஸுமங்கலிகள் வந்திருந்தது, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இவர்களிடையே ஒரு பெண்மணி மட்டும் சற்று வித்யாஸமாக இருந்தாள். ஸுமார் நாற்பது, நாற்பத்தஞ்சு வயஸிருக்கும். ... |
| தெரிஞ்சுக்கோங்க!......'வெல்க்ரோ' பிறந்த கதை! Posted: 26 Dec 2016 09:12 PM PST வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| அவிநாசி அருகே ரூ.35 லட்சம் பறிமுதல்; 5 பேரிடம் விசாரணை Posted: 26 Dec 2016 07:50 PM PST அவிநாசி: அவிநாசி அருகே ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. சோதனை: கோவையை சேர்ந்த 3 பேர் காரிலும், 2 பேர் இரு சக்கர வாகனத்திலும் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். வழியில், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள பெருமாநல்லூர் நான்கு வழிச்சாலை அருகே, நள்ளிரவு 12.15 மணியளவில் போலீசார் வாகன சோதனையின் போது அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனையடுத்து காரை சோதனை நடத்தினர். காரில் ... |
| 2017ல் மேலும் 200 ரயில் நிலையங்களில் வை-பை வசதி: சுரேஷ் பிரபு Posted: 26 Dec 2016 07:48 PM PST திருவனந்தபுரம்: 2017-ம் ஆண்டு மேலும் 200 ரயில் நிலையங்களில் வை-பை வசதி ஏற்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். துவக்க விழா: கேரளாவில் கண்ணூர், எர்ணாகுளம் மற்றும் கொல்லம் உள்ளிட்ட 6 ரயில் நிலையங்களில், வை-பை வசதி துவக்க விழாவில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கலந்து கொண்டார். விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அம்மாநில பொதுத் துறை அமைச்சர் சுதாகரன் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சுரேஷ் பிரபு பேசியதாவது: ... |
| Posted: 26 Dec 2016 07:46 PM PST - நவ்சாரி : குஜராத்தில் இசை கச்சேரியை ரசித்த ரசிகர்கள் பாடகர், பாடகி மீது ரூபாய் நோட்டுகள் வீசி எறிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது. பண மழை : பா.ஜ., ஆட்சி நடக்கும் குஜராத் மாநிலம் நவ்சாரியில் குஜராத் காஷாத்ரியா காதியா அன்ற அமைப்பு ஏற்பாடுசெய்திருந்த ஒரு இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் அம்மாநில பிரபல பாடகர்கள் பரிதா மிர், கிர்த்திதன் காத்வி ஆகிய கிராமிய பாடகியர் மீது அங்கு குவிந்த ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும், 10 - 20 ரூபாய் நோட்டுகளை வீசியெறிந்தனர்; இவ்வாறு ... |
| அனுமன் ஜயந்தி விழா நாளை தொடக்கம் Posted: 26 Dec 2016 07:28 PM PST - – திருவள்ளூரை அடுத்த தேவி மீனாட்சி நகரில் உள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில், அனுமன் ஜயந்தி விழா புதன்கிழமை (டிசம்பர் 28) முதல் வரும் ஜனவரி 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆண்டுதோறும் மார்கழி மாத மூல நட்சத்திரத்தன்று, அனுமன் ஜயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருவள்ளூர் தேவி மீனாட்சி நகரில் உள்ள 32 அடி உயர, விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் புதன்கிழமை காலை 8.30 மணிக்கு, மூலவருக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெறுகிறது. 29-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை தினமும் காலை 9 ... |
| Posted: 26 Dec 2016 07:27 PM PST - 1963-ம் ஆண்டு பிறந்த ஜோயல் ஆஸ்டீன் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்துவ மதகுருமார், போதகர் மற்றும் எழுத்தாளர். பிரசங்கங்களில் தனது தனிப்பட்ட அணுகுமுறையை உருவாக்கிப் புகழ்பெற்றவர். இவரது தொலைக்காட்சி சொற்பொழிவுகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த லட்சக் கணக்கான பார்வையாளர்கள் உள்ளனர். ரேடியோ சேனல்களின் மூலம் ஒளிபரப்பப்படும் இவரது போதனைகளும் அதிக பிரசித்தி பெற்றவை. நியூயார்க் டைம்ஸின் சிறந்த விற்பனைப் பட்டியலில் இடம்பெற்று விற்பனையில் பெரும் சாதனை புரிந்த புத்தகங்கள் இவரது ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |