Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


விமர்சிப்பவர்களுக்கு எதிராக நரேந்திர மோடி... கொதிப்பு!: குத்துவிளக்கேற்ற பிரதமராகவில்லை என்கிறார்

Posted: 27 Dec 2016 08:37 AM PST

டேராடூன்:''ரிப்பன் வெட்ட, குத்துவிளக்கு ஏற்றவா, மக்கள் எங்களை தேர்ந்தெடுத்தனர்; கறுப்புப் பணம், ஊழலை ஒழிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பியதை செய்து வருகிறேன்,'' என, பிரதமர் நரேந்திர மோடி, ஆவேசமாக பேசினார்.

முதல்வர் ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கும் உத்தரகண்ட் மாநிலத்தில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.அதற்கு தயாராகும் வகையில், பா.ஜ., சார்பில், டேராடூனில் நடந்த பிரசார பேரணியில் நேற்று பங்கேற்ற, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ...

நிரபராதி என மோடி நிரூபிக்கணும்! : ராகுல் வலியுறுத்தல்

Posted: 27 Dec 2016 09:08 AM PST

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, காங்., - திரிணமுல் காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், டில்லியில் நேற்று, கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்; அப்போது, தான் நிரபராதி என, மோடி நிரூபிக்க வேண்டும் என்றும், பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

மத்திய அரசின், செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்துக்கு, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பார்லி மென்டில், அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஒருங்கி ணைந்து செயல்பட்ட நிலையில், பார்லி.,க்கு வெளியிலும், அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சி களை ...

பொதுச்செயலர் பதவி விஷயத்தில் நினைத்ததை சாதிக்க சசி தரப்பு... மும்முரம்:பொதுக்குழு கூட்டம் முடிந்ததும் மந்திரிகள் சிலருக்கு 'கல்தா':'தலையாட்டி பொம்மை'களை நியமிக்க பட்டியல் தயாரிப்பு தீவிரம்

Posted: 27 Dec 2016 09:10 AM PST

அ.தி.மு.க.,வில் எழுந்துள்ள எதிர்ப்புகளை சரிக்கட்டி, பொதுச்செயலர் பதவி விஷயத்தில் நினைத்ததை சாதிக்க, சசி தரப்பு மும்முரம் காட்டி வருகிறது.

அத்துடன், பொதுக்குழு முடிந்த சூட்டோடு, 'சரிவராத' மந்திரிகள் சிலருக்கு, 'கல்தா' கொடுக் கவும், சொன்னதை கேட்கும் தலையாட்டி பொம்மைகளாக பார்த்து, அமைச்சரவை யில் நியமிக்கவும் திட்டமிட்டுள்ளது. அதற்கான பட்டியல் தயாரிப்பு, தற்போது தீவிரமாக நடந்து வருவதாக, அ.தி.மு.க., வட்டாரம் தெரிவித்துள்ளது.ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, நிதி அமைச்சராக இருந்த பன்னீர்செல்வம், முதல்வ ராக பொறுப்பேற்றார். ஏற்கனவே, ஜெயலலிதா இரண்டு முறை பதவி ...

என்னை நீக்க அரசுக்கு துணிச்சல் இல்லை மாஜி ராமமோகன ராவ் ஆவேசம்

Posted: 27 Dec 2016 09:25 AM PST

''என் வீட்டில் நடந்த சோதனை, அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது நடந்த தாக்குதல். எனக்கு பணியிட மாற்றம் வழங்க, தமிழக அரசு க்கு துணிச்சல் இல்லை. ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்ட, நான் தான் தலைமைச் செயலர்,'' என, வருமான வரி சோதனையில் சிக்கியுள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராமமோகன ராவ் கூறினார்.

சென்னை, அண்ணா நகரில் உள்ள வீட்டில், நேற்று காலை, ராவ் அளித்த பரபரப்பு பேட்டி:எனக்கு ஆதரவாக பேசிய, மேற்கு வங்க முதல் வர், மம்தா பானர்ஜி, காங்., துணை தலை வர் ராகுல், அ.தி.மு.க., - எம்.பி., எஸ்.ஆர். பால சுப்பிரமணியம் ஆகியோருக்கு நன்றி. வருமான வரித்துறை நடத்திய சோதனையில், என் வீட்டில் என்ன ...

ஜெ., மரணத்தில் மர்மம்: நீதி விசாரணை கோரி வழக்கு

Posted: 27 Dec 2016 09:38 AM PST

சென்னை:முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதால், அதுகுறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மூவர் அடங்கிய குழுவை நியமிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது; இம்மனு, நாளை விசாரணைக்கு வருகிறது.

சென்னை, அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் தாக்கல் செய்த மனு:
நான், அ.தி.மு.க.,வில் உறுப்பினராக உள்ளேன். முதல்வராக பொறுப்பேற்ற, நான்கு மாதங்க ளில், செப்., 22ல், அப்பல்லோ மருத்துவமனை யில், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அதிலிருந்து, அவர் மரணம் அடையும் வரை, என்ன நடந்தது என்பது பற்றி, மக்களுக்கு தெரிய ...

அரசு அதிகாரிகள் கார் பயன்படுத்த 'கிடுக்கி' 'டாக்சி' மட்டுமே பயன்படுத்த வேண்டும்

Posted: 27 Dec 2016 09:46 AM PST

புதுடில்லி:'அரசு துறைகள், வாடகைக்கு கார் களை எடுக்கும்போது, 'டாக்சி' என்ற பெய ரில் பதிவு செய்யப்பட்ட கார்களை மட்டுமே வாடகைக்கு எடுக்க வேண்டும்' என, மத்திய கண்காணிப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த, 1990களில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விபரத்தின்படி, அரசு பணிகளுக்கு, அரசே கார் களையும், டிரைவர் களையும் பயன்படுத்துவ தால், ஒரு மாதத்துக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை செலவானது; இப்போதைய கணக்குப் படி, இச்செலவு இன்னும் அதிகரிக்கலாம். வாடகை கார்: அதே நேரத்தில், வாடகை கார்களை பயன்படுத்தும்போது, மாதத்துக்கு, 26 ஆயிரம் ரூபாய் வரையே ...

மின் வாரிய ஊழியர் நியமனத்திற்கு சசிகலா குடும்பம் முட்டுக்கட்டை

Posted: 27 Dec 2016 09:49 AM PST

மின் வாரியத்தில், ஊழியர்களை நியமிக்க, நேர்காணல் நடத்த, மன்னார்குடி குடும்பம் முட்டுக்கட்டை போடுவதாக புகார் எழுந்துள்ளது.

கூடுதல் பணிச்சுமை
தமிழ்நாடு மின் வாரியத்தில், 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. மாதந்தோறும் சராசரி யாக, 300 ஊழியர்கள் ஓய்வு பெற்று வருகின்ற னர். இதனால், மின் ஊழியர்களுக்கு, கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு உள்ளது. இதை யடுத்து, இளநிலை உதவியாளர், 'டைப்பிஸ்ட்' உள் ளிட்ட, 2,175 காலி பணியிடங்களை, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நிரப்ப, மின் வாரியம் முடிவு செய்தது. அதன்படி, ஜூன், ஆகஸ்ட் மாதங்களில், அண்ணா பல்கலை மூலம், ...

அதிக கார்கள் விற்பனை எப்படி வருமான வரித்துறை அதிர்ச்சி

Posted: 27 Dec 2016 09:57 AM PST

புதுடில்லி:அதிக வருமான வரி செலுத்து வோரை விட, கார்களின் விற்பனை அதிகமாக இருப்பது, வருமான வரித்துறைக்கு ஆச்ச ரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, வருமான வரித்துறை, அமலாக்கத் துறை என, பல்வேறு நிதித்துறை தொடர்பான அமைப்புகளின் நடவடிக்கைகள் தீவிரமடைந் துள்ளன. இந்நிலையில், அதிக வருமானம் பெறுவதாக அறிவித்துள்ளவர்களை விட, கார்களின் விற்பனை அதிகமாக உள்ளது குறித்து வருமான வரித்துறை மிக தீவிரமாக வும், நுட்பமாகவும் ஆராய்ந்து வருகிறது. இது குறித்து, வருமான வரித்துறை உயரதிகாரிகள் கூறியதாவது: * வருமான ...

ராவ் அறையில் சோதனை அனுமதி கொடுத்தாரா பன்னீர்?

Posted: 27 Dec 2016 10:16 AM PST

'சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள, ராமமோகன ராவ் அறையில், தமிழக அரசின் ஒப்புதலுக்கு பிறகே, சோதனை நடத்தப்பட்டு உள்ளது' என்ற தகவல் வெளியாகிஉள்ளது.

தமிழக தலைமை செயலராக இருந்த ராம மோகன ராவின் வீட்டில், வருமான வரித் துறை யினர், 21ம் தேதி சோதனை நடத்தினர். அதில், 25 கிலோ வெள்ளி, 50 சவரன் தங்கம், மற்றும், 1.12 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப் பட்டது. அதேபோல, தலைமை செயலகத்தில் உள்ள, அவரது அறையிலும் சோதனை நடந்தது. இது தொடர்பாக, ராவ் நேற்று அளித்த பேட்டியில், 'ஜெய லலிதா இருந்திருந்தால், தலைமைச் செயலகத்திற் குள், மத்திய பாதுகாப்புபடையினருடன் நுழைந்து, வருமான ...

ரேஷன் கார்டுகளில் ஓராண்டுக்கு உள்தாள் ஒட்ட உத்தரவு

Posted: 27 Dec 2016 11:22 AM PST

சென்னை: ரேஷன் கார்டுகளில், ஓராண்டுக்கு உள்தாள் ஒட்ட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, முதன்மை செயலர் பிரதீப் யாதவ் கூறியுள்ளதாவது:தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை, ஜன., 1 முதல், டிச., 31 வரை நீட்டிக்க, அரசு அனுமதி அளித்துள்ளது.
உள்தாள்கள், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலம், வழங்கப்படும். அதற்கு ஆதாரமாக, ரேஷன் கார்டில், '2017க்கான உள்தாளை பெற்றுக் கொண்டேன்' என்ற முத்திரையிட்டு, அதன் கீழே ரேஷன் கார்டுதாரரின் கையொப்பம், இடது கை பெருவிரல் ரேகை ...

இலவச வேட்டி, சேலை வினியோகம் எப்போது?

Posted: 27 Dec 2016 12:38 PM PST

'பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை வினியோகம், ஜனவரி முதல் வாரத்தில் துவங்கும்' என, வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்பார்ப்பு:
கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தமிழக அரசு, 1983 முதல், பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டுக்கான வினியோகத்தை, 2015 டிச., 29ல், முதல்வராக இருந்த ஜெயலலிதா துவக்கி வைத்தார். வரும் பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை வினியோகம் எப்போது துவங்கும் என, மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
வினியோகம்:
இது குறித்து, ...

வங்கி கணக்கில்லாதவர்களுக்கு ஏ.டி.எம்.,கார்டு; நக்சல் சதி என போலீஸ் சந்தேகம்

Posted: 27 Dec 2016 02:33 PM PST

பாட்னா: பிகாரில் வங்கி கணக்கில்லாவர்களுக்கு ஏ.டி.எம்.,கார்டு வந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கு பண தட்டுபாட்டை சமாளிக்க நக்சல் தீவிரவாதிகள் சதி வேலை காரணமாக இருக்கலாம் போலீசார் சந்தேகித்து வருகின்றனர்.

பிகார் மாநிலத்தில் நக்சல் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஜமூய் மாவட்டத்தில் உள்ள அச்சம்பாவ் கிராமத்தில் உள்ள வங்கி கணக்கு இல்லாத சிலருக்கு சிஜோரி பஞ்சாப் நேசனல் வங்கியில் இருந்து ஏ.டி.எம்., கார்டுகள் வந்துள்ளது. இதனால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஜமூய் போலீசார் ...

20 ஆயிரம் என்.ஜி.ஓ., லைசென்ஸ் அதிரடி ரத்து

Posted: 27 Dec 2016 03:44 PM PST

புதுடில்லி: வெளிநாட்டு நன்கொடை பெறுவதில், சட்ட விதிகளை மீறியதாக, என்.ஜி.ஓ., எனப்படும் அரசு சாரா அமைப்புகளில், 20 ஆயிரம், என்.ஜி.ஓ.,க்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டவர் பிரிவின் ஆய்வுக் கூட்டம், உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் தலைமையில், நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள்:
நாடு முழுவதும், 33 ஆயிரம், என்.ஜி.ஓ.,க்கள் அரசிடம் பதிவு செய்துள்ளன. வெளிநாட்டு நன்கொடைகள் பெறுவது தொடர்பான விதிமுறைகளை மீறியதால், இவற்றில், 20 ஆயிரம் அமைப்புகளின் லைசென்ஸ் ரத்து ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™