Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ரேஷன் அட்டையின் காலம் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு: உள்தாள் ஒட்டப்படும் என தமிழக அரசு தகவல்

Posted: 22 Dec 2016 09:02 AM PST

தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள ரேஷன் அட்டைகளின் காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. இதற்காக,ரேஷன் அட்டைகளில் உள்தாள் ஒட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, உணவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மின்னணு குடும்ப அட்டைகளை வழங்க மேலும் கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, இப்போதுள்ள குடும்ப அட்டைகளில் 6 மாதங்களுக்கு உள்தாள் ஒட்ட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. மின்னணு அட்டை வழங்கும் நாளில் இருந்து, அவர்களிடம் உள்ள பழைய குடும்ப அட்டை, உள்தாள்கள் முடிவுக்கு ...

‘ஷாலினிதான் எனது ரோல் மாடல்’ - நடிகை சுவாதிஷ்டா கிருஷ்ணன் பேட்டி

Posted: 22 Dec 2016 07:51 AM PST

- தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வலம் வந்துகொண்டிருந்த சுவாதிஷ்டா கிருஷ்ணணுக்குக் கதாநாயகியாகப் பதவி உயர்வு கிடைத்திருக்கிறது. இயக்குநர்கள் ராம், மிஷ்கின் நடித்திருக்கும் 'சவரக்கத்தி' படத்தில் சுவாதிஷ்டாவுக்கு முக்கியக் கதாபாத்திரம். அறிமுகப்படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்து முடித்துவிட்டார். அவரைச் சந்தித்தபோது… - ரோல் மாடல் என்று யாரையும் வைத்திருக்கிறீர்களா? - சினிமாவில் என்னுடைய ரோல் மாடல்ன்னா அது நடிகை ஷாலினி. ...

தமிழக தலைமைச் செயலாளர்.. கிரிஜா வைத்தியநாதன்!

Posted: 22 Dec 2016 07:51 AM PST

திமுக- அதிமுக முத்திரை முற்றிலும் இல்லாத முதல் தலைமைச் செயலாளர்.. கிரிஜா வைத்தியநாதன்! சென்னை: வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியதை அடுத்து, தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு கிரிஜா வைத்தியநாதன் புதிய தலைமைச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரைப் பற்றிய விவரங்களை பார்க்கலாம். தஞ்சாவூர் மாவட்டத் சேர்ந்த கிரிஜா வைத்தியநாதன் 1981 ஆம் ஐஏஎஸ் அதிகாரியாக தமிழக பிரிவில் இணைந்தவர். மதுரை மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக பணியாற்றியுள்ளார். சுகாதாரத் துறை, ...

இறந்தவர்களின் ஆதார் அட்டையை நீக்க வழியே இல்லை

Posted: 22 Dec 2016 06:23 AM PST

இறந்தவர்களின் ஆதார் அட்டையை நீக்க வழியே இல்லை என்று தெரியுமா உங்களுக்கு..? சில நகரங்களில் பிறந்த குழந்தைக்கும் ஆதார் அட்டை வழங்கப்படுகின்றது என்பதை கேட்கும் போது ஆச்சர்யமாக உள்ளது.ஆதார் அட்டையை வாங்குவது மிகவும் கடினமான வேலையாக பார்க்கப்படுகின்றது. ஆனால் சில நகரங்களில் பிறந்த குழந்தைக்கும் ஆதார் அட்டை வழங்கப்படுகின்றது என்பதை கேட்கும் போது ஆச்சர்யமாக உள்ளது. அது இருக்கட்டும் ஆதார் அட்டையை வாங்குவதற்கு வழி இருக்கிறது. இறந்தவர்களை ஆதார் அட்டையில் இருந்து நீக்க இதுவரை வழியே இல்லை என்று கூறுகின்றது ...

ஜீரோவின் ஹீரோ! : இன்று கணித மேதை ராமானுஜம் பிறந்த நாள்!

Posted: 22 Dec 2016 04:40 AM PST

தேசிய கணித தினம்: கணிதமேதை சீனிவாச ராமனுஜர் 125 வது பிறந்தநாள் ! ஈரோட்டில் பிறந்து இங்கிலாந்தில் கணிதத் துறையில் உச்சம்தொட்டவர் ராமானுஜன். கணிதம் சம்பந்தப்பட்ட நுாலினை 13 வயதில் இரவல் வாங்கி படித்தது முதல் அவரது மனம் கணிதத்தில் லயித்தது. இளைஞர் பருவத்தில் சென்னை துறைமுகத்தில் குமாஸ்தா வேலை பார்த்தார். லண்டனில் பிரபல கணித அறிஞர் ஹார்டிக்கு, தன்னுடைய கணித ஆர்வம் பற்றியும், மாணவராக சேர்ந்து பயில்வதற்கான விருப்பத்தையும் கடிதம் மூலம்எழுதினார். இந்திய மாணவர் சேர்க்கை அலுவலகம் மூலம், சென்னையில் ...

புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்!

Posted: 22 Dec 2016 02:13 AM PST

ராமேஸ்வரம்:வங்ககடலில் உருவான புயல் தாக்கியதால் 1964 டிச.,22ம் தேதி நள்ளிரவு ஜலசமாதி ஆன தனுஷ்கோடி வணிக நகரின் 52வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இலங்கை மன்னர் ராவணனிடம் இருந்து சீதையை மீட்டு ராமர் திரும்பியபோது, அவர்மீது எய்த அம்பு விழுந்த இடம் தனுஷ்கோடி, என ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. தனுஷ்கோடி கடலில் நீராடினால் பாவங்கள் விலகி புண்ணியம் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க தனுஷ்கோடி ராமேஸ்வரத்தில் இருந்து 18 கி.மீ., துாரத்தில் உள்ளது. ஆங்கிலேயர் ...

காரணம் ஆயிரம்: விலங்குகளின் பிரம்மாண்ட பேரணி

Posted: 22 Dec 2016 12:41 AM PST

பக்கத்தில் இருக்கிற பள்ளிக்கூடத்துக்குக்கூட நாம் நடந்து செல்வதில்லை. வாடகைக்கு ஆட்டோ வைத்துக் கொள்கிறோம். பள்ளிக்கூடப் பேருந்தில் போகிறோம். கொஞ்சம் பெரிய பசங்க என்றால், தனியாக வண்டியில் போவார்கள் இல்லையா? பொதுவாக நடப்பது என்றாலே அலுத்துக்கொள்கிறோம். ஆனால் சில விலங்குகள், கால்நடையாகவே ரொம்ப தூரம்கூடப் போகின்றன தெரியுமா? அதுவும் ஏழு மலைகள், ஏழு கடல்கள் தாண்டிகூட நடக்கின்றன. ஏழாவது உலகத்தில் இருக்கிற அற்புத விளக்கைக் கண்டுபிடிக்கிற மாதிரியான திகில் நிறைந்த நடை பயணம் அது. பொதுவாக ...

நூல்கள் தேவையா !!!!!

Posted: 22 Dec 2016 12:32 AM PST

நண்பர்களே

கடந்த சில வருடங்களாக நான் வலைதளத்தில் தேடி திரட்டிய பல நூல்கள் என் வசம் உள்ளன.
எல்லாவற்றையும் பதிவிடுவதை விட, தேவையன நூல்களை மட்டும் முதலில் பதிவேற்றம் செய்யலாம் என எண்ணியுள்ளேன்.
இது என் முதல் முயற்சி. உங்கள் ஆதரவுடன் !!!!!!!! என் முதல் பதிவேற்றம் சாண்டில்யனின் ஜலதீபம் 3 ம் பகம் தனி திரியில்.

நன்றி

கி.ஸ்ரீநிவாசன்

22.12.1666: சீக்கியர்களின் கடைசி குருவான குரு கோவிந்த் சிங்கின் பிறந்த தினம் இன்று!

Posted: 21 Dec 2016 09:37 PM PST

- சீக்கியர்களின் கடைசி குருவான குரு கோவிந்த் சிங் 22.12.1666 அன்று பீகாரில் பாட்னாவில் பிறந்தவர். இவர் ஓன்பதாவது சீக்கிய குருவான குருதேக் பகதூரின் மகன்; இவரது தாயார் பெயர் மாதா குஜ்ரி ஆவார். இவர் இளமையிலேயே அரபி, பெர்சியன், சமற்கிருதம் போன்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். மேலும் குதிரைச் சவாரி, பலவகைத் துப்பாக்கிகள், ஆயுதங்கள் முதலியவற்றைக் கையாள்வதிலும் சிறப்புப் பெற்று விளங்கினார். 1675 முதல் தனது இறப்பு வரை சீக்கியரின் குருவாக இருந்தார். மொகாலயப் பேரரசர் அவுரங்கசீப்புடனான சீக்கியரின் ...

தமிழ்நேசன் அவர்களுக்கு

Posted: 21 Dec 2016 08:33 PM PST

என் முகவரி

muthusimpu@gmail.com

ரூ. 1 கோடி டிபாசிட்? கூலி தொழிலாளிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

Posted: 21 Dec 2016 07:39 PM PST

போபால்: வங்கியில் ரூ.1 கோடி செலுத்தியதாக கூலி தொழிலாளி ஒருவருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து, வங்கி ஊழியர் தவறே அதிக பணம் டிபாசிட் ஆக மாறியதாக வங்கி விளக்கம் அளித்துள்ளது. அதிர்ச்சி: மத்திய பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் அசாராம் விஸ்வகர்மா. கூலி தொழிலாளி. கடந்த சில நாட்களுக்கு முன்னர், வருமான வரித்துறை அதிகாரிகள், கடந்த நவம்பர் 30ம்தேதி இவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அந்த நோட்டீசில், " பான் எண் இல்லாமல் ...

நாலு பேர் கைமாறி வந்த அதிர்ஷ்ட மோதிரம்...!!

Posted: 21 Dec 2016 05:48 PM PST

காதலிதான் உனக்கு மோதிரம் கொடுத்திருக்காளே.. அப்புறம் ஏன் வருத்தமா இருக்கே..? நாலு பேர் கைமாறி வந்த அதிர்ஷ்ட மோதிரம் இதுன்னு சொல்லிட்டுப் போறாடா..! _________________ எங்க டாக்டர் எந்த வாய்ப்பையும் தவற விடமாட்டார்.. அதுக்காக நாக்கை நீட்டச் சொல்லிட்டு அதில ஸ்டாம்பை ஒத்தி ஒட்டுறது நல்லாவா இருக்கு..? _________________ கல்யாண நிகழ்ச்சியை ஒண்ணுவிடாம வீடியோ எடுக்கணும்ன்னு நாங்க சொன்னதை உங்கப்பன் தப்பா புரிஞ்சிகிட்டார்ன்னு நெனைக்கிறேன்.. ஏங்க..? எதுவும் தப்பாயிட்டுதா..? முதலிரவு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™