Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


வாகன பதிவுக்கு இனி 'பார்க்கிங் சர்டிபிகேட்'

Posted: 22 Dec 2016 09:38 AM PST

புதுடில்லி: பொது இடங்களில், கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதை தடுக்கும் வகையில், புதிதாக வாகன பதிவு செய்யும் போது, வாகன நிறுத்துமிடம் இருப்பதற்கான சான்றிதழ் தருவது, விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளது.
அரசு பரிசீலனை :
மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, டில்லியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது: பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, கழிப்பறைகளை அதிகம் கட்ட, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கழிப்பறைக்கு இடம் ஒதுக்கப்படாமல், எந்த ஒரு கட்டுமானத்திற்கும் இனிமேல் அனுமதி ...

வருமான வரித்துறை சோதனையை அடுத்து ராமமோகன ராவ் நீக்கம்!:புதிய தலைமை செயலராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்:அரசியல்வாதிகள் அடிமையாக செயல்பட மாட்டார் என எதிர்பார்ப்பு

Posted: 22 Dec 2016 08:49 AM PST

வருமான வரித்துறை சோதனையை அடுத்து, தமிழக தலைமை செயலர் பதவியில் இருந்து, ராமமோகன ராவ் நீக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளான். புதிய தலைமை செயலராக, நில நிர்வாக கமிஷனர், கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், அரசியல்வாதிகள் அடிமையாக செயல்பட மாட்டார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசின் தலைமை செயலராக இருந்த ராமமோகன ராவ், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாக புகார் எழுந்தது. அவனுக்கு நெருக்கமான சேகர்ரெட்டி வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள், சில தினங்களுக்கு முன், திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ...

காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக பிரதமர் மோடி சரவெடி!:கறுப்பு பண முதலைகளுக்கு வக்காலத்து என விளாசல்

Posted: 22 Dec 2016 09:00 AM PST

வாரணாசி:''பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவுவது போல், கறுப்பு பணக்காரர்களுக்கு காங்கிரஸ் கட்சி உதவி வருகிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி, கடுமையாக சாடினார்.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், தன் சொந்த தொகுதியான, உ.பி., மாநிலம் வாரணாசிக்கு சென்று உள்ள பிரதமர் மோடி, அங்கு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, புதிய திட்டங்களை துவக்கி வைத்தார். அங்கு நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:செல்லாத ரூபாய் நோட்டு திட்டம், கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் அறிவிக்கப் பட்டது. கறுப்பு பணத்துக்கு எதிரான இந்த நட வடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் ...

இதய நோயை தடுக்கும் கருவிக்கு வருகிறது விலை கட்டுப்பாடு

Posted: 22 Dec 2016 09:19 AM PST

புற்றுநோய், எச்.ஐ.வி., வைரஸ், மலேரியா மருந் துகளுக்கான விலையை குறைக்கும் வகை யில், விலை கட்டுப்பாட்டை நிர்ணயித் துள்ள மத்திய அரசு, மாரடைப்பை தடுக்கக் கூடிய இதய தமனி யில் பயன்படுத்தப்படும், 'ஸ்டென்ட்' என்ற கருவிக்கான குறைந்தபட்ச விலையை நிர்ண யிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

நடவடிக்கை
மக்கள், அதிக அளவில் பயன்படுத்தும் மருந்து கள் மற்றும் மருத்துவ கருவிகளுக்கான விலையை கட்டுப்படுத்தும் வகையில், தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியல் தயாரிக்கப் பட்டுள்ளது. இந்தப் பட்டிய லில் இடம்பெற்றுள்ள மருந்துகளுக்கான குறைந்தபட்ச மற்றும் ...

தமிழக பரிந்துரையை நிராகரித்து கிரிஜாவை தேர்வு செய்த மத்திய அரசு

Posted: 22 Dec 2016 09:22 AM PST

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலரை, மத்திய அரசு முடிவு செய்த, தகவல் வெளியாகிஉள்ளது.

ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து, தமிழக அரசு நிர்வாகத்தை, மத்திய அரசு கண்காணிக்கத் துவங்கியது. கவர்னரை மருத் துவமனைக்கு அனுப்பி, ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த விபரங்களைகேட்டறிந்தது.அதன்பின், ஜெயலலிதா செயல்பட முடியாத நிலையில் உள்ளதை அறிந்ததும், அவர் கவனித்து வந்த துறைகளை, வேறு அமைச்ச ருக்கு மாற்றும்படி, கவர்னர் மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, ஜெயல லிதா வசமிருந்த துறைகள், நிதி அமைச்சராக ...

மணல் குவாரி முறைகேட்டில் சேகர் ரெட்டி? சி.பி.ஐ., விசாரித்தால் உண்மை வெளியாகும்

Posted: 22 Dec 2016 09:28 AM PST

பண பரிமாற்ற மோசடியில் சிக்கிய சேகர் ரெட்டி க்கு, மணல் குவாரி முறைகேட்டில் தொடர்பு உள்ளதாக புகார் தெரிவிக்கப்படுவதால், அது குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நாடு முழுவதும், புதிய ரூபாய் நோட்டுகளுக் காக, வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்., மையங்களில் மக்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி வீட்டில் இருந்து, 35 கோடி ரூபாய்க்கு, புதிய ரூபாய் நோட்டுகளை, வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்; சேகர் ரெட்டி கைதானார்.இதன் தொடர்ச்சியாக, தமிழக தலைமை செயல ராக இருந்த, ராம மோகன ராவ் ...

ராவ் சிக்கியது எப்படி: புதிய தகவல் அம்பலம்

Posted: 22 Dec 2016 09:31 AM PST

தமிழக தலைமை செயலராக இருந்த, ராம மோகன ராவ், வருமான வரித் துறை வலையில் சிக்குவதற்கு, அவனது மகன் விவேக்கே காரணம் என்ற, தகவல் தெரிய வந்துள்ளது.

சென்னை, கிழக்கு அண்ணா நகரில் உள்ள, ராமமோகன ராவ் வீடு மற்றும் அலுவலகத்தில், வருமான வரித் துறையினர், அதிரடி சோதனை நடத்தினர்.அதே நேரத்தில்,திருவான்மியூர், ராஜாஜி நகரில் உள்ள, அவனது மகன் விவேக் கின் சொகுசு பங்களா; தேனாம்பேட்டை யில் உள்ள, 'விர்து' என்ற விவேக்குக்கு சொந்தமான நிறுவனத்தி லும் சோதனை நடத்தப்பட்டது.மேலும், கோடம்பாக்கத்தில் உள்ள, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணைய தலைவர் கல்யாணசுந்தரத்தின் ...

நஜீப் ஜங் திடீர் ராஜினாமா; டில்லி அரசியலில் பரபரப்பு

Posted: 22 Dec 2016 09:35 AM PST

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் மோதல் போக்கை பின்பற்றி வந்த, துணை நிலை கவர்னர், நஜீப் ஜங், 65, தன் பதவியை ராஜினாமா செய்து, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, துணை நிலை கவர்னராக பதவி வகித்த நஜீப் ஜங்கிற்கும், கெஜ்ரிவாலுக்கும் பனிப்போர் நிலவி வந்தது. 'நஜீப் ஜங், மாநில அரசின் செயல்பாடுகளுக்கு தடை போடுகிறார்; மத்திய அரசின் கைப்பாவை யாக செயல்படுகிறார்' என, கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக, டில்லி ஐகோர்ட்டி லும் வழக்கு தொடர்ந்தார். 'யூனியன் ...

டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்கள் 11 பேர் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Posted: 22 Dec 2016 09:42 AM PST

சென்னை:அரசு பணியாளர்கள் தேர்வாணைய மான, டி.என்.பி.எஸ்.சி.,க்கு, 11 புதிய உறுப்பினர் களை நியமித்து, ஜன., 31ல், தமிழக அரசு பிறப் பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., எம்.பி., யான, டி.கே.எஸ்.இளங்கோவன் தாக்கல் செய்த மனு:உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்தின் போது, தகுதி மற்றும் திறமையை கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால், ஆளுங்கட்சியினர் மற்றும் முதல்வரின் விசுவாசிகளை நியமித்து உள்ளனர். உறுப்பினர்கள் நியமனத்தில், உச்ச ...

தகவல் தர மறுக்கிறது கர்நாடகா: தவிக்கிறது தமிழக பொ.ப.துறை

Posted: 22 Dec 2016 09:44 AM PST

காவிரி நீர் இருப்பு குறித்த தகவலை தர, கர்நாடக அரசு மறுப்பதால், தமிழக பொதுப்பணித் துறையினர் தவித்து வருகின்றனர்.

'கர்நாடகாவில் உள்ள ஹேமாவதி, ஹேரங்கி, கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் தேக்கப்படும் காவிரி நீரை, தமிழகத்திற்கு வழங்க வேண்டும்; ஆண்டுக்கு, 192 டி.எம்.சி., நீரை, கர்நாடகா வழங்க வேண்டும்' என, காவிரி நடுவர் மன்றம், இறுதி தீர்ப்பில் கூறியுள்ளது. ஆனால், நீரை முறைப்படி வழங்காமல், கர்நா டகா முரண்டு பிடித்து வருகிறது. தமிழக தேவை க்கு, நாள்தோறும் வினாடிக்கு, 2,000 கன அடி நீர் திறக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவையும், கர்நாடகா கண்டு கொள்ள வில்லை. ...

ரஷ்யாவில் மிதமான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.2ஆக பதிவு

Posted: 22 Dec 2016 11:33 AM PST

மாஸ்கோ : ரஷ்யாவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது; ரிக்டரில் 5.2 ஆக பதிவான இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.
மிதமான நிலநடுக்கம் :
ரஷ்யாவின் நிக்கோல்ஸ்கோய் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிக்கோல்ஸ்கோயில் இருந்து சுமார் 79 கி.மீ., தொலைவில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 5.2 ஆக பதிவானதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நிகழ்ந்த இரண்டாவது நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. நிலநடுக்கத்தால் ...

இந்தியாவில் தொழில் துவங்க ஜப்பானுக்கு அழைப்பு: வெங்கையா நாயுடு

Posted: 22 Dec 2016 12:15 PM PST

புதுடில்லி: இந்தியாவில் தொழில் தொடங்கிட ஜப்பான் கம்பெனிகளுக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தின் தலைவர் ஷினிசி கிடாவோகா நேற்று டில்லியில் அமைச்சர் வெங்கையா நாயுடுவை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின் போது ஜப்பானிய கம்பெனிகள் இந்தியாவில் தொழில் தொடங்க இந்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்தார்.
மேக் இன் இந்தியா:
பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா கொள்கை அடிப்படையில் இந்தியாவின் பல கம்பெனிகள் தங்கள் உற்பத்தி திறனை ...

அலெப்போ நகரம் மீட்பு; சிரிய ராணுவம் அறிவிப்பு

Posted: 22 Dec 2016 01:04 PM PST

அலெப்போ: சிரியாவின் அலெப்போ நகரம் கிளர்ச்சியாளர்களிடமிருந்து முழுவதுமாக மீட்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டதாக சிரிய ராணுவம் அறிவித்துள்ளது.
உள்நாட்டுப் போர் :
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக எழுந்த கிளர்ச்சியால், அதிபரின் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடைய, 6-வது ஆண்டாக உள்நாட்டுப்போர் நீடித்து வந்தது. கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள அலெப்போ நகரை முழுமையாக விடுவிப்பதற்காக அதிபர் ஆதரவு படையினர், கடந்த மாதம் முதல் அங்கு கடும் சண்டையில் ஈடுபட்டனர். போரினால் அங்கிருந்து 90 ...

கழிப்பறை கண்டறிய வந்தாச்சு கூகுள் ‛ஆப்'

Posted: 22 Dec 2016 02:03 PM PST

புதுடில்லி: டில்லி மற்றும் மத்திய பிரதேசத்தில், எங்கெங்கு பொது கழிப்பறைகள் உள்ளன என்பதை, 'கூகுள் டாய்லட் லொக்கேட்டர்' ஆப் மூலம் தெரிந்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, டாய்லெட்டைக் கண்டறியும், கூகுள் டாய்லட் லொக்கேட்டர் ‛ஆப்'பை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் அவர் தெரிவித்ததாவது : பிரதமரின் ‛தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், திறந்த வெளியில் இல்லாமல், பொது கழிப்பறையை பயன்படுத்தும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த ஆப் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™