ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தானத்தில் சிறந்தவர் கர்ணனே !
- ஹாங்காங் செல்லும் இந்தியர்களுக்கு இலவச விசா ரத்து : சீனா நடவடிக்கையால் 5 லட்சம் பேர் பாதிப்பு
- ஏழே வழிகளில் ஈசியாக கருப்பு பணத்தை வெள்ளையாக்க........
- குங்குமம் டாக்கீஸ் - சினி செய்திகள்
- இந்த வார திரைச்சுவை - தொடர் பதிவு
- மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கு டியூசன் சென்டரில் ரகசிய படுக்கை அறை: வயாக்ரா மாத்திரைகள் சிக்கியது
- aarimugam
- தமிழ் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது
- சொந்த வங்கிக் கணக்கில் ரூ.25 லட்சம் டெபாசிட்: வங்கி ஊழியர் பணி இடை நீக்கம்
- தலைமை செயலர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை : ரெட்டியுடன் தொடர்பா?
- அரசு அதிகாரியிடம் ரூ.2 கோடி, 30 கிலோ வெள்ளி பறிமுதல்
- தெரிஞ்சுக்கோங்க!......'வெல்க்ரோ' பிறந்த கதை!
- ” கருந்துளசி பூஜை செய் ” !!!
- யார் இவர்? - பிளாரன்ஸ் நைட்டிங்கேல் !
- ஜெ., வழக்கு: ரூ. ஒரு லட்சம் அபராதம்
- சட்டம்
- மாவோயிஸ்ட்களின் ரூ.55 கோடி முடக்கம்
- இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி: ஜடேஜா 'சுழல்' ஜாலம்
- கேரள சர்ச்சுகளிலும் வருது ஆடை கட்டுப்பாடு
| தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தானத்தில் சிறந்தவர் கர்ணனே ! Posted: 21 Dec 2016 10:10 AM PST தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............ இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் இந்த ... |
| ஹாங்காங் செல்லும் இந்தியர்களுக்கு இலவச விசா ரத்து : சீனா நடவடிக்கையால் 5 லட்சம் பேர் பாதிப்பு Posted: 21 Dec 2016 08:30 AM PST பெய்ஜிங் - ஹாங்காங் செல்லும் இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட இலவச விசாவை சீன அரசு திடீரென ரத்து செய்துள்ளது. இலவச 'விசா' - சர்வதேச சுற்றுலா தலங்களில் ஒன்றான ஹாங்காங் முன்பு இங்கிலாந்து கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அது சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதியாக உள்ளது. இங்கு இந்தியர்கள் 'விசா' எதுவும் இன்றி அதாவது இலவச 'விசா'வில் சென்று வர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி செல்லத்தக்க பாஸ்போர்ட்டுடன் ஹாங்காங் செல்லும் இந்தியர் அங்கு 'விசா' இன்றி 14 நாட்கள் தங்க ... |
| ஏழே வழிகளில் ஈசியாக கருப்பு பணத்தை வெள்ளையாக்க........ Posted: 21 Dec 2016 08:14 AM PST ஏழே வழிகளில் ஈசியாக கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் பண முதலைகள்.. தடுக்குமா அரசாங்கம்? மும்பை: புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லுபடியாகாது என அறிவிக்கப்பட்ட பிறகு சுமார் 200 இடங்களில் ஐடி துறை ரெய்டுகள் நடத்தியுள்லது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.17.2 கோடி மதிப்பிலானவை புதிய ரூ.2000 நோட்டுக்களாகும். அரசு அச்சடித்து அனுப்பும் புதிய 2000 நோட்டுக்களை கருப்பு பண முதலைகள் எப்படி பெறுகிறார்கள். தங்கள் கருப்பு பணத்தை எப்படி மாற்றுகிறார்கள் என்பது குறித்த ஒரு பார்வை ... |
| குங்குமம் டாக்கீஸ் - சினி செய்திகள் Posted: 21 Dec 2016 07:53 AM PST - * அசல் ஹீரோவாகவே மாறிவிட்டார் சந்தானம். பேச்சுவார்த்தை, தோரணை அப்படி ஆகிவிட்டது. சண்டைக் காட்சியில் 'டூப்' போடாமல் நடிக்கிறார். ' 'இனி எந்தக் காரணத்தை முன்னிட்டும் தனியான நகைச்சுவை வேடத்தில் நடிக்க மாட்டேன்'' என்று சொல்லிவிட்டார். - ------------------------------------------------- * ஆல்ரெடி தமிழில் கைவசம் 3 படங்கள் வைத்திருக்கும் பூர்ணா, இப்போது அரவிந்த்சாமியுடன் 'சதுரங்க வேட்டை 2'ல் கமிட் ஆகியிருக்கிறார். இப்போது அதில் த்ரிஷாவின் போர்ஷன் படமாக்கப்பட்டு வருகிறது. இதனைத் ... |
| இந்த வார திரைச்சுவை - தொடர் பதிவு Posted: 21 Dec 2016 07:33 AM PST * - இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், அவர் நடித்த படங்கள் படு ஃபிளாப் ஆன பிறகும், இணைய உலகில் சன்னி லியோனுக்கு மவுசு குறையவில்லை. 'இந்தியாவில் ஆன்லைனில் இந்த ஆண்டில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்' பட்டியலில் பிரதமர் மோடி, சூப்பர் ஸ்டார் சல்மான் கான் ஆகியோரைத் தாண்டி முதலிடம் பிடித்திருக்கிறார் சன்னி. - ---------------------------------------- |
| Posted: 21 Dec 2016 07:28 AM PST தர்மபுரி: தர்மபுரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை செய்ததாக புகாரில் சிக்கிய ஆசிரியர் நடத்திய டியூசன் சென்டரில் சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்த ரகசிய படுக்கை அறையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த வயாக்ரா மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்தவர் சிவகுமார்(25). ஆசிரியர் பயிற்சி மற்றும் டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். இவர், அதே பகுதியை சேர்ந்த நண்பர் ஈஸ்வரன்(26), செல்போன் கடை சிவக்குமார் ஆகியோருடன் சேர்ந்து, தளிர் என்ற பெயரில், ... |
| Posted: 21 Dec 2016 07:19 AM PST பெயர்:Hema சொந்த ஊர்:kanchipuram ஆண்/பெண்:penn ஈகரையை அறிந்த விதம்:thydi kidaithathu பொழுதுபோக்கு:puthagam padipathu தொழில் மேலும் என்னைப் பற்றி:puthagam padika pudikum,cooking pudikum |
| தமிழ் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது Posted: 21 Dec 2016 04:52 AM PST - தி எழுத்தாளர் வண்ணதாசன். படம்: அவரின் ஃபேஸ்புக் பக்கம் --- தமிழ் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதைத் தொகுப்புக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. திருநெல்வேலியைச் சேர்ந்த வண்ணதாசனின் இயற்பெயர் கல்யாணசுந்தரம். வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளும் எழுதிவருகிறார். வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் தந்தை மூத்த இலக்கியவாதியான தி.க.சிவசங்கரன் ஆவார். ... |
| சொந்த வங்கிக் கணக்கில் ரூ.25 லட்சம் டெபாசிட்: வங்கி ஊழியர் பணி இடை நீக்கம் Posted: 21 Dec 2016 04:48 AM PST திரிபுரா மாநிலத்தில் முறைகேடனா வழியில் ரூ.25 லட்சத்தை டெபாசிட் செய்த வங்கி ஊழியர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். திரிபுராவில், சிப்பாஹிஜலா மாவட்டத்தில் உள்ள மேலகரில் யூகோ வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கி கிளையின் தலைமை காசாளராக திலீப் தேவ்வர்மா என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தேவ்வர்மா தனது சொந்த வங்கிக் கணக்கில் முறைகேடான முறையில் ரூ.25 லட்சத்தை டெபாசிட் செய்துள்ளார். இதை கண்டுபிடித்த வங்கி நிர்வாகம் அவரை பணி இடை நீக்கம் செய்தது. இது குறித்து யூகோ வங்கியின் மண்டல மேலாளர் ... |
| தலைமை செயலர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை : ரெட்டியுடன் தொடர்பா? Posted: 21 Dec 2016 02:45 AM PST - சென்னை: தமிழக அரசின் தலைமை செயலர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை அண்ணாநகர் மேற்கில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் ஒரு தலைமை செயலர் வீடு சோதனைக்கு ஆளாவது இதுவே முதல் முறையாகும். சேகர் ரெட்டியிடம் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் மோகனராவ் வீட்டில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரித்துறை சோதனைக்கு ஆளான சேகர் ரெட்டிக்கும், தலைமை செயலர் ராம மோகனராவுக்கும் தொடர்பு ... |
| அரசு அதிகாரியிடம் ரூ.2 கோடி, 30 கிலோ வெள்ளி பறிமுதல் Posted: 21 Dec 2016 02:22 AM PST உ.பி.யில் நீர்ப் பாசனத் துறை பொறியாளரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.2 கோடிக்கும் அதிகமான புதிய, பழைய கரன்சி நோட்டுகள், 30 கிலோ வெள்ளி ஆகியவற்றை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் நகரில் வசிப்பவர் ஆர்.கே.ஜெயின். மாவட்ட நீர்ப் பாசனத் துறையில் செயல் பொறியாளராக பணியாற்றி வருகிறார். மீரட்டில் உள்ள இவரின் வீடு, அலுவலகம் மற்றும் வங்கி லாக்கர்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை திடீர் சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத ரூ.2.67 ... |
| தெரிஞ்சுக்கோங்க!......'வெல்க்ரோ' பிறந்த கதை! Posted: 21 Dec 2016 12:56 AM PST வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| Posted: 20 Dec 2016 10:00 PM PST மஹா பெரியவாள் தரிசன அனுபவங்கள் – ஆறாம் பாகத்திலிருந்து ஸ்ரீமதி ஜெயலெஷ்மி அம்மாளின் அனுபவங்கள்…. - ஸ்ரீகுரு பாதுகா சரணம் - மஹாபெரியவாளிடம் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் உள்ள பக்தியை எழுத்துக்களால் எழுதிக் காட்ட முடியாது. நாங்கள் ஸ்ரீவைஷ்ணவர்கள். என்றாலும், பெரியவாளிடம் உரிமை கொண்டாடும் பக்தி இருக்கிறது. நான் வாழ்க்கையைத் தொடங்கிய காலத்தில் ஏராளமான கஷ்டங்கள். திக்குத் திசை தெரியாமல் அல்லாடினேன். அந்தச் சமயத்தில் ஒரு தீட்சிதர், புராணப் பிரவசனம் செய்வதற்காக செங்கற்பட்டுக்கு வந்திருந்தார். ... |
| யார் இவர்? - பிளாரன்ஸ் நைட்டிங்கேல் ! Posted: 20 Dec 2016 09:15 PM PST அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும். அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் ... |
| ஜெ., வழக்கு: ரூ. ஒரு லட்சம் அபராதம் Posted: 20 Dec 2016 07:50 PM PST ஐதராபாத்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து சம்பந்தமான ஒரு வழக்கில், ஐதராபாத் கோர்ட், வழக்கு தொடர்ந்தவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, தீர்ப்பளித்துள்ளது. - தெலுங்கானா சொத்து: - ஜெயலலிதாவிற்கு, தெலுங்கானா (முந்தைய ஒருங்கிணைந்த ஆந்திரா) மாநிலத்தில், திராட்சை தோட்டங்கள், விவசாய நிலங்கள் மற்றும் வணிக வளாகங்கள் என உள்ளன. இவற்றின் மதிப்பு 14.5 கோடி ரூபாய் என்று கூறப்பட்டுள்ளது. - ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், இந்த சொத்துக்கள் அனைத்தையும், தெலுங்கானா மாநில அரசு ... |
| Posted: 20 Dec 2016 07:40 PM PST ஒருவரின் தவறான முறையற்ற செயல்களுக்கு துணை போதல், ஏமாற்றுதல், ஆள் மாறாட்டம் போன்றவைகள் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 25ன்கீழ் வருகிறது. உரிமையியல்டை முறை சட்டம் பிரிவு 91(1908)ன்கீழ் நமக்கு இடையூராய் மற்றவர் செய்யும் செயல் (உ.ம்) நம் வீட்டருகேஇரைச்சல் மிஷின் சத்தம் >>இதை கு.ந.மு.சட்டம் பிரிவு 156(3)ன்கீழ் புகார் செய்து உருத்து கட்டளை பெறலாம்.. |
| மாவோயிஸ்ட்களின் ரூ.55 கோடி முடக்கம் Posted: 20 Dec 2016 05:55 PM PST ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் அமைப்பினரின் 40 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் ரூ.55 கோடி பணம் வைக்கப்பட்டிருந்தது. 40 வங்கிக்கணக்கில், 15 வங்கிக்கணக்குகள் மாவோயிஸ்ட் அமைப்பினரின் முக்கிய தலைவர்களின் வங்கிக்கணக்குகள் என தெரியவந்துள்ளது. மாவோயிஸ்ட்கள் எவ்வாறு இந்த வங்கிக்கணக்குகளை துவங்கி, பணம் போட்டு எடுத்து வருகின்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ராஞ்சி, ஜாம்ஷெட்பூர், சாய்பாசா மாவட்டங்களில், மாவோயிஸ்ட்களின் வங்கிக்கணக்குகள் ... |
| இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி: ஜடேஜா 'சுழல்' ஜாலம் Posted: 20 Dec 2016 05:33 PM PST - சென்னை: சென்னை டெஸ்டில் 'சுழலில்' மிரட்டிய ஜடேஜா 7 விக்கெட் வீழ்த்த, இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டிகள் முடிவில் இந்தியா 3-0 என தொடரை கைப்பற்றி இருந்தது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 477, இந்தியா 759 ('டிக்ளேர்') ரன்கள் எடுத்தன. நான்காம் நாள் ஆட்ட நேர ... |
| கேரள சர்ச்சுகளிலும் வருது ஆடை கட்டுப்பாடு Posted: 20 Dec 2016 05:27 PM PST திருவனந்தபுரம்: பொதுவாகவே கேரள கோவில்களில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு அதிகம். மேல்சட்டை அணிந்தும், கைலி கட்டியும் கோவிலுக்குள் செல்ல பல காலமாகவே அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் பெண்களின் ஆடை முறையிலும் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வகையில், சுடிதார் அணிந்து கொண்டு கோவிலுக்குள் பெண்கள் வரக்கூடாது என சில கோவில் நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. இந்த விஷயம் இப்படி இருக்கையில், கேரள சர்ச்சுகளிலும் ஆடை பிரச்னை தலை தூக்கி உள்ளது. கிறிஸ்துவ மணமகள், திருமணத்தன்று ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |