Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


முன்கூட்டியே கசிந்ததா மனு? கொந்தளிப்பில் பத்திரிகையாளர்கள்

Posted: 21 Dec 2016 08:20 AM PST

பிரதமரை சந்திப்பதற்கு முன்பே, அவரிடம், தமிழக முதல்வர் அளிக்க இருந்த கோரிக்கை மனு குறித்த விபரங்கள் கசிந்த விவகாரம், டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், இதற்கு முன், இரண்டு முறை முதல்வராக பதவி வகித்த அனு பவம் உடையவர். அப்போதெல்லாம், டில்லிக்கு வந்தால், வந்த சுவடு தெரியாமல் சென்று விடுவது வழக்கம்.
தனி அறை தவிர்ப்பு
மூன்றாவது முறையாக முதல்வரான பின், 'வர்தா' புயல் நிவாரண நிதி கோரி, சமீபத்தில் டில்லி வந்தார். தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற அவர், அங்கிருக்கும் முதல்வருக்கான, தனி அறையை தவிர்த்து, ...

கருணாநிதி 'டிவி' பார்க்கும் படம் மருத்துவமனை வெளியிட்டது

Posted: 21 Dec 2016 08:44 AM PST

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நலம் தேறி வருகிறது என்று கூறி, அவர், 'டிவி' பார்க்கும் புகைப்படத்தை, காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
தி.மு.க., தலைவர் கருணாநிதி, சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில், ஏழாவது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். செயற்கை சுவாசத்திற்காக, 'டிராக்கியோஸ்டமி' சிகிச்சை தரப்படுகிறது.
நரம்பியல் டாக்டர்கள், கருணாநிதிக்கு ஞாபக மறதியை போக்கும் சிகிச்சை அளிப்பதற்குரிய சிறப்பு சிகிச்சையை மேற்கொள்ள, ரத்த பரிசோதனைக் கூடத்திற்கு சில ஆய்வுகளை அனுப்பி வைத்துள்ளனர். அப்பரிசோதனை முடிவு ...

நன்கொடை பெறுவதில் தேசிய கட்சிகள் அபாரம்! ரூ.102 கோடிக்கு கணக்கு காட்டியுள்ளன

Posted: 21 Dec 2016 08:49 AM PST

புதுடில்லி:பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட, ஏழு தேசியக் கட்சிகளுக்கு கடந்த நிதியாண்டில், 1,744 பேர், 102 கோடி ரூபாயை, நன்கொடையாக அளித்துள்ளனர்; இதில், மத்தியில் ஆளும் பா.ஜ., வுக்கு மட்டும், 76 கோடி ரூபாயை,613 பேர் நன்கொடையாக அளித்துள்ளனர்.

தேர்தல் ஆணைய சட்டத்தின்படி, 20 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக பெறும் நன்கொடைகள் குறித்த விபரங்களை,அரசியல் கட்சிகள் தாக்கல் செய்ய வேண்டும்.அதற்கு குறைவான தொகையை நன்கொடையாக பெறும்போது, அதை அளித்தவர் யார் என்ற விபரத்தை தெரி விக்க வேண்டிய அவசியமில்லை. இதை மாற்றி, 2,000 ரூபாய்க்கும் மேலான நன் கொடைகளை அளிப்பவர்களின் விபரங்களை யும் ...

சசிகலா முன் கைகட்டி நின்ற துணை வேந்தர்கள் : கவர்னர் விசாரிக்க கோரிக்கை

Posted: 21 Dec 2016 08:52 AM PST

பல்கலைகளின் துணை வேந்தர்கள், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி, சசிகலாவை சந்தித்து, அவர் முன் கைகட்டி நின்ற சம்பவம், கல்வியாளர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அரசு அதிகாரிகள், போயஸ்கார்டன் சென்று, அவர் முன், கைகட்டி நிற்பது வழக்கம். அவர் மறைந்த பின், அவரது தோழி, சசிகலாவை சந்தித்து, கைகட்டி நிற்கும் நடைமுறையை, பலர் மீண்டும் புதுப்பித்து வருகின்றனர். அரசு பல்கலைகளில், சமீபத்தில், புதிதாக நியமிக்கப்பட்ட துணை வேந்தர்கள், போயஸ் கார்டன் சென்று, சசிகலாவை நேரில் சந்தித்தனர். அவர் முன் கைகட்டி நின்று திரும்பினர். இது ...

'செல்லாத ரூபாய் 'டிபாசிட்' செய்ய இனி கேள்வி கேட்க மாட்டோம்'

Posted: 21 Dec 2016 08:59 AM PST

மும்பை: 'செல்லாத ரூபாய் நோட்டுகளை, வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு, கேள்வி எதுவும் கேட்க மாட்டோம்' என, ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான பின், ஒவ்வொரு நாளும் பல்வேறு புதிய அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி உள்ளிட்டவை வெளியிட்டு வருகின்றன.
'செல்லாத ரூபாய் நோட்டுகளை, 5,000 ரூபாய்க்கு மேல் டிபாசிட் செய்தால், இதுவரை அதை ஏன் டிபாசிட் செய்யவில்லை என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்' என, சமீபத்தில், ரிசர்வ் வங்கி அறிவித்தது; இதற்கு, பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு ...

வருமான வரித்துறை பிடியில் தமிழக அரசு தலைமை செயலர் ராவ் மாட்டிக்கிட்டார்! வீடு, 'கோட்டை' அலுவலகம் உட்பட 12 இடங்களில் சோதனை:துணை ராணுவம் வரவழைக்கப்பட்டதன் பின்னணி பற்றி பரபரப்பு:அரசியல்வாதிகளின் கலெக் ஷன் ஏஜன்டாக செயல்பட்டதாக புகார்

Posted: 21 Dec 2016 09:29 AM PST

தமிழக அரசின் தலைமை செயலர் ராமமோகன ராவ், 58, வருமான வரித்துறை பிடியில் வசமாக மாட்டிக் கொண்டார்.

அவரது வீடு மற்றும் கோட்டையில் உள்ள, அவரது அலுவலகம் உட்பட, 12 இடங்களில், நேற்று வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அரசியல்வாதிகளின் கலெக் ஷன் ஏஜன்டாக, ராவ் செயல்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் நடந்த, இந்த சோதனையின் போது, பாதுகாப்பு பணியில், துணை ராணுவம் ஈடுபட்டது, அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசின் உயர் பதவியில் இருக்கும் ராம மோகன ராவ், ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர், 1985ம் ஆண்டு, ஐ.ஏ.எஸ்., ...

சேகர் ரெட்டி சிறையில் அடைப்பு

Posted: 21 Dec 2016 09:43 AM PST

சென்னை:சி.பி.ஐ., சிறப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட, மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி மற்றும் சீனிவாசலுவை, ஜன., 3 வரை காவலில் வைக்கும்படி, சென்னை, சி.பி.ஐ., நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேகர் ரெட்டி, சீனிவாசலு ஆகியோர் மீது, சி.பி.ஐ., நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தது; நேற்று மாலை கைது செய்தது. உடனடியாக, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.அவர்கள் மீது, இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தில், வழக்குப் பதிவு செய் யப்பட்டுள்ளதாக, நீதிமன்றத்தில், சி.பி.ஐ., தெரி வித்தது. இதையடுத்து, இருவரையும், ஜன., 3 வரை காவலில் ...

மின்னணு முறை சம்பளம்: வருகிறது அவசர சட்டம்

Posted: 21 Dec 2016 09:47 AM PST

புதுடில்லி:'டிஜிட்டல்' பரிவர்த்தனையை ஊக்கு விக்கும் வகையில், தொழில் மற்றும் வர்த்தக நிறுவன ஊழியர்களுக்கான சம்பளத்தை, 'செக்' அல்லது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டு மென, அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக, ஊதியச் சட்டத்தில், திருத்தம் செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வருவதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.வர்த்தக மற்றும் தொழில் துறை ஊழியர்களுக் கான சம்பளத்தை, செக் அல்லது வங்கிக் கணக் கில் செலுத்துவதை நடைமுறைபடுத்தும் வகையில், ஊதியச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகி றது.இதற்கான மசோதா, சமீபத்தில் பார்லிமென் டில் தாக்கல் ...

தமிழகத்திற்கு தலைகுனிவு ஸ்டாலின் ஆதங்கம்

Posted: 21 Dec 2016 09:56 AM PST

சென்னை:'தமிழக அரசின் தலைமைச் செயலர் வீட்டில், வருமான வரித் துறையினர் சோதனை நடத்திய நிகழ்வு, தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது' என, தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: தமிழக அரசியல் வரலாற் றில், இதுவரை இல்லாத முன்னுதாரணமாக, தலைமைச் செயலர் வீட்டில், வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். மணல் வியாபாரி சேகர் ரெட்டியிடம், கோடிக்கணக்கான ரூபாய் பணம், கிலோ கணக்கில் தங்கம் கைப் பற்றப் பட்டுள்ளது; இதற்கு,அமைச்சர்களுக்கு, அதிகாரி களும் உடந்தையாக இருந்து உள்ளனர்.ராமமோகன ராவுக்கு, தலைமை செயலர் பதவியை, ஜெயலலிதா வழங்கிய போதே, ...

அ.தி.மு.க.,வில் நடக்கும் பலே கூத்து; வைகோ ‛இன்'; நாஞ்சில் ‛அவுட்'!

Posted: 21 Dec 2016 10:52 AM PST

சென்னை: ஜெயலலிதா மறைவிற்குப் பின், அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருக்கும் நாஞ்சில் சம்பத், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி இருப்பதாக, பரபரப்பாக செய்திகள் பரவி வருகிறது. ஆனால், அதை மறுத்துள்ளார், அவரது மகள்.
இருந்தபோதும், அவர், அ.தி.மு.க.,வில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகவே, அவரது நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிகின்றன. விரைவில், அவர் தி.மு.க.,வில் இணைவார் என்றும், இதற்காக, நாஞ்சில் சம்பத்திடம், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
வைகோவுடன் ...

மீண்டும் வெற்றி கிடைக்கும்; அகிலேஷ் நம்பிக்கை

Posted: 21 Dec 2016 12:23 PM PST

லக்னோ : 500, 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் வரவிருக்கும் உ.பி., சட்ட சபைத் தேர்தலில் மீண்டும் சமாஜ்வாதி கட்சிக்கு வெற்றி கிடைக்கும் என உ.பி., முதல்வர் அகிலேஷ் நம்பிக்கை தெரிவித்தார்.
வெற்றி உறுதி:
லக்னோவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் தெரிவித்ததாவது: மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், உ.பி., மக்கள், மத்திய அரசு மீது கடும் எரிச்சலில் உள்ளனர். இந்த விவகாரம் தான், அடுத்தாண்டு துவக்கத்தில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், முக்கிய பிரச்னையாக ...

24 மொழிகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் விவரம்

Posted: 21 Dec 2016 01:19 PM PST

புதுடில்லி : 2016-ம் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளுக்கு, சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அங்கீகரிக்கப்படாத 4 மொழிகளுக்கு ‛பாசா சம்மான்' விருதுகளும் அறிவிக்கப்பட்டன.
24 மொழிகளுக்கு..
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளில் வெளியான சிறுகதை, கவிதைகள், நாவல், கட்டுரை, திறனாய்வு உள்ளிட்ட படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டன. தமிழுக்கு நெல்லையை சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனுக்கு ‛ஒரு சிறு இசை' என்ற சிறுகதை ...

'நிர்பயா' ஏவுகணை சோதனை தோல்வி

Posted: 21 Dec 2016 02:20 PM PST

பாலசோர் : உள்நாட்டு தொழில்நுட்பத்துடன், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட் டுள்ள, 'நிர்பயா' ஏவுகணை, நேற்று சோதித்து பார்க்கப்பட்டது. இந்த சோதனை தோல்வியில் முடிந்தது.
டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தயாரித்துள்ள இந்த ஏவுகணை, 1,000 கி.மீ., தொலைவுக்கு பாய்ந்து, இலக்கை தாக்கக் கூடிய சக்தி உடையது. ஒடிசா மாநிலம், சந்திரபுரில் உள்ள ஏவுகணை ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்டு, நேற்று, மீண்டும் சோதித்து பார்க்கப்பட்டது. இச்சோதனை தோல்வியில் முடிந்தது.
2 நிமிடங்களில்..
இது குறித்து ...

ராவ் வீட்டில் விடிய விடிய நடக்கும் விசாரணை; உயரதிகாரிகள் வருகை

Posted: 21 Dec 2016 03:30 PM PST

சென்னை : தமிழக அரசின் தலைமை செயலர் ராம மோகன ராவ், வீட்டில், வருமான வரித்துறையினர் விடிய விடிய விசாரணை நடத்தி வருகின்றனர். உயரதிகாரிகள் வருகையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™