Tamil News | Online Tamil News |
- ரூ.25 கோடி வாங்கி ஏமாற்றியது ஆந்திரா : தமிழகத்துக்கு 'அல்வா'வுக்கு பதில் 'லட்டு'
- அமெரிக்க அதிபர் நாற்காலியில் அமருவது யார்? பரபரப்பான தேர்தல் முடிவு இன்று வெளியாகிறது
- எல்லையில் வாலாட்டும் பாக்.,கிற்கு பாடம் புகட்ட மோடி தீவிரம்!:முப்படை தளபதிகளுடன் டில்லியில் அவசர ஆலோசனை
- மல்லையாவை ஒப்படையுங்க பிரிட்டனுக்கு மோடி கோரிக்கை
- மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு; டில்லி காற்று மாசு பிரச்னைக்கு தீர்வு
- தலைவர்களை வைத்து தய்யா... தக்கா... டில்லியில் பா.ஜ., - காங்., போட்டி
- கனிமொழிக்கு அழைப்பு ஸ்டாலின் எதிர்ப்பு
- அதிரடி நடவடிக்கையால் அச்சப்பட தேவையில்லை
- கள்ள நோட்டுப் புழக்கம் முற்றிலும் ஒழியும்: உர்ஜித் பட்டேல்
- சபாஷ் * நள்ளிரவு முதல் ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது *கறுப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் அதிரடி நடவடிக்கை * டிச.30 வரை பழைய நோட்டுகளை மாற்ற அவகாசம் * நாட்டு வளர்ச்சிக்கான நடவடிக்கையை ஆதரிக்க அழைப்பு
- 'தமிழக மக்கள் எப்படி இருக்கிறார்கள்' கண் விழித்ததும் ஜெ., கேட்ட கேள்வி:வைகைசெல்வன் நெகிழ்ச்சி
- பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு ஜனாதிபதி பிரணாப் வரவேற்பு
- புதிய 2000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் புகைப்படம்
| ரூ.25 கோடி வாங்கி ஏமாற்றியது ஆந்திரா : தமிழகத்துக்கு 'அல்வா'வுக்கு பதில் 'லட்டு' Posted: 08 Nov 2016 09:26 AM PST கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தப்படி, சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக, ஆண்டு தோறும், 11 டி.எம்.சி., நீரை, இரண்டு தவணைகளில், ஆந்திர அரசு வழங்க வேண்டும். கண்டலேறு அணை யில் இருந்து, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை, 'ஜீரோ பாயின்ட்' வரை, 152 கி.மீ., சாய்கங்கை கால் வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தாண்டு, நீர் வழங்கும் காலம், ஜூலையில் துவங்கியும், நீரை திறக்கவில்லை. சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளில், நீர் இருப்பு சரிந்ததால், சென்னையில், குடிநீர் தட்டுப்பாடு அபாயம் உருவானது. நிலைமையை உணர்ந்த அரசு, கிருஷ்ணா நீர் திறக்கும்படி, கடிதம் எழுதியது. இதை ஏற்ற ... |
| அமெரிக்க அதிபர் நாற்காலியில் அமருவது யார்? பரபரப்பான தேர்தல் முடிவு இன்று வெளியாகிறது Posted: 08 Nov 2016 09:38 AM PST வாஷிங்டன்:அமெரிக்காவின், 45வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்து முடிந் துள்ள நிலையில், புதிய அதிபராக மகுடம் சூடப் போவது, ஹிலாரியா, டொனால்டு டிரம்ப்பா என்பது இன்று தெரிய வரும். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம், அடுத்தாண்டு ஜனவரியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய அதிபரை தேர்தெடுப்பதற் கான தேர்தல், நேற்று நடந்தது.ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி, 68, போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, பிரபல தொழில் அதிபர் டொனால்டு டிரம்ப், 70, குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுகிறார். பல மாதங்களாக ... |
| Posted: 08 Nov 2016 09:44 AM PST புதுடில்லி:எல்லையில், பாகிஸ்தான் ராணுவமும், பயங்கரவாதிகளும் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதுகாப்பு நிலவரம் குறித்து, முப்படை தளபதிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். ஜம்மு - காஷ்மீர் மாநிலம் யூரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாம்களை, நம் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி அழித்தது.இந்த தாக்குதலுக்குப் பின், இந்திய - பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. ... |
| மல்லையாவை ஒப்படையுங்க பிரிட்டனுக்கு மோடி கோரிக்கை Posted: 08 Nov 2016 09:46 AM PST புதுடில்லி:வங்கி கடன் பாக்கி வைத்து, லண்டனுக்கு தப்பி சென்றுள்ள, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா உட்பட, 57 பேரை ஒப்படைக்கும்படி, பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவிடம், பிரதமர் மோடி கோரிக்கை வைத்து, பட்டியலை அளித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம், தெரேசா மே மற்றும் பிரதமர் மோடி இடையே, இருதரப்பு உறவுகள் குறித்து நீண்ட பேச்சு நடந்தது.இந்த பேச்சின் போது, 'இந்தியாவில், பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும், 57 பேர், பிரிட்டனில் தங்கியுள்ளனர்; அவர்களை, இந்தியாவுக்கு நாடு கடத்த ... |
| மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு; டில்லி காற்று மாசு பிரச்னைக்கு தீர்வு Posted: 08 Nov 2016 09:48 AM PST புதுடில்லி:டில்லியில், பொதுமக்களை கடுமையாக பாதித்து வரும், காற்று மாசு பிரச்னையை தீர்ப்பதற்கு, குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுத்து, இரு நாட்களுக்குள் அதை தாக்கல் செய்யும்படி, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. டில்லியில், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். இம்மாநிலத் தில் காற்றில் மாசு பிரச்னை, 17 ஆண்டுகளில் இல்லாத அளவு, உச்ச கட்டத்தை எட்டியுள்ள தால், டில்லியில், இன்று வரை, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. பிரச்னையை சமாளிக்க, சாலைகளில் தண்ணீர் தெளிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் ... |
| தலைவர்களை வைத்து தய்யா... தக்கா... டில்லியில் பா.ஜ., - காங்., போட்டி Posted: 08 Nov 2016 09:51 AM PST சுதந்திர போராட்டத் தலைவர்களை நினைவுக் கூறும் நிகழ்ச்சிகளை வைத்து, பா.ஜ.,வுக்கும், காங்கிரசுக்கும் இடையில், போட்டா போட்டி நடப்பதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுதந்திர போராட்டத்தில், எண்ணற்ற தலைவர் கள் பங்கேற்று, தங்கள் அளப்பரிய பங்கை செய்துள்ளனர். ஆனாலும், அனைவருக்கும் சம அளவிலான முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்ற விமர்சனம், பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.இந்நிலையில், இந்த தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் நிகழ்ச்சிகளை மையமாக வைத்து, தற்போது, தேசிய அரசி யலை, பா.ஜ.,வும், காங்கிரசும் சூடேற்றி வருகின்றன.அக்., 2, மகாத்மா காந்தியின் ... |
| கனிமொழிக்கு அழைப்பு ஸ்டாலின் எதிர்ப்பு Posted: 08 Nov 2016 10:03 AM PST பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டுக்கு வரும்படி, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழிக்கு, மக்கள் நலக் கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது. பொது சிவில் சட்டத்தை எதிர்த்து, வரும், 14ல், சென்னையில் மாநாடு நடக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஏற்பாடு செய்துள்ள , இம்மாநாட்டில், ம.ந.கூ., தலைவர்கள் வைகோ முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொள்கின்றனர். மேலும், தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர், மனிதநேய மக்கள்கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோரும் பங்கேற்கின்றனர். தி.மு.க., தலைவர் கருணாநிதியை அழைக்க திட்டமிட்டனர். ஆனால், அவர் ... |
| அதிரடி நடவடிக்கையால் அச்சப்பட தேவையில்லை Posted: 08 Nov 2016 10:34 AM PST புதுடில்லி : ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்த அதிரடி நடவடிக்கைக்காக பொதுமக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை. மோடி அறிவிப்பு: இன்று (நவ.,8) நள்ளிரவு 12 மணி முதல் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். டிச.,30க்குள் பழைய நோட்டுகளை வங்கி மற்றும் தபால் நிலையங்களில் மாற்றிக் கொள்ளலாம் எனவும் அவர் அறிவித்தார். ஏ.டி.எம்., இயங்காது: இன்று (நவ.,9) வங்கிகள் செயல்படாது; இன்றும்(நவ.,9) நாளையும்(நவ.,10) ... |
| கள்ள நோட்டுப் புழக்கம் முற்றிலும் ஒழியும்: உர்ஜித் பட்டேல் Posted: 08 Nov 2016 11:16 AM PST புதுடில்லி : நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் கள்ள நோட்டுக்களின் புழக்கம் அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று(நவ.,8) நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது நள்ளிரவு முதல் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதனையடுத்து நள்ளிரவு முதல் இது அமலுக்கு வந்தது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் கூறியதாவது: நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் கள்ள நோட்டுக்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. கள்ளநோட்டு புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு உதவும். இதன் ... |
| Posted: 08 Nov 2016 11:22 AM PST புதுடில்லி: ''கறுப்புப் பணத்தை ஒடுக்கும் வகையிலும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை ஒழிக்கும் வகையிலும், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது,'' என, பிரதமர் நரேந்திர மோடி , அதிரடியாக அறிவித்தார். கறுப்புப் பணத்தை மீட்பதற்காக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில், கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.இந்தியா, பாகிஸ்தான் இடையேயான உறவு மோசமடைந்து வரும் நிலையில், இந்தியாவில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் புழக்கத்தில் விட்டுள்ளதாகவும் தகவல்கள் ... |
| 'தமிழக மக்கள் எப்படி இருக்கிறார்கள்' கண் விழித்ததும் ஜெ., கேட்ட கேள்வி:வைகைசெல்வன் நெகிழ்ச்சி Posted: 08 Nov 2016 11:42 AM PST முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நிலையில், அவரது நேரடி கண்காணிப்பு, அறிவுரைகள், அறிக்கை, பிரசா ரம் இல்லாமல் இடைத்தேர்தலை சந்திக்கும் அ.தி.மு.க.,வினருக்கு இது ஒரு வித்தியாச மான இடைத்தேர்தல். மூன்று தொகுதிகளிலும் நிர்வாகிகள், அமைச்சர்கள் முகாமிட்டு தேர்தல் பிரசாரக் களத்தில் கடுமையாக உழைக்கின்றனர். திருப்பரங்குன்றம் தொகுதி பிரசாரத்திற்கு வந்த அ.தி.மு.க., செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைசெல்வன் அளித்த சிறப்பு பேட்டி.* முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் உள்ள நிலையில், அவரது நேரடி கண்காணிப்பு இல்லாமல் 3 ... |
| பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு ஜனாதிபதி பிரணாப் வரவேற்பு Posted: 08 Nov 2016 12:37 PM PST
புதுடில்லி : 500, 1,000 ரூபாய் நோட்டுகள் நேற்று(நவ.,8) நள்ளிரவு முதல் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார். பிரதமரின் இந்த அதிரடி நடவடிக்கையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரவேற்பு தெரிவித்துள்ளார். தைரியமான முடிவு : இதுகுறித்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை: 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பது தொடர்பாக பிரதமர் மோடி என்னை நேரில் சந்தித்து விரிவாக எடுத்துரைத்தார். அவரது இந்த முடிவு மிகவும் தைரியமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை. இதனால் கணக்கில் வராத கருப்பு பணம் வெளியே வரும். ... |
| புதிய 2000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் புகைப்படம் Posted: 08 Nov 2016 02:55 PM PST
புதுடில்லி : புதிய 2000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் செயற்கைக் கோளை பெருமைப்படுத்தும் வகையில் அதன் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. மங்கள்யான் : செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, 2013ம் ஆண்டு நவ., 5ம் தேதி, பி.எஸ்.எல்.வி.,-சி - 25 ராக்கெட் மூலம் ‛மங்கள்யான்' செயற்கைக்கோளை இந்தியா விண்ணில் செலுத்தியது. இந்தியாவின் இந்த சாதனைப் பயணத்தை அனைவரும் நினைவில் கொள்ளும் வகையில், புதிதாக வெளியாக உள்ள 2,000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. புதிய 500 ரூபாய் நோட்டில் டில்லி செங்கோட்டையின் படம் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 09,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |