Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'ஓகே!' * சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கேரள அரசு... * சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் விளக்கம்

Posted: 07 Nov 2016 08:45 AM PST

புதுடில்லி: சபரிமலை கோவிலில், பெண்களுக்கு அனுமதி மறுப்பது குறித்த வழக்கில், திடீர் திருப்பமாக, 'பெண்களையும் அனுமதிக்கலாம்' என, கேரளாவில் ஆளும், இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து உள்ளது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் உள்ளது, பிரபலமான சபரிமலை அய்யப்பன் கோவில். இந்த கோவிலுக்குள் செல்ல, 10 முதல், 50 வயது வரையுள்ள பெண்களுக்கு அனுமதி இல்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.
மாற்றக்கூடாது
இந்த வழக்கில், 2007ல் அளித்த பதிலில், 'பெண்களையும் அனுமதிக்கலாம்' என, அப்போது ...

காங்., தலைமை பொறுப்பை ஏற்க ராகுல் மறுப்பு ..! சோனியா பதவிக்காலம் மீண்டும் நீட்டிப்பு

Posted: 07 Nov 2016 08:48 AM PST

புதுடில்லி,:டில்லியில் நேற்று நடந்த, காங்., செயற்குழு கூட்டத்தில், அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல், தலைமை பொறுப்பை ஏற்க வேண்டுமென, ஒருமனதாக வலியுறுத்தப்பட்டது. கூட்டத்துக்கு தலைமை வகித்த ராகுல், தலைவர் பதவியை ஏற்க மறுத்தார். இதைத்தொடர்ந்து, மேலும் ஓர் ஆண்டு, சோனியாவே தலைமைப் பதவியில் நீடிக்க, செயற்குழு ஒப்புதல் அளித்தது.

காங்., கட்சித் தலைவராக, 1998 முதல், சோனியா, 69, செயல்பட்டு வருகிறார். கட்சித் தலைமை பொறுப்பை, நான்காவது முறையாக அவர் வகித்து வருகிறார். அவரது மகன் ராகுல், 46, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், 2013ல் நடந்த கட்சி மாநாட்டின் போது, துணைத் ...

காற்றில் மாசு கலப்பை தடுக்காதது ஏன்? டில்லி அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கண்டனம்

Posted: 07 Nov 2016 08:53 AM PST

புதுடில்லி,:தலைநகர் டில்லியில், காற்றில் மாசு கலப்பை தடுக்க, அம்மாநில அரசு தக்க நடவடிக்கை எடுக்கவில்லை, என, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது; சாலைகளில் புழுதி எழுவதை தடுக்க, ஹெலிகாப்டர்கள் மூலம், தண்ணீர் தெளிக்கும்படி அறிவுறுத்தி உள்ளது.

டில்லியில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். டில்லி நகரில், காற்றில் மாசு கலப்பு அபாய கட்டத்தில் இருப்பதால், மக்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதியுறுகின்றனர்.
நடவடிக்கை
இதனால், பள்ளிகளுக்கு, மூன்று நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. மக்கள், ...

நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் ஜெ., - கருணாநிதி பெயர் இல்லை

Posted: 07 Nov 2016 09:36 AM PST

அ.தி.மு.க., - தி.மு.க., வழங்கிய, நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில், முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., தலைவர் கருணாநிதி பெயர்கள் இல்லை.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளில், 19ல் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில், பிரசாரம் செய்ய உள்ள, நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை, தேர்தல் கமிஷனிடம் கட்சிகள் வழங்கி உள்ளன.
வேட்பாளர் செலவு
தேர்தல் கமிஷன் அனுமதி பெற்ற நட்சத்திர பேச்சாளர்கள், பிரசாரத்திற்கு சென்றால், அவர்களின் போக்குவரத்து செலவு, வேட்பாளர் செலவுக் கணக்கில் சேர்க்கப்படாது.
அனுமதி பெறாத ...

2,000 ரூபாய் நோட்டு உண்மையா; பொய்யா?

Posted: 07 Nov 2016 09:37 AM PST

?இந்திய ரிசர்வ் வங்கி, காந்தி படம் இல்லாத, 2,000 ரூபாய் நோட்டை விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

நாட்டில், அதிகபட்ச மதிப்பில், 1,000 ரூபாய் கரன்சி நோட்டு புழக்கத்தில் உள்ளது. புதிதாக, 2,000 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி வெளியிட போவதாக, அக்டோபரில் செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக, சமூக வலைதளங்களில், 2,000 ரூபாய் நோட்டு படத்தை வெளியிட்டு வருகின்றனர்.
'நானோ' இழை
ஒரு தரப்பினர், 'காந்தியை இருட்டடிப்பு செய்யும் வகையில் அவரது புகைப்படம் இல்லாமல், வெறும் மூக்கு கண்ணாடி மட்டும் அதில் இடம் பெற்றுள்ளது' என, ...

அடுத்த அமெரிக்க அதிபர் யார்?: துவங்கியது கவுன்ட் டவுன்!

Posted: 07 Nov 2016 09:42 AM PST

உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும், அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடக்கிறது.

இந்த தேர்தலில், குடியரசு கட்சி சார்பில், தொழிலதிபர் டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சியின் சார்பில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும்; களமிறங்கி உள்ளனர். உலகின் வல்லரசான அமெரிக்காவின் அதிபர் எடுக்கப் போகும் ஒவ்வொரு முடிவும், மற்ற நாடுகளை பாதிக்கும் என்பதால் இந்த தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
எப்படி நடக்கிறது அமெரிக்க தேர்தல்?
* குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகள் சார்பில், தகுதியுள்ள பலரும் போட்டியிடலாம்* அந்தந்த கட்சிகளின் ...

ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி இருந்தால் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுத தடை

Posted: 07 Nov 2016 09:56 AM PST

'ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருந்தால், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுகள் எழுத அனுமதி கிடையாது' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., சார்பில், தேர்வர்களுக்கான புதிய அறிவுரைகள், 85 பக்கங்களில் வெளியிடப்பட்டு உள்ளன.
அதன் முக்கிய அம்சங்கள்:
* தேர்வர்கள் யாரும், சிபாரிசுக்காக, தேர்வாணைய தலைவர், செயலர், உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்திக்கக் கூடாது. சந்திக்க முயற்சித்தால், அவர்கள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்* விடைத்தாளில் பெயர், பதிவெண் போன்றவற்றை நேரடியாகவோ, ...

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு திட்டம் 80 லட்சம் குடும்பங்கள் 'ரெடி'

Posted: 07 Nov 2016 10:02 AM PST

அனைத்து உறுப்பினர்களின், 'ஆதார்' விபரமும் வழங்கிய, 80 லட்சம் குடும்பங்களுக்கு, விரைவில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், தற்போதுள்ள காகித ரேஷன் கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட்' கார்டு வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளுக்கு, 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி வழங்கப்பட்டுள்ளது. அக்கருவியில், ரேஷன் கார்டுகளில் உள்ள உறுப்பினர்களின், 'ஆதார்' அட்டை விபரம் பதியப்படுகிறது. அதன் அடிப்படையில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது.இப்பணியை, அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில், அக்டோபரில் ...

மீண்டும் பணப் பட்டுவாடா பார்வையாளர் மாற்றம்

Posted: 07 Nov 2016 10:10 AM PST

கரூர், : அரவக்குறிச்சியில், பணப் பட்டுவாடா துவங்கிய நிலையில், மத்திய தேர்தல் செலவின பார்வையாளர் திடீரென மாற்றப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி, பணப் பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், வரும், 19ல் தேர்தல் நடக்கிறது. வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களில் விதிமீறல் இருக்கிறா என்பதை கண்காணிக்க, பீஹாரை சேர்ந்த மத்திய தேர்தல் செலவின பார்வையாளர் சில்ஆஷிஸ் நியமிக்கப்பட்டார்.
இவர், ஏற்கனவே நடந்த கடந்த பொதுத்தேர்தலின் போது, கரூர் மாவட்டத்தில் பணியாற்றியவர். அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகளின் பணப் பட்டுவாடா ...

காற்று மாசுபாடில் டில்லிக்கு அடுத்தபடியாக பாதிப்பில் இருக்கும் ஆமதாபாத்

Posted: 07 Nov 2016 11:05 AM PST

ஆமதாபாத்: டில்லியில் பெரும் பிரச்னையாக இருந்து வரும் காற்று மாசுபாடு தற்போது ஆமதாபாத் நகரிலும் நிலவி வருகிறது.
காற்று மாசுபாடு டில்லியில் இருப்பதைப் போல மிக அதிக அளவில் இல்லாவிட்டாலும் இந்தியாவில் காற்று மாசுபாட்டினால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள 5 முக்கிய நகரங்களில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத்தும் இடம் பிடித்துள்ளது.
காற்று மாசுபாட்டிற்கு காரணம்
வாகனங்களில் இருந்து வௌியேறும் சல்பர் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்ஸைடுகள் காற்று மாசு அடைவதற்கு முக்கிய காரணங்களாக ...

காஷ்மீரில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்துவோம்: ஹபீஸ் சயீத் மிரட்டல்

Posted: 07 Nov 2016 01:14 PM PST

இஸ்லாமாபாத்: காஷ்மீரில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்துவோம் என்று லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் மிரட்டல் விடுத்துள்ளார்.பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா, ஜமா-உத்-தவா ஆகிய பயங்கரவாத இயக்கங்கள் இந்தியாவில் பல்வேறு வன்முறை சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றன.லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு, , ஜமா-உத்-தவா ஆகிய அமைப்புகளின் தலைவராக உள்ளவர் ஹபீஸ் சயீத். மும்பை தாக்குதலில் முக்கியக் குற்றவாளியாக கருதப்படு ஹபிஸ் சயீத், பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடுவதுடன், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

...

மெகா கூட்டணி குறித்து முலாயம் முடிவெடிப்பார்: அகிலேஷ்

Posted: 07 Nov 2016 03:10 PM PST

லக்னோ : உ.பி., சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்த இறுதி முடிவை கட்சியின் தேசியத் தலைவரான முலாயம் சிங் யாதவ் எடுப்பார் என் அம்மாநில முதல்வரும், கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
நான்குமுனை போட்டி :
உ.பி., சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க ஆளும் கட்சியான சமாஜ்வாதி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எனினும் அங்கு குடும்ப அரசியலால் உட்கட்சிப் பூசல் எழுந்துள்ளது. உ.பி.,யை கைபற்ற சமாஜ்வாதி, பகுஜன் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™