Tamil News | Online Tamil News |
- தலைநகர் டில்லியில் காற்று மாசு பிரச்னை...உச்சகட்டம்!: பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு
- தமிழகம் 25ம் இடத்திற்கு தள்ளப்பட்டது ஏன்?வேளாண் வர்த்தகத்துக்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியல்
- அறக்கட்டளையில் மகனுக்கு பதவி அழகிரி கோரிக்கை; ஸ்டாலின் எதிர்ப்பு
- 'முறையாக தேர்தல் நடந்தால் தே.மு.தி.க.,வுக்கே வெற்றி'
- 300 பயங்கரவாதிகள் பதுங்கல் காஷ்மீர் போலீசார் அதிர்ச்சி தகவல்
- சிறையில் மின்வேலி; ம.பி., அரசு முடிவு
- 5,451 அரசு வேலைக்கு 'குரூப் - 4' தேர்வு எழுதியவர்கள்... 12.60 லட்சம் பேர்!:10ம் வகுப்பு முதல் இன்ஜி., படித்தவர்கள் வரை பங்கேற்பு;ஆறு மாதத்தில் முடிவு வெளியாகும் என அறிவிப்பு
- பசி, ஊட்டச்சத்து குறைபாடுகளை களைய பிரதமர் அழைப்பு விவசாயத்தில் புதிய ஆராய்ச்சிக்கும் வலியுறுத்தல்
- டிரம்ப் கூட்டத்தில் துப்பாக்கி பீதி: அவசர அவசரமாக வெளியேற்றம்
- பார்லிமென்டில் அணைகள் பாதுகாப்பு மசோதா:பொதுப்பணி துறையில் திடீர் பரபரப்பு
- 4 ஜி சேவையில் களமிறங்கும் பி.எஸ்.என்.எல்.,
- பெங்களூரு விமான நிலையம் இரண்டு மாதத்துக்கு மூடல்
- 'மாநகரில் வாழ ரூ.1,000 போதாது!'
| தலைநகர் டில்லியில் காற்று மாசு பிரச்னை...உச்சகட்டம்!: பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு Posted: 06 Nov 2016 08:26 AM PST புதுடில்லி:தலைநகர் டில்லியில், காற்றில் மாசு கலப்பு மோசமான நிலையை எட்டியிருப்பதால், புதன் கிழமை வரை, மூன்று நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, கட்டுமானப் பணிகளுக்கு தடை உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை, அம்மாநில அரசு அறிவித்துள்ளது. டில்லியில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். தீபாவளிப் பண்டிகையையொட்டி, டில்லியில் பட்டாசுகள் அதிகஅளவில் வெடித்ததால், காற்றில் மாசு கலந்து, மக்கள் சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டனர். தொழிற்சாலைகள், வாகனங்கள் வெளியேற் றும் புகை ... |
| தமிழகம் 25ம் இடத்திற்கு தள்ளப்பட்டது ஏன்?வேளாண் வர்த்தகத்துக்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியல் Posted: 06 Nov 2016 08:49 AM PST 'நிடி ஆயோக்' வெளியிட்ட, வேளாண் வர்த்தகத் துக்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில், தமிழகம், 25ம் இடத்திற்கு தள்ளப்பட்டது, பெரும் சர்ச் சையை ஏற்படுத்தி உள்ளது. 'பின்னடைவில் இருந்து தமிழகம் முன்னேறும்' என, அதிகாரி கள் நம்பிக்கை தெரிவித்துஉள்ளனர். மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்க, 1950ல், மத்திய திட்டக்குழு அமைக்கப் பட்டது. மத்தியில், பா.ஜ., அரசு பொறுப்பேற்ற பின், மாநிலங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மத்திய திட்டக்குழுவை கலைத்து, 'நிடி ஆயோக்' என்ற, அமைப்பை உருவாக்கியது. நாட்டின் வளர்ச்சிக்கு, வழி காட்டுவதே இதன் ... |
| அறக்கட்டளையில் மகனுக்கு பதவி அழகிரி கோரிக்கை; ஸ்டாலின் எதிர்ப்பு Posted: 06 Nov 2016 09:13 AM PST 'முரசொலி அறக்கட்டளையில், தன் மகன் தயாநிதிக்கு பதவி வழங்க வேண்டும்' என, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம் முறையிட்டுள் ளார். இதற்கு, ஸ்டாலின் முட்டுக்கட்டை போட்டுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டதால், தி.மு.க., தலைவர் கருணாநிதி, சில நாட்களாக, கோபாலபுரம் வீட்டில் தங்கி சிகிச்சை பெறுகிறார். அவரை, சில நாட்களுக்குள், இரு முறை அழகிரியும், அவரது மனைவி காந்தி, மகன் தயாநிதியும் சந்தித்து பேசியுள்ளனர். ... |
| 'முறையாக தேர்தல் நடந்தால் தே.மு.தி.க.,வுக்கே வெற்றி' Posted: 06 Nov 2016 09:16 AM PST சென்னை:''மூன்று தொகுதிகளிலும், முறை யாக தேர்தல் நடந்தால், தே.மு.தி.க., வெற்றி பெறும்,'' என, தே.மு.தி.க., மகளிரணி செயலர் பிரேமலதா கூறினார். சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: ஓட்டுக்கு மக்களை விலை கொடுத்து வாங்கும் அவமான செயல், தமிழகத்தில் தான் நடந்து வருகிறது. அதன்படி பார்த்தால், தற்போது திருப்பரங்குன்றத்தில்மட்டுமே இடைத்தேர்தல் நடக்கிறது. அரவக்குறிச்சி மற்றும் தஞ்சையில் நடப்பது மறு தேர்தல் தான். அங்கு பணப்பட்டுவாடா அதிகளவில் நடந்ததால் தான், தேர்தல் ரத்தானது. தேர்தல் கமிஷனும், நீதிமன்றமும் முறையாக தேர்தலைநடத்தினால், தே.மு.தி.க., ... |
| 300 பயங்கரவாதிகள் பதுங்கல் காஷ்மீர் போலீசார் அதிர்ச்சி தகவல் Posted: 06 Nov 2016 09:23 AM PST ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், 300 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு -- காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது; இங்கு, பயங்கரவாதி பர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து,ஜூலை, 9 முதல் நடந்து வரும் வன்முறை சம்பவங்களுக்கு, 90க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை; பள்ளிகள் உட்பட, 70க்கும் மேற் பட்ட கட்டடங்களுக்கு, பிரிவினைவாத கும்பல் தீ வைத்துள்ளது. இந்நிலையில், அங்கு, அமைதியை ... |
| சிறையில் மின்வேலி; ம.பி., அரசு முடிவு Posted: 06 Nov 2016 09:29 AM PST
போபால் : மத்திய பிரதேச மாநிலம், போபால் சிறையில் இருந்து தப்பிய, 'சிமி' பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, அங்குள்ள சிறைகளில் மின்வேலி அமைக்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. தப்பிய பயங்கரவாதிகள்: மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள, சிமி அமைப்பைச் சேர்ந்தவர்கள், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும், ம.பி.,யின் போபால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். சில நாட்களுக்கு முன், சிறை காவலர் ஒருவரை கொலை செய்த இந்த பயங்கரவாதிகள், பின் சிறையில் இருந்து தப்பிச் ... |
| Posted: 06 Nov 2016 09:30 AM PST தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, 5,451 பணியிடங்களை நிரப்புவதற்கான, 'குரூப் - 4' தேர்வு நேற்று நடந்தது. இந்தத் தேர்வில், 10ம் வகுப்பு முதல், இன்ஜினியரிங் படித்தவர்கள் வரை,12.60 லட்சம் பேர் பங்கேற்றனர்.தேர்வின் முடிவுகள், ஆறு மாதங்களில் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு துறைகளில், இளநிலை உதவி யாளர், தட்டச்சர், வரி வசூலிப்பாளர், நில அளவையாளர், வரைவாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் உட்பட, ஏழு விதமான பணியிடங்க ளில், 5,451 காலியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான, குரூப் - 4 எழுத்துத் தேர்வை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய மான, டி.என்.பி.எஸ்.சி., ஆக., 9ல் ... |
| பசி, ஊட்டச்சத்து குறைபாடுகளை களைய பிரதமர் அழைப்பு விவசாயத்தில் புதிய ஆராய்ச்சிக்கும் வலியுறுத்தல் Posted: 06 Nov 2016 09:38 AM PST ''பசி, வறுமை, ஊட்டச்சத்து பற்றாக்குறை ஆகியவற்றை களையும் வகையில், விவசாயத்தில், பல்வேறு புதிய ஆராய்ச்சிகள், தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். முதலாவது சர்வதேச வேளாண் பல்லுயிர் பெருக்க மாநாடு டில்லியில் நடக்கிறது. மூன்று நாள் நடக்கும் இந்த மாநாட்டில், 60 நாடுகளைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகள், அரசு பிரதி நிதிகள் என, 900க்கும் மேற்பட்டோர் பங்கேற் கின்றனர். இந்த மாநாட்டை துவக்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:ஒரு குறிப்பிட்ட பயிர்களை மட்டுமே தொடர்ந்து பயிரிடாமல், பல்வேறு வகையான ... |
| டிரம்ப் கூட்டத்தில் துப்பாக்கி பீதி: அவசர அவசரமாக வெளியேற்றம் Posted: 06 Nov 2016 09:42 AM PST வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பங்கேற்ற பிரசார கூட்டத் தில், துப்பாக்கியுடன் ஒருவர் வந்ததாக பீதி ஏற்பட்டதால், அவரை அவசர அவசரமாக போலீசார் அழைத்துச் சென்றனர். அமெரிக்க அதிபர் தேர்தல், நவம்பர் 8ல் நடக்கவுள்ளது; இதில், ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி, 68, போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, பிரபல தொழில் அதிபர் டொனால்டு டிரம்ப், 70, குடியரசு கட்சி சார்பில் போட்டியிடு கிறார். தேர்தலுக்கு ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், இருவரும், அனல் பறக்கும் பிரசாரத்தில் ... |
| பார்லிமென்டில் அணைகள் பாதுகாப்பு மசோதா:பொதுப்பணி துறையில் திடீர் பரபரப்பு Posted: 06 Nov 2016 09:50 AM PST பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடரில், அணைகள் பாதுகாப்பு தொடர்பாக, புதிய மசோதா தாக்கல் செய்யப் பட இருப்பதாக பரவி வரும் தகவல், பொதுப்பணித்துறையில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னர் மத்தியில் ஆட்சியில் இருந்த, காங்கிரஸ் அரசு, 2010ல், அணைகள் பாதுகாப்பு மசோதாவை கொண்டு வர முயன்றது. அப்போது, மத்திய அரசில், தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க.,வும் அங்கம் வகித்த தால், மசோதாவை பெரிதாக எதிர்க்கவில்லை.கடந்த, 2011ல், தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், மசோதாவின் சில உட்பிரிவு களை கடுமையாக எதிர்த்தது; அப்போதைய பிரதமர் மன்மோகன் ... |
| 4 ஜி சேவையில் களமிறங்கும் பி.எஸ்.என்.எல்., Posted: 06 Nov 2016 12:02 PM PST புதுடில்லி: பொது துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., 4 ஜி சேவை துவங்க திட்டமிட்டுள்ளது.சமீபத்தில் நடைபெற்ற அலைக்கற்றை ஏலத்தில் 700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை அடிப்படை விலை மெகாஹெர்ட்ஸ் ஒன்றுக்கு ரூ.11,485 கோடியாக மத்திய அரசு நிர்ணயம் செய்தது.இந்த விலை மிகவும் அதிகம் என்று தெரிவித்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அந்த அலைக்கற்றையை ஏலத்தில் எடுக்கவில்லை.இந்த நிலையில், 700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையில் 5 மெகாஹெர்ட்ஸ் தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யும்படி மத்திய தொலைத் தொடர்பு துறையிடம் பி.எஸ்.என்.எல். நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. அதற்கு ஈடாக, மத்திய ... |
| பெங்களூரு விமான நிலையம் இரண்டு மாதத்துக்கு மூடல் Posted: 06 Nov 2016 12:26 PM PST பெங்களூரு : பராமரிப்பு பணிகள் காரணமாக, பெங்களூரு சர்வதேச விமான நிலையம், அடுத்த ஆண்டு துவக்கத்தில் இரண்டரை மாதங்களுக்கு மூடப்பட உள்ளது. தற்காலிக மூடல் : கர்நாடக மாநிலம், பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், அடுத்தாண்டு பிப்ரவரி, 19 முதல், ஏப்ரல், 30 வரை, விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட உள்ளதாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேவையை உயர்த்த திட்டம் : பராமரிப்பு பணிகள் ... |
| 'மாநகரில் வாழ ரூ.1,000 போதாது!' Posted: 06 Nov 2016 01:55 PM PST
புதுடில்லி:'டில்லி போன்ற மாநகரில் வாழ்வதற்கு, 1,000 ரூபாய் உதவித் தொகை மிகவும் குறைவு' எனக்கூறிய கோர்ட், குடும்ப வன்முறை தொடர்பான வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, உதவித் தொகையை உயர்த்தி உத்தரவிட்டது. ஜீவனாம்சம் : டில்லியில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கு, 2014, மே மாதம், திருமணம் நடந்தது. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவன் வீட்டார், அதே ஆண்டு டிசம்பரில், அந்த பெண்ணை வீட்டை விட்டு துரத்தினர். இதை எதிர்த்து அந்த பெண் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த விசாரணை கோர்ட், அந்த பெண்ணுக்கு இடைக்கால ஜீவனாம்ச தொகையாக, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 07,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |