Tamil News | Online Tamil News |
- கோஷ்டி பூசலை சமாளிப்பதில் வேட்பாளர்கள்... திணறல்!:தி.மு.க., - அ.தி.மு.க.,வில் அரங்கேறுது நாடகம்
- இரவில் தாக்குதல் நடத்தும் நவீன டாங்கிகள் வாங்க... திட்டம்!:பாக்., ராணுவத்திற்கு பதிலடி கொடுக்க அரசு அதிரடி
- முட்டுக்கட்டை போடும் குடும்பம் : ஸ்டாலினுக்கு எதிராக திரும்புவது ஏன்?
- சட்டசபை குழுக்கள் அமைக்க அரசு திணறல்
- ஒரே நாளில் 9 பேர் 'சஸ்பெண்ட்:' மின் வாரியம் அதிரடி
- 'கடன் வழக்கை பைசல் செய்யுங்க!' : அருண் ஜெட்லி வலியுறுத்தல்
- எந்த விதமான பரிசோதனைக்கும் தயார் என்கிறார் அகிலேஷ் சவால்!:'கத்தியை கொடுத்து வெட்டக்கூடாது என்பதா' என ஆவேசம்
- தேர்தல் நடக்கும் 3 தொகுதிகளிலும் அரசியல் தலைவர்கள்... குவிந்தனர்!:இரு பெண்கள் உட்பட 81 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்:சின்னம் கிடைக்காததால் திருப்பரங்குன்றத்தில் பா.ம.க., வாபஸ்
- முதல்வர் ஜெ., பிரத்யேக அறைக்கு திங்கட்கிழமை மாற்றம்
- அமெரிக்காவில் புதிய எலெக்ட்ரிக் கார் அறிமுகம்
| கோஷ்டி பூசலை சமாளிப்பதில் வேட்பாளர்கள்... திணறல்!:தி.மு.க., - அ.தி.மு.க.,வில் அரங்கேறுது நாடகம் Posted: 05 Nov 2016 06:08 AM PDT தேர்தல் நடைபெறும், மூன்று சட்டசபை தொகுதிகளில், உட்கட்சி பூசலை சமாளிப்பது, அ.தி.மு.க.,மற்றும் தி.மு.க., வேட்பாளர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது; இதனால் அவர்கள் திணறுகின்றனர். தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு, வரும், 19ல்,தேர்தல் நடை பெற உள்ளது. மூன்று தொகுதி களிலும், பல் வேறு கட்சிகள் போட்டியிட்டாலும், அ.தி.மு.க., - தி.மு.க., இடையே, கடும் போட்டி நிலவுகிறது.பணிக்குழு இரு கட்சிகளும், 'எப்படியும் வெற்றி பெற்று விட வேண்டும்' என்ற துடிப்புடன், களம் இறங்கி உள்ளன.அ.தி.மு.க., சார்பில், தேர்தல் பணி யாற்ற, அரவக்குறிச்சி ... |
| Posted: 05 Nov 2016 07:28 AM PDT புதுடில்லி:எல்லையில், 'வாலாட்டி வரும்' பாக்., ராணுவத்திற்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்கும் வகையில், நம் ராணுவம், அதிரடி திட்டத்தில் இறங்கியுள்ளது. இதற்காக, இரவு நேரங்களில் தாக்குதல் நடத்தும் திறன் வாய்ந்த, அதி நவீன டாங்கிகளை, ரஷ்யாவிடம் இருந்து வாங்க அரசு திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் நம் ராணுவம், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தி, 40க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்றுவிட்டு, வெற்றிகரமாக திரும்பியது. 'சர்ஜிகல் ஸ்டிரைக்' எனப் பெயரிடப்பட்ட இத்தாக்குதல் சம்பவத்துக்கு பின், இந்திய எல்லையோர கிராமங்களில், பாக்., ... |
| முட்டுக்கட்டை போடும் குடும்பம் : ஸ்டாலினுக்கு எதிராக திரும்புவது ஏன்? Posted: 05 Nov 2016 07:48 AM PDT தி.மு.க.,வை முழுமையாக கையில் எடுக்கும் முயற்சிக்கு, குடும்பத்தினர் முட்டுக்கட்டை போடுவதால், அக்கட்சியின் பொருளாளர், ஸ்டாலின் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தி.மு.க., தலைவர் கருணாநிதி, 'தன் அரசியல் வாரிசு ஸ்டாலின்' என, சமீபத்தில் கூறிய பின், கட்சியினர் அனைவரும் அவருக்கே முக்கியத் துவம் கொடுத்து வருகின்றனர்.இதையடுத்து, கட்சி யின் அனைத்து நடவடிக் கைகளும், அவரை சுற்றியே நடக்க துவங்கி உள்ளன. அதனால், குடும்பத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவர்கள், ஸ்டாலின் நடவடிக்கை களுக்கு, பல வகைகளிலும் முட்டுக்கட்டை போடுவதால், குடும்பத்தினர் ... |
| சட்டசபை குழுக்கள் அமைக்க அரசு திணறல் Posted: 05 Nov 2016 07:50 AM PDT 'தமிழக சட்டசபை குழுக்களை, உடனடியாக அமைக்க வேண்டும்' என, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், சபாநாயகர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். குழுக்கள் அமைத்தால், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் கள், அதிகம் இடம்பெற வாய்ப்புள்ள தால், அரசு செய்வதறியாமல் தவித்து வருகிறது. அரசு பணிகளை கண்காணிக்க, சட்டசபை சார்பில், பல்வேறு குழுக்கள் அமைக்கப்படும். இக் குழுவில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல். ஏ.,க்கள் இடம் பெறுவர்.மதிப்பீட்டு குழு : அரசின் நிதி மதிப்பீடுகளை ஆராய, மதிப்பீட்டுக் குழு அமைக்கப்படும். இதில், 16 உறுப்பினர்கள் இடம் பெறுவர். நிதி ... |
| ஒரே நாளில் 9 பேர் 'சஸ்பெண்ட்:' மின் வாரியம் அதிரடி Posted: 05 Nov 2016 09:44 AM PDT மின் வாரியத்தில், ஒரே நாளில், ஒன்பது பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட விவகாரம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவியாளர், பொறியாளர் உட்பட, 88 ஆயிரம் பேர் பணிபுரி கின்றனர். பிரிவு அலுவலகத்தில் பணிபுரியும் உதவி பொறியாளர், செயல் பொறியாளர் உள்ளிட்டோர், மின் வினியோக பணியில் அலட்சியமாக உள்ளனர். இதனால், தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி மற்றும் கொள்முதல் இருந்தும், மின் தடை ஏற்படுகிறது. விபத்து : மின் சாதனங்களை முறையாக பராமரிக்காத தால், பல இடங்களில், மின் விபத்து காரண மாக, உயிரிழப்பு ஏற்படுகிறது. திருவள்ளூர் ... |
| 'கடன் வழக்கை பைசல் செய்யுங்க!' : அருண் ஜெட்லி வலியுறுத்தல் Posted: 05 Nov 2016 09:49 AM PDT குர்கான்: ''கடன் பாக்கி வழக்குகளை, விரைவில் முடிக்க வேண்டும்; கடன் தொகை செலுத்தா தோருக்கு, முடிவில்லாத வகையில் வாய்ப்பு களை வழங்க முடியாது,'' என, நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். ஹரியானா மாநிலம், குர்கானில், மத்திய நிதியமைச்சகம் சார்பில், வங்கிகள் கடன் வசூலிப்பு தொடர்பான கருத்தரங்கு, நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, மத்திய நிதியமைச்ச ரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி பேசிய தாவது:வங்கிகளிடம் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதோ ருக்கு, முடிவில்லாத வகையில், மீண்டும் மீண்டும் அவகாசம் தர முடியாது. இது தொடர்பான வழக்கு களை, ... |
| Posted: 05 Nov 2016 10:26 AM PDT லக்னோ:உ.பி.,யில், தன் சித்தப்பா, சிவ்பால் யாதவுடனான, அதிகாரப் போட்டி உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ''எத்தகைய சோதனைக்கும் தயாராக உள்ளேன். கத்தியை கையில் கொடுத்து விட்டு, வெட்டக் கூடாது என்பது சரியானது தானா,'' என, அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆவேசமாக பேசினார். உ.பி.,யில், சமாஜ்வாதி கட்சி நிறுவன தலைவர் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ், முதல்வராக உள்ளார். முலாயம் சிங்கின் தம்பி சிவ்பால் யாதவ், சமாஜ்வாதி கட்சியின், உ.பி., மாநில தலைவராக உள்ளார். இவருக்கும், அகிலேஷுக்கும், ஆட்சி அதிகாரத்தை கைப் பற்றுவதில் சமீப காலமாக உச்சக் கட்ட மோதல் நடந்து ... |
| Posted: 05 Nov 2016 10:34 AM PDT தமிழகத்தில், தேர்தல் நடக்கும் மூன்று தொகுதிகளிலும், இரு பெண்கள் உட்பட, 81 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்க, அரசி யல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிகளில் குவிந்துள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதியில், கட்சி சின்னம் கிடைக்காததால், பா.ம.க., போட்டியில் இருந்து விலகியது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு, வரும், 19ல், தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதிகளில், செப்., 26ல் வேட்பு மனு தாக்கல் துவங்கி, நவ., 2ல் நிறைவடைந்தது. மூன்று தொகுதிகளில், மொத்தம், 139 ... |
| முதல்வர் ஜெ., பிரத்யேக அறைக்கு திங்கட்கிழமை மாற்றம் Posted: 05 Nov 2016 11:32 AM PDT வழக்கமான உணவுகளை உட்கொள்ள துவங்கியுள்ள, முதல்வர் ஜெயலலிதா, திங்கட்கிழமை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து, பிரத்யேக அறைக்கு மாற்றப்பட உள்ளார். உடல் நலக் குறைவு காரணமாக, முதல்வர் ஜெயலலிதா, செப்., 22 இரவு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக, அவர் அனுமதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.நுரையீரல் தொற்று ஓரிரு நாளில், அவர் வீடு திரும்பி விடுவார் என எதிர்பார்த்த நிலையில், அவரது நுரையீரலில் தொற்று ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை அளிக்க, லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான்பீலே வரவழைக் ... |
| அமெரிக்காவில் புதிய எலெக்ட்ரிக் கார் அறிமுகம் Posted: 05 Nov 2016 02:23 PM PDT டெட்ராய்ட்: அமெரிக்காவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் செவ்ரோலட் போல்ட் என்ற புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தாண்டு இறுதி வாக்கில் அது விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவிக்கிறது 360 கி.மீ., வரை ஓடும் புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள செவ்ரோலட் போல்ட் வகை கார்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 360 கி.மீ., வரை ஓடும் என அந்நிறுவனம் உறுதியளிக்கிறது. இதனால் டீசல் மற்றும் பெட்ரோலில் ஓடக் கூடிய கார்களை காட்டிலும் செலவு குறையும் என்று கூறுகிறது. அதிக ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 06,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |