Tamil News | Online Tamil News |
- தமிழகத்தில் வாகனங்கள் எண்ணிக்கை 2.30 கோடி!
- ஜி.எஸ்.டி., வரி வசூலிக்கும் அதிகாரத்தில்... இழுபறி!: பாதியில் முடிந்தது கவுன்சில் கூட்டம்
- வங்க கடலில் மையம் கொண்டிருக்கும் புயல் சின்னம் இன்று...திசை மாறுது!:நாளை முதல் மழை குறையும் என்பதால் விவசாயிகள் கவலை
- அகிலேஷ் தலைமையில் 'மெகா' கூட்டணி : முலாயமுக்கு காங்., நிபந்தனை
- 'நாடு திரும்பும் எண்ணம் இல்லை!' : மல்லையாவுக்கு கோர்ட் கண்டனம்
- 'ஓய்வூதிய விவகாரத்தில் பொய்!' : மோடி மீது ராகுல் பாய்ச்சல்
- இளங்கோவன் வருத்தம்: திருநாவுக்கரசர் மவுனம்
- வீடு திரும்புவது எப்போது? ஜெ., முடிவு செய்வார்: ரெட்டி
- ஐகோர்ட்டில் ஸ்டாலின் ஆஜர் 2 மணி நேரம் விசாரணை
- சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.4-ஆக பதிவு
- 11,000 என்.ஜி.ஓ.,க்களின் அங்கீகாரம் ரத்து
- வியாபம் ஊழலில் 'ரெய்டு'
- நேபாளப் பயணம் நட்புறவின் அடையாளம்: பிரணாப்
| தமிழகத்தில் வாகனங்கள் எண்ணிக்கை 2.30 கோடி! Posted: 04 Nov 2016 09:32 AM PDT தமிழகத்தில், வாகனங்களின் எண்ணிக்கை, 2.30 கோடியை தொட்டுள்ளது. இதில், இருசக்கர வாகனங்கள் எண்ணிக்கை மட்டும், 83 சதவீதத்திற்கும் அதிகம். தமிழகத்தில், புதிய வாகனம் வாங்குவோரின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. 1993ல், 13.91 லட்சம், இருசக்கர வாகனங்கள் உட்பட, மொத்த வாகனங்களின் எண்ணிக்கை, 18.26 லட்சம். இது, 2000ல், 39.93 லட்சமானது; 2005ல், 71.72 லட்சமாக உயர்ந்தது. அப்போது, இரு சக்கர வாகனங்கள் எண்ணிக்கை, 61.06 லட்சம். இதன்பின், வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து, 2015 ஏப்ரலில், 1.98 கோடியை எட்டியது. அந்த ஆண்டின் இறுதியிலேயே, முதன்முறையாக, இரண்டு கோடியை தொட்டது. 2015ல் ... |
| ஜி.எஸ்.டி., வரி வசூலிக்கும் அதிகாரத்தில்... இழுபறி!: பாதியில் முடிந்தது கவுன்சில் கூட்டம் Posted: 04 Nov 2016 09:34 AM PDT புதுடில்லி:ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை யார் வசூலிப்பது என்பதில், மத்திய, மாநில அரசுகள் இடையே முடிவு எட்டப்படாமல் இழுபறி நிலவியதால், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் பாதியிலேயே முடிந்தது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு வரி விகி தங்களுக்கு மாற்றாக,ஒரே சீரான வரி விதிப்பை கொண்டு வரும் வகையில், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட உள்ளது. அடுத்த ஆண்டு, ஏப்., 1 முதல் நடைமுறைப் படுத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த வரி விதிப்பு தொடர்பான முடிவுகளை எடுக்கக் கூடிய உயர் அமைப்பான, ஜி.எஸ்.டி., கவுன்சிலின், நான்காவது கூட்டம், மத்திய நிதிஅமைச்சர் ... |
| Posted: 04 Nov 2016 09:40 AM PDT வங்கக் கடலில் மையம் கொண்டிருக்கும் புயல் சின்னம், தென் மேற்கிலிருந்து வீசும் காற்றால், திசை மாறி வங்கதேசத்துக்கு திரும்புகிறது. அதனால், தமிழகம், புதுச்சேரியில், நாளை முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை குறையும் என்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை, வழக் கத்திற்கு அதிகமாக, 20 நாட்கள் நீடித்தாலும், தமிழகத்திற்கு தேவையான மழை கிடைக்க வில்லை.அதேநேரத்தில், அக்., 25 முதல் வங்கக் கடலை மிரட்டிய, 'கியான்ட்' புயல்வலுவிழந்து, 30ல் வடகிழக்கு பருவ மழையாக மாறியது. இந்த மழை, நேற்று முன்தினம் வரை, தமிழகம் முழுவதும் பரவலாக ... |
| அகிலேஷ் தலைமையில் 'மெகா' கூட்டணி : முலாயமுக்கு காங்., நிபந்தனை Posted: 04 Nov 2016 09:41 AM PDT லக்னோ: சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள, உ.பி.,யில், 'முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமை ஏற்றால் மட்டுமே, 'மெகா' கூட்டணி அமைக்க முடியும்' என, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கிற்கு, காங்., - ஐக்கிய ஜனதா தள கட்சிகள் நிபந்தனை விதித்துள்ளன. அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ் வாதி ஆட்சி நடக்கும், உ.பி.,யில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் சமாஜ்வாதியில், கோஷ்டி பூசல் தலை விரித்தாடுகிறது.முதல்வர் அகிலேஷ் மற்றும் அவரது சித்தப்பா, சிவ்பால் யாதவ், கட்சியில், தனித்தனி கோஷ்டி யாக செயல்பட்டு வருகின்ற னர். இதனால், தேர்தலில், சமாஜ்வாதியின் வெற்றி பாதிக்கும் என, ... |
| 'நாடு திரும்பும் எண்ணம் இல்லை!' : மல்லையாவுக்கு கோர்ட் கண்டனம் Posted: 04 Nov 2016 09:45 AM PDT புதுடில்லி: 'வெளிநாட்டுக்கு தப்பியுள்ள, தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு, நாடு திரும்பும் எண்ணம் இல்லை' என்று கூறியுள்ள, டில்லி கோர்ட், அவருக்கு எதிராக, மேலும், ஒரு பிடிவாரன்டை பிறப்பித்து உள்ளது. பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா மீது, 9,000 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துள் ளதாக,பல்வேறு வங்கிகள் வழக்குதொடர்ந்தன. அதை தொடர்ந்து, மல்லையா, பிரிட்டனின் லண்டன் நகருக்கு தப்பிச் சென்றான். அவன் மீது, நாட்டின் பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், டில்லி விமான நிலைய சேவையை பயன்படுத்தியதற்காக, மல்லையா வின் விமான நிறுவனம் ... |
| 'ஓய்வூதிய விவகாரத்தில் பொய்!' : மோடி மீது ராகுல் பாய்ச்சல் Posted: 04 Nov 2016 09:52 AM PDT புதுடில்லி: ''முன்னாள் ராணுவ வீரர்களுக்கான, 'ஒரு பதவி; ஒரே ஓய்வூதியம்' திட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பொய் சொல்கிறார்,'' என, காங்., துணைத் தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டி உள்ளார். முன்னாள் ராணுவத்தினருக்கான, 'ஒரு பதவி; ஒரே ஓய்வூதியம்' திட்டம் தொடர்பாக, முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷண் கிரவால், சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக, போலீசாரால், மூன்று முறை தடுத்து நிறுத்தப்பட்ட, காங்., துணைத் தலைவர் ராகுல், கட்சி தலைமையகத் தில், முன்னாள் ராணுவ வீரர்களை, நேற்று சந்தித்து பேசினார். பின், நிருபர்களிடம் ராகுல் ... |
| இளங்கோவன் வருத்தம்: திருநாவுக்கரசர் மவுனம் Posted: 04 Nov 2016 10:15 AM PDT சென்னை: டில்லியில், ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரது குடும்பத்தினரை சந்திக்க சென்ற, காங்., துணைத் தலைவர், ராகுல் கைது செய்யப்பட்டார். அதை கண்டித்து, தமிழக காங்., சார்பில், சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக காங்., தலைவர், திருநாவுக்கரசர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், தொண்டர்கள் கூட்டத்தை தான் காணோம் என, முன்னாள் தலைவர் இளங்கோவன் கிண்டலாக குறிப்பிட்டார். அதற்கு, திருநாவுக்கரசர் பதில் சொல்ல மறுத்து விட்டார்.இளங்கோவன்:- ராகுலை சின்னப் பையனாக, பிரதமர் மோடி நினைக்கிறார். ராகுல், பிரதம ... |
| வீடு திரும்புவது எப்போது? ஜெ., முடிவு செய்வார்: ரெட்டி Posted: 04 Nov 2016 10:28 AM PDT ''முதல்வர் நன்றாக குணமடைந்து உள்ளார்; அவரை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்கிறார்,'' என, அப்பல்லோ மருத்துவமனை தலைவர், பிரதாப் ரெட்டி தெரிவித்தார். சென்னையில், அவர் கூறியதாவது:மருத்துவக் குழுவின் சிறப்பான நடவடிக்கையால், முதல்வர் விரைவாக குணமடைந்து உள்ளார்; விரைவில், அவர் வீடு திரும்புவார். அவர் குணமடைந்ததற்கு, தனிப்பட்ட டாக்டர் மட்டும் காரணமல்ல. அப்பல்லோ மருத்துவக் குழுவினர், செவிலியர்கள், எய்ம்ஸ் மருத்துவர் கள், லண்டன் டாக்டர் அளித்த சிகிச்சையும், லட்சக்கணக்கான மக்களின் வேண்டுதலும் காரணம்.அவர் விரைவில், 'நான் எப்போது வீட்டுக்கு ... |
| ஐகோர்ட்டில் ஸ்டாலின் ஆஜர் 2 மணி நேரம் விசாரணை Posted: 04 Nov 2016 10:38 AM PDT சென்னை:தேர்தல் வழக்கில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினிடம், சென்னை உயர் நீதிமன்றத்தில், இரண்டு மணி நேரத்துக்கும் மேல், குறுக்கு விசாரணை நடந்தது. கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், சென்னை, கொளத்துார் தொகுதியில், தி.மு.க., சார்பில் ஸ்டாலின், அ.தி.மு.க., சார்பில் சைதை துரைசாமி போட்டியிட்டனர். இதில், ஸ்டாலின் வெற்றி பெற்றார். இதையடுத்து, 'ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லாது' என, உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தில், சைதை துரைசாமி, தேர்தல் வழக்கு தொடுத்தார்.இவ்வழக்கு, கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டாலின் ஆஜராகி, சாட்சியம் அளித்தார். இந்த வழக்கு, மீண்டும் ... |
| சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.4-ஆக பதிவு Posted: 04 Nov 2016 11:30 AM PDT
சாண்டியாகோ : தென் அமெரிக்காவிலுள்ள சிலி நாட்டில், 6.4 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 6.4.. தென் அமெரிக்கவிலுள்ள சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் சாண்டியகோவின் தெற்கு பகுதியிலிருந்து 192 கி.மீ., தொலைவில், 87 கி.மீ., ஆழத்தில் மையம் கொண்ட இந்நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.4-ஆக பதிவாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கை இல்லை : இந்நிலநடுக்கத்தால் சாண்டியாகோவில் கட்டடங்களில் அதிர்வு ஏற்பட்டது. மேலும் நாட்டின் பல்வேறு பதிகளிலும் நிலநடுக்கம் ... |
| 11,000 என்.ஜி.ஓ.,க்களின் அங்கீகாரம் ரத்து Posted: 04 Nov 2016 01:23 PM PDT புதுடில்லி: அந்நிய நிதியுதவி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், பதிவு செய்ய விண்ணப்பிக்காத, என்.ஜி.ஓ., எனப்படும், 11 ஆயிரம் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் அங்கீகாரத்தை, மத்திய அரசு ரத்து செய்துள்ளது. தாக்கல் செய்ய உத்தரவு: நாடு முழுவதும், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, என்.ஜி.ஓ.,க்கள் செயல்படுகின்றன. எங்கிருந்து, எவ்வளவு நிதி வருகிறது; எவ்வளவு செலவாகிறது; சொத்து விபரங்கள் என்ன என்பன போன்ற விபரங்களை தாக்கல் செய்யும்படி, என்.ஜி.ஓ.,க்களுக்கு, 2014ல், மத்திய அரசு உத்தரவிட்டது. இதன்படி, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத, 10 ... |
| Posted: 04 Nov 2016 02:40 PM PDT போபால்: வியாபம் ஊழல் தொடர்பாக, போபாலில், ஐந்து இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று ஒரே நேரத்தில், சோதனை நடத்தினர். கோடிக் கணக்கில் ஊழல் : ம.பி.,யில், சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ. ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், தொழில் முறை தேர்வு வாரியமான வியாபம் மூலம், மாநில அரசு பணிகளுக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். மேலும், மருத்துவக் கல்லுாரிகளுக்கு, மாணவர்களை தேர்வு செய்யும் நுழைவுத்தேர்வுகளும், வியாபம் மூலம் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகளில் கோடிக் கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக, குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த ... |
| நேபாளப் பயணம் நட்புறவின் அடையாளம்: பிரணாப் Posted: 04 Nov 2016 03:15 PM PDT புதுடில்லி : தனது நேபாளப் பயணம் நட்புறவின் அடையாளம் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். கே.ஆர்.நாராயணனுக்குப் பின்.... 3 நாள் பயணமாக நேபாளம் சென்ற ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மறைந்த முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்குப் பின் நேபாளத்திற்கு சென்ற இந்திய ஜனாதிபதி என்ற பெயர் பெற்றார். தனது சுற்றுப்பயணத்தில் நேபாளத் தலைவர்கள் பலரை சந்திக்த பிரணாப், நேபாளத்தின் புராதனச் சிறப்பு மிக்க கோயில்களுக்கும் சென்றார். சீதை கோயிலில் பிரணாப்: தனது பயணத்தின் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 05,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |