Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஓர் " கை " ...

Posted: 04 Nov 2016 11:06 AM PDT

ஓர் " கை " ...

பிறக்கை
அழுகை
தவழ்கை
எழுகை
சேர்க்கை
படர்கை
பயில்கை
வளர்கை
பணியமர்கை
மணக்கை
பிடிக்கை
கேளிக்கை
உலகை
வெறுக்கை
தளர்கை
துளிர்க்கை
தருகை
ஓர் " கை "
நம்பிக்கை
புரிகை
வாழ்க்கை !

அறிமுகம்

Posted: 04 Nov 2016 10:48 AM PDT

Annaivarukum vanagam tamil typing satru siramma erupathal mannakkagam adutha murai tamilithan nan pathi seivan

சுய அறிமுகம்

Posted: 04 Nov 2016 10:46 AM PDT

பெயர்:சத்தீஸ் ஹரிஹரா, பி.இ., எம்.பி,ஏ., எம்.ஏ., அஸ்ட்ராலஜி சொந்த ஊர்:ஈரோடு ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்: கூகுள் பொழுதுபோக்கு: ஆன்மிக சுற்றுலா தொழில்: தொழில் முறை வேத ஜோதிடர் மற்றும் அஸ்ட்ரோ நியுமராலஜிஸ்ட் மேலும் என்னைப் பற்றி:ஸ்ரீ மஹா விஷ்ணு அஸ்ட்ரோ  தமிழ் நாட்டில், ஈரோடு மாவட்டத்திலேயே மிக சிறந்த ஜோதிட தீர்வு மைய நிறுவனமாகும். மேலும் ஜோதிடம், திருமணப் பொருத்தம், நியுமராலஜி, ஜெம்மாலஜி, வாஸ்து சாஸ்திரம் மற்றும் குடும்ப நல கவுன்சிலிங் கையாள்வதில் நாங்கள் மிகவும் திறமையானவர்கள் என ...

புதிய ரூ.1 கரன்சி நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது.

Posted: 04 Nov 2016 09:07 AM PDT

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ரிசர்வ் வங்கி புதிய ரூ.1 கரன்சி நோட்டுகளை புழக்கத்தில் விட உள்ளது. புதிய நோட்டில் H சின்னத்துடன் உட்பொதிந்த L எழுத்துடன் இருக்கும். புதிய ரூ.1 நோட்டின் நிறம் பெருவாரியாக முன்புறம் ரோஜா நிறத்துடன் இணைந்த பச்சையிலும் பின்புறம் மற்ற நிற கலவையிலும் இருக்கும். இது 9.7x 6.3 செ.மீ. அளவிலான இந்த நோட்டின் முன்புறத்தில் பாரத் சர்க்கார் என்ற வார்த்தைகள் Government of India என்ற வார்த்தைகளுக்கு மேல் இருக்கும். இந்த நோட்டில் நிதித்துறை செயலர் ரத்தன் ...

நீ தூங்கும் அழகை ரசிக்க…!!

Posted: 04 Nov 2016 09:03 AM PDT

மன அழுத்தத்திலேயே மிகவும் மோசமான மன அழுத்தம் திங்கட்கிழமை காலைகளிலேயே உணரப்படுகின்றன…! – Monday Morning Officers – ——————————— அழகை காண,! – இனியவளே நீ துயில் கலையும் அழகை காண, காலையில் சூரியனும்… நீ தூங்கும் அழகை ரசிக்க இரவில் நிலவும் வந்து போவதால் தான், இந்த பூமியே சுழல்கிறது .. – ——————————— – படிக்காமல் #சரஸ்வதியை கும்பிட்டாலும் உழைக்காமல் #லக்ஷ்மியை கும்பிட்டாலும் – #கல்வியும் கிடைக்காது செல்வமும் கிடைக்காது பொறியும் சுண்டலும் மட்டுமே கிடைக்கும்… – ————————————- – சார் ...

தெரியுமா? – பொது அறிவு தகவல்

Posted: 04 Nov 2016 09:00 AM PDT

*1913ம் ஆண்டு ஸ்பானிய – அமெரிக்கப் போரின்போது முதன்முதலில் எளிமையான மெல்லிய துணியிலான டி-ஷர்ட்களை அமெரிக்கப் போர் வீரர்கள் அணிந்தனர். பின்னர் ஜேம்ஸ் டீன் என்ற அமெரிக்க நடிகர் 1955ல் 'Rebel without a Cause' திரைப்படத்தில் டி-ஷர்ட்டுகளை அணிந்து நடித்தபிறகு டி-ஷர்ட்டுகள் மக்களிடையே படுவேகமாகப் பிரபலமாயின. – ——————————————– – *1927ல் அமைக்கப்பட்ட ஹில்டன் யங் கமிஷனின் பரிந்துரையின் அடிப்படையில்தான் ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா உருவானது. இக்கமிஷனுக்கு ராயல் கமிஷன் என்ற பெயரும் உண்டு. 1929ம் ...

ஜயத்திரதனுக்கு துச்சலை ( எழுதும் கற்பனைக் கடிதம்)

Posted: 04 Nov 2016 08:58 AM PDT

வீரமகளிர் - ----------- இதிகாசங்களில் இடம்பெறும் சகுந்தலை, திரௌபதி போன்ற பாத்திரங்கள் தங்கள் நாயகர்கள் அல்லது காதலர்களுக்கு எழுதும் கற்பனைக் கடிதங்கள் இவை --- வங்காளியில் - மைக்கேல் மதுசூதன் தத்தா தமிழாக்கம் - சு.கிருஷ்ணமூர்த்தி - ---------------------------------- - தொடரும்

ஐ.நா.,வின் சட்ட குழுவில்----இந்தியர் ஒருவர்

Posted: 04 Nov 2016 08:49 AM PDT

ஐ.நா.,வின் சட்ட குழுவில்----இந்தியர் ஒருவர் ஐ.நா: ஐ.நா.,வின் சட்ட குழுவில் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் இந்தியர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். முதல் இந்தியர்: சர்வதேச சட்ட குழுவுக்கான தேர்தலில், வெற்றி பெற்ற 34 பேரில் அனிருத்தா ராஜ்புத்(33) என்ற இந்தியரும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வரும் ஜனவரி 2017 ல் துவங்கும் இவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த உறுப்பினர் பதவிக்காக நேற்று நடந்த தேர்தலில் ராஜ்புத்திற்கு ஆதரவாக 160 ஓட்டுக்கள் ...

என் பொற்காலம்

Posted: 04 Nov 2016 08:44 AM PDT

என் ஒரு இதயம்போதவில்லைஉன் நினைவுகளை சுமக்க...பொன்னேஎன் பொற்காலமே...சில நினைவுகள் இதயத்தில் இருக்கும் - நீஇதயமாய் இருப்பாய்...நினைவேஎன் நிகழ் காலத்தின்உயிர் காற்றே....உயிர் இருக்கும் வரைநினைவுகள் இருக்கும்..உன் நினைவில்தான் உயிரேஇருக்கும்...மின்னல் ஒரு நொடி..பார்வையில்.மலர்தல் ஒரு நிமிடம்முகத்தில். பட்டாம் பூச்சிகள்பட படக்கும்..காற்றில் பறக்கும் உன் அழகு முடிகளில்....வித விதமான பூக்கள் பூக்கும்ஒரு முல்லைக்கொடி...பின்னலிட்ட உன் கூந்தல்பிரம்மன் பொறுமையாய்வரைந்த ஓவியம் நீ....ஆயிரம் கவிதைகள் அழித்தேன்....அனைத்தும் ...

சுவாமி விவேகானந்தர்

Posted: 04 Nov 2016 08:36 AM PDT

சமுதாயமானாலும் அரசியலானாலும் அதன் அமைப்புக்கு அடிப்படையாக உள்ளது மனிதனின் நற்குணமே. பாராளு மன்றம் இதை வகுத்து ,அதைவகுத்து என்ற காரணங்களால் ஒரு நாட்டை நல்லது என்றோ , பெருமை மிக்கது என்றோ கூற முடியாது........
சுவாமி விவேகானந்தர்.

லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?

Posted: 04 Nov 2016 08:23 AM PDT

– முடியாது என்று சொல்பவன் முட்டாள்… முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி… இப்ப சொல்லுங்க…என் "செல்"லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா…முடியாதா…? – ————————————– – லவ் லட்டருக்கும், எக்ஸாம்'க்கும் என்ன வித்தியாசம்? – லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது… – எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது… ஆனா நிறைய எழுதுவோம்… எப்படி? – ————————————— – கணவன்: காலெண்டர்'ல என்னப் பாக்குற? மனைவி: பல்லி விழும் பலன்… கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்… அது சரி… பல்லி எங்க ...

தெரிந்து கொள்வோம் – பொது அறிவு தகவல்

Posted: 04 Nov 2016 08:20 AM PDT

*அதிக ஆர்வத்தால் ஏற்படும் உயர் ரத்த அழுத்தத்தை ஒயிட் கோட் ஹைப்பர் டென்ஷன் (அ) ஒயிட் கோட் சிண்ட்ரோம் என்று அழைக்கின்றனர். – ———————————————— *பூமியில் 7.5 Quintillion (7500,000,000,000,000,000) மணல் மணிகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதே அளவு நட்சத்திரங்களும் வான்வெளியில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடாவில் Quintillion என்பது 1 ஐத் தொடர்ந்து 18 பூஜ்யங்கள் கொண்ட எண் ஆகும். பிரிட்டன் மற்றும் பிரான்சில் 1ம் எண்ணைத் தொடர்ந்து 30 பூஜ்யங்கள் கொண்ட எண்ணாக இது ...

என் பெயரில் மாற்றம் தேவை...

Posted: 04 Nov 2016 08:18 AM PDT

என் பெயரில் மாற்றம் தேவை...
கவியருவி ம.ரமேஷ் என்பதை முனைவர் ம.ரமேஷ் என்று மாற்றிக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சென்னை கொலை நகரமாக மாறுகிறது

Posted: 04 Nov 2016 08:07 AM PDT

சென்னை கொலை நகரமாக மாறுகிறது சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு மக்கிஸ் கார்டன் பகுதியில் தனலட்சுமி என்ற பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து ஆயிரம் விளக்கு காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்த மூன்று பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்த கோடீஸ்வர பெண் சாந்தி மர்ம நபரால் படுகொலை செய்யப்பட்டார். மேற்கு ...

சிவகாமியின் சபதம் single link ஒலி புத்தகம்

Posted: 04 Nov 2016 06:37 AM PDT

சிவகாமியின் சபதம் single link ஒலி புத்தகம் இருந்தால் பதிவேற்றவும்

நன்றி

யூடியூப் பகிர்வு: காதலே வாழ்க்கையா?- ‘அந்த நொடி’ குறும்படம்

Posted: 04 Nov 2016 06:35 AM PDT

- வாழ்வதற்கு எவ்வளவோ நல்ல காரணங்கள் தேவைப்படுகிறது. ஆனால் நினைத்தவுடனே சாவதற்கு மட்டும் ஒரு சொத்தைக் காரணம் கைவசம் இருக்கிறது நமக்கு? ஏன் இப்படி? வாழ்வைப் புரிந்துகொள்ளாத இன்றைய தற்கொலைகள் தேவைதானா எனக் கேட்கிறது 'அந்த நொடி' குறும்படம். பொதுவாக தற்கொலைகளைப் பற்றிய படங்களில் நீண்ட அறிவுரைகள் சொல்லப்படும், சில நேரங்களில் இந்த மாதிரி அறிவுரைகளைவிட அதற்கு பதிலாக சாவதே மேல் என்றுகூட நமக்குத் தோன்றிவிடும். 'அந்த நொடி' குறும்படம் அந்த மாதிரியான அசட்டுத் தனங்கள் எதையும் செய்யவில்லை. ...

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Posted: 04 Nov 2016 06:27 AM PDT

என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்


நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல


வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்

அவர் கொஞ்சம் பயந்த சுபாவம்ங்க…!!

Posted: 04 Nov 2016 05:41 AM PDT

என்னங்க இது, ரௌடி பந்தாவா போஸ் கொடுக்கிறான் புடிச்ச போலீஸ் முகத்தை மூடிக்கிட்டு நிற்கிறார்…? – அவர் கொஞ்சம் பயந்த சுபாவம்ங்க…!! – கோவி கோவன் – – ————————————- – "செய்… அல்லது செத்துமடி…" —- நேதாஜி.. "படி.. அல்லது பன்னி மேய்…" — எங்க பிதாஜி…. – ———————————– – ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்… – மாணவர்கள்: புரியல சார்… – ————————————-

மரம் வளர்க்காத ஒருவன்…கவிதை

Posted: 04 Nov 2016 03:57 AM PDT

ஒரு கல் – எங்கிருந்தோ வந்த ஒரு கல் அனைவர் மேலும் அடித்து விட்டு செல்கிறது பயத்தை! – ——————— விகடபாரதி குமுதம் – ----------------------------------- - பெருமை – பறவைகள் வளர்க்கிறேன் என்றான் பெருமையாக மரம் வளர்க்காத ஒருவன்! – ——————— விகடபாரதி குமுதம் –

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை

Posted: 04 Nov 2016 03:39 AM PDT

- "காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக் காக்கைக்குக் கைக்கைக்கா கா" -புலவர் காளமேகம்- (1)காக்கைக்கா காகூகை = காக்கைக்கு ஆகா கூகை (2)கூகைக்கா காகாக்கை = கூகைக்கு ஆகா காக்கை பாடல் பொருள்: இரவில் காக்கைக்கு ஆகாது கூகை (ஆந்தை). அதாவது காக்கையும் கூகையும் பகையானவை. பகலில் கூகைக்குக் காக்கை ஆகாது. பகலில் காக்கை வலிமை பெறும். இரவில் கூகை வலிமை பெறும். அதுபோல காலம் கருதி, அரசன் கொக்கைப் போல காத்திருந்து எதிரிகளை அழிக்க வேண்டும். ...

குழந்தைகள் பெண்கள் ஆண்கள் –

Posted: 04 Nov 2016 03:37 AM PDT

அப்பாவின் நண்பர் வீட்டில் 'அப்பா கடன் வாங்கி வரச் சொன்னார்' என்று காத்திருக்கும் குழந்தைகள் அறிவதில்லை நிராகரிப்பின் அவமானத்தையும் எதிர்காலத்தின் பயமுறுத்தலையும் – 'ஓம்' என்று வரைந்து அதற்கும் கீழ் லாபம் என்றெழுதிய நிதி நிறுவனச் சுவரை முறைத்தபடி வெள்ளிக்கிழமை விளக்கு வைத்தபின் வந்து அவசரத் தேவைக்காக கடன் கேட்டு கெஞ்சும் ஆண்கள் அறிவதில்லை முதலாளியின் புறக்கணிப்பையும் மூடுபனியைத் தாண்டிய வெளிச்சித்தையும் – மாத இறுதியில் வந்துவிட்ட விருந்தினர் அறியாமல் பக்கத்து வீட்டிலிருந்து ஒரு ...

சிரிப்பதற்கு மட்டுமே…

Posted: 04 Nov 2016 03:33 AM PDT

கோழிக்கறியும் குதிரைக்கறியும் – ஒருவன் அசைவ உணவு விடுதிக்குச் சென்று கோழிப் பிரியாணி கேட்டான். அந்தப் பிரியாணியைச் சாப்பிட்டுப் பார்த்தான். அந்தப் பிரியாணியிலிருந்த கோழிக்கறியுடன் வேறு கறி கலந்திருப்பது போல் தெரிந்தது. – உடனே சர்வரை அழைத்து, "இது கோழிக்கறி மாதிரி தெரியவில்லையே… இதனுடன் குதிரைக்கறியும் கலந்திருப்பது போல் தெரிகிறதே…" என்றான். சர்வர் முதலில் மழுப்பினான். – அதட்டிக் கேட்டதும், "ஆமாம் சார்! வாசனைக்காகக் கோழிக் கறியுடன் கொஞ்சம் குதிரைக் கறியும் சேர்ப்போம்" என்றான். – "எவ்வளவு ...

வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம்

Posted: 04 Nov 2016 03:20 AM PDT

- சஹ்றா என்ற சொல்லுக்கு அரபு மொழியில் பாலைவனம் என்றே பெயர். அதனால்தான் இந்த பாலைவனத்துக்கும் சகாரா என்றே பெயர் வழங்கப்ப ட்டிருக்கக்கூடும். இதன் பரப்பளவு சுமார் மூன்றரை கோடி சதுர மைல்கள். இந்தப் பாலைவனம் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகி இருக்கக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதற்கும் முன்னர் ஏரிகளும், ஆறுகளும் இங்கே இருந்தனவாம். அல்ஜீரியா, தசாது, எகிப்து, எரித்திரியா, லிபியா, மாலி, மௌரிடானியா, மொரோகோ, நைகர், சூடான், தூனிசியா, மேற்கு சகாரா ஆகிய 12 நாடுகளைத் தொட்டு ...

திரைப்பட செய்திகள் - தொடர்பதிவு

Posted: 04 Nov 2016 03:13 AM PDT

- டப்ஸ்மேஷ் என்பது சினிமா வசனங்கள், பாடல்களை அதேபோல நடித்துக்காட்டும் வீடியோ வடிவிலான தொகுப்பாகும். தில் ஈடுபட்டு புகழ்பெற்றவர்களில் முதன்மையானவர் பெங்களூரைச் சேர்ந்த மிருணாளினி. அவர் சினிமாவில் நடிக்க உள்ளதாகச் சில தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதுகுறித்து ஒரு பேட்டியில் பதிலளித்துள்ளார் மிருணாளினி. சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. முன்னணி இயக்குநர்கள் நடிக்க அழைத்துள்ளார்கள். ஆனால் என் அப்பா – அம்மாவுக்கு நான் சினிமாவில் நடிப்பதில் இஷ்டமில்லை. என் குடும்பத்தில் ...

ஒளிந்து கொள்கிறார் அப்பா! – கவிதை

Posted: 04 Nov 2016 03:11 AM PDT

– ஒவ்வொரு வருடமும் பொங்கலன்று அப்பாவுக்குச் சாமி கும்பிடுவாள் அம்மா – பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒன்றே உள்ளது அப்பாவுக்கு உருவ ஞாபகமாய் இறந்த போனவரைத் திட்டி என்ன பயன் என்பேன் நான் – சாமி கும்பிட்ட பின் புகைப்பட அப்பாவை பீரோ உள்ளே வைத்து மறந்து விடுவாள் வைத்த இடத்தை – அடுத்த வருடம் துழாவுகையில் வருஷா வருஷம் போய் ஒளிஞ்சிக்கிறானே என்ற வாக்கியத்தில் ஆரம்பமாகும் அன்றைய திட்டுகள்…! – ——————————- ஏ.ஆர்.கோபாலகிருஷ்ணன் நன்றி-ஆனந்த விகடன்

51-வது பிறந்தநாள்: இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு பிரபலங்கள் வாழ்த்து

Posted: 04 Nov 2016 03:09 AM PDT

மும்பை : இந்தி நடிகர் ஷாருக்கானின் தனது 51-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று, பாலிவுட்டை சேர்ந்த பிரபலங்கள் அவருக்கு கைபேசி மற்றும் ட்விட்டர் மூலம் வாழ்த்துமழை தெரிவித்தனர். உலகளாவிய அளவில் அதிக சம்பளம்பெறும் கதாநாயகர்களில் ஒருவராக கருதப்படும் நடிகர் ஷாருக் கான் 'பவுஜி', 'சர்க்கஸ்' ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றி, பின்னர் 1992-ம் ஆண்டு வெளியான 'தீவானா' படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் தடம் பதித்தார். 'பாஸிகர்', 'டர்', 'அன்ஜான்' உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும், மேலும் ...

கண்ணுக்கு மையழகு -காணொளி

Posted: 04 Nov 2016 02:47 AM PDT

2000 பதிவுகள் கடந்த தமிழ்நேசன் 1981

Posted: 04 Nov 2016 01:45 AM PDT

2000 பதிவுகளை கடந்த அசகாய சூரர் தமிழ்நேசனை வாழ்த்தலாம் வாங்க... தொடர்ந்து பல பயனுள்ள பதிவுகள் பல்லாயிரம் தொடர மனமார்ந்த வாழ்த்துகள் தமிழ்நேசன் .

கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!

Posted: 04 Nov 2016 12:37 AM PDT

¦ அம்மா  விளையாடப்  போறேன் என்ன  விளையாட்டு? போய்ப்  படி ¦ உண்டி  கொடுத்தோரே உயிரை  எடுத்தனர் கல்லரை  வாசகம்:  ஈழத்தமிழர்   ¦ காதலியைப்  படைத்தவன் கடவுள்  என்றால் கடவுள்  எனக்கு  மாமா  உறவு ¦ படிடா … முடியாது! எழுதுடா … முடியாது! சார் நான் பாஸ் ஆயிட்டேன் ¦ வரிசையில் ஆண்கள் திறக்கப்பட்டது டாஸ்மாக்

கவியருவி ம. ரமேஷ் கவிதைகள்

Posted: 04 Nov 2016 12:22 AM PDT

குதர்க்கம்

இன்றும் -
நெருஞ்சி முள்ளில்
நடக்கிற போது
பரதன் குலத்தோர்
செருப்பை
பறித்துக் கொள்கிறார்கள்

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Posted: 04 Nov 2016 12:18 AM PDT

µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு

µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை


µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி

ஈச்சங்குலை...!!

Posted: 03 Nov 2016 11:09 PM PDT

சுயம்…!! * சுய அறிவு சுகமளிக்கும் நகல் அறிவு நஞ்சை வளர்க்கும் * செயல்பாட்டில் எங்குமில்லை சொற்பொழிவு எல்லாம் தத்துவமயம். * தவறு நடப்பது இயல்பு தவறில்லாமல் நடப்பதுதான் சிறப்பு. * வாழ்க்கையின் நோக்கம் வாழ்வது மரணத்தை நோக்கி நகர்வது. * சந்திக்க வந்தவர் பேசவில்லை துணைக்கு வந்தவர் பேசினார். * செத்தவர் மீதிருந்தது சொத்து உறவினர் போராடினர் ஒன்று சேர்ந்து. ந.க.துறைவன். *.

மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி?

Posted: 03 Nov 2016 06:23 PM PDT

மது... மயக்கம் என்ன?- டாக்டர் ஷாம் துப்பாக்கிக் குண்டுகளை விட கொடூரமானது மொடாக்குடியின் பின் விளைவுகள்! குடியின் காரணமாக ஏற்படும் உடல் ரீதியான பிரச்னைகளுக்கு மட்டுமே வேறு வழியில்லாமல் சிகிச்சை எடுத்துக்கொள்வது அப்பழக்கத்தினரின் இயல்பு. அப்பிரச்னைகளுக்கு மூல காரணமாக குடி இருப்பது பற்றி அவர்கள் ஒருபோதும் கவலைப்படுவதில்லை. தற்காலிக நிவாரணம் கிட்டினாலே மன நிறைவு அடைந்து, குடிக்கிற பணியை தொடரச் சென்று விடுவார்கள். இப்படிப்பட்டவர்கள் பூரணமாக மதுவை மறக்க என்னதான் வழி? மதுப்பழக்க மாயையிலிருந்து ...

நெல்லை, வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

Posted: 03 Nov 2016 06:16 PM PDT

சென்னை: தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை எழும்பூரில் இருந்து நவ.18, 25ம் தேதிகளில் இரவு 9.05 மணிக்கு புறப்படும் பல மடங்கு சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (06001) மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். திருநெல்வேலியில் இருந்து நவ.20, 27ம் தேதிகளில் பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படும் பல மடங்கு சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (06002) மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ...

கடுகு குழம்பு

Posted: 03 Nov 2016 06:13 PM PDT

தேவையானவை: கடுகு - 40 கிராம் சீரகம் - 1 தேக்கரண்டி மிளகு- 1 தேக்கரண்டி பால் பெருங்காயம் - 1 தேக்கரண்டி மல்லி விதை - 50 கிராம் வெந்தயம் - 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - சிறிதளவு புளி - எலுமிச்சையளவு சின்ன வெங்காயம் - 1 கையளவு பூண்டு - 1 கையளவு நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி கருவேப்பிலை - 2 கொத்து கல் உப்பு - தேவைக்கு - செய்முறை: - கடுகை சிவக்க வறுத்து பொடியாக்கிக்கொள்ளவும். சீரகம், மிளகு, பெருங்காயம், மல்லி விதை, வெந்தயம் இவை அனைத்தையும் தனித்தனியாக எண்ணெயில்லாமல் ...

திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு தடை விதிக்குமாறு மனு தலைமை செயலாளரிடம் முறையிடும்படி ஐகோர்ட்டு உத்தரவு

Posted: 03 Nov 2016 06:03 PM PDT

பெங்களூரு, திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு தடை விதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவில், தலைமை செயலாளரிடம் முறையிடும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. திப்பு சுல்தான் ஜெயந்தி கர்நாடக அரசு சார்பில் திப்பு சுல்தான் ஜெயந்தி வருகிற 10–ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆயினும் இதை பொருட்படுத்தாமல் மாநில அரசு திப்பு சுல்தான் ஜெயந்தியை திட்டமிட்டபடி கொண்டாட முடிவு செய்துள்ளது. இந்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™