Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் : தமிழகத்திற்கு மத்திய அரசு விருது

Posted: 30 Nov 2016 08:36 AM PST

சென்னை: உடல் உறுப்பு தானத்தில், தமிழகம் தொடர்ந்து இரண்டாவது முறையாக, தேசிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்காக மத்திய அரசு, விருது வழங்கி பாராட்டி உள்ளது.

டில்லியில் நடந்த, ஏழாவது இந்திய உடல் உறுப்பு தான நிகழ்ச்சியில், முதலிடம் பெற்ற தற்கான, மத்திய அரசு விருதை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், ஜெ.பி.நட்டா வழங்கினார்.அதை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
4,992 உறுப்புகள் :
விழாவில், அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: தமிழகம், இரண்டாவது முறையாக, ...

'ஜன்தன்' கணக்கில் இருந்து பணம் எடுக்க கட்டுப்பாடு

Posted: 30 Nov 2016 08:54 AM PST

மும்பை, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, 'ஜன்தன்' வங்கி கணக்குகளில் திடீரென முதலீடுகள் அதிகரித்ததால் அதிர்ச்சி அடைந்துள்ள மத்திய அரசு, கறுப்புப் பண முதலைகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது; அதன்படி, இந்த வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் எடுக்க, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஏழை, எளிய மக்களுக்கும், வங்கி கணக்கை துவக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது, பிரதமரின் ஜன்தன் வங்கி கணக்கு திட்டம். ஒரு ரூபாய் கூட இருப்பு இருக்க வேண்டிய அவசியமில்லாத இந்த ஜன்தன் வங்கி கணக்கு திட்டத்தின் கீழ், 25.68 கோடி வங்கி கணக்குகள் ...

பார்லி.,யை தொடர்ந்து முடக்கும் எதிர்க்கட்சிகள் முரண்டு!:பிரதமர் வந்தும் விவாதத்தில் பங்கேற்க மறுப்பு

Posted: 30 Nov 2016 08:55 AM PST

புதுடில்லி:செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பான விவாதத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க வேண்டும் என,பார்லிமென்டை எதிர்க்கட்சிகள் முடக்கி வந்தன.

இந்நிலையில், பிரதமர் மோடி சபையில் இருந்த போதும், விவாதத்திற்கு மறுத்து, ஓட்டெடுப்பு கேட்டு அமளியில் ஈடுபட்டதால், நேற்றும், பார்லி., முடங்கியது.செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் தொடர் பாக, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து, பார்லிமென்டின் இரு சபைகளையும் முடக்கி வருகின்றன. பிரத மர் மோடி நேரில் வந்து, விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என, வலியுறுத்தி வந்தன. இந்நிலை யில், பிரதமர் தொடர்பான கேள்விகள், லோக் ...

தியேட்டரில் தேசிய கீதம் இசைக்க சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

Posted: 30 Nov 2016 09:04 AM PST

புதுடில்லி: 'நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில், திரைப்படம் துவங்கும் முன், தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட், அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில், பல ஆண்டுகளாக தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது. எனினும், பல திரையரங்குகளில், அந்த நடைமுறை நிறுத்தப்பட்டு விட்டது; ஒருசில திரையரங்குகளில் மட்டும், சம்பிர தாய த்திற்காக மட்டும் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள திரை யங்குகளில், தேசிய கீதம் இசைப்பதை கட்டாய மாக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில், சியாம் நாராயண் ...

இன்று நள்ளிரவு கடலூரைக் கடக்கிறது புயல்... நடா!:இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்: தமிழகத்திற்கு வானிலை மையம் எச்சரிக்கை:5 மாவட்ட பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை

Posted: 30 Nov 2016 09:34 AM PST

வங்க கடலில் உருவாகியுள்ள, 'நடா' புயல், கடலுார் அருகில், இன்று நள்ளிரவுக்கு பின், கரையை கடக்கும் எனவும், காற்று, இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் எனவும், தமிழக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், ஐந்து மாவட்ட பள்ளிகளுக்கு, இன்று முதல், இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தென் மேற்கு பருவமழையும், வட கிழக்கு பருவமழையும், எதிர்பார்த்த மழையை தராமல், நீர் நிலைகள் வறண்டு விட்டன. நிலத் தடி நீர் மட்டம் சராசரியாக, 400 அடிக்கும் கீழே சென்றுள்ளது. அதனால், மழை வருமா; வளம் தருமா என, மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.இந்நிலையில், ...

நீதி துறைக்கு ரூ.278 கோடி: அரசு தகவல்

Posted: 30 Nov 2016 09:38 AM PST

சென்னை:'நீதித் துறை தொடர்பான, 278 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான, 72 பரிந்துரைகளுக்கு, மாநில நிதித் துறை ஒப்புதல் வழங்கி உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நீதித் துறையின் உள்கட்டமைப்புக்கு தேவை யான நிதியை ஒதுக்குவது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த வழக் கறிஞர்கள், ராஜேந்திரன், வசந்தகுமார், மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இம்மனுக்கள், தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதிகள் சிவஞானம், மகாதேவன் அடங்கிய, 'பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தன. நிதித்துறை சார்பில், அரசு பிளீடர் எம்.கே. சுப்ரமணியன் தாக்கல் செய்த ...

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் அகதிகளுக்கு ரூ.2,000 கோடி

Posted: 30 Nov 2016 09:40 AM PST

புதுடில்லி:பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து, ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் அகதிகளாக உள்ளவர்களுக்கு, 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண திட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது; இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள்:பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்தவர்கள், நாடு சுதந்திரம் அடைந்தபோது ஏற்பட்ட பிரிவினை மற்றும் 1965, 1971 போரின் போது, அகதிகளாக, நம் நாட்டில் தஞ்சமடைந்தனர். இவ்வாறு அகதிகளாக உள்ள, 36ஆயிரத்து, 384 ...

அழகிரி - ஸ்டாலின் சந்திப்பு கருணாநிதி குடும்பத்தில் ஒற்றுமை

Posted: 30 Nov 2016 09:45 AM PST

சென்னை:இரண்டு ஆண்டுகளுக்கு பின், தி.மு.க., தலைவர், கருணாநிதியின் முன்னி லையில், அவரது மகன்கள் அழகிரியும், ஸ்டாலினும், நேற்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு மூலம், கருணாநிதியின் குடும்பத்தில் ஒற்றுமை பிறந்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரி, நேற்று முன்தினம் சென்னை வந்தார். விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டியில், 'நான் அரசியலிலேயே இல்லை; என்னிடம் அரசியல் கேள்விகளை கேட்க வேண்டாம்' என்றார். வழக்கமாக, இதுபோன்ற பேட்டிகளில், தி.மு.க., வையும், அதன் பொருளாளர், ஸ்டாலினையும் விமர்சித்து வந்த அழகிரியின் நிலைப்பாட்டில், அப்போதே மாற்றம் ...

கவுன்சிலர் சொத்து பட்டியலை தாக்கல் செய்யுங்கள்!:தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

Posted: 30 Nov 2016 09:48 AM PST

சென்னை:சென்னை மாநகராட்சி கவுன்சிலர் களின் சொத்து விபரங்களை தாக்கல் செய்யும் படி, மாநில தேர்தல் ஆணையத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த, பொன்.தங்கவேலு என்பவர், தாக்கல் செய்த மனு:மாநகராட்சியின் நடவடிக்கைகளில், கவுன்சிலர் கள், புரோக்கர்களின் தலையீடு இருக்கக் கூடாது என, மேயர் மற்றும் ஆணையரை சந்தித்து, வலி யுறுத்தி உள்ளேன். கவுன்சிலர்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப, அதிகாரிகள் செயல்பட வேண்டியுள்ளது.கவுன்சிலராக இருப்பவர்கள், மாநகராட்சியின் சொத்துக்களுக்கு பாதுகாவலராக, வருவாயை பெருக்க ...

மாத சம்பளதாரர்கள் சிக்கலுக்கு தீர்வு: ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை

Posted: 30 Nov 2016 10:46 AM PST

புதுடில்லி: சம்பள நாளை முன்னிட்டு வங்கிகளுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக வரும் என எதிர்பார்க்கப்படுவதால் வங்கிகளில் பணம் எடுக்க சிறப்பு கவுண்டர்கள் அமைக்கவும், வங்கிகளுக்கு பரிவர்த்தனைக்காக வழங்கப்படும் பணத்தின் அளவை 20-30 சதவீதம் அதிகப்படுத்தவும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
நவ.,8 ம்தேதி நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் வங்கிகளில் பணம் போடுவது மற்றும் எடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யவும், ...

சுடிதார் பெண்களுக்கு மீண்டும் மறுப்பு : பத்மநாப சுவாமி கோவிலில் பரபரப்பு

Posted: 30 Nov 2016 11:45 AM PST

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம், பத்மநாப சுவாமி கோவிலுக்குள், பெண்கள், சுடிதார் மற்றும் சல்வார் கமீஸ் அணிந்து வர, கோவில் நிர்வாகம் உத்தரவிட்டும், நேற்று, சுடிதார் அணிந்து வந்த பெண்களை, கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை; இதை கண்டித்து, பக்தர்கள் போராட்டம் நடத்தினர். கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த, பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். இங்குள்ள கோவில்களில் பெரும்பாலும், ஆண்கள், வேட்டியும், பெண்கள், சேலையும் மட்டுமே அணிந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மாநில தலைநகர், திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற, பத்மநாப சுவாமி கோவிலிலும், ...

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் அகதிகளுக்கு ரூ.2,000 கோடி

Posted: 30 Nov 2016 12:41 PM PST

புதுடில்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து, ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் அகதிகளாக உள்ளவர்களுக்கு, 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண திட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது; இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள்:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்தவர்கள், நாடு சுதந்திரம் அடைந்தபோது ஏற்பட்ட பிரிவினை மற்றும் 1965, 1971 போரின்போது, அகதிகளாக, நம் நாட்டில் ...

'ஆதார்' தராதவர்களுக்கு காஸ் மானியம் 'கட்'

Posted: 30 Nov 2016 02:12 PM PST

வங்கி, காஸ் ஏஜன்சிகளில், 'ஆதார்' விபரம் தராதவர்களுக்கு, இன்று முதல், மானியத்தை நிறுத்த, எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
மத்திய அரசின், நேரடி மானிய திட்டத்தில், வீட்டு சமையல் காஸ் சிலிண்டர், சந்தை விலையில் சிலிண்டர் வாங்க வேண்டும். அதற்கான மானியத்தை, எண்ணெய் நிறுவனங்கள், வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கின்றன.
மானிய திட்டத்தில் இணைய, வாடிக்கையாளர், ஆதார் விபரத்தை, வங்கி மற்றும் காஸ் ஏஜன்சிகளில் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், பலர் தராததால், நவ., 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து, ஆதார் விபரம் தராதவர்களுக்கு, இன்று முதல் ...

டிரம்புடன் இரவு விருந்து: ரூ.7 கோடி கட்டணம்

Posted: 30 Nov 2016 03:08 PM PST

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்டு டிரம்புடன், சேர்ந்து இரவு விருந்து சாப்பிட, ஏழு கோடி ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், 70, வெற்றி பெற்றார்; 2017 ஜனவரி 20ல், அவர் பதவி ஏற்க உள்ளார்.
புதிய அமைச்சர்களை தேர்வு செய்யும் பணியில், அவர் ஈடுபட்டு உள்ளார். தன் அரசில் புதிய நிதியமைச்சராக, பிரபல வங்கி அதிகாரி ஸ்டீவ் முனிச்சினை நியமிக்கபோவதாக, டிரம்ப்
அறிவித்துள்ளார்.
ஏழு கோடி ரூபாய் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™