Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


இயற்கை பேரழிவு அபாயங்களை குறைப்பதில்...சவால்!:10 அம்ச திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி

Posted: 03 Nov 2016 09:15 AM PDT

''இயற்கை பேரழிவு அபாயங்களை குறைப்ப தில், அவற்றை எதிர்கொள்வதில், அதிக சவால் கள் உள்ளன,'' என, கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதை எதிர்கொள்ள,10 அம்ச திட்டத்தை யும் அறிவித்தார்.

உலகெங்கும் நடக்கும் புயல்,பூகம்பம், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளில் ஏற்படும் உயிரிழப்புகளில், 80 சதவீதம் ஆசிய நாடுகளில் தான் ஏற்படுகிறது. கடந்த, 20 ஆண்டு களில், ஆசிய நாடுகளில், இயற்கை பேரழிவு களில், 13 லட்சம் பேர் உயிரிழந்துள்ள னர்; 400 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.உலக அளவில் இயற்கை பேரழிவுகளில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள, 10 நாடுகளின் பட்டி யலில், இந்தியா, சீனா, நேபாளம் உட்பட ...

மத்திய அரசு 'ரேங்க்': தமிழக அரசு 'ஷாக்'

Posted: 03 Nov 2016 09:39 AM PDT

'தொழில் துவங்குவதற்கு உகந்த, 125 அம்சங்கள், தமிழகத்தில் இல்லை' என, மத்திய அரசு கூறியிருப்பதால், தமிழக அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வொரு மாநிலமும், தொழில் துவங்குவதற்கு உகந்த, 340 அம்சங்களை பெற்றிருக்க வேண்டும் என, மத்திய அரசு வரையறுத்துள்ளது.

அதன் அடிப்படையில், கடந்த ஆண்டில் இருந்து, தொழில் துவங்க சாதகமான மாநிலங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதில், இந்த ஆண்டு, தமிழகம், ஆறு படி கீழிறங்கி, 18வது இடத்திற்கு சென்றுள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னிலை யில் இருக்கும்தமிழகம், பட்டியலில் சரிவை சந்தித் திருப்பது, தமிழக அரசுக்கு ...

நாடு முழுவதும் அமலுக்கு வந்தது உணவு பாதுகாப்பு சட்டம்

Posted: 03 Nov 2016 09:54 AM PDT

லக்னோ: 'நாடு முழுவதும், உணவு பாதுகாப்பு சட்டம், முழுமையான செயல்பாட்டிற்கு வந்துள்ளது' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

அனைவருக்கும் உணவு கிடைக்கும் வகையில், உணவு பாதுகாப்பு சட்டம், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசால், 2013ல், பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, வறுமை கோட்டுக்கு கீழ், வறுமை கோட்டுக்கு மேல் என்ற பாகுபாடு இல்லாமல், அனைத்து பயனாளிகளுக்கும், மாதத்துக்கு, 5 கிலோ கோதுமை அல்லது அரிசி, கிலோ, ஒன்று முதல், மூன்று ரூபாய் விலையில் வழங்கப்படும்.தமிழகம், கேரளாவைத் தவிர, நாடு முழுவதும் உள்ள மற்ற மாநிலங்கள் மற்றும் ...

ரேஷன் கார்டில் குடும்ப தலைவராக பெண்களை நியமிக்க... திட்டம்!: அரிசி வாங்குவோரை இரண்டாக பிரிக்கவும் தமிழக அரசு முடிவு

Posted: 03 Nov 2016 09:56 AM PDT

ரேஷன் கார்டில், குடும்ப தலைவராக, ஆண் களுக்கு பதில் பெண்களை நியமிக்க திட்டமிடப் பட்டு உள்ளது. அத்துடன், அரிசி வாங்குவோரை இரண்டாகப் பிரிக்கவும்,தமிழக அரசின் உணவுத் துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம், 2.05 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. கடந்த, 1ம் தேதியில் இருந்து, உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, ரேஷன் கார்டுகளை, 'முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அல்லா தது' என்று பிரிக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது. இரண்டு பிரிவுஅதன்படி, முன்னுரிமை பிரிவில், ஏழைகள், முதியோர் உதவித்தொகை பெறுவோர், குடிசை வீடுகளில் ...

'தமிழக அரசின் சம்மதத்துடன் சிறுவாணியில் அணை கட்டுவோம்'

Posted: 03 Nov 2016 09:59 AM PDT

திருவனந்தபுரம்: ''தமிழகத்தின் சம்மதத்துடன், சிறுவாணி ஆற்றில் அணை கட்டுவோம்,'' என, கேரள முதல்வர், பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.
உத்தரவு : பவானி ஆற்றின் துணை நதியான சிறுவாணி ஆற்றின் குறுக்கே, அட்டப்பாடியில் அணை கட்ட, கேரள அரசு மேற்கொண்ட நடவடிக்கை
களை நிறுத்தி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம், கேரள சட்ட சபையில் நேற்று எதிரொலித்தது. சட்டசபையில், இந்த விவகாரத்தை எழுப்பி, காங்கிரசை சேர்ந்த ரமேஷ் சென்னிதலா ...

பிரதமர் உயிருக்கு குறி? : கேரளாவில் பரபரப்பு

Posted: 03 Nov 2016 10:02 AM PDT

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பில், 'பேஸ் மூவ்மெண்ட்' என்ற பயங்கரவாத அமைப்பிற்கு தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதற்கிடையே, குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட, 'பென் டிரைவ்'வில், பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த, பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள
மலப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத் தில், நேற்று முன்தினம் ...

2வது நாளாக ராகுல் 'டிராமா'

Posted: 03 Nov 2016 10:09 AM PDT

புதுடில்லி: முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை தொடர்பாக, போராட்டத்தில் ஈடுபட முயன்ற, காங்., துணைத் தலைவர் ராகுல், இரண்டாவது நாளாக நேற்றும், போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

'ஒரு பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டம் தொடர்பாக, முன்னாள் ராணுவ வீரர் கிஷண் கிரவால், 70, தற்கொலை செய்தது, ராணுவ வீரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்கொலை செய்த கிஷணின் உறவினர்களை சந்தித்து பேச, காங்., துணைத் தலைவர் ராகுல் நேற்று முன்தினம் சென்றார்; ராகுல், தடையை மீறி மருத்துவமனைக்குள் செல்ல முற்பட்ட போது தடுத்து நிறுத்திய போலீசார், அருகில் உள்ள காவல் ...

ஒருமனதாக முடிவானது ஜி.எஸ்.டி., வரி விகிதம்

Posted: 03 Nov 2016 10:19 AM PDT

புதுடில்லி:அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமல் படுத்த திட்டமிடப்பட்டுள்ள, ஜி.எஸ்.டி., எனப் படும் சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்துக் கான முக்கிய அம்சமான, வரி விகிதங்கள் முடிவு செய்யப்பட்டு உள்ளன.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு வரி விகிதங் களுக்கு மாற்றாக, ஒரே சீரான வரி விதிப்பை கொண்டு வரும் வகையில், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறை அமல்படுத்தப் பட உள்ளது. அடுத்த ஆண்டு, ஏப்., 1 முதல் நடைமுறை படுத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த வரி விதிப்பு தொடர்பான முடிவுகளை எடுக்கக் கூடிய உயர் அமைப்பான, ஜி.எஸ்.டி., கவுன்சிலின் கூட்டம், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ...

வேட்புமனுவில் ஜெ., பெருவிரல் ரேகை: விதிமுறை மீறல் என வழக்கு

Posted: 03 Nov 2016 10:26 AM PDT

சென்னை:அ.தி.மு.க., வேட்பாளர்களை அங்கீகரித்து அளித்த படிவத்தில், முதல்வரின் இடது கை பெருவிரல் ரேகை பதிவு செய்தது, தேர்தல் விதிமீறல் என உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கையில் வீக்கம் சென்னையைச் சேர்ந்த, சமூக ஆர்வலர், 'டிராபிக்' ராமசாமி தாக்கல் செய்த மனு: அ.தி.மு.க., சார்பில், தஞ்சாவூர் தொகுதியில் ரங்கசாமி;அரவக்குறிச்சி தொகுதியில், செந்தில் பாலாஜி; திருப்பரங்குன்றம் தொகுதியில், ஏ.கே. போஸ் போட்டியிடுகின்றனர். வேட்பு மனுக்களுடன், வேட்பாளர்களாக அங்கீகரித்து, ஜெயலலிதாவின் இடது கை பெருவிரல் ரேகை ...

மாணவர்களை கண்காணிக்க 'செல்பி'; மஹாராஷ்டிர அரசு முடிவு

Posted: 03 Nov 2016 12:14 PM PDT

மும்பை: அரசு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் இடை நிற்றலை குறைப்பதற்கு, ஆசிரியர்கள், மாணவர்களுடன், 'செல்பி' எடுத்து, மாணவர்கள் தொடர்பான இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, மஹாராஷ்டிர மாநில அரசு முடிவு செய்துள்ளது.
அதிர்ச்சி தகவல் :
மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பலர், படிப்பை பாதியிலேயே கைவிடும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பள்ளியில் இருந்து விலகும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளியில் ...

ஊடுருவ முயன்ற சீன ராணுவம் விரட்டியடிப்பு

Posted: 03 Nov 2016 12:55 PM PDT

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், லடாக் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களை, இந்திய வீரர்கள் விரட்டி அடித்தனர்.
தடுத்த நிறுத்த முயற்சி:
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில், இந்தியா - சீனா எல்லை அமைந்துள்ளது. லடாக்கின் சில பகுதிகளை, சீனா தனக்கு சொந்தம் என கூறி வருகிறது. லடாக் பகுதியில், விவசாயத்துக்காக, கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், கால்வாய் வெட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த பகுதிக்குள், நேற்று முன்தினம் அத்துமீறி நுழைந்த சீன ராணுவ வீரர்கள், கால்வாய் பணிகளை தடுத்த ...

சீனப்பொருட்கள் இறக்குமதியை கட்டுபடுத்த இந்தியா நடவடிக்கை

Posted: 03 Nov 2016 01:23 PM PDT

டில்லி: இந்தியாவில் அபரிமிதமாக பெருகிவரும் சீனப் பொருட்கள் இறக்குமதியை கட்டுப்படுத்த இந்தியா நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சீனப் பொருட்களின் இறக்குமதி இந்தியாவில் அதிகரித்து வரும் வேளையில் அவற்றின் தரம் சிறப்பாக இல்லை என்பது ஊரறிந்த விஷயமாகி விட்டது. ஒரு சில சீன தயாரிப்பு பொருட்கள் தரமானவையாக இருந்தாலும் ஒட்டு மொத்தத்தில் இந்தியர்களிடையே தற்போது அதிருப்தியை மட்டுமே சம்பாதித்துள்ளது.
பிராந்திய பொருளாதார உடன்படிக்கை
RCEP எனும் பிராந்திய விரிவான பொருளாதார உடன்படிக்கையில் ...

ஹிந்தி 'டிவி' ஒளிபரப்புக்கு ஒரு நாள் தடை விதிப்பு

Posted: 03 Nov 2016 02:31 PM PDT

புதுடில்லி: பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, அங்குள்ள ஆயுதங்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்களை வெளியிட்ட, தனியார் ஹிந்தி, 'டிவி'யின், ஒரு நாள் ஒளிபரப்புக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது.
தகவல்கள் வெளியீடு:
பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இந்த ஆண்டு துவக்கத்தில், பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படை விமான தளத்தில் புகுந்து தாக்குதல் நடத்தினர். அப்போது, 'என்.டி.டி.வி., இந்தியா' என்ற ஹிந்தி, 'டிவி' சேனலில், பதன்கோட் விமானப்படை தளத்தில், பயங்கரவாதிகள் எங்கு பதுங்கியுள்ளனர்; ...

தமிழகத்தை பின்பற்ற முடிவு: மத்திய அமைச்சர்

Posted: 03 Nov 2016 03:43 PM PDT

கொச்சி : தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை நாடு முழுவதும் கிராமப்புறங்களில் பின்பற்றச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
சிறப்பான செயல்பாடு :
கொச்சியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்ததாவது: திடக் கழிவு மேலாண்மையில், தமிழக அரசு மிக சிறப்பாக செயல்படுகிறது. வருவாய் ஈட்டும் இத்திட்டமானது கிராமப் பஞ்சாயத்துகளுக்கு கூடுதல் வருவாய் ஈட்ட உதவும். ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™