Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன்

Posted: 03 Nov 2016 08:56 AM PDT

இந்துக்களிடையே ஒரு கதை உண்டு. ஒரு தாய்; அவளுக்கு ஒரு மகன்; அந்த மகனோ தாசிலோலன்; ஒரு தாசியிடம் மனதைப் பறிகொடுத்தான். `மனம் போனபடியே பொருள் போகும்' என்றபடி பொருளையும் பறிகொடுத்தான். அவனிடம் பொருளில்லை என்பதை அறிந்த கணிகை அவனைத் துரத்தியடித்தாள். அவனோ மோக லாகிரி முற்றி, "உனக்கு எது வேண்டுமோ கொண்டு வருகிறேன்" என்று காலில் வீழ்ந்தான். அவள் கேலியாகச் சிரித்துக்கொண்டே, "உன் தாயின் இருதயம் எனக்கு வேண்டும்" என்றாள். காம மயக்கத்தில் சிக்கிய அவன், தாயிடம் ஓடினான். "அம்மா! ...

சிறுநீரகத்துக்கு புதிய வில்லன்!

Posted: 03 Nov 2016 08:49 AM PDT

பொதுநல மருத்துவர் டாக்டர் கு.கணேசன் தமிழ் ஹிந்துவில் எழுதிய கட்டுரை. ரத்தத்தில் யூரிக் அமிலம் அளவுக்கு அதிகமாக இருந்தால் சிறுநீரகத்துக்கு ஆபத்து உங்கள் சிறுநீரகம் சரியாகச் செயல்படுகிறதா என்று தெரிந்துகொள்வதற்கு ரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் மற்றும் இஜிஎஃப்ஆர் (eGFR) அளவுகளைப் பரிசோதிப்பது வழக்கம். அடுத்த முறை நீங்கள் மருத்துவரிடம் போகும்போது, புதிதாக 'யூரிக் அமிலம்' பரிசோதனையைப் பரிந்துரை செய்யலாம். அப்போது 'இது என்ன புதுப் பரிசோதனை?' என்று யோசிக்க வேண்டாம். 'ரத்தத்தில் யூரிக் அமிலம் ...

3 நொடியில் மௌனமாக்கிய மௌலிவாக்கம்

Posted: 03 Nov 2016 08:41 AM PDT

3 நொடியில் மௌனமாக்கிய மௌலிவாக்கம்

மலிவு விலை என மகிழ்ந்தேன்
அடுக்கு மாடி கட்டிடம்
அடுக்கடுக்காக வந்த
மனக்கோட்டைகள்
சிறுக சிறுக சேர்த்தப்பணம்
வாங்கிய வங்கி கடன்
பத்தே ஆண்டில் அடைக்க
சொந்த வீடு
எந்தன் சொந்த வீடு
எனக்கே சொந்தமான வீடு
கண்ட கனவும்
விண்ட கனவாகியது,
மூன்றே நொடிகளில் .
நொடித்தே வீழ்ந்தேன்,
நிற்கிறேன் வீதியிலே .

ரமணியன்

இட்லி என்ன இசம்?

Posted: 03 Nov 2016 08:23 AM PDT

'இட்லி வெந்திருக்கு'ன்னு சொன்னா 'ஆப்டிமிஸம்'. 'இட்லி வேகலை'ன்னு சொன்னா 'பெஸிமிஸம்'. 'இட்லியெல்லாம் சுட முடியாது, போடா'ன்னு பொண்டாட்டி சொன்னா 'ஃபெமினிசம்'. 'இட்லிய சுட்டது யாரு'ன்னு பரபரப்பு கிளப்பினா அது 'ஜர்னலிசம்'. இட்லி 'அரசாள்வோர் சாப்பிட்ட பிறகுதான் நமக்கு'ன்னு சொன்னா 'இம்பீரியலிசம்'. இட்லியை வச்சு இட்லி உப்புமா செஞ்சதெல்லாம் 'போஸ்ட் மாடர்னிசம்'. இட்லி மேல 'மேட் இன் இந்தியா'ன்னு சீல் வச்சா அது 'நேஷனலிசம்'. 'இட்லி உனக்குக் கிடையாது'ன்னா அது 'ஃபாஸிசம்'. 'இட்லி என்னடா ...

நகைச்சுவை - சுட்டது - தொடர் பதிவு

Posted: 02 Nov 2016 09:45 PM PDT


-


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™