Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


இந்தாண்டின் சிறந்த மனிதர்: '' டைம்'' பத்திரிகை வாக்கெடுப்பில் மோடி முன்னிலை

Posted: 29 Nov 2016 07:04 AM PST

வாஷிங்டன்: பிரபல ஆங்கில பத்திரிகையான ''டைம்'' நடத்தி வரும் 2016-ம் ஆண்டின் சிறந்த மனிதர் என்ற பட்டத்திற்கான கருத்து கணிப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் உள்ளார்.

சிறந்த மனிதர் பட்டம்
பிரபல ஆங்கில பத்திரிகையான '' டைம்'' ஆண்டு தோறும் சிறந்த மனிதர் என்ற பட்டத்தை அளித்து வருகிறது. இதற்காக இணையதளத்தில் வாசகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டின் சிறந்த மனிதர் என்ற பட்டத்தை ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கெல் பெற்றார். இந்நிலையில் 2016-ம் ஆண்டிற்கான சிறந்த மனிதர் என்ற பட்டத்தை அளிக்க இணையதளம் வாயிலாக ...

மத்திய அரசுக்கு ஆலோசனை கூற சந்திரபாபு நாயுடு தலைமையில் குழு

Posted: 29 Nov 2016 08:44 AM PST

புதுடில்லி: இந்தியாவை, ரொக்க பரிவர்த்தனையற்ற பொருளாதாரமாக மாற்றும் நோக்கில், ஆலோசனைகள் அளிக்க, முதல்வர்கள் குழுவை, மத்திய அரசு அமைக்கவுள்ளது.

அரசு வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியாவை, ரொக்கப் பரிவர்த்தனைகள் அற்ற பொருளாதாரமாக மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆலோசனைகளை கூற, முதல்வர்கள் குழு அமைக்கப்பட உள்ளது. குழுவுக்கு தலைமை ஏற்கும்படி, தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த, ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடுவை,
மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி கேட்டுள்ளார். இந்த குழுவில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த, பீஹார் முதல்வர், நிதிஷ் ...

கட்டளை! பா.ஜ., - எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு பிரதமர் மோடி... வங்கிகளில் நடத்திய பரிவர்த்தனை விபரங்கள் தர உத்தரவு பணம் எடுப்பதற்கான கட்டுப்பாட்டை தளர்த்தியது ரிசர்வ் வங்கி

Posted: 29 Nov 2016 08:47 AM PST

'செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், தங்கள் வங்கிக் கணக்கில் செய்த, பண பரிவர்த்தனை விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்' என, பா.ஜ., - எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி கட்டளையிட்டு உள்ளார்.

இதற்கிடையில், வங்கியில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாட்டை, ரிசர்வ் வங்கி தளர்த்தி உள்ளது.செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத்தில், மத்திய அரசையும், பிரதமர் மோடியையும், எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த திட்டம் குறித்த தகவல், பா.ஜ.,வினருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும், குற்றஞ்சாட்டி ...

பார்லிமென்டில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி...நீடிப்பு..! 10வது நாளாக இரு சபைகளும் நேற்றும் முடங்கின

Posted: 29 Nov 2016 08:51 AM PST

செல்லாத ரூபாய் நோட்டு குறித்த விஷயத்தில், 'விவாதத்துக்கு வாருங்கள்' என, அரசு தரப்பு அழைத்தாலும், 'ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த தயாரா' என, எதிர்க்கட்சிகள் கேட்பதால், தொடர்ந்து, 10வது நாளாக, பார்லிமென்ட்டின் அலுவல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத்தை முன்வைத்து, பார்லிமென்ட்டில் பெரும் ரகளையை எதிர்க்கட்சிகள் கிளப்பி வருகின்றன. கூட்டத்தொடர் துவங்கிய நாளில் இருந்தே நிலவி வரும் முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டுவர, அரசு தரப்பு முயற்சித்தும் பலன் இல்லை.பத்தாவது நாளான நேற்று, லோக்சபா கூடியதும் கேள்வி நேரத்தை ...

வெளிநாட்டு நன்கொடை பா.ஜ., - காங்., தப்பின

Posted: 29 Nov 2016 08:56 AM PST

புதுடில்லி,:வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் திரும்பப் பெற்றதால், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றதன் மூலம், வெளிநாட்டு நன்கொடை கட்டுப்பாட்டு சட்டத்தை, பா.ஜ., காங்கிரஸ் கட்சிகள் மீறியுள்ளதாக, பொது நல வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த டில்லி ஐகோர்ட், இந்த கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசுக்கும், தேர்தல் கமிஷனுக்கும்உத்தரவிட்டிருந்தது; இதை எதிர்த்து, இரு கட்சிகளும், சுப்ரீம் கோர்ட்டில் ...

தி.மு.க.,வில் வருகிறது அதிரடி மாற்றம் செயல் தலைவர் ஆகிறார் ஸ்டாலின்

Posted: 29 Nov 2016 09:04 AM PST

தி.மு.க.,வில் உயர்மட்ட பொறுப்புகள், விரைவில் மாற்றி அமைக்கப்பட உள்ளன. கட்சியின் செயல் தலைவராக, ஸ்டாலின் நியமிக்கப்பட உள்ள தகவல் வெளியாகி உள்ளது.

உடல் நல பாதிப்பு காரணமாக, தி.மு.க., தலைவர், கருணாநிதி ஓய்வு எடுக்க வேண்டிய நிலையில் உள்ளார். அவரால், முன் போல கட்சி பணிகளில், நேரடியாக ஈடுபட முடியாது என்பதால், கட்சியை வழி நடத்த, உயர் பொறுப்புகளுக்கு, புதியவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.அடுத்த மாதம், சென்னை, அறிவாலயத்தில் கூடும், தி.மு.க., செயற்குழு கூட்டத்தில், இதுதொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
முன்பு போல் செயல்பட முடியாது
இது ...

டாக்சி டிரைவர் வங்கி கணக்கில் ரூ.9,800 கோடி 'டிபாசிட்'

Posted: 29 Nov 2016 09:06 AM PST

பர்னாலா: தினசரி, 200 ரூபாய் சம்பாதிக்கும் டாக்சி டிரைவரின், 'ஜன்தன்' கணக்கில், 9,800 கோடி ரூபாய் செலுத்தப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட வங்கி கிளைகளில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பஞ்சாப் மாநிலத்தில், சிரோன்மணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான ஆட்சி நடக்கிறது.சங்ரூர் மாவட்டம், பர்னாலா, எஸ்.டி.கல்லுாரி வளாகத்தில் உள்ள, ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா வங்கியில் இருந்து, நகரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு, தினமும் பணத்தை எடுத்துச் செல்லும் பணியில், பல்வீந்தர் சிங் என்னும் டாக்சி டிரைவர் ஈடுபட்டார். ...

முதல்வர் ஜெ., நடக்க பிசியோதெரபி சிகிச்சை

Posted: 29 Nov 2016 09:07 AM PST

முதல்வர் ஜெயலலிதா, உடல் நலம் சீராக, அவருக்கு தொடர்ந்து, பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வழக்கமான உணவு
முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக் குறைவு காரணமாக, செப்., 22ல், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் அப்பல்லோ டாக்டர்கள் இணைந்து, முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர்.அவருக்கு நோய் தொற்று, முற்றிலும் குணமாகிவிட்டது. அவரது தொண்டையில் குழாய் பொருத்தப்பட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. தற்போது, செயற்கை சுவாசமின்றி, இயற்கையாக சுவாசிக்க ...

செல்லாத ரூபாய் 'டிபாசிட்'அவகாசம் நீட்டிக்கப்படாது

Posted: 29 Nov 2016 09:27 AM PST

புதுடில்லி:'வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியிடம், போதிய பண இருப்பு உள்ளதால், செல்லாத ரூபாய் நோட்டுகளை, 'டிபாசிட்' செய்வதற்கான அவகாசம், டிச., 30க்கு பின், நீட்டிக்கப்படாது' என, மத்திய அரசு கூறியுள்ளது.

ராஜ்யசபாவில் நேற்று, மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேஹ்வால், எழுத்து மூலம் அளித்த பதில்:வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியிடம் போதிய ரூபாய் நோட்டுகள் இருப்புள்ளன. 100 ரூபாய்நோட்டுகளை வினியோகிக்கும் பணிகள், ஏற்கனவே துவங்கிவிட்டன. வங்கிகளில் செல்லாத நோட்டுளை டிபாசிட் செய்வதற்கான அவகாசம், டிச., 30க்கு பின் நீட்டிக்கப்படாது.
சிறிய ...

பழநி விவசாயிகளுக்கு 'ஸ்மார்ட் கார்டு' தமிழகத்தில் முதல்முறையாக வழங்கல்

Posted: 29 Nov 2016 09:44 AM PST

பழநி, :தமிழகத்தில் முதல்முறையாக பழநி உழவர் சந்தை விவசாயிகளுக்கு 'ஸ்மார்ட் கார்டு' கள் வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி உழவர் சந்தைக்கு ஆயக்குடி, கணக்கன்பட்டி, பாலசமுத்திரம் உள்பட பகுதிகளில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
விவசாயிகளுக்கு 'ஸ்மார்ட் கார்டு'
தினமும் 12 டன்முதல் 15டன் வரை காய்கறிகள் விற்பனை ஆகிறது.'ஸ்மார்ட் கார்டு' அறிமுகம்: தமிழ்நாடு வேளாண் இணை இயக்குனர் (வணிகம்) இளங்கோவன் பழநிஉழவர் சந்தையில் விவசாயிகளிடமும், பொதுமக்களிடமும் குறைகளை ...

காங்., லாலுவுடன் கூட்டணி:நிதிஷ்க்கு சுஷில் மோடி யோசனை

Posted: 29 Nov 2016 11:31 AM PST

பாட்னா: காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உடனான கூட்டணியை நிதிஷ்குமார் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பா.ஜனதா கூறிஉள்ளது பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணியோடு ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி அமைத்து நிதிஷ்குமார் வெற்றிபெற்று முதல்வர் ஆனார்.
கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் தேதி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடியின் அறிவிப்பு வெளியானது. அதற்கு நிதிஷ்குமார் ஆதரவு அளித்து வருகிறார். கூட்டணி கட்சிகளான, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் எதிர்ப்பு தெரிவித்து வந்த ...

கூலி உயர்வு கோரிக்கை: அமெரிக்கா முழுவதும் தொழிலாளர்கள் போராட்டம்

Posted: 29 Nov 2016 01:53 PM PST

சிகாகோ:கூலி உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஒரு மணி நேரத்திற்கு குறைந்த பட்ச ஊதியமாக 15 டாலர் என நிர்ணயிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த போராட்டத்தில் பல்வேறு உணவு விடுதியில் பணிபுரியும் ஊழியர்கள், குழந்தை நல காப்பகங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். அமெரிக்காவின் சிகாகோ, டெட்ராய்ட், லாஸ் ஏஞ்செல்ஸ் மற்றும் நியூயார்க் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேரணி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது.
போராட்டம் ...

பத்மநாபசாமி கோவிலில் பெண்களுக்கு தளர்த்தப்பட்டதுஆடை கட்டுப்பாடு

Posted: 29 Nov 2016 02:45 PM PST

திருவனந்தபுரம், கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரில் பத்மநாபசாமி கோவில் உள்ளது. இங்கு பெண்கள் சாமி தரிசனம் செய்வதற்கு முன்பு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. அதாவது சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற ஆடைகளை அணிந்து வரும் பெண்கள் அதன் மீது கேரள பாரம்பரிய முறைப்படி வேட்டிகட்டிக்கொண்டால்தான் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய முடியும்.இந்த கட்டுப்பாட்டை பத்மநாபசாமி கோவில் நிர்வாகம் நேற்று முதல்(29-11-16) தளர்த்திக்கொண்டு உள்ளது.

ஆடை கட்டுப்பாடு தளர்வு
இதுபற்றி கோவிலின் நிர்வாக அதிகாரி கே.என்.சதீஷ் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™