Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பசுமை விகடன்

Posted: 29 Nov 2016 08:29 AM PST

பசுமை விகடன் புத்தங்களின் தொகுதி தரவிறக்கம் தந்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் பசுமை புரட்சிக்கு உதவுங்கள் .

நன்றி ஐயா

என்றும் அன்புடன்

ஜெ. செந்தில்குமார்

ராணுவ கட்டடத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள்; 7 இந்திய வீரர்கள் உயிரிழப்பு

Posted: 29 Nov 2016 07:09 AM PST

காஷ்மீர்: காஷ்மீரில் ராணுவ அதிகாரிகள் தங்குமிடத்தில் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் மணீஷ் மேட்டா கூறியதாவது: போலீஸ் உடையில் பயங்கரவாதிகள் காஷ்மீர் மாநிலம் நக்ரோட்டாவில் ராணுவ அதிகாரிகள் தங்குமிடத்தில் பயங்கரவாதிகள் 3 பேர் போலீஸ் உடையில் நுழைந்து தாக்குதல் நடத்தினர். கட்டடத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். மேலும் கையெறி குண்டுகளையும் ...

திருப்பாவை 20

Posted: 29 Nov 2016 06:29 AM PST

அல்லது இந்த  லிங்கில் பாடல் கேட்கலாம் https://ia601507.us.archive.org/8/items/20Track20_201611/20Track20%20.ogg முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய் செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய் செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு    மருங்குல் நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய் உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய் முப்பத்து  முக்கோடி தேவர்களைஅசுரர்கள் ...

என்னைக்கவர்ந்த பகிர்வு!

Posted: 29 Nov 2016 04:57 AM PST

நான் நல்லவன் என்பதற்கு சாட்சி, நான் செய்த எந்தத் தவறுக்கும் சாட்சி இல்லை என்பதே - ---------------------------------------- - ஓர் உயிருக்கு இன்னொரு உயிரை உணவாகப் படைத்த கடவுளிடமிருந்து என்ன விதமான கருணையை எதிர் பார்க்கிறீர்கள்? - ----------------------------------------------- - கடைசியில் இது சரியாகும் என்று நம்புங்கள். சரியாகாவிட்டால் இது கடைசி இல்லை என்று நம்புங்கள். - --------------------------------------------- - ஆசையை கட்டுப்படுத்த புத்தனாக பிறக்கத் தேவையில்லை. நடுத்தர ...

டியூசன் போய் கத்துக்கணும். –

Posted: 29 Nov 2016 04:55 AM PST

எஸ்எம்எஸ் – "வெட்டாதீர்கள், மழை தருவேன்" என்றது மரம். "வெட்டுங்கள் மழை நீரைச் சேமிப்பேன்" என்கிறது குளம். – சு.பொருநை பாலு, திருநெல்வேலி. – ———————————— – யோசிக்கிறாங்கப்பா! – ஸ்கூல் யூனிபார்ஃம் பள்ளிக்கூடத்துலதான் வாங்கணும். ஷு பள்ளிக்கூடத்துலதான் வாங்கணும். சாக்ஸ் பள்ளிக்கூடத்துலதான் வாங்கணும். நோட்புக், பேனா, பென்சில் பள்ளிக்கூடத்துலதான் வாங்கணும். படிப்பு மட்டும் வெளியிலே டியூசன் போய் கத்துக்கணும். – ——————————- எஸ்.அருள்மொழி சசிகுமார், கம்பைநல்லூர்.

நாயும் டாஸ்மாக்கும் !

Posted: 29 Nov 2016 04:53 AM PST

நாயும் டாஸ்மாக்கும் !

ஒருவர் - உஙக நாய் கொழுகொழுன்னு இருக்கு! நாயைப் பராமரிக்கும் உங்கள் ஆள் மெலிவா இருக்கானே?

நாய்க்காரர் - நாய் டாஸ்மாக் போகாதுங்க!

துளிச் செய்திகள்

Posted: 29 Nov 2016 04:40 AM PST

துளிச் செய்திகள் .

1 . சோ மூச்சுதிணறல் காரணமாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்
2 . சோனியா காந்தி மருத்துவ மனையில் சேர்ப்பு

ரமணியன்

வங்கிகளில் ரூ.8.11 லட்சம் கோடி டிபாசிட்

Posted: 29 Nov 2016 04:36 AM PST

சென்னை: நாடு முழுவதும் நவ.,10 ம் தேதி முதல் நேற்று வரை ரூ.8.11 லட்சம் கோடி பணம் டிபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிப்பதற்காக நவ.,8 ம் தேதி இரவு பிரதமர் மோடி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். பழைய நோட்டுகளை டிச.,30 ம் தேதிக்குள் வங்கி மற்றும் அஞ்சலகங்களில் கொடுத்து மாற்றி கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, வங்கி கணக்கு வைத்துள்ளோர் தங்களது கணக்கில் பழைய ரூபாய் நோட்டுகளை டிபாசிட் ...

பெண்கள் உடல்நல விழிப்புணர்வுக்காக 350 கி.மீ ஓடியவர்...

Posted: 29 Nov 2016 03:47 AM PST

- ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் நீலீமா புடோட்டா. இவர் விஜயவாடாவில் இருந்து விசாகப்பட்டினம் வரை 350 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் காலிலேயே ஓடி கடந்துள்ளார். பெண்கள் உடல்நல விழிப்புணர்வுக்காக இந்த ஓட்டப் பயணத்தை மேற்கொண்டதாகக் கூறுகிறார் நீலீமா. இதற்கு முன்பு அவர், உலகிலேயே மிக அதிகம் உயரமுடைய எவரஸ்ட் சிகரத்துக்கு பயணம் செய்துள்ளார். இந்த ஓட்டப் பயணம் குறித்து நீலீமா,'பெண்கள் உடல்நலம் கண்டு கொள்ளப்படாத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நிறைய ...

உலகின் சிறந்த வாசனைப் பொருள். ...

Posted: 29 Nov 2016 03:43 AM PST

- உயிர் மட்டுமே உலகின் சிறந்த வாசனைப் பொருள். அது இல்லையேல் உடல் நாற்றமெடுக்கும். - ---------------------------------------- வெள்ளி இரவுப் பேருந்துகள் கனவுகளையும், ஞாயிறு இரவுப் பேருந்துகள் நினைவுகளையும் சுமந்து செல்கின்றன. - ---------------------------------- - வாழ்ந்து முடித்த கோழியும் வாழ வேண்டிய முட்டையும் ஒரே தட்டில் செத்துக் கிடப்பதையே பிரியாணி என்கிறோம். - ------------------------------------ - ஒரு நாளைக்கு ஐந்து டிரெஸ் மாற்ற வேண்டுமானால் பணக்காரனாக இருக்க வேண்டிய ...

தமிழ் சினிமாவில் இது தமன்னா சீசன்

Posted: 29 Nov 2016 12:40 AM PST

- "தர்மதுரை', "தேவி', "கத்திச்சண்டை', "அன்பானவன், அசராதவன், அடங்காதவன்', "பாகுபலி 2′ என வரிசையாக தமிழில் இருக்கிறார் தமன்னா. தொடக்கத்தில் கவர்ச்சிக்கு அதீத முக்கியத்துவம் தந்து வந்த தமன்னா, தற்போது நடிப்பின் இன்னொரு பரிணாமத்தையும் வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் ரஜினியுடன் நடிக்கும் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். "என் கேரியர்ல முக்கியமான, மறக்க முடியாத படம் "தேவி'. ஒரு நடிகையாக எனக்கு பெரிய அடித்தளம் கொடுத்த படம். கமர்ஷியலாகவும் பெரிய வெற்றி கிடைத்தது. இது மிகப் பெரிய சந்தோஷம். அதேபோன்று, ...

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ

Posted: 28 Nov 2016 10:15 PM PST

(NRE) என்.ஆர்.இ கணக்கைக் கீழ்கண்ட வகைகளில் திறந்துக் கொள்ளலாம். சேமிப்புக் கணக்கு (SAVINGS ACCOUNT) நடப்புக் கணக்கு (CURRENT ACCOUNT) ரெக்கரிங் கணக்கு (RECURRING ACCOUNT) பிக்ஸட் டெபாசிட் (FIXED DEPOSIT) இந்தக் கணக்குகளை வெளிநாடு வாழ் இந்தியரே திறக்க வேண்டும். அவருடைய பவர் ஆஃப் அட்டார்னி திறக்க முடியாது. ஆனால் வெளிநாடு வாழ் இந்தியர் அவருடைய நெருங்கிய உள்நாட்டு உறவினருடன் சேர்ந்து இந்த கணக்கைத் திறந்து கொள்ளலாம். நெருங்கிய உறவினர் இந்த கணக்கைப் பவர் ஆஃப் அட்டார்னி ...

“கோடிட்ட இடங்களை நிரப்புக’.- திரைப்படம்

Posted: 28 Nov 2016 07:34 PM PST

- - - * பார்த்திபனின் இயக்கத்தில் சாந்தனு – பார்வதி நாயர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் "கோடிட்ட இடங்களை நிரப்புக'. இப்படத்தில் தம்பி ராமையா மற்றும் சிங்கம்புலி அண்ணாவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரீல் எஸ்டேட் கம்பெனி எல் எல் பி மற்றும் பையாஸ்கோப் பிலிம் பிரேமர்ஸ் இணைந்து தயாரித்து இருக்கும் இப்படத்துக்கு சத்யா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் அர்ஜுன் ஜனா. படத்தொகுப்பாளர் ஆர் சுதர்சன். கலை இயக்குநர் ஆர் கே விஜய் முருகன் மற்றும் ...

“ஃபோர்ஸ்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம்…

Posted: 28 Nov 2016 07:32 PM PST

- * 2003-இல் "துஜே மேரி கசம்' என்ற ஹிந்திப் படம் மூலம் சினிமாவில் நுழைந்தார் ஜெனிலியா. அதே ஆண்டில் ஷங்கர் இயக்கிய "பாய்ஸ்' படம் மூலம் தமிழில் அறிமுகமாகி பல முன்னணி ஹீரோக்களுடனும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளிலும் நடித்தார். 2012-ஆம் ஆண்டு அவரது காதலரும், நடிகருமான ரிதேஷ் தேஷ்முக்குடன் அவருக்குத் திருமணம் ஆனது. அதன் பின் சினிமாவிலிருந்து விலகியிருந்தவர், சல்மான் கான் நடித்த "ஜெய் ஹோ' ஹிந்தி படத்திலும், தன் கணவர் ரிதேஷ் தேஷ்முக் நடித்த "லாய் பாரி' மராத்தி படத்திலும் ...

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு

Posted: 28 Nov 2016 06:53 PM PST

சென்னையில் மேலும் ஒரு பயங்கரவாதி சிக்கினான்

Posted: 28 Nov 2016 05:43 PM PST

சென்னை: மதுரையில் 3 அல்குவைதா பயங்கரவாதிகள் இன்று கைதான நிலையில் சென்னை திருவான்மியூரில் மேலும் ஒரு பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 3 பயங்கரவாதிகள் கைது மதுரையில் அல்குவைதா ஆதரவு அமைப்பினர் இருப்பதாக என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், மதுரையில் பதுங்கி இருந்த முகம்மது கரீம், அப்பாஸ் அலி, அசீப் சுல்தான் முகம்மது ஆகிய 3 பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர். பிரதமரை கொல்ல திட்டம் இந்த ...

கிராமப்புறங்களில் வைபை வசதி: பேஸ்புக் திட்டம்

Posted: 28 Nov 2016 05:30 PM PST

புதுடில்லி : இந்தியாவின் கிராமப்புறங்களில் வைபை வசதியை வழங்கிட பேஸ்புக் நிறுவனம் புதிய திட்டம் தீட்டியுள்ளது. வைபை வசதி நம்பர் ஒன் சமூக வலைதளமாக திகழும் பேஸ்புக், இந்தியாவின் கிராமப்புறங்களில் தரமான வைபை வசதியை வழங்கிட முடிவெடுத்துள்ளது. பேஸ்புக் அதற்கான சோதனை முயற்சிகளில் தற்போது இறங்கியுள்ளது. 'எக்ஸ்பிரஸ் வைபை (Express Wi-Fi) என இந்த திட்டத்துக்கு பெயரிட்டுள்ள பேஸ்புக், இதற்காக வைபை வசதி வழங்கும் பிற தொலைத்தொடர்பு மற்றும் இன்டர்நெட் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ...

கருப்பு...வெள்ளை...தொல்லை...11

Posted: 28 Nov 2016 05:06 PM PST

1. பொறியில் சிக்காத பெருச்சாளிகள் சிரிக்கின்றன. 2. பொறியில் சிக்கிய சுண்டெலிகள் தவிக்கின்றன. 3. எலிகளை விரட்ட கருப்புப் பூனைகள் பாதுகாப்பு. 4. எந்த மக்களுக்காக பிரதமர் அழுகிறார்? 5. குழம்பிய குளத்தில் தத்தளிக்கின்றன தாமரைமலர்கள். 6. A T M சொல்கிறது. At a Time no Money. 7. சுவாமி தரிசனத்திற்கு நின்று பழகியவர்கள். இப்பொழுது ATM வாசலில் நிற்கிறார்கள். ந.க.துறைவன். *

வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் நாளை முதல் தளர்த்தபடும்

Posted: 28 Nov 2016 04:19 PM PST

புதுடில்லி: வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் நாளை முதல் தளர்த்தபடும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. - கூடுதலாக பணம் எடுக்க அனுமதி - கட்டுப்பாடுகளால் மக்கள் பணத்தை டெபாசிட் செய்ய தயங்குவதால், பணத்தை எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை நாளை முதல் தளர்த்தப்பட உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள வரம்பிற்கு கூடுதலாக பணம் எடுக்க அனுமதி அளிக்கப்படும். வாடிக்கையாளரின் தேவையை பரிசீலித்து பணம் வழங்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ரூ.500,ரூ.2000 ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™