Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


எதிர்க்கட்சிகளின் போராட்டம் : மக்கள் ஆதரவின்றி பிசுபிசுப்பு

Posted: 28 Nov 2016 08:50 AM PST

புதுடில்லி: மத்திய அரசின், ரூபாய் நோட்டு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், நேற்று நடத்திய போராட்டம் பிசுபிசுத்தது.

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில், செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திரிணமுல் காங்., - சமாஜ்வாதி - காங்., - இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நேற்று, நாடு முழுவதும் போராட்டம் நடத்தின.
இதனால், ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சி நடக்கும் பீஹார், மார்க்சிஸ்ட் ஆட்சி நடக்கும் கேரளா
, திரிபுரா ஆகிய மாநிலங்களில் மட்டும், ...

சிக்கினர்! அல் - குவைதா அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் மதுரையில்... பிரதமர் உட்பட 22 தலைவர்களை கொல்ல சதி செய்ததாக தகவல்

Posted: 28 Nov 2016 09:03 AM PST

அல் - குவைதா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய, சாப்ட்வேர் இன்ஜினியர் உட்பட, நான்கு பேர், மதுரையில் நேற்று கைது செய்யப்பட்டனர். தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய அதிரடியில் சிக்கிய இக்கும்பல், பிரதமர் உட்பட, 22 முக்கிய தலைவர்களை கொல்ல, சதித் திட்டம் தீட்டிய தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், பயங்கரவாத அமைப்புகளுக்கு, ஆதரவாளர்கள் சமீப காலமாக பெருகி வருகின்றனர். அக்டோபர், 1ல், கேரள மாநிலம், கோழிக்கோடு மற்றும் கண்ணுார் நகரங்களில், சதிச் செயல்களில் ஈடுபட திட்டம் வகுத்த, ஆறு பயங்கரவாதிகளை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு ...

கறுப்பு பணத்தை வெள்ளையாக்கினால் செலுத்த வேண்டிய வரி.. 50 சதவீதம் ...! வருமான வரித்துறை சோதனையில் சிக்கினால் 85 சதவீதம் காலி

Posted: 28 Nov 2016 09:06 AM PST

புதுடில்லி, செல்லாத ரூபாய் நோட்டுகளை கறுப்புப் பணமாக பதுக்கியுள்ளவர்களுக்கான கடைசி வாய்ப்பை, மத்திய அரசு அறிவித்துள்ளது.

வரியை செலுத்தி, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கினால், 50 சதவீத வரி செலுத்தும் வகையில், புதிய மசோதா லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதே நேரத்தில், வருமான வரித்துறையின் சோதனையில் சிக்கினால், 85 சதவீத வரி செலுத்த வேண்டியிருக்கும்.கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, ...

ஒன்பதாவது நாளாக தொடர் அமளி: முடங்கியது பார்லிமென்ட்

Posted: 28 Nov 2016 09:24 AM PST

ரூபாய் நோட்டு விவகாரத்தால், தொடர்ந்து ஒன்பதாவது நாளாக, பார்லிமென்டின் இரு சபைகளும் முடங்கின. இருப்பினும், மறைமுக பேச்சு துவங்கியுள்ளதால், தற்போதைய முட்டுக்கட்டை முடிவுக்கு வரும் என தெரிகிறது.

பார்லி., குளிர்கால கூட்டத் தொடர் துவங்கிய நாளிலிருந்தே, லோக்சபாவும், ராஜ்ய சபாவும் அமளியை சந்தித்து வந்தன. ஏற்கனவே எட்டு நாட்கள் கூச்சல் குழப்பத்திலேயே கழிந்த நிலையில், வார விடுமுறைக்கு பின், ஒன்பதாவது நாளாக, நேற்று பார்லிமென்ட் கூடியது.
நாடு முழுவதும் போராட்டம்
கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ...

மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஸ்டாலின், திருநாவுக்கரசர் கைது

Posted: 28 Nov 2016 09:27 AM PST

சென்னை: கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் நேற்று போராட்டதில் ஈடுபட்டன.

சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
தலைவர்கள் கைது
தமிழகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட கட்சிகள், ஒரே அணியாக இல்லாமல், மாவட்ட வாரியாக தனித்தனியாக பங்கேற்றன.வடசென்னை ராஜாஜி ...

கிரிமினல் வேட்பாளர்களுக்கு தடை கட்சிகளுக்கு கடிதம் எழுத உத்தரவு

Posted: 28 Nov 2016 09:48 AM PST

சென்னை :'கிரிமினல் பின்னணி உடையவர்களை, தேர்தலில் நிறுத்தக் கூடாது' என, கட்சிகளுக்கு கடிதம் எழுதும்படி பிறப்பித்த உத்தரவை, மாநில தேர்தல் ஆணையம் அமல்படுத்தும்படி, சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.

தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு, அக்., 17 மற்றும் 19ம் தேதிகளில் தேர்தல் நடத்துவதாக, மாநில தேர்தல் ஆணையம், செப்., 26ல் அறிவிப்பாணை வெளியிட்டது. இதையடுத்து, 'உள்ளாட்சி அமைப்புகளில், பழங்குடியினருக்கு முறையான ஒதுக்கீடு இல்லை' என, உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.இவ்வழக்கை விசாரித்த, நீதிபதி கிருபாகரன், ...

ரொக்கமற்ற பரிவர்த்தனை ஊக்குவிக்க மோடி உத்தரவு

Posted: 28 Nov 2016 09:55 AM PST

புதுடில்லி:நாடு முழுவதும் ரொக்கமற்ற பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அமைச்சர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்க, மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களிடம், ரொக்கமற்ற மின்னணு பரிவர்த்தனைகளை அதிகரிக்க வேண்டுமென, பிரதமர் நரேந்திர மோடி கூறி வருகிறார். அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
மக்கள் முன்வர வேண்டும்
ரொக்கப் பணம் பயன்படுத்துவதை வெகுவாக ...

தாமிரபரணி ஆற்றில் நீர்வழி போக்குவரத்து?

Posted: 28 Nov 2016 10:10 AM PST

புதுடில்லி:தாமிரபரணி ஆற்றில், நீர்வழி போக்குவரத்து துவக்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து, ஆய்வு நடந்துள்ளது.

தென் தமிழகத்தில் உள்ள, ஜீவநதியான தாமிரபரணியில், நீர்வழி போக்குவரத்து துவங்குவது தொடர்பாக, ராஜ்யசபாவில், கேள்வி எழுப்பப்பட்டது; இதற்கு, மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணையமைச்சர், மன்சுக் எல் மாண்டவியா அளித்த பதில்:தமிழகத்தில், ஆண்டு முழுவதும் தண்ணீர் உள்ள, ஒரே ஆறு தாமிரபரணி மட்டுமே. கங்கை உட்பட மற்ற பல ஆறுகளை போல, இதிலும், சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்திற்கான வாய்ப்பு குறித்து ஆய்வுசெய்யப்பட்டது. ...

வறட்சியை போக்கி வளம் தருமா வடகிழக்கு பருவமழை?

Posted: 28 Nov 2016 10:24 AM PST

கடந்த ஆண்டு, வரலாறு காணாத வெள்ளப் பெருக்கை ஏற்படுத்திய, வடகிழக்கு பருவமழை, இந்த ஆண்டு சிறுதுளி கூட சிந்தாமல், வறட்சி அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது. டிச., 1ல், மீண்டும் துவங்க உள்ள மழை, தமிழகத்திற்கு வளம் தருமா என, மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

தமிழகத்திற்கு, 75 சதவீத நீராதாரம் தரும், வடகிழக்கு பருவமழை, இதுவரை பெரிய அளவில் பொய்த்தது கிடையாது. தென்மேற்கு பருவமழையோ, காலம் தவறியும், அளவு குறைந்தும், பலமுறை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை விவசாயிகளை ஏமாற்றினாலும், வடகிழக்கு பருவமழை, பெருமளவு கைகொடுத்து வந்துள்ளது.எனவே, தமிழகத்தை ...

பலுசிஸ்தான் தலைவர் கொலை வழக்கு: முஷாரப்பிற்கு ஐகோர்ட் பிடிவாரன்ட்

Posted: 28 Nov 2016 12:59 PM PST

இஸ்லாமாபாத்: பலுசிஸ்தானின் முக்கிய அரசியல் தலைவர் கொலை வழக்கில் நேரில் ஆஜராகாத பாக். முன்னாள் அதிபர் முஷாரப்பிற்கு ஐகோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.

பலுசிஸ்தான் தலைவர் கொலை
பாக். முன்னாள் அதிபர் முஷாரப்,73 , கடந்த 2008-ம் ஆண்டு பதவி விலகியதுடன் தானாக நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது துபாயில் வசிக்கிறார். கடந்த 2006-ம் ஆண்டு அதிபராக இருந்த போது, பாக். ஆக்கிரமி்ப்பில் உள்ள பலுசிஸ்தானின் பலுஜ் தேசிய கட்சி தலைவர் நவாப் அக்பர்கான் பக்டி, மாகாணா சுயாட்சிக்கோரி தனது ஆதராவளர்களுடன் போராட்டம் நடத்தினார். அப்போது முஷாரப் உத்தரவின் பேரில் ...

பணத்தட்டுப்பாட்டை போக்க முதல்வர்கள் குழு அமைக்க முடிவு

Posted: 28 Nov 2016 02:37 PM PST

அமராவதி:பணத்தட்டுப்பாட்டை போக்கவும், மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவரவும் மத்திய அரசுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க 5 மாநில முதல்வர்கள் கொண்ட குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததால் நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடுவும் முடிந்துவிட்டது. ஆனாலும் அந்த நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம். மக்கள் வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக கடுமையான ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™