Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


உதவி

Posted: 28 Nov 2016 09:56 AM PST

உதவி

உதவு
உரிய நேரத்தில் உதவு
உன்னிடம் கேட்குமுன் உதவு
உனக்கே தெரியாமல் உதவு
உறவுக்கே தெரியாமல் உதவு
ஊருக்குத் தெரியாமல் உதவு
உரிமையோடு உதவு
உள்ளன்போடு உதவு
உத்தமர்க்கு உதவு
உசிதமானால் உதவு
உயிருள்ளவரை உதவு
உண்மையாக உதவு
உண்டெனில் உதவு
ச.சந்திரசேகரன்

பின் தொடர்தல் - கவிதை

Posted: 28 Nov 2016 08:29 AM PST

– மனிதனைப் பின்தொடரும் நிழலைப் பின்தொடர்கிறது சூரியனின் கதிர் – பூக்களின் வாசனையைப் பின்தொடரும் காற்றைப் பின் தொடர்கிறது நிலாவின் வெளிச்சம் – கடல்நீரைப் பின்தொடரும் அலைகளைப் பின் தொடர்கிறது காற்றின் ஓசை! – வாழ்க்கையைப் பின் தொடரும் மனிதனைப் பின் தொடர்கிறது புதிய அனுபவம் – எண்ணத்தைப் பின்தொடரும் செயலைப் பின்தொடர்கிறது உண்மையான வெற்றி – தேவையைப் பின்தொடரும் தேடலைப் பின்தொடர்கிறது புதிய கண்டுபிடிப்பு – ——————————– இ.தி.நந்தகுமாரன் புத்தம் பது பூமி வேண்டும் – கவிதை ...

சிறையில் இருந்து தப்பிய 24 மணி நேரத்தில் காலிஸ்தான் தலைவர் பிடிபட்டது எப்படி?

Posted: 28 Nov 2016 06:22 AM PST

புது தில்லி: பஞ்சாப் சிறையில் இருந்து தப்பிச் சென்ற காலிஸ்தான் விடுதலை முன்னணி பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹர்மீந்தர் மின்டூ 24 மணி நேரத்துக்குள் மீண்டும் கைது செய்யப்பட்டார். - காவல்துறை சீருடையில் வந்த 10 பேர் நபா சிறைச் சாலையை தகர்த்து, ஹர்மீந்தர் மின்டூ உட்பட 6 சிறைக் கைதிகளை தப்பிக்க வைத்தனர். - இதில், சிறையை தகர்த்த கும்பலில் ஒருவனை நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லியில் காவல்துறையினர் கைது செய்தனர். அவன் காரில் இருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன. - இந்த ...

வலிகள் வேண்டாம் !

Posted: 28 Nov 2016 05:16 AM PST

வழிகளைக் காண்பவனுக்கு வலிகள் இருக்காது ! விழிகளைத் திறந்து பார் ! விரிந்துகிடக்கும் கடலைப் பார் ! ஆர்ப்பரிக்கும் அலைகளைப் பார் ! அவை துள்ளும் அழகைப் பார் ! வழிகளைக் கண்ட அலைகளுக்கு வலிகள் என்பது எப்போதுமில்லை ! மொட்டை மாடியிலே மல்லாந்து கிடந்து வெட்டவெளி வானத்தை சற்றே உற்றுப்பார் ! பால்வெளி மண்டலம் பார்க்க பார்க்கப் பரவசம் ! சப்தரிஷி மண்டலம்தான் எத்தனை அழகு ! எத்தனைகோடி விண்மீன்கள் ! எத்தனைகோடி கிரகங்கள் ! அத்தனையும் அருகருகே இருந்தாலும் மோதியது உண்டா ? வழிகளைக் கண்டதால் ...

பணமில்லா முதல் இந்திய மாநிலமாகிறது கோவா

Posted: 28 Nov 2016 04:04 AM PST

பனாஜி : டிசம்பர் 31 ம் தேதி முதல், இந்தியாவில் பணமில்லா முதல் மாநிலமாக கோவா மாற உள்ளது. டிசம்பர் 31 ம் தேதியிலிருந்து கோவா மக்கள் அனைவரும் காய்கறி, மீன், இறைச்சி உள்ளிட்ட அன்றாட தேவைக்கான அனைத்து பொருட்களையும் தங்களின் மொபைல் போனை பயன்படுத்தியே வாங்க உள்ளனர். பணமில்லா கோவா : -- கோவா மக்கள் இனி பொருட்கள் வாங்க புறப்படும் போது பணம் வைக்கும் பர்ஸ் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதனால் பிக்பாக்கெட் பயமும் இல்லாமல் போக உள்ளது. மொபைல் மூலமே பணபரிமாற்றம் அனைத்தும் செய்யப்பட ...

நான் இரசித்த பாடல் - 10

Posted: 28 Nov 2016 04:03 AM PST

மணிரத்தினத்தின் இயக்கத்தில் வந்த ரோஜா படத்தில் வரும் சின்ன சின்ன ஆசை............என்ற பாடலை மின்மினி பாடியிருந்தார்.வைரமுத்துவின் வரிகளுக்கு  இசை A.R.ரஹுமான். இந்தப் பாடலை சீன நாட்டு பெண் ஒருவர் சென்னையில் ரகுமான் முன்னிலையில் பாடி இருக்கிறார். அவரின் இயலாமையை எண்ணிப் பாடியிருப்பது போல் இருக்கிறது.

JNNSM நிறுவனத்தில் 1665 உதவியாளர் பணி

Posted: 28 Nov 2016 01:43 AM PST

ஜவகர்லால் நேரு தேசிய சூரிய சக்தி திட்ட நிறுவனத்தில் 2016 -ஆம் ஆண்டிற்கான 1665 Surya Mitra, Helper பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு மற்றும் +2 முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. - விளம்பர எண். SM/005/2016-17/JNNSM/DEL ) - நிறுவனம்: Jawaharlal Nehru National Solar மிஷன் - மொத்த காலியிடங்கள்: ௧௬௬௫ - பணியிடம்: உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் - பணி - காலியிடங்கள் விவரம்: பணி: Surya Mitra - 1230 வயதுவரம்பு: 36க்குள் ...

மொஹாலி டெஸ்ட் போட்டியில் இந்திய பின்கள வீரர்கள் புதிய சாதனை செய்துள்ளார்கள்.

Posted: 28 Nov 2016 01:40 AM PST

- இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 417 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. அஸ்வின், ஜடேஜா, ஜெயந்த் யாதவ் ஆகியோரின் அபாரமான அரை சதங்களால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 417 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதற்கு முன்பு, 6, 7, 8 ஆகிய நிலைகளில் ஆடிய மூன்று இந்திய பேட்ஸ்மேன்களும் ஒரே இன்னிங்ஸில் அரை சதம் எடுத்தது கிடையாது. முதல்முறையாக இந்திய அளவில் இந்தச் சாதனையைச் ...

யுவ்ராஜ் சிங் திருமணத்துக்கு மோடி வருவார்; தந்தை வரமாட்டார்!

Posted: 28 Nov 2016 01:33 AM PST

- நவம்பர் 30 அன்று லண்டனைச் சேர்ந்த நடிகை ஹசல் கீச்சைக் காதல் திருமணம் செய்கிறார் கிரிக்கெட் வீரர் யுவ்ராஜ் சிங். பிரதமர் மோடியை நேரில் சென்று திருமணத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் யுவ்ராஜ். இதனால் பஞ்சாபில் நடைபெறுகிற திருமணத்துக்கு மோடி வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் என 50 பேர் மட்டுமே கலந்துகொள்ளும் இந்தத் திருமணத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என யுவ்ராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் முடிவெடுத்துள்ளார். இதுகுறித்து யோக்ராஜ் சிங் அளித்த ...

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள்- மின்நூல் தொகுப்பு இதுவரை

Posted: 28 Nov 2016 01:25 AM PST

நண்பர்களே..

இதுவரை பதிவிட்ட இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் தெளிவான மின்நூல்களை இங்கு தொகுத்து
இருக்கிறேன். விடுபட்ட நாவல்களை தரவிறக்கவும் தரவிறக்கம் செய்யாதவர்கள் ஒரு இடத்தில் அனைத்து நாவல்களை பெறவேண்டியும் இந்த பதிவு...

காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெறும்; டிச., 1ம் தேதி முதல் மழை: பாலச்சந்திரன் தகவல்

Posted: 28 Nov 2016 01:23 AM PST

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை உட்பட தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். டிசம்பர் 1ம் தேதி முதல் தமிழகத்தில் மழை பெய்யும். ஓரிரு நாட்கள் கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார். மேலும், இன்று காலை தென்கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த ...

மது குடிக்காமல் இருக்க முடியாதவர்கள் பீஹாரை விட்டு செல்லலாம்: நிதீஷ்

Posted: 27 Nov 2016 07:09 PM PST

பாட்னா: பீஹாரில் மது குடிக்காமல் இருக்க முடியாதவர்கள் மாநிலத்தை விட்டு வெளியே செல்லலாம் என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார். பீஹாரில் முழு அளவில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது தொடர்பாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதிஷ் குமார், மதுவிலக்கு சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர், பல தரப்பிலிருந்து எனக்கு நெருக்கடி வந்தது. ஆனால், அதற்கு நான் எதையும் ஏற்கவில்லை. மதுவிலக்கு கோரிக்கையுடன் யார் வந்தாலும் அதனை ஏற்க மாட்டேன். அவர்கள் ஏமாற்றத்துடன் தான் திரும்பி செல்ல ...

அமீர்கானின் படம் தமிழில்…

Posted: 27 Nov 2016 06:57 PM PST

- - * ஹரியானாவைச் சேர்ந்த மல்யுத்த வீரரான மஹாவீர் சிங்கின் வாழ்க்கை தழுவலாக உருவாகி வரும் படம் "தங்கல்'. மஹாவீர் சிங் ரோலில் அமீர்கான் நடிக்கிறார். பாலிவுட்டில் உருவாகியுள்ள இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. நிதேஷ் திவாரி இயக்கி யிருக்கும் இப்படம், இதுவரை வந்த அமீர்கான் படங்களிலேயே அதிக திரையரங்குகளில் வெளியாகவுள்ள படம் என்ற சிறப்பைப் பெறுகிறது. டிசம்பர் 23-ஆம் தேதி படம் வெளியாகிறது. "தங்கல்' என்றால் மல்யுத்தம் என்று அர்த்தம். ஆனால், அதன் சரியான உச்சரிப்பு டங்கல் ...

இந்தியாவை மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்!

Posted: 27 Nov 2016 05:20 PM PST

இந்தியாவில் புலக்கத்தில் இருந்த 500 , 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்து, புதிய 500 மற்றும் 2000 ரூபாய்களை தாமதமாக வெளியிட்டு மத்திய அரசு பண நெருக்கடி ஏற்படுத்தியிருப்பதால் நாட்டின் பல பகுதிகளில் சின்ன சின்ன போராட்டங்களும், கலவரங்களும் நடந்து வருகின்றது. இதே நிலைமை நீடித்தால் பெரிய அளவில் கலவரம் ஏற்படவும் அதிக வாய்ப்பிருக்கிறது. ஆனால், மக்கள் நிதானமாகவும், அறிவுபூர்வமாகவும் சிந்தித்தால் இந்த கலவரங்களை மாற்றி இந்தியாவில் "ரீமிக்ஸ்"ஐ கையாளலாம்! ஆம், ஆரம்ப காலத்தில் மாட்டைக் கொடுத்து ஆட்டையும், ...

ஈச்சங்குலை...!!

Posted: 27 Nov 2016 04:54 PM PST

சுயம்…!! * சுய அறிவு சுகமளிக்கும் நகல் அறிவு நஞ்சை வளர்க்கும் * செயல்பாட்டில் எங்குமில்லை சொற்பொழிவு எல்லாம் தத்துவமயம். * தவறு நடப்பது இயல்பு தவறில்லாமல் நடப்பதுதான் சிறப்பு. * வாழ்க்கையின் நோக்கம் வாழ்வது மரணத்தை நோக்கி நகர்வது. * சந்திக்க வந்தவர் பேசவில்லை துணைக்கு வந்தவர் பேசினார். * செத்தவர் மீதிருந்தது சொத்து உறவினர் போராடினர் ஒன்று சேர்ந்து. ந.க.துறைவன். *.

தொடர்ந்து புழக்கத்தில் 'ரூ.50, ரூ.100 நோட்டுகள்இருக்கும்: மத்திய அரசு அறிவிப்பு

Posted: 27 Nov 2016 04:51 PM PST

புதுடில்லி,: ரூ.50, ரூ.100 நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் எனவும், இது தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் மத்திய அரசு அறிவித்து உள்ளது. ரூ.50, ரூ.100 நோட்டுகள்கறுப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ந்தேதி பிரதமர் மோடிஅறிவித்தார். மேலும் அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ள பல்வேறு வசதிகளையும் மத்திய அரசு அறிவித்தது .இதன் தொடர்ச்சியாக ரூ.100 மற்றும் ரூ.50 நோட்டுகளும் ஒழிக்கப்பட போவதாகவும், இது தொடர்பாக பிரதமர் மீண்டும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™