Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பஞ்சாப் சிறையில் போலீஸ் உடையில் வந்த கும்பல்...அட்டூழியம்!: துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பயங்கரவாதி தப்பினான்

Posted: 27 Nov 2016 08:48 AM PST

பாட்டியாலா:பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா வில் உள்ள சிறைக்குள், போலீஸ் உடையில் ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர்கள், கண் மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி, காலிஸ் தான் விடுதலை முன்னணி பயங்கரவாத அமைப்பின் தலைவன், ஹர்மிந்தர் மின்டூ, 48, உட்பட, ஐந்து பேருடன் தப்பிச் சென்றனர்.

பஞ்சாபில், முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான, அகாலி தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாட்டியாலா மாவட்டத்தின் நாபா பகுதியில் உள்ள சிறை யில், காலிஸ்தான் விடுதலை முன்னணி தலைவன் ஹர்மிந்தர் மின்டூ மற்றும் அவன் கூட்டாளிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். நேற்று காலை, போலீஸ் ...

பண தட்டுப்பாடு விரைவில் சீராகும்:ரிசர்வ் வங்கி கவர்னர் நம்பிக்கை

Posted: 27 Nov 2016 08:57 AM PST

மும்பை:''செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப் பால், நேர்மையான மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குறைக்க,அனைத்து நடவடிக்கை களும் எடுக்கப்பட்டுள்ளன; விரைவில் இந்த பிரச்னை தீரும்,'' என, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:
செல்லாத ரூபாய் நோட்டுகள் விவகாரம் தொடர்பாக, தொடர்ந்து கண்காணித்து வருகி றோம். ரூபாய் நோட்டுகளை மாற்று வதற்கு வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.,களில் குவியும் கூட்டம் வெகுவாக குறைந்து விட்டது.
நகரங்களில் இயல்பு நிலை
பெருநகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் ...

ஏழைகளின் வங்கி கணக்கில் கறுப்பு பணத்தை 'டிபாசிட்' செய்து... விளையாடாதீங்க!:வரி ஏய்ப்பில் பணம் குவித்தவர்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை:பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற வணிகர்களுக்கு வேண்டுகோள்

Posted: 27 Nov 2016 09:31 AM PST

புதுடில்லி:''கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க, ஏழை, எளிய மக்களின் வங்கிக் கணக்கில் பணத்தை, 'டிபாசிட்' செய்து, அவர்களது வாழ்க் கையில் விளையாட வேண்டாம்,'' என, எச்சரித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பண மில்லா பரிவர்த்தனைக்கு மாறும்படி, வணிகர் கள் உள்ளிட்டோருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செல்லாத ரூபாய் நோட்டு திட்டம் அறிவிக்கப் பட்டது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை யும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ள நிலை யில், பிரதமர் நரேந்திர மோடியின், 'மன் கி பாத்' என்ற ரேடியோ உரை, நேற்று ஒலிபரப்பானது; அதில் அவர் கூறியதாவது:கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக, செல்லாத ...

ரொக்கமில்லாமல் அரசின் சேவைகள் 'ஆப்' அறிமுகம் செய்கிறது ஆந்திரா

Posted: 27 Nov 2016 09:36 AM PST

'ரொக்கப் பயன்பாட்டை குறைத்து, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற வேண்டும்' என, மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில், அரசின் சேவைகள் அனைத்தையும் மின்னணு பரிவர்த் தனை மூலம் மேற்கொள்ள, புதிய மொபைல், 'ஆப்'பை அறிமுகம் செய்கிறது ஆந்திர அரசு.

கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், ஊழலை ஒழிக்கவும், செல்லாத ரூபாய் நோட்டு குறித்த திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பணப் புழக்கத்தை குறைக்கும் வகையில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.ரொக்கமில்லா சமூகத்தைஉருவாக்கும் வகையி லான இந்த திட்டத்துக்கு, ஆந்திர அரசு பிள்ளையார் சுழி ...

காங்கிரஸ் இல்லாத இந்தியாவாக மாற்ற கர்நாடக மக்களுக்கு அமித் ஷா அழைப்பு

Posted: 27 Nov 2016 09:40 AM PST

பெங்களூரு:''இந்தியாவை காங்கிரஸ் இல்லாத நாடாக மாற்றுவதற்கு, கர்நாடக மக்கள் ஆதரவு தர வேண்டும்,'' என, பெங்களூரில் நடந்த, பா.ஜ., மாநாட்டில், அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.

கர்நாடகா மாநில, பா.ஜ., தலைவராக, முன்னாள் முதல்வர் எடியூரப்பா பதவியேற்ற பின், 2018ல் நடக்கும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். பெங்களூரு அரண்மனை மைதானத்தில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்காக, பா.ஜ., மாநாடு நடந்தது. இதில், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதா ராமன், அனந்த குமார், சதானந்தகவுடா உள்ளிட்ட ...

ஹிந்தியில் மனுவை ஏற்க முடியாது தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி

Posted: 27 Nov 2016 09:42 AM PST

புதுடில்லி:தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுப்போர், ஆவணங்களை, ஆங்கி லத்தில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

'கால்நடைகளை கொல்வதால், யமுனை நதி மாசுபடுகிறது; இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என, தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தில், 2015ல், ஓஜஸ்வி கட்சி மனு தாக்கல் செய்திருந்தது.இந்த மனு, ஹிந்தியில் இருந்ததால் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, அதன் ஆங்கில மொழி பெயர்ப்பை, அதே ஆண்டு, செப்டம்பரில், ஓஜஸ்வி கட்சி தாக்கல் செய்தது.இதையடுத்து, ஹிந்தி மொழி யில், முன் தாக்கல் செய்த மனுவை ஏற்கும்படி, தேசிய பசுமைத் ...

சுவிஸ் கணக்கு விபரம் கோருவது அதிகரிப்பு

Posted: 27 Nov 2016 09:44 AM PST

புதுடில்லி:ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந் தில் உள்ள வங்கிகளில்,இந்தியர்செய்துள்ள கறுப்புப் பண முதலீடுகள் குறித்த விபரங் களை கோருவது சமீபகாலத்தில் அதிகரித்துள் ளது.

சுவிஸ் வங்கிகளில் செய்யப்படும் முதலீடுகள் குறித்த விபரங்கள் மிகவும் ரகசியமாக வைக் கப்படும்.அதனால், பல்வேறு நாடுகளை சேர்ந்த வர்கள், கறுப்புப் பணத்தை, சுவிஸ்வங்கிகளில் முதலீடு செய்து வந்தனர். பல்வேறு நாடுகளின் நெருக்குதலைத் தொடர்ந்து, சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளவர்கள் குறித்த தகவல்களை அந்த நாடு பகிர்ந்து கொள் கிறது. சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் செய்யும் முத ...

பா.ஜ., அணியில் ம.தி.மு.க.?

Posted: 27 Nov 2016 09:48 AM PST

பிரதமர் மோடிக்கு ஆதரவாக, வைகோ பேசி வருவதால், பா.ஜ., கூட்டணியில், ம.தி.மு.க., இணையும் என்ற எதிர்பார்ப்பு, அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

செல்லாத ரூபாய் நோட்டு குறித்த, பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு, தமிழகத்தில், அ.தி. மு.க., - பா.ஜ., தவிர, மற்ற எந்த கட்சிகளும் ஆதரிக்கவில்லை. தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் ஆகி யவை, எதிர்ப்பு தெரிவித்து, மனிதச் சங்கிலி உட்பட பல போராட்டங்களை நடத்தின.மத்திய அரசுக்கு எதிராக இன்று, அகில இந்திய அள வில் நடக்கும் போராட் டத்தில், தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கின்றன. இது தொடர் ...

தொடர் தோல்வி விஜயகாந்திற்கு நெருக்கடி

Posted: 27 Nov 2016 09:57 AM PST

'தொடர் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய வேண்டும்' என, விஜயகாந்திற்கு, கட்சியினர் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில், வேகமாக வளர்ச்சி அடைந்த, தே.மு.தி.க., 2011 உள்ளாட்சி தேர்தலுக்கு பின், தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. சட்டசபை தேர்தலில், மக்கள் நலக் கூட்டணி யுடன் கூட்டணி வைத்த, தே.மு.தி.க., படு தோல்வி அடைந்தது. உளுந்துார்பேட்டை தொகுதியில்,கட்சி தலைவர் விஜயகாந்த், 'டிபாசிட்' இழந்தார். சமீபத்தில் நடந்த மூன்று தொகுதி தேர்தல்களி லும், தே.மு.தி.க.,மண்ணை கவ்வியது. ஆரம்பத்தில், 8 சதவீதமாக இருந்த, தே.மு.தி.க., ஓட்டு வங்கி, 1 சத வீதத்தை விட ...

தொடர்ந்து புழக்கத்தில் 'ரூ.50, ரூ.100 நோட்டுகள்இருக்கும்: மத்திய அரசு அறிவிப்பு

Posted: 27 Nov 2016 02:30 PM PST

புதுடில்லி,:ரூ.50, ரூ.100 நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் எனவும், இது தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.ரூ.50, ரூ.100 நோட்டுகள்கறுப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ந்தேதி பிரதமர் மோடிஅறிவித்தார். மேலும் அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ள பல்வேறு வசதிகளையும் மத்திய அரசு அறிவித்தது.இதன் தொடர்ச்சியாக ரூ.100 மற்றும் ரூ.50 நோட்டுகளும் ஒழிக்கப்பட போவதாகவும், இது தொடர்பாக பிரதமர் மீண்டும் நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருப்பதாகவும் பல்வேறு வதந்திகள் பரவியது.வதந்தியை மறுக்கும் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™