Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அசத்தல்! பணமில்லா வர்த்தகத்திற்கு 'ஆப்' தயாரிப்பு : ஏழைகளுக்கு மானியத்துடன் 'ஸ்மார்ட் போன்'

Posted: 26 Nov 2016 05:45 AM PST

பணமில்லா வர்த்தக பரிவர்த்தனைகளை ஊக்கு விக்கும் நோக்கில், 'சர்காரி' என்ற பெயரில், 'மொபைல் ஆப்'பை, மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இந்த, 'ஆப்'பை பயன்படுத்த, மானிய விலையில், ஏழைகளுக்கு, 'ஸ்மார்ட் போன்' வழங்கவும், அரசு திட்டமிட்டு உள்ளது.

'பழைய ரூபாய் நோட்டு செல்லாது' என, 8ம் தேதி, மத்திய அரசு அறிவித்தது. இதனால், பணப்புழக்கம் குறைந்து, அன்றாட செலவுக்கே மக்கள் தவிக்கும் சூழல் நிலவுகிறது. எனினும், 'டெபிட் கார்டு' அல்லது 'மொபைல் போன்' மூலம் பணம் செலுத்தும் வசதியுள்ளோர், தங்கள் தேவைக்கு அதை பயன்படுத்திக் கொள்கின்றனர்.இந்நிலையில், நாடு முழுவதும், பணமில்லா ...

எதிர்க்கட்சிகளின் நெருக்கடிக்கு அ.தி.மு.க... பணிந்தது!:சட்டசபை குழுக்கள் அமைக்க தீவிர ஆலோசனை

Posted: 26 Nov 2016 05:52 AM PST

தமிழக சட்டசபை குழுக்களை, உடனடியாக அமைக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுப்பதால், குழுக்களை அமைப் பது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது.

அரசு பணிகளை கண்காணிக்க, மதிப்பீட்டுக் குழு, பொது கணக்குக் குழு, பொது நிறுவனங் கள் குழு, சபை உரிமைக் குழு என, 12 குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இவற்றில், ஆளுங் கட்சி மற்றும் எதிர்க்கட்சி, எம்.எல்.ஏ.,க்கள் இடம் பெறுவர்.
தனித்து போட்டி
பொது கணக்குக் குழுத் தலைவராக, எதிர்க்கட்சி யைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட வேண்டும். ,பொது வாக, ஆளுங்கட்சிகள், தங்கள் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவரை, ...

தே.மு.தி.க., தோல்விக்கு யார் காரணம்?பிரேமலதா, சுதீஷ் மீது கட்சியினர் பாய்ச்சல்

Posted: 26 Nov 2016 05:59 AM PST

பிரேமலதா மற்றும் சுதீஷ் மீதான, தே.மு.தி.க., வினரின் கோபம், சமூக வலைதளங்களில் வெளிப்பட துவங்கியுள்ளது.

சட்டசபை பொதுத்தேர்தலில் ஏற்பட்ட பின்ன டைவை சரி செய்ய, தஞ்சாவூர், திருப்பரங்குன் றம், அரவக்குறிச்சி ஆகிய, மூன்று தொகுதி தேர் தலில், தே.மு.தி.க.,தனித்து போட்டியிட்டது. கட்சி தலைவர், விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் தீவிர பிரசாரம் செய்தனர். ஆனாலும், தே.மு.தி.க., படு தோல்வி யை தழுவியுள்ளது. மூன்று தொகுதிகளிலும் சேர்த்து, 10 ஆயிரம் ஓட்டுகளை கூட பெற முடியவில்லை.ஓட்டு சத வீதமும், இரண்டாக குறைந்துள்ளது. பா.ஜ., வுக்கு அடுத்த இடத்திற்கு, ...

தேசிய கட்சிகளின் இரட்டை வேட காட்சிகள்!அதிர்ச்சியில் அ.தி.மு.க., - தி.மு.க.,

Posted: 26 Nov 2016 06:08 AM PST

செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத்தில், டில்லி, பார்லி., வளாகத்தில், எதிர்க்கட்சிகள் அனைத் தும் ஓரணியில் திரண்டன.

மத்திய அரசுக்கு எதிராக, காங்., துணைத் தலை வர் ராகுல் தலைமையில் கைகோர்த்தன.பார்லி., வளாகம், காந்தி சிலை முன், காங்., - திரிணமுல் - கம்யூ., கட்சிகள் - அ.தி.மு.க., - தி.மு.க., உள் ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கட்சிகள், தர்ணா போராட்டம் நடத்தின.
ஆச்சரியம்
அதில், காங்., சார்பில் ராகுல், குலாம்நபி ஆசாத்; தி.மு.க., - கனிமொழி, திருச்சி சிவா; அ.தி.மு.க., -நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். இதில் பங்கேற்ற ராகுல், அ.தி. மு.க., நவநீத கிருஷ்ணனை அழைத்து, தன் ...

நவ., 8க்கு பின் நடந்த இடைத்தேர்தல்கள் நாடு முழுவதும் பா.ஜ.,வுக்கு ஆதரவு அலை

Posted: 26 Nov 2016 07:36 AM PST

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும், பண மதிப்பிழப்பு விவகாரத்திற்கு பிறகு, நாடு முழுவதும் நடைபெற்ற இடைத்தேர்தல்களில், பா.ஜ.,வுக்கு ஆதரவு அதிகமாக கிடைத்துள்ளது.

இது, பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. கடந்த, 8ம் தேதி நள்ளிரவில், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை, மத்திய அரசு வெளியிட்டது. அதனால், நாடு முழுவதும், பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை, எதிர்க் கட்சிகள் மட்டுமின்றி, பா.ஜ., கூட்டணியில் இருக்கும் சில கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன. இந்த சூழலில், அந்த அறிவிப்பு வெளியான, 10 நாட்களுக்கு பிறகு, இடைத்தேர்தல்கள் ...

செல்லாத நோட்டு குவிவதால் திருப்பதி கோவில் நிர்வாகம்... திணறல்..! ரிசர்வ் வங்கி, மத்திய அரசிடம் நிர்வாகிகள் அவசர ஆலோசனை

Posted: 26 Nov 2016 08:33 AM PST

திருப்பதி கோவில் உண்டியலில், செல்லாத ரூபாய் நோட்டுகள் அதிகளவு குவிந்து வருவ தால், கோவில் நிர்வாகம் செய்வதறியாமல் திணறி வருகிறது. இதுகுறித்து, ரிசர்வ் வங்கியி டமும், மத்திய அரசிடமும் கோவில் நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது.

செல்லாத ரூபாய் நோட்டு பிரச்னையால், நாடு முழுவதும், மக்கள் செலவு செய்வதற்கே பணமின்றி, வங்கி மற்றும் ஏ.டி.எம்.,களில் மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர்.
ஐந்து கோடி ரூபாய்
ஆனால், ஆந்திர மாநிலம், திருப்பதி ஏழுமலை யான் கோவில் உண்டியலில், செல்லாத ரூபாய் நோட்டுகள் பெருமளவு குவிந்து வருகின்றன. சமீப காலமாக, ...

டி.ஜி.பி.,க்களுடன் பிரதமர் யோகாசனம்

Posted: 26 Nov 2016 08:35 AM PST

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத் நகரில் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு மாநிலங் களை சேர்ந்த, டி.ஜி.பி.,க்களுடன் யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.

தெலுங்கானாவில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர், சந்திரசேகர ராவ் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத் தலைநகர் ஐதராபாத் தில், டி.ஜி.பி.,க்கள் - ஐ.ஜி.பி.,க்கள் மற்றும் மத்திய போலீஸ் அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்கும் மூன்று நாள் மாநாடு, நேற்று முன்தினம் துவங்கியது. இதில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் ஐதராபாத் வந்தார். அங்குள்ள, சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில், நேற்று காலை, 6 ...

கியூபாவை அரை நூற்றாண்டு ஆண்ட புரட்சியாளர் காஸ்ட்ரோ காலமானார்

Posted: 26 Nov 2016 08:58 AM PST

ஹவானா:கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும், புரட்சியாளருமான, பிடல் காஸ்ட்ரோ, 90, நேற்று காலமானார்.

அமெரிக்கா அருகே, கரீபியன் கடல் பகுதியில், அமைந்துள்ள தீவு நாடு கியூபா; இங்கு புரட்சியை வழிநடத்தி, கம்யூனிச அரசை அமைத்தவர், பிடல் காஸ்ட்ரோ.அந்நாட்டில், 1959 - 1976 வரை பிரதமராகவும், 1976 - 2008 வரை, அதிபராகவும் இருந்தார். கியூபாவை, 50 ஆண்டுகள் ஆட்சி செய்த அவர், உடல்நலக் கோளாறு காரணமாக, 2008ல், பதவியிலிருந்து விலகினார்; அவரது தம்பி ரவுல் காஸ்ட்ரோ, புதிய அதிபராக பொறுப்பேற்றார்.பதவியில் இருந்து விலகிய போதும், அவ்வப்போது பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி வந்தார்; ...

இந்தியாவில் நிரப்பப்படாத நீதிபதி பணியிடங்கள்... 500!:அரசு அக்கறை காட்டவில்லை என தலைமை நீதிபதி புகார்

Posted: 26 Nov 2016 09:24 AM PST

புதுடில்லி:ஐகோர்ட்டுகளில், 500 நீதிபதிகள் பணி யிடங்கள் காலியாக இருப்பதாகவும், இந்த விஷயத்தில், மத்திய அரசு அக்கறை காட்ட வில்லை என்றும், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்குர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு, மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் மறுப்பு தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் ஐகோர்ட்களில், அனுமதிக்கப் பட்ட எண்ணிக்கையை விட குறைவான எண்ணிக்கையில் நீதிபதிகள் இருப்பதாகவும், அதனால், எண்ணற்ற வழக்குகள் தேங்கிக் கிடப்பதாகவும், மத்திய அரசை, நீதிபதிகள் குறை கூறி வருகின்றனர்.இந்நிலையில், மத்திய நிர்வாக ...

ரூபாய் நோட்டு தடையால் மும்பையில் குற்ற விகிதம் குறைந்துள்ளது: மனோகர் பாரிக்கர்

Posted: 26 Nov 2016 01:36 PM PST

ரூபாய் நோட்டு தடையால் குற்ற விகிதம் மும்பையில் குறைந்தது: மனோகர் பாரிக்கர் தகவல்
பனாஜி:ரூபாய் நோட்டுக்கள் தடைால் மும்பையில் குற்ற விகிதம் குறைந்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர்.
புதிய நோட்டுக்கள் போதிய அளவில் கிடைக்காததால், பொதுமக்கள் வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களுக்கும் செல்கிறார்கள்.. இவ்விவகாரம் பார்லிமென்டிலும் எதிரொலித்தது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக ...

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் முப்பாட்டன் சொத்தா?: சர்ச்சையை கிளப்பினார் பரூக் அப்துல்லா

Posted: 26 Nov 2016 02:40 PM PST

ஸ்ரீநகர்: பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்ன உங்க முப்பாட்டன் சொத்தா? அதை மீட்க என காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, மத்திய அரசை விமர்சித்து பேசியதற்கு பா.ஜ. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி இந்தியாவின் ஒருகிணந்த பகுதி தான் இதனை மீட்க பார்லியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எல்லையில் ஓயாத சண்டை காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே தற்போது சுமூகமான உறவு இல்லாத நிலை உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் காஷ்மீர் மாநில முக்கிய எதிர்கட்சியான தேசியமாநாட்டு கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான பரூக் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™