Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் ட்ரம்ப் அவர்களுக்கு புதிய சிக்கல்

Posted: 26 Nov 2016 11:12 AM PST

அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் ட்ரம்ப் அவர்களுக்கு புதிய சிக்கல் உருவாகி வருகிறது. தேர்தல் முடிவில் ஹிலாரி அதிக வாக்குகளைப் பெற்றிருந்த போதும் அவருக்கு 232 வாக்காளர் குழு (Electoral College) வாக்குகளும்,ட்ரம்பிற்கு 290 வாக்குகளும் கிடைத்தன. அதிபராவதற்கு 270 வாக்குகள் அவசியம். இந்த நிலையில் பலரின் எதிர்ப்பு போராட்டங்கள் எதிரொலியில் சில குடியரசுக் கட்சி வாக்காளர்கள் எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சிலர் நேரடியாகவும் (குடியரசுக் கட்சியை சேர்ந்த Michael Baca  ,Washington state elector, ...

உதவி நண்பர்களே

Posted: 26 Nov 2016 10:24 AM PST

மூவியில் உள்ள ஆபாச காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் நீக்கும் சாப்ட்வேர் கொடுங்கள் நண்பர்களே.

பெண்களை இங்கே வாங்கலாம். பெண்கள் அங்காடி.

Posted: 26 Nov 2016 09:54 AM PST

பெண்களை இங்கே வாங்கலாம். பெண்கள் அங்காடி. பல்கேரிய நாட்டில் Stara Zagora என்ற நகரில் ஆண்டில் நான்கு தடவைகள், முக்கியமாக கிப்சி இன மக்கள், ஒன்று கூடி தங்களுக்கு வேண்டிய பெண்ணை காதலியாக மனைவியாக பெற்றுக் கொள்கிறார்கள். 16 -20 வயதிற்கு உட்பட்ட பெண்கள் இங்கு கிடைக்கிறார்கள். திருமணத்திற்கு பணம் இல்லாத ஏழை மக்கள் இதனால் அதிக பயனடைகிறார்கள். இதை Roma Bridal Market -bride market -என்கிறார்கள்.தங்களுக்குப் பிடித்த பெண்ணை தெரிவு செய்ததும் உடனேயே வந்திருக்கும் பெற்றோர்களிடம் தெரிவிக்கிறார்கள். ...

‘நான்தான் மதன் மனைவி’: சொந்தம் கொண்டாடும் பல பெண்களால் குழப்பம்

Posted: 26 Nov 2016 08:01 AM PST

- மதனின் தாயார் தங்கமும், இரண்டாவது மனைவி சுமலதாவும் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அவர்களது வழக்கறிஞர் இன்பென்ட் தினேஷ் உடன் இருந்தார். படம்: ஊடகம் ---------------------------- சென்னை: பண மோசடி வழக்கில் சிக்கி கைதாகி உள்ள வேந்தர் மூவீஸ் நிறுவன அதிபர் மதனுக்கு நிறைய மனைவிகள் இருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த மே மாதம் திடீரென மாயமான அவர், அண்மையில் திருப்பூரில் வைத்து கைது செய்யப்பட்டார். தனியார் கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் ...

கருப்புப் பணம் .

Posted: 26 Nov 2016 07:58 AM PSTகருப்பு

சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா?

Posted: 26 Nov 2016 07:36 AM PST

ஒருவர் பிறந்த நேரத்திற்கும்... கோள்களின் இயக்கத்திற்கும்... அவர் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. ஆனால் அது போன்ற ஒரு நம்பிக்கை ஒருவரிடம் வேர் ஊன்றிப் போய் விட்டால் அதை மாற்றுவது என்பது கடினம் என்கிறார்,சர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்.2009-ஆம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றவர். ரைபோசோம் (Ribosome) எனப்படும் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது பற்றி ஆய்வுகளைச் செய்தார். படித்த சில ஆதாரங்கள் இவை..... Pisces -மீனம்- Hubble Space Telescope ...

வங்கி வாசலில் பாஜக எம்பியை அடித்து துவைத்து ஜட்டியோடு ஓட வைத்த மக்கள்!

Posted: 26 Nov 2016 07:11 AM PST

- நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததையடுத்து பொதுமக்கள் வங்கி வாசலிலேயே காத்து கிடக்கின்றனர். - இந்நிலையில் டெல்லியில் வங்கி வாசலில் காத்திருந்த மக்கள் பாஜக எம்பி ஹர்ஷவர்த்தனை அடித்து துவைத்துள்ளனர். - பொதுமக்கள் வேலைகளை விட்டுவிட்டு தங்களிடம் உள்ள பணத்தை மாற்ற வங்கி வாசலில் நின்று படாத பாடுபடுகின்றனர். இந்த ரூபாய் நோட்டு தடைக்கு பின்னர் பல உயிர்கள் பலியாகியுள்ளனர். மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை பல்வேறு இன்னல்கள் மத்தியில் வாழ்ந்து ...

வீட்டில் வைத்திருக்கும் தங்கத்திற்கு வருகிறது கட்டுப்பாடு? மத்திய அரசு அடுத்த அதிரடி

Posted: 26 Nov 2016 06:00 AM PST

புதுடில்லி : ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, வீட்டில் வைத்திருக்கும் தங்கத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது. அதிரடி: கறுப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டுக்களை ஒழிக்கவும் கடந்த 8 ம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டது. மக்கள், வங்கியில் பழைய ரூபாய் நோட்டுக்களை டிபாசிட் செய்து வருகின்றனர். கட்டுப்பாடு? இந்நிலையில், மத்திய அரசு அடுத்த அதிரடியாக வீட்டில் வைத்திருக்கும் தங்கத்திற்கு கட்டுப்பாடு விதிக்கும் ...

சூரத்தில் ரூ.500 செலவில் நடந்த எளிமை திருமணம் -

Posted: 26 Nov 2016 05:36 AM PST

- குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த பாரத் பர்மார் மற்றும் தக்ஷா இருவருக்கும் திருமணம் நிச்சயித்திருந்த சமயத்தில், மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. திருமணம் நெருங்கிய சமயத்தில் இந்த அறிவிப்பு வெளியானதால் பணத்தை திரட்ட முடியாமல் இரு வீட்டாரும் சிரமப்பட்டனர். இதனையடுத்து எளிமையாக திருமணத்தை நடத்த முடிவு செய்து, வெறும் 500 ரூபாய் மட்டுமே செலவு செய்து, சிக்கனமாக திருமணத்தை நடத்தி முடித்தனர். திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்களுக்கு வீட்டில் தயார் ...

H ஐ O வாக மாற்ற முடியுமா?

Posted: 26 Nov 2016 05:32 AM PSTH வடிவில் உள்ள காயின்களை நான்கு முறை மட்டும் நகர்த்தி -O - வடிவுக்கு மாற்ற வேண்டும்.

பின் O வடிவில் உள்ளதை ஆறு முறை மட்டும் நகர்த்தி H வடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

எச்சரிக்கை -IOS கருவிகளை முடக்கும் 3 வினாடிக் காணொளி.

Posted: 26 Nov 2016 04:53 AM PST

வைரஸ் உள்ள மூன்று வினாடிகள் பிளே ஆகும் You Tube காணொளி ஒன்று மின் அஞ்சல் அல்லது வேறு வழிகளில் பரவ விடப்பட்டுள்ளது. காணொளி தொடங்கி Honey என்ற சொல் வந்தவுடன் காணொளி முடிந்து விடுகிறது. அப்புறம் ஒரு சில வினாடிகளில் கைபேசி (iPhone IOS கருவிகள் ) மெதுவாகி முற்றாக முடக்கப்பட்டு விடும். அதை சரி செய்ய வேண்டுமானால் hard reset செய்து வாங்கிய போது எப்படி இருந்ததோ அந்த நிலைக்கு திருப்ப வேண்டும். அதனால் இப்படி ஒரு சில வினாடிகள் காணொளி வந்தால் play செய்யாமல் விடுவது சிறந்ததாகும். the Guardian இந்தத் தகவலை ...

செருப்பு தைக்க 10 ரூபாய்... டிப்ஸ் 90 ரூபாய்..!

Posted: 26 Nov 2016 04:51 AM PST

- கோவை : கோவை விமான நிலையத்தில் தனது செருப்பு அறுந்ததால், ரோட்டோர செருப்பு தைக்கும் கடையில் செருப்பை தைத்துக் கொண்டார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி. - தொழிலாளியிடம் 100 ரூபாயை நீட்டிய மத்திய அமைச்சர், 90 ரூபாயை டிப்ஸாக கொடுத்தார். - கோவையில் நடைபெறும் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, இன்று மதியம் கோவை விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் வரும் போது இவரது செருப்பு திடீரென அறுந்தது. இதையடுத்து ஒற்றை செருப்புடன் விமான நிலையத்தில் ...

சிங்கப்பூர் - ஸ்ரீ சிவதுர்க்கா ஆலயத்தின் குடமுழுக்கு விழா

Posted: 26 Nov 2016 04:31 AM PST

- சிங்கப்பூர் பொத்தோங் பாசிர் வீடமைப்புப் பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ சிவ துர்க்கா ஆலயத்தின் மாபெ ரும் குடமுழுக்கு விழா அடுத்த மாதம் 4ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 8.50 முதல் 9.50 மணி வரை நடைபெறும். ஆலயத்தின் புதுப்பிப்புப் பணி கள் 2014ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கின என்றும் பல புதிய அம்சங்களுடன் புதிய ஆலயம் சிறப்பாக உருவாக்கப்பட்டு உள்ளது என்றும் நேற்று நடை பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஸ்ரீ சிவ துர்க்கா ஆலய நிர்வாகக் குழுத்தலைவர் திரு கே. ராமசந்திரா, 67, கூறினார். $8.3 ...

மனைவி சுட்ட பூரியை குறை சொன்னது தப்பா போச்சு…!!

Posted: 26 Nov 2016 04:27 AM PST


-

மொழி..2

Posted: 26 Nov 2016 04:13 AM PST

மொழி என் மனவலிகளை எழுதா மொழிகள் வார்த்தையற்று வாஞ்சையடைகின்றன. என் அன்னையின் பாசத்தை அமுத வாிகளில் எழுதிட இயலா மொழிகள் பாசத்திற்கு ஏங்கி பாிதவித்து நிற்கின்றன. செல்லப் பிராணிகளைச் சீண்டி விளையாடும் பொழுது உடல் மொழியே எங்களுக்குள் உறவை வளர்க்கிறது. மற்ற மொழிகளெல்லாம் பயனற்றுப் புறந்தள்ளப் படுகிறது. உடல் இச்சையை மொழியும் காம மொழிக்கு மட்டும் மொழியின் தேவை அற்றுப் போகிறது. கொஞ்சி விளையாடும் மழலை பேசும் மொழிக்கு எம்மொழியிலேனும் அகராதி உண்டோ? மாட்டுவண்டிக்காரன் மாட்டை ...

கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மறைவு

Posted: 26 Nov 2016 04:06 AM PST

--- கியூபாவின் புரட்சியாளரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 90. கடந்த பல மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மறைந்த தகவலை, கியூபாவின் அரசு தொலைக்காட்சி வெளியிட்டது. கியூபா நேரப்படி 22.29 மணிக்கு ஃபிடல் காஸ்ட்ரோ உயிர் பிரிந்ததாக, அந்நாட்டின் அதிபர் ரவுல் காஸ்ட்ரோ தொலைக்காட்சியில் தோன்றி தகவல் வெளியிட்டார். கியூபாவில் புரட்சியை வழிநடத்திய ஃபிடல் காஸ்ட்ரோ, 1959 முதல் 1976 வரை அந்நாட்டின் பிரதமராகவும், 1976 முதல் 2008 ...

கூறிவிட்டேன் ! மீறிவிட்டேன் !

Posted: 26 Nov 2016 03:59 AM PST

மானேஜர் ஜானகிராமன் கடுகடுவென்று இருந்தான் . காலிங்பெல்லை அழுத்தினான் . பியூன் சதாசிவம் உள்ளே வந்து , ' என்னங்க ஐயா ! ' என்று கேட்டான் . கோமதியைக் கூப்பிடு ! சற்றுநேரத்தில் கோமதி மானேஜர் அறைக்குள் நுழைந்தாள் . அவள் தலை கீழே கவிழ்ந்திருந்தது . " என்ன கோமதி ! இப்படி பண்ணிட்டியே ! நம்முடைய காதலை யாரிடமும் கூறமாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்து கொடுத்துவிட்டு ,அந்த சத்தியத்தை மீறிவிட்டாயே ! இதுதான் நீ சத்தியத்தைக் காப்பாற்றும் இலட்சணமா ? குறிப்பாக என் மனைவிக்குத் தெரியக்கூடாது என்று ...

அறிமுகம்

Posted: 26 Nov 2016 02:02 AM PST

பெயர்:சு.மகேஸ் பாண்டி
சொந்த ஊர்:சிவகாசி
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:
பொழுதுபோக்கு:புத்தகம் படித்தல்
தொழில்:முனைவர் பட்ட ஆய்வாளர்
மேலும் என்னைப் பற்றி:கட்டுரை, கவிதை, சிறுகதை, நாவல் வாசிப்பதில் மிக்க ஆர்வமுண்டு

மோடி கி நோட்

Posted: 25 Nov 2016 05:33 PM PST

மோடி கி நோட் நம்முடைய ஆண்ட்ராய்டு போன்களில் .modi ki note என்ற app ஐ டவுன்லோட் பண்ணுங்கள் . புதிய 2000 நோட்டின் மங்கள்யான் படத்தின் மீது கேமெரா மூலம் பாருங்கள் மங்கள்யான் மறைந்து மோடி பேசுவது போன்ற வீடியோ தெரியும் .ரூபாயை தள்ளி வைத்தால் , மோடி விடியோவும் மறைகிறது . எனது நண்பர் போன் கொண்டுவந்தார் . என்னிடம் இருந்த 2000 இல் மோடி பேசுவதை பார்த்தேன் ,கேட்டேன் . இங்குதான் மங்கள்யான் இடத்தில chip வைக்கப்பட்டு உள்ளதாம் . எனது போனில் space இல்லாததால் , சில apps ஐ நீக்கிவருகிறேன் . ரமணியன் ...

அரசியல்............

Posted: 25 Nov 2016 05:25 PM PST

சுப்பு : என்ன அப்பு நாட்டில் சட்டத்தை மதிப்பதே இல்லை .காவல்துறை இருந்தும் களவு நடக்காமல் இல்லை, ஊழல் ஒழிப்பு துறை இருந்தும் ஊழல் நடைபெறாமல்இல்லை, லஞ்ச ஒழிப்பு துறை இருந்தும் லஞ்சம் ஒழியவில்லை இதெல்லாம் இல்லாத ஆட்சி யாரால் நடத்தமுடியும் நினைக்கிற.... அப்பு : என்ன சுப்பு இப்படி கேட்டிட்ட மனசாட்சியே இல்லாம எல்லா தவறையும் துணிச்சலா செய்கிறார்களே..!!!இதெற்கெல்லாம் முற்று புள்ளி வைக்க அரசியல் கட்சிங்க ஆட்சி நடத்தக்கூடாதுங்க ......திறமைக்கு வேலை என்ற நிலைவரனுங்க...நீங்களே ..சொல்லுங்க சுப்பு......


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™