Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பாரதிய ஜனதாவின் புது திட்டம் : பிரபல நடிகர்களுக்கு 'ஜாக்பாட்'

Posted: 25 Nov 2016 08:44 AM PST

ரூபாய் நோட்டு எதிர்ப்பு விவகாரத்தில், பிரபல நடிகர்களுக்கு, 'ஜாக்பாட்' அடிக்க உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, 'பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, இம்மாதம், 8ம் தேதி அறிவித்தார். இந்த அறிவிப்பால், பாமர மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக, எதிர்க் கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
அதேநேரத்தில், பிரதமர் மோடி இத்திட்டத்தை அறிவித்த போது, அதற்கு ஆதரவாக, பிரபல
நடிகர்களை, மத்திய அரசு குரல் கொடுக்க வைத்த தாக குற்றச்சாட்டு எழுந்தது. கேரளாவில், மோடி யின் அறிவிப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்த, நடிகர் மோகன்லால் கடுமையான விமர்சனத்திற்கு ...

அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெ., பேசுகிறாராம்! :மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி புது தகவல்:இரண்டு மாதங்களாக பேசவில்லை என்பது அம்பலம்

Posted: 25 Nov 2016 08:48 AM PST

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், முதல்வர் ஜெயலலிதா,தற்போது பேச துவங்கி உள்ளதாக, அப்பல்லோ மருத்துவமனை தலைவர், பிரதாப் ரெட்டி, நேற்று தெரிவித்தார். இதன் மூலம், இரண்டு மாதங் களாகஅவர் பேச முடியாத நிலையில் இருந்தது தெரிய வந்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக, செப்., 22ம் தேதி இரவு, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்க, லண்டன் மற்றும் சிங்கப்பூர் டாக்டர்கள் வரவழைக்கப் பட்டனர். டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனை டாக்டர்களும், அப்பல்லோ மருத்துவமனை வந்து, சிகிச்சை அளித்தனர்.
யாரும் ...

அவகாசம் தந்தால் புகழ்ந்திருப்பர்: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் சூடு

Posted: 25 Nov 2016 09:13 AM PST

புதுடில்லி:''செல்லாத ரூபாய் நோட்டு கள் விவகாரத்தில், மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சி கள் குற்றஞ்சாட்டுகின்றன; நோட்டுகளை மாற்ற, அவர்களுக்கு அவகாசம் அளித்திருந் தால் என்னை பாராட்டியிருப்பர்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத்தில், மத்திய அரசையும், பிரதமர் மோடியையும், காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. பல்வேறு போராட்டங் களையும் நடத்தி வரும் எதிர்க்கட்சிகள், பார்லிமென்டையும் முடக்கி உள்ளன.இந்த நிலையில், டில்லி யில், நேற்று நடந்த நிகழ்ச்சி ...

செல்லாத ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில்... மாற்றலாம்!:டிச., 30 வரை வங்கிகளில் 'டிபாசிட்' செய்யலாம்:பணப்புழக்கத்தை சீராக்க மத்திய அரசு நடவடிக்கை

Posted: 25 Nov 2016 09:29 AM PST

புதுடில்லி:செல்லாத ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் மாற்றுவதற்கான அவகாசம், நேற்று முன்தினம் முடிந்தது. எனினும், 'செல்லாத நோட்டுகளை, ரிசர்வ் வங்கி கவுன்டர்களில் கொடுத்து, பணம் பெற்றுக் கொள்ளலாம்' என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அது போல, முன்னரே அறிவிக்கப்பட்ட படி, டிசம்பர், 30 வரை, பழைய நோட்டுகளை வங்கி களில், 'டிபாசிட்' செய்தும், புதிய கரன்சியாக எடுத்துக் கொள்ளலாம்.கள்ள நோட்டு மற்றும் கறுப்புப் பணத்தை ஒழிக்க, '500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல் லாது' என, பிரதமர் நரேந்திர மோடி, நவ., 8ல் அறிவித்தார். செல்லாத ரூபாய் நோட்டுகளை, நவ., 24ம் தேதி வரை, வங்கிகளில் மாற்றிக் ...

ரியல் எஸ்டேட் துறையில் கறுப்பு பணம் 'ஓஹோ'

Posted: 25 Nov 2016 09:43 AM PST

புதுடில்லி:'ரியல் எஸ்டேட் மற்றும் கல்வி நிறுவனங்களில்தான், கறுப்பு பணப் புழக்கம் அதிக மாக உள்ளது' என, லோக்சபா வில் அரசு தெரிவித்துள்ளது.

லோக்சபாவில், நேற்று, கேள்வி நேரத்தின் போது, கறுப்பு பணம் தொடர்பான கேள்விக்கு, நிதித்துறை இணை அமைச்சர், சந்தோஷ் குமார் கங்வார், எழுத்து மூலம் அளித்த பதில்: நாட்டில், 2013 - 14ல், 569 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி, 11 ஆயிரம் கோடி ரூபாய், கறுப்பு பணத்தை கைப்பற்றினர். 2014 - 15ம் நிதிஆண்டில், 545 இடங்களில் சோதனை நடத்தி, 10,000 கோடி ரூபாய், கறுப்பு பணம் கைப்பற்றப்பட்டது. பின், 2015 - 16ல், 445 இடங்களில் சோதனை நடத்தி, 11,000 ...

விமானத்தில் வந்தது 14 டன் புது 500 ரூபாய் நோட்டு

Posted: 25 Nov 2016 09:49 AM PST

மஹாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் இருந்து, 14 டன் எடைஉள்ள புதிய, 500 ரூபாய் நோட்டுகள், ராணுவ விமானத்தில், சென்னை வந்து சேர்ந்தன.

தமிழகம் முழுவதும், ஓரிரு நாளில் வினியோ கம் துவங்குகிறது.புதிய, 500 ரூபாய் நோட்டு எப்போது வரும் என, மக்கள் காத்திருந்த நிலையில், சென்னையில், நேற்று முன்தினம் புழக்கத்திற்கு வந்தது. ஆனால், பாரத ஸ்டேட் வங்கியின் சில, ஏ.டி.எம்.,களில் மட்டுமே கிடைத்தது. அத்துடன், வந்த சில நிமிடங்களிலேயே தீர்ந்து விட்டது. இதனால், மக்கள் ஏமாற்றம் அடைந்த னர். இந்நிலையில், தமிழக மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், தமிழகத்திற்கு, 500 ரூபாய் ...

இறந்த விவசாயிகள் குடும்பத்திற்கு ஸ்டாலின் நிதியுதவி

Posted: 25 Nov 2016 10:15 AM PST

நாகப்பட்டினம்:''அனைத்து வங்கிகளிலும், விவ சாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்,'' என, ஸ்டாலின் வலியுறுத்தினார்.

நாகை, திருவாரூர் மாவட்டங்களில், தண்ணீர் இல்லாமல் கருகிய பயிர்களை பார்த்து, அதிர்ச்சியிலும், தற்கொலை செய்தும், எட்டு விவசாயிகள் இறந்தனர்.இவர்களின் குடும்பத்தி னரை, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், சந்தித்து ஆறுதல்கூறி, தி.மு.க., சார்பில், தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
விவசாயிகள் தற்கொலை,இந்த ஆட்சியின் வேதனை. தற்கொலை செய்த விவசாயிகள் குடும் பத்தினரை சந்தித்து, ஆறுதல் ...

அதிநவீன சாதனங்களுடன் மாவோயிஸ்ட்கள் 'கேம்ப்' கேரள காட்டில் நடந்தது என்ன? அதிகாரிகள் ஆய்வு

Posted: 25 Nov 2016 10:21 AM PST

பந்தலுார்:கேரளா மாநிலம் நிலம்பூர் வனப் பகுதியில், முகாம் அமைத்து, மாவோயிஸ்ட் கும்பல் தங்கியிருந்ததும், நவீன கருவிகளை பயன்படுத்தியதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம், நிலம் பூர் வனத்தில் நேற்று முன் தினம் படுக்கா வனப் பகுதியில் தண்டர்போல்ட் கமாண்டர் சாலமன், தலைமையில் போலீசார் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.அப்போது, பச்சை நிற சீருடையில், 12 பேர் நின்றிருப்பதை பார்த்துள் ளனர். அது மாவோயிஸ்ட் கும்பல் என உறுதி யானதும் உஷாரடைந்த போலீசார் துப்பாக்கி யால் சுட்டுள்ளனர்.இரு தரப்பிலும் துப்பாக்கி சண்டை 10 நிமிடம் நடந்துள்ளது. ...

சீனாவில் கடும் நிலநடுக்கம்; ரிக்டரில் 6.7 ஆக பதிவு

Posted: 25 Nov 2016 10:27 AM PST

பெய்ஜிங் : சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகியுள்ளது.
கடும் நிலநடுக்கம் :
சீனாவின் வடமேற்கு மாகாணமான ஜின்ஜியாங்கில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. புவிக்கடியில் 10 கி.மீ., ஆழத்தில் உண்டான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 என பதிவாகியிருந்தது.
தகவல் இல்லை:
நிலநடுக்கத்தின் தாக்கம் கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் எல்லையிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் ...

எதிர்க்கட்சிகள் கடும் அமளி இரு சபைகளும் ஒத்திவைப்பு

Posted: 25 Nov 2016 10:28 AM PST

புதுடில்லி:'எதிர்க்கட்சியினர் கறுப்பு பணம் வைத்துள்ளதாக சொன்ன, பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்' என வலியுறுத்தி, பார்லியில், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட தால், இரு சபைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர், 18ல் தொடங்கியது. செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக, பார்லிமென்டில்பிரதமர் பதில் அளிக்கும்படி வலியுறுத்தி, எதிர்க்கட்சி கள் அமளியில் ஈடுபடுவதால், பார்லிமென்டின் இரு சபைகளும், ஒத்திவைக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.இந்த நிலையில், நேற்று காலை, ராஜ்யசபா கூடிய வுடன், பகுஜன் சமாஜ் தலைவர், ...

'டிஜிட்டலில்' கட்டணம்; ஆராய நிபுணர் குழு

Posted: 25 Nov 2016 11:43 AM PST

புதுடில்லி: கறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் வகையில், அரசுக்கு டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்துவது குறித்து ஆராய, நிபுணர் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.

நிபுணர் குழு :
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி விபரம்: அரசு - மக்கள் இடையிலான பரிவர்த்தனைகளை, டிஜிட்டல் முறையில் மேற்கொள்வது குறித்து ஆராய, நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. 'நிடி ஆயோக்' தலைமை செயலர் அமிதாப் காந்த் தலைமையிலான இந்த நிபுணர் குழு, எந்தெந்த துறைகளில், எந்தெந்த பரிவர்த்தனைகளை, டிஜிட்டல் முறைப்படி செய்ய ...

370வது பிரிவை திருத்தலாமா? விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு

Posted: 25 Nov 2016 01:24 PM PST

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், அரசியலமைப்பு சட்டத்தின், 370வது பிரிவில் திருத்தம் செய்வது குறித்து விசாரிக்க, சுப்ரீம் கோர்ட் முன்வந்துள்ளது.

திருத்தம் செய்ய முடியாது :
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு அரசு பணியில் பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, ஜம்மு - காஷ்மீர் ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. ஐகோர்ட் அளித்த தீர்ப்பில், 'மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பு சட்டத்தின், ...

சீன கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 74 ஆக உயர்வு

Posted: 25 Nov 2016 02:31 PM PST

பீஜிங்: சீனாவில், மின் உற்பத்தி நிலைய கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்தில், பலியான தொழிலாளர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்தது.

பலி உயர்வு :
சீனாவில் ஜியாங்சி மாகாணத்தில் பெங்சாங் நகரில், மின் உற்பத்தி நிலையத்தில் கட்டுமான பணிகளின் போது, புதிதாக கட்டப்பட்ட பிரம்மாண்ட கான்கிரீட் தளங்கள் பெயர்ந்து விழுந்தன; இந்த விபத்தில், அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 67 பேர் பலியாயினர். இந்நிலையில் மீட்புப்பணியின் போது மேலும் 7 பேரின் உடல் இடிபாடுகளுக்கிடையே மீட்கப்பட்டது. இதனையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 74ஆக ...

நியாயமான முறையில் பண விநியோகம்? கெஜ்ரிவால் கேள்வி

Posted: 25 Nov 2016 03:18 PM PST

புதுடில்லி : வங்கிகளுக்கு நியாயமான முறையில் பண விநியோகம் செய்யப்படுகிறதா என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊடகங்களில் செய்தி :
ரிசர்வ் வங்கி 4 ஆயிரம் வாடிக்கையாளர்கள் உள்ள ஒரு வங்கிக்கு, ரூ.42 லட்சமும், 35 கிளைகள், 1.5 லட்சம் வாடிக்கையாளர்களுடன் செயல்படும் வங்கி ஒன்றிற்கு வெறும் ரூ.3 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.
கெஜ்ரி கேள்வி :
இதுகுறித்து டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் கேள்வி எழுப்பி ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™