Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


திறந்த வெளி கழிப்பிடம்: பரிதாப நிலையில் கிராமவாசிகள்

Posted: 24 Nov 2016 09:32 AM PST

புதுடில்லி: நாட்டில், 43 சதவீத கிராம மக்கள், திறந்த வெளியையே, கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்.

43 சதவீதம்...
லோக்சபாவில், நேற்று கேள்வி நேரத்தின் போது, கேட்கப்பட்ட கேள்விக்கு, குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை இணையமைச்சர், ரமேஷ் ஜகாஜிநகி, எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில், 'நவ., 21 வரையிலான கணக்கின்படி, இந்தியாவில், 43 சதவீத கிராமவாசிகள், திறந்த வெளியையே கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்' என, கூறப்பட்டுள்ளது. ...

செல்லாத நோட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு... பதிலடி!: விவாதத்தை தவிர்க்க காரணம் தேடுவதாக ஜெட்லி புகார்

Posted: 24 Nov 2016 08:35 AM PST

புதுடில்லி:செல்லாத ரூபாய் நோட்டு விவகா ரத்தில் மத்திய அரசை, முன்னாள் பிரதமர் மன் மோகன் விமர்சித்து பேசியதற்கு, நிதியமைச் சர் அருண் ஜெட்லி பதிலடி கொடுத்தார். ''விவாதம் நடைபெறாமல் இருப்பதற்கான காரணங்களை தேடுகின்றனர்,'' என, அவர் கடுமையாக சாடினார்.

செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் தொடர் பாக விவாதிக்க வேண்டும் என்று, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால், பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் முடங்கியுள்ளது. இந்த நிலையில், 'விவாதத் துக்கு தயார்' என, மத்திய அரசு தெரிவித்து, 16ல், ராஜ்யசபாவில் விவாதம் துவங்கியது.ஆனால், பிரதமர் ...

அரசு கட்டடங்களில் மின் இணைப்பை துண்டிக்க...உத்தரவு!:ரூ.820 கோடி நிலுவையால் வாரியம் அதிரடி:டிச., 3க்குள் விபரம் தர அதிகாரிகளுக்கு கிடுக்கி

Posted: 24 Nov 2016 08:54 AM PST

மின் கட்டணம் செலுத்தாத, அரசு கட்டடங்களில் மின் இணைப்பை துண்டிக்க, உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆண்டுக்கணக்கில், மின் கட்டணம் செலுத்தா மல், அரசு அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், 820 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளதால், இந்த அதிரடி நடவடிக் கையை, தமிழக மின் வாரியம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் பற்றிய விபரத்தை, டிச.,3க்குள் அளிக்கும் படியும், மின் வாரிய அதிகாரிகளுக்கு கிடுக்கிப் பிடி போடப்பட்டுள்ளது.அரசு துறை அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலகம் மற்றும் கட்டடங்களு க்கு, மின் வாரியம் சார்பில், மின் வினியோகம் ...

சுங்க கட்டண தடை: டிச., 2 வரை நீட்டிப்பு

Posted: 24 Nov 2016 08:56 AM PST

புதுடில்லி:தேசிய நெடுஞ்சாலைகளில், சுங்கக் கட்டணம் வசூலிக்க விதிக்கப்பட்ட தடை, டிச., 2 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

செல்லாத ரூபாய் நோட்டு பிரச்னையால், நாடு முழுவதும் பணப்புழக்கம் குறைந்து, மக்கள் அன்றாட செலவுக்கு அவதிப்படும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, மின்சாரம், குடிநீர் கட்டணம், ரயில் கட்டணம் செலுத்த, நவ., 24 வரை, செல்லாத நோட்டுகளை பயன்படுத்த லாம் என, மத்திய அரசு அறிவித்தது. மருத்துவ மனைகள், பெட்ரோல் பங்க்குகளிலும், செல் லாத ரூபாய் நோட்டுகள் வாங்க அனுமதிக்கப் பட்டது. தேசிய நெடுஞ்சாலைகளில், சுங்கச்சாவடிகளில் பல இடங்களில் சில்லரை பிரச்னை ...

இந்தியாவை கட்டுப்படுத்துங்க: ஐ.நா.,விடம் பாக்., கதறல்

Posted: 24 Nov 2016 09:02 AM PST

நியூயார்க்: 'இந்தியா - பாக்., எல்லையில் காணப்படும் பதற்றமான சூழ்நிலை, மிகப் பெரிய பிரச்னையாக மாறுவதற்கு முன், இதில் தலையிட வேண்டும்' என, ஐ.நா.,வில் பாக்., முறையிட்டுள்ளது.

பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு, நமது ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த எதிர்தாக்குதல்களை சமாளிக்க முடியாத நிலையில், ஐ.நா., சபையின் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது.
அத்துமீறி தாக்குதல் :
ஐ.நா., துணைப் பொதுச் செயலர், ஜேன் எலியாசன் உள்ளிட்டோரை, ஐ.நா.,வுக்கான பாக்., துாதர் மலீகா லோதி சந்தித்து, இது
குறித்து முறையிட்டுள்ளார்.இது குறித்து, மலீகா லோதி ...

டி.ஜி.பி.,க்கள் மாநாட்டில் மோடி யோகாசனம்

Posted: 24 Nov 2016 09:16 AM PST

ஐதராபாத்:ஐதராபாத்தில் நடக்கும், போலீஸ் டி.ஜி.பி.,க்கள் மாநாட்டில், பங்கேற்கும் பிரதமர் மோடி, அவர்களுடன் சேர்ந்து யோகாசனம் செய்ய உள்ளார்.

தெலுங்கானாவில், சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. நாட்டின் பல்வேறு மாநிலங் களை சேர்ந்த, டி.ஜி.பி.,க்கள் பங்கேற்கும் மாநாடு, தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில், இன்று தொடங்கி, 27ம் தேதி வரை நடக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் மாநாட்டை துவக்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி, ஐதராபாத்துக்கு இன்றுமாலை வருகிறார். நாளை காலை, ...

கோவை, திருப்பூரில் ரூ.12 ஆயிரம் கோடி டிபாசிட்! வரிசை கட்டும் கூட்டத்தால் வங்கிகள் திணறல்

Posted: 24 Nov 2016 09:24 AM PST

கோவை, திருப்பூர் மாவட்டங்களில், செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகளில், டிபாசிட் செய்யவும், வங்கி மற்றும் ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்கவும், கூட்டம் அலை மோதுகிறது.

கோவை மாவட்டத்திலுள்ள, 47 வங்கிகளின் 3,000க்கும் மேற்பட்ட கிளைகளில், இரு வாரங் களில், 4,000 கோடிக்கு பணம் மாற்றித்தரப் பட்டுள்ளது. டிபாசிட் தொகையாக, 9,500 கோடி ரூபாய் வரை பெறப்பட்டுள்ளது. கோவை மாவட்ட கனரா வங்கியின் மேலாளர் கனகராஜ் கூறியதாவது: கோவையிலுள்ள வங்கிகளில், நவ., 9லிருந்து, 14 நாட்களில் 4,000 கோடி வரை பணம் மாற்றித்தரப்பட்டுள்ளது.
செல்லாத ரூபாய்
நோட்டுகளாக பெறப்பட்ட ...

வரலாறு காணாத வகையில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

Posted: 24 Nov 2016 09:27 AM PST

புதுடில்லி:ரிசர்வ் வங்கி தலையிட்ட போதிலும், அமெரிக்க டாலருக்கு நிகராக, ரூபாயின் மதிப்பு, நேற்று 30 காசுகள் குறைந்து, இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்து, 68.86 ஆக நிலைகொண்டது.

அமெரிக்க அதிபர் தேர்தலில், யாரும் எதிர் பாராத வகையில், டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அமெரிக்க பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில், அவருடைய செயல் பாடுகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு, டாலரின் மதிப்பை உயர்த்தியுள்ளது.அதைத் தொடர்ந்து, இந்தியாவில், வெளிநாட்டு கரன்சிகளில் முதலீடு செய்துள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள், முதலீடுகளை திரும்ப பெறுகின்றனர். மேலும், செல்லாத ...

கருணாநிதியை சந்தித்து அன்பழகன் நலம் விசாரிப்பு

Posted: 24 Nov 2016 09:32 AM PST

தி.மு.க., தலைவர், கருணாநிதியை, அவரது கோபாலபுரம் இல்லத்தில், பொதுச்செயலர், அன்பழகன் சந்தித்து நலம் விசாரித்தார்.

உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை, கோபாலபுரத்தில் உள்ள வீட்டில், கருணாநிதி, 45 நாட்களுக்கு மேலாக, சிகிச்சை பெற்று வருகிறார். காய்ச்சல், இருமலுக்கு மாத்திரை சாப்பிட்டதில், 'அலர்ஜி' ஏற்பட்டு, உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டன. அதனால், அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது.கடந்த வாரத்தில், லண்டனை சேர்ந்த தோல் நோய் நிபுணர், சென்னை வந்து, கருணாநிதிக்கு சிகிச்சை அளித்தார்; அதில், நல்ல முன்னேற் றம் ஏற்பட்டுள்ளது. உடலில் ஏற்பட்டிருந்த, ...

செல்லாத நோட்டுகளை எங்கு பயன்படுத்தலாம்?

Posted: 24 Nov 2016 09:33 AM PST

புதுடில்லி:செல்லாத நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கான கால அவகாசம், நேற்று இரவுடன் முடிந்தது;

இனி, வங்கி கணக்குகளில் டிபாசிட் செய்யலாம் என அறிவித்துள்ள மத்திய அரசு, 500 ரூபாய் நோட்டை பல்வேறு சேவைகளுக்கு பயன் படுத்த கால அவகாசம் அளித்துள்ளது.இது குறித்து, மத்திய நிதியமைச்சகம் வெளி யிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளும் அவகாசம் நேற்று இரவுடன் முடிவுக்கு வந்தது. இனி, வங்கி கணக்கில் மட்டுமே செலுத்த முடியும்.அதே நேரத்தில், பொது மக்களின் சிரமத்தை போக்கும் ...

'ஈபிள் டவர்' 14 படிக்கட்டுகள் ரூ.4 கோடிக்கு ஏலம்

Posted: 24 Nov 2016 10:51 AM PST

பாரிஸ்: உலகப்புகழ் வாய்ந்த 'ஈபிள் டவரின்' 14 இரும்பு படிக்கட்டுகள் சுமார் 4 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டன.

படிக்கட்டுகள் வெட்டி எடுப்பு :
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 'ஈபிள் டவர்' கட்டுமானம் 1887ல் துவங்கப்பட்டு 1889ல் முடிக்கப்பட்டது. 1983ல் 'லிப்ட்' வசதி செய்யப்பட்டதால், இரும்பிலான படிக்கட்டுகள் வெட்டி எடுக்கப்பட்டன. இதன் பெரும் பகுதி, பாரிசில் உள்ள அருங்காட்சியகம் வாங்கியது. 1983ம் ஆண்டில் இருந்து அவ்வப்போது, இதற்கான ஏலம் இங்கு நடத்தப்படுகிறது.
ஏலம் :
சமீபத்தில், 'ஈபிள் டவரின்' 14 ...

மத்திய அமெரிக்காவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 7.2 என பதிவு

Posted: 24 Nov 2016 11:41 AM PST

சான் சல்வேடார் : மத்திய அமெரிக்க நாடுகளான எல் சல்வேடார் மற்றும் நிகாரகுவா ஆகிய நாடுகளில் 7.2 எனும் ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

சுனாமி எச்சரிக்கை :
மத்திய அமெரிக்க நாடுகளான எல் சல்வேடார் மற்றும் நிகாரகுவா ஆகிய நாடுகளில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 7.2ஆக பதிவானது. எல் சல்வேடாரிலிருந்து 120 கி.மீ., தொலைவில், 33 கி.மீ., ஆழத்தில் கடலில் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் ...

இஸ்ரேலிய நகர் ஹய்வாவை மிரட்டும் காட்டுத் தீ

Posted: 24 Nov 2016 12:55 PM PST

ஹய்வா:இ ஸ்ரேலின் முக்கிய நகர்களில் ஒன்றான ஹய்வாவை ஒட்டியுள்ள காட்டுப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ வேகமாக பரவி ஊருக்குள்ளும் பரவியதால் அந்நகரில் வசித்த 50,000 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

வேகமாக பரவிய காட்டுத் தீ
ஹய்வா நகரை ஒட்டியுள்ள பகுதியில் காய்ந்த நிலையில் காட்டு மரங்கள் மற்றும் தாவரங்கள் இருப்பதாலும், அப்பகுதியில் காற்று பலமாக வீசியதாலும் காட்டுத் தீ வேகமாக பரவியது. இதனால் பெரும் பொருட் சேதம் ஏற்பட்டாலும் இது வரை உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. ஒரு சிலர் ...

தேர்தல் நடத்த தயாரா? மோடிக்கு சவால் விடும் மாயாவதி

Posted: 24 Nov 2016 03:11 PM PST

புதுடில்லி : ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில் பொதுமக்களின் கருத்தை அறிய, பார்லி.,யை கலைத்து விட்டு புதிய தேர்தலை சந்திக்க பிரதமர் மோடி தயாரா? என மோடிக்கு மாயாவதி சவால்விடுத்துள்ளார்.

தேர்தலை சந்திக்க தயாரா?
இதுகுறித்து பார்லி.,க்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்ததாவது: பிரதமர் மோடி, 'மொபைல் ஆப்' மூலம் நடத்திய கருத்து கணிப்பில், ஐந்து லட்சம் பேரில், 93 சதவீதம் பேர், ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறுகிறார். அவருக்கு தைரியம் இருந்தால், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™