Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சசியின் குட்டி கவிதைகள்

Posted: 24 Nov 2016 06:13 AM PST

விரக்தியில் இருந்தேன்  வெளியே வந்தாய்  சன்னியாசி ஆனேன்!!  _____________________________ மறைத்தாய்  முகம்தனை  மரமானேன்!!  ________-_____-_- காய்ந்த சருகாய்  காணப்பட்டேன் புன்னகைத்தாய்  மலர்ந்தேன்!!!!  _----___-________-----_- கரம்பிடிப்பாயா?  கைக்கெட்டா தூரத்தில்  காகித பூவாய் நான்!!  ____-----________ வார்த்தைகளால்  அல்ல வலி  உன் மௌனத்தால்!!

விநாடி வினா போட்டியில் ரூ.68 லட்சம் வென்ற இந்திய சிறுவன்

Posted: 24 Nov 2016 05:07 AM PST

அமெரிக்காவில் நடந்த சிறுவர் களுக்கான விநாடி வினா போட்டி யில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சரத் நாராயண் வெற்றி பெற்று ரூ.68 லட்சம் பரிசுத் தொகையைத் தட்டிச் சென்றார். அமெரிக்காவில் சிறுவர்களுக் கான ஜியோபார்டி விநாடி வினா நிகழ்ச்சி மிகவும் பிரசித்திப் பெற்றது. இதன் 33-வது சீஸனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சரத் நாராயண் பங்கேற்றார். பல்வேறு சுற்றுகளாக நடந்த இப்போட்டியில் பலரை வென்று இறுதிச் சுற்றில் அலெக்ஸ் பிஸ்த்தால், மைக்கேல் போராக்கியைச் சந்தித்தார். மிகவும் துல்லியமாக ...

‘ஹலோ! 2000 ரூபாய்க்கு சேன்ஜ் கிடைக்குமா?’

Posted: 24 Nov 2016 04:35 AM PST

வெளிநாட்டில் இருக்கிற பணத்தை வெளியே கொண்டு வரப்போவதாகக் கொடுத்த வாக்குறுதியைத்தான் மோடி நிறைவேற்றியிருக்கிறார் என்கிறேன். அவரைப் பொறுத்தவரை இந்தியா வெளிநாடுதானே? – ஆதவன் தீட்சண்யா – ——————————————— – வலையில் திமிங்கலங்கள் சிக்குவதில்லை. ஏனெனில், வலைகள் திமிங்கலங்களுக்கானவை அல்ல! – ஈ.எம்.ஜோசப் – ———————————————- – சட்டென கோபப்படுத்தும், திட்டு வாங்க வைக்கும் சுலபமான கேள்வி – 'ஹலோ! 2000 ரூபாய்க்கு சேன்ஜ் கிடைக்குமா?' – வெ. பூபதி – ——————————————- மளிகைக்கடை, காய்கறிக் கடை, ...

வாழ்க்கை ஒரு வட்டம்தான்…!

Posted: 24 Nov 2016 04:34 AM PST

@tamil_eagle ஜியோ சிம்ல படத்தை டவுன்லோடு பண்ணிப் பார்த்தவன் எல்லாம் ஒரு படம் எடுக்க எவ்வளவு கஷ்டம்னு தெரியுமா? என்று கேட்கும் போது கடுப்பு புன்னகையாகுது – ————————————- – @MohammedMastha இன்னைக்கு ஏதாவது சாதிக்கணும்னு நினைச்சு எழுந்திருக்கும் போதுதான் எங்க அம்மா குடத்தை கைல கொடுத்து முதல்ல போய் தண்ணிய பிடின்னு சொல்லுறாங்க. – ————————————— – @r_vichu எதுக்குடா காசு என மிரட்டின தந்தையே, காசு வேணும்னா சொல்லுடா என நச்சரிக்க வைக்கிறது காலம். வாழ்க்கை ஒரு வட்டம்தான். – —————————————— – @naiyandi 10 ...

பொய் – ஒரு பக்க கதை

Posted: 24 Nov 2016 02:49 AM PST

- 'ஏங்க! என்னோட பர்ஸ்ல ஆயிரம் ரூபா குறையுது. நீங்க எடுத்தீங்களா?'' சேகரின் மனைவி அலைபேசியில் பதட்டத்துடன் கேட்டாள். ''எம்.டி.யோடு மீட்டிங்ல இருக்கேன். கொஞ்ச நேரம் கழித்து கூப்பிடட்டுமா?'' என்று போனை வைத்தான் சேகர். என்னோட பாக்கெட்டிலும் அவ்வப்போது பணம் காணாமல் போகும்! அவளிடம் கேட்டால், கோபத்தில் எரிந்து விழுவாள். இனி பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்! எப்படி பாதுகாத்தாலும் பல ஆயிரங்கள காணாமல் போயிருக்கிறது. நான் யார்கிட்ட இதைப் போய் கேட்பேன். தனக்குத்தானே பேசிக்கொண்டான் ...

மனைவியும் திருக்குறள் தான்…!

Posted: 24 Nov 2016 01:58 AM PST

@theNocturnal கேள்விகளைச் சுமந்தபடியே ஒரு கூட்டம் எப்போதும் சுற்றித்திரிகிறது. ஊமையாகவா, செவிடாகவா, எவ்வாறு கடக்கப்போகிறீர்கள் என்பதில்தான் உங்கள் சாதுர்யம். – ————————————— – மூணு காரணங்களால், மனைவியும் திருக்குறள் தான்…! 1. நிறைய அதிகாரம் இருப்பதால். 2. நிறைய இடங்களில் புரிந்தும் புரியாமலும் இருப்பதால். 3. இரண்டடியில் எல்லாவற்றையும் உணர வைப்பதால். – —————————————— – @pudhuvaikalai47 ஜல்லிக்கட்டை கம்ப்யூட்டரில் விளையாடலாமே.. # வீர விளையாட்டு, வீடியோ விளையாட்டு எதுவென வேறுபாடு ...

உதவி – ஒரு பக்க கதை

Posted: 24 Nov 2016 01:32 AM PST

- 'டமால்..!' என்று சத்தம் கேட்டது. பஸ் ஸ்டாப்பில் தனியே ஓரமாக நின்று கொண்டிருந்த திருஞானம் திரும்பிப் பார்த்தான். ஸ்கூட்டியில் வந்த ஒரு இளம் பெண், மணலில் சறுக்கி கீழே விழுந்து கிடந்தாள். கூடியிருந்த எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். உதவலாமா? வேண்டாமா? என்று இருமனதுடன் தவித்துக் கொண்டிருந்தான் திருஞானம். உதவி எதிர்பார்த்து, கிடைக்காத அவள் தானாகவே எழுந்து ஸ்கூட்டியை எடுத்தாள். நல்ல சிராய்ப்பு. வண்டியைத் தள்ளிக் கொண்டு, பஸ் ஸ்டாப்பில் நிற்கும் இவனிடம் நேராக வந்தாள். ''அதான் ...

வசந்த முல்லை போல வந்து...

Posted: 23 Nov 2016 11:37 PM PST

இந்தி பட இயக்குநர் நாக்கை வெட்டினால் ரூ.1 கோடி: மதுராவில் சாதுக்கள் நடத்திய மஹா பஞ்சாயத்தில் அறிவிப்பு

Posted: 23 Nov 2016 11:11 PM PST

உ.பி.யில் இந்துக்களின் புனித நகரமான மதுரா, கிருஷ்ணரின் ஜென்ம பூமியாகக் கருதப்படுகிறது. இந்நகருக்கும் மற்றொரு நகரான பிருந்தாவனுக்கும் இடையில் நந்தகாவ்ன், பர்ஸானா என்ற இரு கிராமங்கள் உள்ளன. இவ்விரு கிராமங்களில் கடந்த சில நாட்களாக 'டாய்லட்-ஏக் பிரேம் கதா (கழிப் பறை-ஒரு காதல் கதை)' என்ற இந்திப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதன் நாயகனாக பிரபல நடிகர் அக்ஷய்குமார் நடித்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் 'தூய்மை இந்தியா' திட்டத்தை ஆதரித்து இப்படம் எடுக்கப்படுகிறது. ...

ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி

Posted: 23 Nov 2016 11:07 PM PST

'நோட்டு நடவடிக்கையில் பிரதமர் முன்னிலையில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும். நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பதிலை ஏற்பதற்கில்லை' எனக் கூறி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் நோட்டு பிரச்சினையை முன்வைத்து பல்வேறு கட்சிகளும் அமளியில் ஈடுபட அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவை இன்று (வியாழக்கிழமை) காலை கூடியதும் நோட்டு நடவடிக்கையில் பிரதமர் முன்னிலையில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் ...

கொம்பு முளைத்த பெண்ணல்ல... கொண்டாடப் பட வேண்டிய தேவதை!

Posted: 23 Nov 2016 09:19 PM PST

By கார்த்திகா வாசுதேவன்  |   - - நேற்று இணையத்தில் கண்ணில் பட்டது ஒரு கட்டுரை. அந்தக் கட்டுரை 'ஷாருக்கானைவிட கமலஹாசனை' விட நாம் கொண்டாட வேண்டிய, மரியாதை செய்ய வேண்டிய நபர்கள் கணிசமான அளவில் இந்த உலகில் இருக்கிறார்கள் என்று சிலரைப் பட்டியலிட்டிருந்தது. அந்தப் பட்டியலில் இருந்த சுமார் பத்துப் பேரில் சிலரை நான் அறிந்திருந்தேன். ஆனால் கடைசியாக அடையாளப் படுத்தப்பட்டிருந்த பெண்மணியை இதுவரை அறிந்திருக்கவில்லை. ஆனால் முன்பே அறிந்திருந்திருக்க வேண்டுமோ என்று தோன்றியது. பின்பு ...

'ஜன்தன்' கணக்குகளில் ரூ.21,000 கோடி 'டிபாசிட்'

Posted: 23 Nov 2016 05:37 PM PST

- புதுடில்லி: மத்திய அரசின் ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், 'ஜன்தன்' திட்ட வங்கிக் கணக்குகளில், 21 ஆயிரம் கோடி ரூபாய் 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளது. - மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: செல் லாத ரூபாய் நோட்டு திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, நவ.,8ல் அறிவித்தார். பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில், 'டிபாசிட்' செய்ய, டிச., 30 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. - இந்த திட்டம் அமலான பின், ஜன்தன் திட்ட வங்கிக் கணக்குகளில், 'டிபாசிட்'கள் குவிய துவங்கி உள்ளன. 13 நாட்களில், ...

குற்றாலத்தில் எண்ணெய் குளியலுக்கு தடை நீடிப்பு

Posted: 23 Nov 2016 04:56 PM PST

மதுரை: குற்றாலத்தில் எண்ணெய் குளியல், ஷாம்பு பயன்படுத்த ஏற்கனவே உள்ள தடை நீடிக்கப்படுவதாக, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. எண்ணெய் குளியல்: குற்றாலம் அருவில் எண்ணெய் சிகைக்காய், சோப்பு, ஷாம்பு பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் 2014ல் தடை விதித்தது. இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ‛ அருவியில் பாரம்பரியமாக எண்ணெய், சிகைக்காய் பயன் படுத்தினர். - வழக்கறிஞர் கமிஷனர்கள் ஆய்வறிக்கை அடிப்படையில் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அவர்கள், அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்யவில்லை. ...

ஹிலாரிக்கு எதிராக விசாரணை கிடையாது; டிரம்ப் முடிவு

Posted: 23 Nov 2016 04:54 PM PST

வாஷிங்டன்: அரசு பணிகளுக்கு தனியார் இ- மெயில் சர்வரை பயன்படுத்தியது தொடர்பாக முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி மீது விசாரணை நடத்தப்பட மாட்டாது என டிரம்ப்பிற்கு நெருக்கமான ஊழியர் ஒருவர் கூறியுள்ளார். குற்றச்சாட்டு: அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சராக ஹிலாரி கிளிண்டன் இருந்த போது, அரசு பணிகளுக்கு தனியார் இ-மெயில் சர்வரை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக எப்.பி.ஐ., விசாரைண நடத்தியது. இதில் எந்தவித ஆதாரமும் இல்லை என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ...

ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளி பெண் தேர்வு

Posted: 23 Nov 2016 04:52 PM PST

- வாஷிங்டன்: ஐ.நா.,வுக்கான அமெரிக்க துாதராக இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, அமெரிக்க பத்திரிக்கையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: தேர்தலில் வெற்றி: அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தின் கவர்னராக இருப்பவர் நிக்கி ஹாலே, 44. இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் டிரம்ப் ஐ.நா.,வுக்கான அமெரிக்க துாதராக நிக்கி ஹாலேவை நியமிக்க உள்ளார். ...

சர்வதேச அளவில் சிறந்த பல்கலை: கோரக்பூர் ஐஐடிக்கு இடம்

Posted: 23 Nov 2016 04:51 PM PST

- கோல்கட்டா: சர்வதேச அளவில் கல்வி நிறுவனம் குறித்த கருத்துக்கணிப்பில், 100 இடங்களுக்குள் கோரக்பூர் ஐஐடி இடம்பெற்றுள்ளது. வேலைவாய்ப்பு அடிப்படையில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. 100 இடம்: கோரக்பூர் ஐஐடி 71- 80 இடத்திற்குள் உள்ளது. இதன் பின்னர் மும்பை ஐஐடியும் முதல் 100 இடத்திற்குள் உள்ளது. வேறு எந்த கல்வி நிறுவனங்களும் 100 இடத்திற்குள் வரவில்லை. சென்னை ஐஐடி, டில்லி ஐஐடி டில்லி பல்கலை ஆகியவை 200 இடத்திற்குள் தான் வருகின்றன. வருடந்தோறும், 2500 மாணவர்கள், கோரக்பூர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™