Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'யார் சொன்னால் என்ன? தகவல் தானே முக்கியம்!'

Posted: 23 Nov 2016 08:04 AM PST

புதுடில்லி: 'செல்லாத ரூபாய் நோட்டுகள் விவகாரம் தொடர்பான அறிவிப்புகளை, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ஏன் தெரிவிப்பதில்லை?' என்ற கேள்விக்கு, ''யார் சொன்னால் என்ன? தகவல் தானே முக்கியம்,'' என, மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

செல்லாத ரூபாய் நோட்டுகள் தொடர்பாக, பிரதமர் அறிவிப்பு வெளியிட்டது முதல், அது தொடர்பான பல்வேறு முடிவுகளையும், அறிவிப்புகளையும், சக்திகாந்த தாஸ், தினமும் வெளியிட்டு வருகிறார்.
'ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ஏன், இது தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடுவது இல்லை?' ...

ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் ஒத்திவைப்பு: தயாராகிறது வரைவு சட்டம்

Posted: 23 Nov 2016 08:37 AM PST

புதுடில்லி: ஜி.எஸ்.டி., தொடர்பான வருவாய் இழப்பீடுகளை ஈடு செய்வது உள்ளிட்டவற்றில், மாநில அரசுகள் பல்வேறு திருத்தங்களை கோரி வரும் நிலையில், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஒரே சீரான வரி விதிப்பான, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை, அடுத்த ஆண்டு, ஏப்ரல், 1 முதல் அமல்படுத்த, மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
இதற்காக, மத்திய நிதியமைச்சர் மற்றும் மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய, ஜி.எஸ்.டி., கவுன்சில், ஜி.எஸ்.டி., சட்டம், வரி விகிதம் உள்ளிட்டவை குறித்து விவாதித்து வருகிறது.
இந்த கவுன்சிலின் கூட்டம், வரும், ...

ரூபாய் நோட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள்... போாக்கொடி!: பிரச்னையை தீர்க்க பா.ஜ., மேலிடம் தீவிரம்

Posted: 23 Nov 2016 08:44 AM PST

செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் விஸ்வ ரூபம் எடுத்துள்ளதால், ஆறாவது நாளாக, பார்லிமென்ட்டின் இரு சபைகளும் நேற்றும் முடங்கின.

பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், மத்திய அமைச்சர்கள், காங்., திரிணமுல் காங்., தலைவர்களுடன், மத்திய அமைச்சர்கள் நேற்று பேச்சு நடத்தினர்.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரை, செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் ஆட்டிப் படைக்கிறது. ஏற்கனவே ஐந்து நாட்கள் வீணாகி விட்ட நிலையில், ஆறாவது நாளான நேற்றும், அமளி நீடித்தது. ராஜ்யசபா அலுவல்கள் நேற்று துவங்கியதும், ஐக்கிய ஜனதா தள எம்.பி., சரத்யாதவ், ''தேச நலனுக்காக இந்த முடிவை ...

லோக்பால் அமைக்காதது ஏன்? சுப்ரீம் கோர்ட் கடும் அதிருப்தி

Posted: 23 Nov 2016 09:20 AM PST

புதுடில்லி:பார்லிமென்டில் சட்டம் இயற்றிய பின்னும்,லோக்பாலை மத்திய அரசு நியமிக் காததற்கு, சுப்ரீம் கோர்ட், கடும் அதிருப்தி தெரிவித்தது.

திருத்தப்பட்ட, லோக்பால், லோக் ஆயுக்தா சட்டப்படி, லோக்பால் அமைப்பின் உறுப்பினர் களையும், தலைவரையும் நியமிக்க வலி யுறுத்தி, சுப்ரீம் கோர்ட்டில், 'காமன் காஸ்' என்ற அரசு சாரா அமைப்பு, பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சாரா அமைப்பு சார்பில், நேற்று சுப்ரீம் கோர்ட் டில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் ...

வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது

Posted: 23 Nov 2016 09:25 AM PST

புதுடில்லி:'சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், நேற்று அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது: சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர் களுக்கு, ஆண்டு சம்பள உயர்வை நிறுத்தும்படி, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை செய்துள்ளது; இந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுள்ளது.அதன்படி, மத்திய அரசு ஊழியர்களின் பணித் திறன் கணக்கிடப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டாத ஊழியர்களின் ஆண்டு ...

'எதிலும் பின்வாங்கும் குணம் மோடியின் ரத்தத்தில் இல்லை'

Posted: 23 Nov 2016 09:29 AM PST

புதுடில்லி:''பின்வாங்குவது, பிரதமர் நரேந்திர மோடியின் ரத்தத்தில் இல்லாத ஒன்று,'' என, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

செல்லாத நோட்டு விவகாரத்தை, பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் பெரியளவில் கிளப்பி வருகின்றன. இத்திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என, எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இது குறித்து, டில்லியி நடந்த ஒரு நிகழ்ச்சியில், மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு பேசியதாவது:எந்த சூழ்நிலை யிலும், செல்லாத நோட்டு திட்டம் வாபஸ் பெறப்பட மாட்டாது. இத்திட்டத்தை மேம்படுத்த மத்திய அரசு தயாராக ...

'ஜன்தன்' கணக்குகளில் ரூ.21,000 கோடி 'டிபாசிட்'

Posted: 23 Nov 2016 09:31 AM PST

புதுடில்லி:மத்திய அரசின் ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், 'ஜன்தன்' திட்ட வங்கிக் கணக்குகளில், 21 ஆயிரம் கோடி ரூபாய் 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: செல் லாத ரூபாய் நோட்டு திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, நவ.,8ல் அறிவித்தார். பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில், 'டிபாசிட்' செய்ய, டிச., 30 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. இந்த திட்டம் அமலான பின், ஜன்தன் திட்ட வங்கிக் கணக்குகளில், 'டிபாசிட்'கள் குவிய துவங்கி உள்ளன. 13 நாட்களில், 21 ஆயிரம் கோடி ரூபாய் 'டிபாசிட்'செய்யப்பட்டுள்ளது.மம்தா பானர்ஜி முதல் வராக உள்ள மேற்கு ...

செல்லாத ரூபாய் நோட்டுகளை தபால் நிலையங்களில் 'டிபாசிட்' செய்யலாம்

Posted: 23 Nov 2016 09:34 AM PST

புதுடில்லி: செல்லாத ரூபாய் நோட்டுகளை தபால் நிலையங்களில் 'டிபாசிட்' செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சேமிப்புக் கணக்கில்.. :
செல்லாத ரூபாய் நோட்டுகளை, சிறு சேமிப்பு கணக்கில் முதலீடு செய்ய பயன்படுத்த முடியாது என, அறிவித்துள்ள மத்திய அரசு, 'தபால் நிலையங்களில் உள்ள சேமிப்புக் கணக்கில் செலுத்தலாம்' என, விளக்கம் அளித்துள்ளது.
'டிபாசிட்' :
செல்லாத ரூபாய் நோட்டுகளை, சிறு சேமிப்பு கணக்கில் முதலீடு செய்வதற்கு பயன்படுத்த முடியாது என, மத்திய அரசு, நேற்று முன்தினம் அறிவித்தது. ...

செல்லாத ரூபாய் நோட்டு 'பங்க்'குகளில் மாற்றும் தேதி... நீட்டிக்கப்படுமா?!:இன்றுடன் அவகாசம் முடிவதால் பரபரப்பு:பணப்புழக்கம் சீரடையாததால் எதிர்பார்ப்பு

Posted: 23 Nov 2016 09:39 AM PST

ரயில், விமான முன்பதிவு மையம், மருத்துவ மனை மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையங் களில், செல்லாத ரூபாய் நோட்டுகளை வாங்கு வதற்கான அவகாசம், இன்றுடன் முடிவதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பணப்புழக்கம் சீரடையாததால், இது போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக, பழைய நோட்டுகளை பயன்படுத்தும் தேதி நீட்டிக்கப் படுமா என்ற எதிர்பார்ப்பு, மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் பால், மின்சாரம், குடிநீர் கட்டணம், ரயில், விமான முன்பதிவு கட்டணம் செலுத்த, நவ., 24 வரை, செல்லாத நோட்டுகளை பயன்படுத்தலாம் என, மத்திய அரசு அறிவித்தது. அதோடு, மருத்துவ மனைகள், ...

ரேஷனில் 'ஆதார்' விபரம் தராதது ஏன் வீடுகளில் ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு

Posted: 23 Nov 2016 09:45 AM PST

ரேஷன் கடைகளில், ஆதார் விபரம் தராமல் இருப்பதால், வீடுகளில் ஆய்வு செய்ய, உணவு துறை முடிவு செய்துள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், இலவச அரிசி வழங்கப்படுகிறது. ரேஷனில் வழங்க, மாதத்துக்கு, 3.25 லட்சம் டன் அரிசி தேவை. இதற்காக, தமிழக அரசு, ஆண்டுக்கு, 3,450 கோடி ரூபாய் செலவு செய்கிறது. கடந்த, 1ல் இருந்து, உணவு பாதுகாப்பு சட்டம் அமலானதால், ஐந்து மற்றும் அதற்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு, கூடுதலாக இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு, 1,193 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.அரிசி கார்டு வைத்துள்ள பலர், ரேஷன் பொருள் வாங்காததால், ஊழியர்கள் முறைகேடு செய்கின்ற னர். ...

விவசாயிகளுக்கு பயிர் கடன்: தமிழக அரசு புது உத்தரவு

Posted: 23 Nov 2016 09:48 AM PST

சென்னை:தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராக உள்ள விவ சாயிகளுக்கு, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் சார்பில், பயிர்க் கடன் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

செல்லாத ரூபாய் நோட்டுகள் அறிவிப்புக்கு பின், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், பயிர்க் கடன் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண,முன்னோடி திட்டம் ஒன்றை செயல் படுத்த, முதல்வர் ஜெயலலிதா உத்தர விட்டுள்ளார். அதன் விபரம்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தற்போதுள்ள நடை முறைகளை பின் பற்றி, விவ சாய உறுப்பினர் களுக்கு பயிர் ...

அமைச்சரை வறுத்தெடுத்த ராஜ்யசபா துணை தலைவர்

Posted: 23 Nov 2016 12:53 PM PST

புதுடில்லி: சரியான விளக்கம் சொல்லாத, காங்கிரஸ், எம்.பி., ஆனந்த் சர்மா மற்றும் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோரை, ராஜ்யசபா துணைத் தலைவர், பி.ஜே.குரியன் வறுத்தெடுத்தார்.

ராஜ்யசபாவில் நேற்று நடந்த விவாதத்தின்போது, செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்த ஒழுங்கு பிரச்னை குறித்து பேசுவதற்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆனந்த் சர்மாவுக்கு, சபையின் துணைத் தலைவர், பி.ஜே.குரியன் அனுமதி அளித்தார்.
அப்போது பேசிய ஆனந்த் சர்மா, ''அரசியலமைப்பு சட்டம் மீறப்பட்டுள்ளது,'' என்றார். இதற்கு, ஆளுங்கட்சி தரப்பில் இருந்து ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™